Saturday, July 20, 2013

ஒன்று போதுமா?



ஒன்று போதுமா?


கேள்வி:

நம் வாழ்க்கைக்கும் இறையருள் பெறுவதற்கும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒன்று போதுமா? மேலும், எந்த ஒரு மார்க்கத்தையும் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? (எஸ்.விஜயன், சாலிகிராமம், சென்னை)

எமது பதில்:

ஐயா, சாதாரண மக்களாகிய நாம் நமது வாழ்க்கையினை பிறத்தல் என்பதில் துவங்கி இறத்தல் என்பதில் முடிக்கிறோம். அதாவது,

பிறந்து அழுகிறோம்
வளர்ந்து படிக்கிறோம்
படித்து வேலைக்குச் செல்கிறோம்
வேலையால் ஊதியம் பெறுகிறோம்
ஊதியத்தால் திருமணம் செய்கிறோம்
திருமணத்தால் பிள்ளை பெறுகிறோம்
பிள்ளையினை படிக்க வைக்கிறோம்
அவன் படித்து வேலைக்குச் செல்கிறான்
அவன் வேலைக்குச் சென்று ஊதியம் ஈட்டுகிறான்
அவனது ஊதியத்தால் திருமணம் செய்கிறோம்
அவன் நமக்கு பேரபிள்ளையினை தருகிறான்
அதற்குள் நமக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கிறது
அடுத்து ஓர் பத்து ஆண்டுகள் முதியபருவம் ஓடுகிறது
ஓர் நாள் இறந்து விடுகிறோம்

இவ்வாறு நாம் நமது வாழ்க்கையினை நடத்திவருகிறோம். இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான வாழ்க்கைக்கும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? மேற்கண்ட மிகச் சாதாரண வாழ்க்கையினை, சுத்தசன்மார்க்கம் ஒன்றே மரணமிலா பெருவாழ்விற்கு இட்டுச்செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்...

"என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியமே" என்கிறார் வள்ளலார். இல்லற வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்றும் இறை அருளை எவ்வாறு பெறவேண்டும் என்றும் மிகத்தெளிவாக தமது திருஅருட்பாவில் கூறியுள்ளார்.

இல்லத்தரசிகளும் இல்லத்தரசர்களும் தாங்கள் இதுவரை கடைபிடித்துவந்த கடவுள் வழிபாட்டு முறைகளை தூக்கியெறிந்துவிட்டு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தையே கடவுள் வழிபாடாக கொள்ள வேண்டும் என்கிறார்.

சிறுதெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடு அறவே கூடாது என்கிறார். தெய்வங்கள் பெயரால் உயிர்பலியிடுவதையும் கண்டிக்கிறார். தெய்வம் ஒன்று என்று அறியும் அறிவு வேண்டும் என்கிறார்.

மனிதர்கள் எக்காரணங்கொண்டும் புலால் உண்ணக்கூடாது என்கிறார்.

தமது நித்திய கரும விதியில் இல்லத்தார்கள் காலையில் எழுவது முதல் இரவு உறங்கும் வரை என்னென்ன எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கியுள்ளார்.

தமது மருத்துவக் குறிப்பில் மனித நோய்கள் தீரும் வழியினை கூறியிருக்கிறார்.

தமது உபதேசக்குறிப்பில் சமய மத புராணங்களின் உண்மை நிலைகளையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும் விளக்கியுள்ளார்.

கடவுள் அருளை பெறுவதற்கு ஜீவகாருண்ய வழிபாடு என்கிற தயவு மார்க்கம் மட்டுமே வழியாக உள்ளது.

நாம் இதுவரை கடைபிடித்துக்கொண்டிருக்கும் ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை தயவினை பெருக்க தடையாக உள்ளதால் அவைகளை அறவே விடவேண்டும் என்கிறார்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தவமும் கைகூடினால் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும் என்கிறார். தவம் என்பது தன் சுதந்தரமான தேக சுதந்தரம், ஜீவ சுதந்தரம், போக சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு ஒருமையுடன் இறை சிந்தனையுடன் இருத்தல். ஒருமை என்பது 'தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடுவது ஒருமையாகும்.

மரணம் தவிர்த்தால் மட்டுமே பிறவி பெருங்கடலை கடக்கமுடியும் என்கிறார். எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்கிறார்.

சாதி, மதம், இனம், நாடு, மொழி போன்ற தடைகளை நீக்கி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற "மனித நேயமும்", எறும்பு முதல் யானை வரை இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரனங்களும் உண்மையில் நமது சகோதரர்களே / தாய் தந்தையர்களே / சகோதரிகளே / பிள்ளைகளே என்கிற உணர்வு பெற்ற "ஆன்ம நேயமும்" மனிதர்களுக்கு வரவேண்டும் என்கிறார்.

ஏழைகள் பசி தீர்க்க தருமச்சாலை துவக்கியுள்ளார். இந்த தருமச்சாலையில் அவரால் ஏற்றிவைக்கப்பட்ட அடுப்பு இதுநாள் வரையில் அனையாமல் எரிந்துக்கொண்டே இருக்கிறது. அதாவது ஏழைகளுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த தருமச்சாலை இயக்கத்தில் உங்கள் பங்கும் மிக முக்கியமாக இருக்கவேண்டும் என்கிறார்.

தாம் கண்ட ஒருமை இறையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு, ஆண்டவரின் சம்மதத்துடன் நாம் வணங்குவதற்காக எண்கோண வடிவில் ஒரு சபையினை கட்டினார்கள். இச்சபையினுள் சென்று இறைவனை வழிபடவேண்டுமானால், கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளெ செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

சுத்தசன்மார்க்க கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை' உருவாக்கினார். அதற்கென்று தனிக் கொடியினையும் (ஆன்மக் கொடி) கண்டார்.

வள்ளலார் பல முறை மறைந்து வெளிவந்துள்ளார். இறுதியாக ஓர் அறையில் சென்று தாளிட்டு மறைந்த இடம் 'சித்திவளாகம்' எனப்படும். தாம் மீண்டும் வருவதாக சொல்லி சென்றுள்ளார்கள். வரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம்.

மேற்கண்ட முக்கிய கொள்கைகளுடன் பல கருத்துகளை வலியுறுத்தி கூறியுள்ளார். வள்ளலார் கூறியுள்ள மெய்பொருள்களை மிகச் சுருக்கமாக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விரிவினையும் இதனையும் தாண்டி பல கருத்துகளை திருஅருட்பாவில் காணலாம்.

நம்முடைய அன்றாட சாதாரண வாழ்வு என்பதை மரணமிலா பெருவாழ்வாக மாற்றக்கூடியது சுத்த சன்மார்க்கம் ஆகும்.

1. ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு (மூன்று பிரிவுகளாக விளக்கப்பட்டுள்ளது)
2. மருத்தவக் குறிப்புகள் (மூலிகை குண அட்டவணை, சஞ்சீவி மூலிகைகள், மருத்துவ குறிப்புகள்)
3. நித்திய கரும விதி (சாதாரண விதி, பொது விதி, சிறப்பு விதி)
4. உபதேசக் குறிப்புகள்
     1.அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி
     2.கடவுள் பிரகாசம்
     3.ஞானசபையும் நடராஜரும்
     4.பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்
     5.பிண்டாண்ட கிரகண சித்தாந்தம்
     6.அண்ட பிண்ட திசைகள்
     7.அண்ட பிண்ட அமுதங்கள்
     8.மழை
     9.முச்சுடர்
     10.அனுபவத்தில் சத்தி சிவம்
     11.சிருட்டி நியாயம்
     12.பசஷபேதமும் சிருஷ்டியும்
     13.கலை
     14.சிருஷ்டி வகை
     15.மும்மலபேதமும் சிருஷ்டியும்
     16.ஆணவம், மாயை, கன்மம்
     17.எழுவகைப் பிறப்பு
     18.ஜென்மம்
     19.ஆண்பெண் - பெண்ஆண்
     20.ஆண் பெண் பருவம்
     21.கரு உற்பத்தி
     22.சுக்கில சுரோணிதம்
     23.சப்த தாதுக்கள்
     24.தேக சத்து
     25.பிண்ட இலக்கணம்
     26.ஜீவஸ்தானம்
     27.பூர்வோத்திரம்
     28.பிண்ட நியாயம்
     29.பிண்டானுபவ இலக்கணம்
     30.மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
     31.உரோம தத்துவமும் பிந்துஸ்தானமும்
     32.பிந்து நாதங்கள்
     33.பாலஸ்தானம்
     34.பெண் பிறவியும் பிந்து விளக்கமும்
     35.சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன்
     36.கடவுள் காரியப்படுவது
     37.கோபம்
     38.சமய நூல்களின் உண்மை
     39.சமய நூல்களின் பிழை
     40.கற்பமும் பிரளயமும்
     41.கற்பபேதம்
     42.கலியுகம்
     43.கலியுக முடிவு
     44.கால சங்காரம்
     45.சுரர் அசுரர்
     46.மனிதரும் தேவரும்
     47.அடி முடி தேடல்
     48.பிரம தண்டனை
     49.சரஸ்வதியை மூக்கறுத்தது
     50.சந்திர சாபம்
     51.தசஷ யாகம்
     52.சூரபத்ம சம்ஹாரம்
     53.குண்டோதரனுக்கு அன்னமிட்டது
     54.பாற்கடல் கடைந்தது
     55.பாற்கடலில் பள்ளிகொண்டது
     56.நாராயணன்
     57.கருடன்
     58.அயக்கிரீவம்
     59.வாமனாவதாரம்
     60.வடுகநாதர்
     61.பைரவர் வீரபத்திரர்
     62.வேதாரண்யம்
     63.வேதம்
     64.வேதம் ஆகமம் முதலிய நூல்கள்
     65.வேதாகம வழிகள்
     66.தேவாரம்
     67.திருவாசகம்
     68.திருமந்திரம்
     69.திருமந்திரமும் திருவாசகமும்
     70.சிவம் என்பதன் பொருள்
     71.சிவ
     72.சி
     73.சிவகுணமும் ஜீவகுணமும்
     74.சிவமாதல்
     75.பஞ்சாக்கரம்
     76.சிவ சிந்தனை
     77.பிரணவம்
     78.அகரம்
     79.காயத்ரி
     80.தத்துவம்
     81.குடிலை
     82.பூதம் என்பதன் சப்தார்த்தம்
     83.பெளதிகம்
     84.நினைப்பு மறைப்பு
     85.விருப்பு வெறுப்பு
     86.சங்கல்பம்
     87.பற்று
     88.தன்னையறிதல்
     89.கூடஸ்த பிரம ஐக்கியம்
     90.கடவுள் ஏகம் அனேகம்
     91.கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல்
     92.மூவகை உயிர்கள்
     93.முக்குணம்
     94.மூன்றாசை
     95.மூன்று அவஸ்தை
     96.மூவகை ஞானம்
     97.ஞான வகை
     98.பர அபர ஞானங்கள்
     99.மூவிடம்
     100.பஞ்ச மகா பாவங்கள்
     101.பர அபர வாக்குகள்
     102.பிபீலிக விகங்க நியாயங்கள்
     103.சித்தாந்த வேதாந்தம்
     104.ஜீவன் முத்தனும் ஞானசித்தனும்
     105.புருஷன்
     106.சூரியகலை
     107.தியானம்
     108.தீசைஷ
     109.நித்தியத் துறவு
     110.உடம்பின் அருமை
     111.ஆண்டவர் சோதனை
     112.ஞான சிருஷ்டி
     113.ஆணவ மல நிவர்த்தி
     114.அன்புருவம்
     115.அகங்கார ஒழிவு
     116.இகபர காமங்கள்
     117.அபேதம்
     118.கவலை
     119.கலையறிவும் அருள் அறிவும்
     120.சடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
     121.சன்மார்க்க சங்கம்
     122.சத்திய மார்க்கம்
     123.சத்துவகுண லசஷியம்
     124.சத்மார்க்கம்
     125.சர்வ சித்தி
     126.பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
     127.சாத்திய நிலை
     128.சுத்த சன்மார்க்கக் கொள்கை
     129.சன்மார்க்க கொள்கை
     130.சுத்த சன்மார்க்க முடிபு
     131.சாகாத கல்வி
     132.சாகாக்கல்விக்கு ஏது
     133.சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
     134.சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்
           1.இந்திரிய ஒழுக்கம்
           2.கரண ஒழுக்கம்
           3.ஜீவ ஒழுக்கம்
           4.ஆன்ம ஒழுக்கம்
     135.சுத்த சன்மார்க்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)
     136.சன்மார்க்க சாதனம்
     137.சுத்த சன்மார்க்கப் பிராத்தனை
     138.சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
     139.பத்தி
     140.ஆன்ம இயற்கையாகிய தயாமூலதர்மம்
     141.ஆனந்தம்
     142.ஜீவகாருண்யமே முத்திக்கும் சித்திக்கும் முதல்படி
     143.ஞானசித்தியும் ஒளிநிலையும்
     144.தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்
     145.அதிதீவிர பக்குவி
     146.நஷ்டஞ் செய்யும் நான்கு
     147.ஜாக்கிரதை
     148.தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்
     149.துர் மரணம்
     150.இல்வாழ்வானுக்கு நியாயம்
     151.சந்நியாசமும் காவி உடையும்
     152.மகளிர் சமத்துவ நிலை
     153.பொதுப்பார்வை
     154.வந்தன முறை
     155.சுத்த சன்மார்க்க ஆகாரம்
     156.சன்மார்க்க ஆகாரம்
     157.சர்க்கரை
     158.சன்மார்க்க ஆகார விலக்கு
     159.வெந்நீர்
     160.கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
     161.பஞ்ச கவ்யம்
     162.பஞ்ச சபை
     163.பஞ்ச அமுத ஸ்தானங்கள்
     164.பஞ்ச ஸ்தானங்கள்
     165.ஏழு திரைகள்
     166.ரசவாதம் ஏழு
     167.உபரசவாதம் ஏழு
     168.நவ நிலை
     169.குளிகை மணி ஒன்பது
     170.திரோயதச நிலைகள்
     171.ஞானயோக அனுபவ நிலைகள்
     172.சகஜ நிலை
     173.வேதாகமச் சிறப்பு
     174.சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
     175.மூவகைச் சித்தி
     176.சுத்தமாதி தேகங்கள் மூன்று
     177.சுவர்ணதேகிகள் ஆயுள்
5. சுப்பிரமணியம் என்பது என்ன?
6. மயில் என்பது என்ன?
7. மயிலின் மீது சுப்பிரமணியன் ஏறிக்கொண்டிருத்தல் என்பது என்ன?
8. மயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன?
9. படைவீடு என்பது என்ன?
10. பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது யாது?
11. ஈசுவரனுக்கு உபதேசித்தது என்ன?
12. கங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன?
13. பின் கார்த்திகை அரிவை பால் கொடுத்தது என்பது என்ன?
14. பிண்டத்தில் இருப்பதை அண்டத்தில் ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டானது ஏன்?
15. அருள் நெறி
16.திருவருண் மெய்ம்மொழி
17. பேருபதேசம்
18. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம்
19. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை
20. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை
21. சன்மார்க்கப் பெரும்பதி வருகை
22. சாலையிலுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை
23. சன்மார்க்கப் பிராத்தனை
24. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி
25. சித்திவளாக வழிபாட்டு விதி
26. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை
27. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
28. சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பம்
29. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
30. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்னப்பம்

மேற்கண்ட முக்கியமான பட்டியல் அனைத்தும் திருஅருட்பா உரைநடைப்பகுதியில் உள்ளனவாகும். இவைத்தவிர 5818 மற்றும் தனிப்பாடல்கள் என சுமார் 6000 அருட் பாடல்கள் கொண்ட, ஆறு திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ள திருஅருட்பாவை வள்ளலார் நமக்காக, நமது வாழ்க்கைக்காக, இறையருள் பெறுவதற்காக வழங்கியுள்ளார்கள்.


ஐயா, நமது வாழ்விற்கும் இறையருள் பெறுவதற்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒன்று போதுமா? என்கிறீர்கள். மேற்கண்ட உண்மைகளைத் தவிர வேறு பொய்யினங்கள் எதுவும் தேவையில்லை. நமது வாழ்க்கைக்கும் இறையருள் பெறவும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே போதும். இன்னும் வேண்டும் என்றால், சுத்த சன்மார்க்க காலம் வரும்போது ஆண்டவர் இதற்கு மேலும் உள்ளதை தெரிவிப்பார் என்று வள்ளலார் கூறுகிறார். எனவே தற்போது இருப்பது ஒன்றுதான், அதற்கு மேல் எதுவும் இல்லை கீழும் எதுவும் இல்லை என்பதை அறிக. எனவே வேறு எந்த உலகியல் மார்க்கமும் தெரிந்துக்கொள்ள வேண்டியது இல்லை.

ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினுள் ஒன்றல ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே (அகவல்)

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி



          



2 comments:

  1. சன்மார்க்கம் போதுமா என்று கேள்விக்கு போதும் போதும் என்று பதிலளித்துள்ளீர்கள் இறைவா!
    ஆனால் பிரம்ம ஞானம் அறிந்தபின் சன்மார்க்கம் சொன்னால்தான் சிறப்பாக இருக்கும் என்பதை தாங்கள் நன்றாக புரிந்துவைத்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.