Tuesday, January 13, 2026

வள்ளலார் பேருந்து நிலையம்

 வள்ளலார் பேருந்து நிலையம்

12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.

ரூ 7.53 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன் அவர்கள், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

K.N.NEHRU - Tamil Nadu Minister for Municipal Administration & Water Supply

vallalar bus stand

VALLALAR BUS STAND

VALLALAR BUS SATND

VALLALAR BUS STAND


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.