காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர்
2017 மாதம் வெளியானது…
அக்டோபர் மாதத்தில்
அன்று…
05-10-1823
– இன்று வள்ளற்பெருமான் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 05.30 மணியளவில் இப்பூமிக்கு வருவிக்க
உற்றார்.
22-10-1873
– வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் முதன் முதலாக சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருபதேசம்
செய்த நாள்.
26-10-1870
– “என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள்
வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்
தானே வெளிப்படுவேன் அஞ்சவேண்டாம்” என்று வள்ளற்பெருமான் உலகியல் மக்களுக்கு அறிவித்த
நாள்.
11-10-1880
– வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்டபின் அவர் வெளி வராததால் வடலூர் நிலங்களுக்கு
வரி கட்ட அரசாங்கத்தார் ஏஜெண்டுகளை நியமிக்க ஓர் அறிக்கை வெளியிட்ட நாள்.
01-10-1889
– ஞானசபையின் உட்புறமுள்ள இரண்டு அறைகளில் மேற்புற அறையில் விநாயகரையும், கீழ்புற அறையில்
முருகப் பெருமானையும் பிரதிஷ்டை செய்ய ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் முயற்சி செய்யும்
சமயம், சிலர் ஆட்சேபனை செய்ய பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அதனை கைவிட்டார்.
26-10-1870
– சுமார் ஒரு மாதத்திற்கு முன்னாள் (செப்டம்பர் – 1870-க்கு முன்னர்) தம் உருவை மறைத்து
இருந்த வள்ளற்பெருமான் மீண்டும் இன்றைய தேதியில் புற உலகிற்கு வெளிப்பட்டார்.
11-10-1880
– ஜனவரி மாதம் 30-ஆம் நாள் 1874-ஆம் ஆண்டு வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக்கொண்டதை
அடுத்து, “தேவஸ்தான தருமஸ்தானங்களில் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்கபிள்ளை என்பவர்
ஏழு வருட காலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி 302-ஆம் எண் பட்டாவை
1- ஆறுமுக முதலியார், 2- வக்கீல் வெங்கிடேச ஐயர், 3- சபாபதி குருக்கள், 4- நயினா ரெட்டியார்
ஆகிய நால்வரையும் ஏஜெண்டுகளாக நியமிக்க இருக்கின்றேன்” என்று சிதம்பரம் தாசில்தார்
ஓர் அறிக்கை வெளியிட்டார். பின்னர் 01-03-1881 –ஆம் ஆண்டு பசலி 1290-91 மேற்குறித்த
நான்கு ஏஜெண்டுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.