சில முரண்பாடுகள்
ஞான சபையில் புலால் உண்பவர்கள்
செல்வதால் தவறில்லை, ஏனெனில் நான் புலால் தவிர்க்கும் முன் ஞான சபைக்குள் சென்றதால்தான்
சன்மார்க்கத்திற்கு வந்தேன். ஞான சபையில் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல்
வேண்டும் என வள்ளலார் சொல்லவில்லை, என சிலர் கூறுகின்றனர்.
வள்ளலாரின் வடலூரை புனித நகரமாக
ஆக்காவிடினும் பரவாயில்லை, அவர் உருவாக்கிய
ஞான சபையில் 20 நபர்கள் அமரக்கூடிய அந்த மிகச்சிறிய இடத்தையாவது புனிதமாக இருக்க விடுங்கள்.
அடுத்து,
புலால் உண்ணும் பார்வதிபுற மக்களிடம்
வள்ளலார் ஏன் நிலத்தை தானமாகப் பெற்றார்? என சிலர் கேட்கின்றனர்?
வடலூர் பெருவெளியினை வேட்டவலம்
ஜமீன்தாரர் அவர்களே வள்ளலாருக்கு தானமாக கொடுத்தார். வள்ளலார் அந்நிலத்தை தானமாக பெறுவதற்கு
முன் அந்த ஜமீன்தாரரை தனது கொள்கைக்கு ஆட்படுத்திய பிறகு அவரை புலால் மறுக்கச் செய்தப்
பிறகே வடலூர் நிலத்தை அவரிடமிருந்து தானமாகப் பெற்றார்.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் சில
சட்ட வரையறைகளுக்காக அந்நிலத்தை பட்டா செய்ய ஜமீன் ஏற்பாடு செய்த சில பார்வதிபுற மக்கள்
அந்நிலங்களுக்காக கையொப்பம் மட்டுமே இட்டனர். ஆனால் அந்நிலத்திற்கும் கையொப்பம் இட்ட
பார்வதிபுற மக்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.
அடுத்து,
ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவதற்கு
வடலூர் தருமச்சாலையை பயன்படுத்துவது சரிதானா?
நான் இவ்வாறு தருமச்சாலையில் மாலை
போட்டுக்கொண்டதால்தான் இன்றைக்கு நான் சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றேன். இன்று
நான் முழுதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதால், மாலை அணிந்து சபரி மலைக்குச் செல்வதில்லை.
எனவே தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள்
வந்து மாலை போட்டுக்கொள்வது தவறல்ல. வள்ளலார் தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை
போடக்கூடாது என எங்கும் சொல்லவில்லை, என ஒரு சன்மார்க்கி கூறுவார்.
இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன
சொல்ல?
ஐயப்ப மாலை போடுவதற்கு அனுமதி அளித்த
இந்து நலத் துறை வன்மையான கண்டனத்திற்கு உரியது.
நன்றி.
https://www.facebook.com/reel/1982273392720324



No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.