Showing posts with label அக்டோபர் மாதத்தில் அன்று…. Show all posts
Showing posts with label அக்டோபர் மாதத்தில் அன்று…. Show all posts

Sunday, October 22, 2017

அக்டோபர் மாதத்தில் அன்று…



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

அக்டோபர் மாதத்தில் அன்று…

05-10-1823 – இன்று வள்ளற்பெருமான் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 05.30 மணியளவில் இப்பூமிக்கு வருவிக்க உற்றார்.

22-10-1873 – வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் முதன் முதலாக சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருபதேசம் செய்த நாள்.

26-10-1870 – “என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன் அஞ்சவேண்டாம்” என்று வள்ளற்பெருமான் உலகியல் மக்களுக்கு அறிவித்த நாள்.

11-10-1880 – வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்டபின் அவர் வெளி வராததால் வடலூர் நிலங்களுக்கு வரி கட்ட அரசாங்கத்தார் ஏஜெண்டுகளை நியமிக்க ஓர் அறிக்கை வெளியிட்ட நாள்.

01-10-1889 – ஞானசபையின் உட்புறமுள்ள இரண்டு அறைகளில் மேற்புற அறையில் விநாயகரையும், கீழ்புற அறையில் முருகப் பெருமானையும் பிரதிஷ்டை செய்ய ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் முயற்சி செய்யும் சமயம், சிலர் ஆட்சேபனை செய்ய பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அதனை கைவிட்டார்.

26-10-1870 – சுமார் ஒரு மாதத்திற்கு முன்னாள் (செப்டம்பர் – 1870-க்கு முன்னர்) தம் உருவை மறைத்து இருந்த வள்ளற்பெருமான் மீண்டும் இன்றைய தேதியில் புற உலகிற்கு வெளிப்பட்டார்.

11-10-1880 – ஜனவரி மாதம் 30-ஆம் நாள் 1874-ஆம் ஆண்டு  வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக்கொண்டதை அடுத்து, “தேவஸ்தான தருமஸ்தானங்களில் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்கபிள்ளை என்பவர் ஏழு வருட காலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி 302-ஆம் எண் பட்டாவை 1- ஆறுமுக முதலியார், 2- வக்கீல் வெங்கிடேச ஐயர், 3- சபாபதி குருக்கள், 4- நயினா ரெட்டியார் ஆகிய நால்வரையும் ஏஜெண்டுகளாக நியமிக்க இருக்கின்றேன்” என்று சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிட்டார். பின்னர் 01-03-1881 –ஆம் ஆண்டு பசலி 1290-91 மேற்குறித்த நான்கு ஏஜெண்டுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.