சிறுதெய்வ வழிபாடு கூடாது
“மக்களே… கற்சிலை தெய்வங்களை
படைத்து, அந்த கற்சிலைகளை தங்கள் இஷ்டப்படியும், முன்னோர்களின் வழிகாட்டுதல் படியும், பாரம்பரியமாக
வழிபடுவது சிறுதெய்வ வழிபாடு ஆகும். அந்த சிறுதெய்வத்திற்கு
ஆடுகளையும், கோழிகளையும் உயிர்பலி இடுதல் எந்த வகையில்
நியாயம் மக்களே. நம்மை போன்று அவைகளும் ஓர் உயிரினம் என்பதை
மறந்து, இறைவன் பெயரால், அந்த உயிரை
துடிக்க, துடிக்க வெட்டி பலி கொடுப்பது மனிதச் செயலா?
என்று யோசிக்க வேண்டாமா?, நாகரீகங்களும், ஏ.ஐ. போன்ற அறிவியலும் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்திலும், இப்படிப்பட்ட வேண்டுதலும், வழிபாடும் தேவைதானா?
என்று நீங்கள் யோசிக்க மறுப்பது ஏன் மக்களே?
நலிதரும் சிரிய
தெய்வம் என்று, நலிதரும் என்றால் துன்பத்தை தரும் என்று பொருள், நலிதரும் சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி, பலி தர ஆடு, பன்றி, குக்குடங்கள்,
குக்குடங்கள் என்றால் கோழி, பலிக்கடா முதலிய
உயிரை, பொலிவு உற, பொலிவுற என்றால்
அழகு படுத்திக் கொண்டு போவதைக் கண்டு, புந்தி நொந்து,
புந்தி என்றால் மனம், மனம் நொந்து உள்ளம்
நடுக்குற்றேன், கலியுறு சிறு தெய்வ கோயிலை, கலியுறு என்றால், ஆராவாரம் மிக்க சிறு தெய்வ
கோயிலைக் கண்ட காலத்திலும் பயந்தேன். என்று வள்ளலார்
பாடுகிறார் மக்களே.
சிறு தெய்வங்கள்
என்றால், மாரியம்மன், காளியம்மன்,
முத்தாலம்மன், அங்காளம்மன், ஏழு கன்னிமார், பேச்சியம்மன், இசக்கி,
திரவ்பதை அம்மன், எல்லையம்மன், ராக்காச்சி போன்ற பெண் தெய்வங்களும், அய்யனார்,
கருப்பசாமி, சுடலைமாடன், மதுரை வீரன், முனீஸ்வரன், அண்ணன்மார்
சாமி, பொன்னர், சங்கர், இருளப்பன், சங்கிலி கருப்பன் போன்ற ஆண் தெய்வங்களும்
ஆகும்.
இந்தக் கோயில்களை
கண்டபோதெல்லாம் பயந்தேன் என்பார்
வள்ளலார். கடவுள் பெயரால் உயிர் பலி செய்யக்கூடாது
என்பது வள்ளலாரின் அறிவுரையாகும்.
1864 ஆம் ஆண்டு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள வேட்டவலம் என்னும் ஊருக்கு
வள்ளலார் செல்கிறார். அங்கு உள்ள ஜமீந்தார் மனைவிகள்
இருவருக்கும் மனநிலை பாதிப்பு இருந்தது, அதனை தீர்க்க
ஜமீன்தார் அழைப்பை ஏற்று வள்ளலார் அங்கே செல்கிறார். வள்ளலாரின்
காலடி அந்த அரண்மனையில் பட்டவுடன், ஜமீன்தார் மனைவிகள்
இருவருக்கும் உடல் நிலை பாதிப்பு முற்றிலும் சரியாகிவிடுகிறது.
பரம்பரை பரம்பரையாக கோயில்களில் உயிர்பலி கொடுத்து வந்த வழக்கத்தை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டார் ஜமீன்தார். அதற்கு பதிலாக, காய்கறி, பழங்கள், அன்னம் போன்றவைகளை படைக்க வழிவகை செய்தார். தானும் தங்கள் குடும்பமும் இனி புலால் உண்பதில்லை என்ற உறுதியும் வள்ளலாருக்கு கொடுத்தார் ஜமீன்தார். மேலும் இப்போதுள்ள வடலூர் வெளியை இந்த வேட்டவலம் ஜமீன்தார்தான் வள்ளலாருக்கு கொடையாக அளித்தார். வள்ளலார் பெயருக்கு 80 காணி நிலத்தை பட்டா செய்ய சில சட்ட சிக்கல் இருந்ததால், உள்ளூர் மக்களின் பெயரில் அவை பட்டா மாற்றம் செய்து வள்ளலாருக்கு ஜமீன்தாரர் வடலூர் வெளியை 1867 ஆம் ஆண்டு இனாமாகக் கொடுத்தார்.
எனவே மக்களே, கடவுள் பெயரால் உயிர்பலி இடுவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தால், அந்த மூடவழக்கத்தை இன்றோடு விடுவித்து, அறிவு பூர்வமான ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து, ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற தெளிவிற்கு வாருங்கள் மக்களே.
என் இனிய மக்களே, நீங்களும் இங்கே காண்பவர்கள் போல் புலால் உண்பவர்களா? அப்படி என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் மக்களே. எவ்வாறு தெய்வங்கள் பெயரால் உயிர் பலியை கண்டித்தாரோ வள்ளலார், அது போலவே புலால் உண்பதையும் கண்டிக்கின்றார். வள்ளலார் மட்டுமா, இல்லை… மகாவீரர், புத்தர், திருவள்ளுவர் போன்றோர்களும் புலால் உண்பதை கண்டித்துள்ளனர். மனிதர்கள் இறந்தால் இடுகாடு உண்டு. ஆனால், இதுவரை இவ்வுலகில் விலங்குகளுக்கு என்று எங்கேனும் இடுகாடு இருப்பதை நாம் கண்டிருப்போமா? இல்லை, இல்லவே இல்லை. ஏன்? விலங்குகளின் இடுகாடும் நமது வயிறுதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், மக்களே நாம் எல்லாம் நடமாடு இடுகாடுதான். இந்நிலையை நினைக்க கேவலமாக இல்லை? நமது உடம்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? நாம் என்ன விலங்குகளில் இடுகாடா? சிந்தியுங்கள் மக்களே. நாய்கள் சூழும் இறைச்சிக் கடையை விரும்பும் மலம் ஒத்த மனிதர் மாண்பினைக் கண்டு பயந்தேன் என்று நானும் பாடியுள்ளேன். புலால் மறுத்தவர்களே தங்களது பெயருக்கு முன்னால் மாண்புமிகு என்ற வார்த்தையினை சேர்த்துக்கொள்ள அருகதை உடையவர்கள். எனவே மக்களே ஜீவகாருண்யம் என்பதே மனிதர்களுக்கு மாண்பினைத் தரும். சமீபத்தில் ஒரு தமிழக அமைச்சர், தங்கள் மாணவர்களுக்கு, விடுதியில் உண்டு களிக்க மாட்டுக்கறி வேண்டும் என பேசுகிறார். வாழ்க தமிழக அமைச்சர். நன்றி மக்களே.
-T M RAMALINGAM - CUDDALORE
9445545475

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.