வெற்றி
நாம் இதுவரை கண்டுவந்த அரசியல்
காட்சிகள் முற்றிலும் ஒழிந்தன. திராவிட கட்சிகள் இலஞ்சத்தையும், ஊழலையும், போதையையும்
ஊக்குவித்தன. அதனை ஒழிக்க பேச்சளவிலும் பேசமாட்டார்கள். மக்களுக்காக இறங்கி வேலை செய்யமாட்டார்கள்.
வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வாகனங்களில் மட்டுமே உலா வருவார்கள். எல்லோரும் குறைந்தது
மூன்று முறையாவது அமைச்சர்களாகவும், சட்ட மன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை
நாம் மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால், தமிழகம் மீண்டும் பின்னோக்கி செல்லும். ஊழலும்,
இலஞ்சமும், போதையும் குடிகொண்டிருக்கும். ஊழலை முன்னிருத்தியே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
எந்த ஒரு புதிய நற்செயல்களையும் நாம் கண்டிருக்க முடியாது. (நான் த.வெ.க.விற்கு வாக்களிக்காததை
நினைத்து இந்நேரத்தில் வருத்தமடைகின்றேன்.)
ஆனால், தமிழக மக்கள் கொடுத்த ’தமிழக
வெற்றி கழக’ ஆட்சியானது, நாம் இதுவரை கண்டிராத புதிய மாற்றங்களை பதவியேற்ற பத்து நாட்களிலேயே
தமிழக மக்களுக்கு கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
1. அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சரவை அலுவலகங்கலளில் இலஞ்சம் பெறுவதையும் கொடுப்பதையும் தடுக்கும் நடவடிக்கைகள்.அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு அறிவித்தல்.
2. அரசு மருத்துவமனைகளில் சுத்தம், சுகாதாரத்தை கண்கானித்து மேம்படுத்துதல்.
3. அரசு அலுவலகங்களில் மக்கள் வந்தால் முதலில் மக்களை அமரவைத்து விசாரித்தல்.
4. காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா முழு நேரமும் இயங்க உத்தரவு. அனைத்து புகார்களையும் சி.சி.டி.வி.யில் காணொலியாக பதியவைக்க உத்தரவு.
5. காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க த.வெ.க. வழக்கறிஞர்களை, ஒரு காவல் நிலையதிற்கு இரண்டு நபர்களை நியமிப்பது.
6. முதல்வர் தனது அலுவலகத்திற்கு செய்யும் மரியாதையாக, மதிய உணவுடன் காலையில் சென்று மாலை வீடு திரும்புதல்.இதன் காரணமாக தலைமை செயலக அலுவலர்கள் காலை பத்து மணிக்குள் தங்களது அலுவலகத்திற்கு வருகின்ற அதிசயம் நடைபெறுகின்றது.
7. மாநகராட்சி ஊழியர்களின் வருகையை நேரக்கட்டுப்பாட்டுக் கருவியில் (பயோ மெட்ரிக்) பதிவிடச்செய்தல்.
8. வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள்போல் இல்லாமல், ஆங்கில உடை அணிந்து தமிழர் ஆட்சியினை கொடுக்கும் முதல்வர்.
9. டாஸ்மாக் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது. உரிய நேரத்தில் திறந்து, மூடுதல், கள்ள விற்பணையை தடுத்தல். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துநிலையம், வழிபாட்டு இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடியது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் திராவிட கலாச்சாரத்தை ஒழித்தது.
10. போதை இல்லா தமிழ்நாடு காண, போதைப் பொருளை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தல்.
11. அரசு டெண்டர்களில் இனி சட்டமன்ற உறுப்பினரகள், அமைச்சரகள் மறைமுகமாக எவ்வகையிலும் இடம் பெற தடைவிதித்தது.
12. 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் முதன் முதலாக கூட்டணி அமைச்சரவை உருவாக்கியது.
13. இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்து, முன்னால் முதல்வரையும் தோற்கடித்தது.
14. அரசு விழாக்களில் தேசியத்தை முன்னிலைப்படுத்தி முதலில் வந்தே மாதரம் பாடலையும், பிறகு மாநிலத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைப்பது.
பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்புப்படை அமைத்தது.
த.வெ.க. மாவட்டச் செயலாலர்களின் பல்வேறு அரசு
துறைகளில் திடீர் ஆய்வுச் செய்து சீர்திருத்தம் செய்தல்.
பட்டியலினத்தவர்கள்
ஏழு நபர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது.
விவசாயிகள்,
மண் பாண்ட தொழிலாளர்கள், இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது.
இளைஞர்கள்
அதிகமுள்ள அமைச்சரவையை தமிழக அரசு கண்டிருக்கின்றது.
இந்து அல்லாத ஒருவர் (கிறுத்துவர்) முதன் முதலில்
தமிழத்தின் ஆட்சியை பிடித்தது.
தற்போது
உலகில் கோலாட்சும் ஏ.ஐ. க்காக (செயற்கை நுண்ணறிவு) ஒரு புதிய துறையை ஏற்படுத்தி அதற்கான
ஒரு அமைச்சரையும் கொடுத்து, ஏ.ஐ. மூலம் இவ்வுலகம் பெறும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள்
எவ்வகையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்தது வரவேற்கத்தக்கது. உலகில்
வேறெந்த நாட்டிலும் ஏ.ஐ.க்காக அமைச்சகம் இல்லை.
இவை போன்று தடாலடி மாற்றங்கள் இன்னும்
நிறைய வரவேண்ட்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.
வடலூரை புனித நகரமாக்க வேண்டும்
என்பது சுத்த சன்மார்க்கர்களின் நீண்ட நாள் கனவு. அதனையும் நமது புதிய முதல்வர் நிறைவேற்றவேண்டும்.
கடலூர் மாவட்ட அமைச்சராக இன்று
(21-05-2026) பொறுப்பேற்ற மாண்புமிகு B.இராஜ்குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

thank you for the info
ReplyDeleteThank you
DeleteThank you for sharing this wonderful article about Thiru Arutprakasa Vallalar. Very informative and inspiring. We also share similar spiritual and devotional content, so please visit our website and support us. Thank you.
ReplyDeletehttps://vallalyaar.com/thiru-arutprakasa-vallalar-divine-grace-wisdom/
I will visit your website soon. Thank you Ayya
Delete