அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் இயற்றிய
மணியோசை
(கலிவிருத்தம்)
டங்டங் டங்டங் டங்கெனு
மோசை
இங்அங் கெங்கும்
ஓங்கு மோசை
எங்கெங் கிருந்தும்
எந்த னோசை
அங்கங் கிருந் தெழும்
மணியோசையே.
தங்கங் கருகும்
தகதக மேனியன்
அங்கங் கருதி அகநக
அருளியென்
சிங்கங் கெடுத்து
சித்தனு மாக்கியென்
சங்கங் களைச் சேரும்
மணியோசையே.
ஜோதிஜோதி ஜோதிஜோதி
ஜோதியென்று
ஆதிஆதி ஆதிஆதி ஆதியென்று
நீதிநீதி நீதிநீதி
நீதி உரைத்தன்று
வீதிவீதி வீதிவீதி
வந்த மணியோசையே.
உடலால் யான்புரியு
மியக்க யாவும்
சடப்பொருளால் புரியும்
சடங்கு யாவும்
விடத்தகும் ஆவி
விடங்கள் யாவும்
கடலிடை கொடுத்து
கேளாய் மணியோசையே.
உலகிடை விளங்கும்
உயிர்களுக் கடிமை
வலகலை விளங்கும்
வாசிக் கடிமை
மலவலை விலக்கும்
மனதிற் கடிமை
கலவுநிலை விளங்கி
கேளாய் மணியோசையே.
பசிக்கு உணவே பரமன்
ஆகும்
வசிக்கும் உடம்பே
வயிர மாகும்
கசிந்த மனமே கடவுள்
ஆகும்
ரசிக்க வாழும் ராசி
மணியோசையே.
இயற்கைக் குமேலொரு
இறைவன் ஏதடா
உயர்ந்த மதங்களில்
உண்மை ஏதடா
அயர்ந்து கிடக்கையில்
அன்னந் தானடா
பயனளிக்கு மதில்
பார் மணியோசையே.
மற்ற பலகோடி மனைவிகள்
எங்கே
பெற்ற பலகோடி பிள்ளைகள்
எங்கே
பற்றிய பலகோடி போகங்கள்
எங்கே
சுற்றம் போக சூழும்
மணியோசையே.
பிறந்த பின்பு பார்க்கும்
உலகமும்
இறந்த பின்பு இருக்கும்
உலகமும்
சிறந்த பின்பு சிக்கும்
உலகமும்
மறந்த பின்பு மயக்கும்
மணியோசையே.
தேடக் கிடைக்காது
தேவன் உண்மை
ஆடக் கிடைக்காது
ஆளும் உண்மை
பாடக் கிடைக்காது
பக்தி உண்மை
நாடக் கிடைக்குமே
நாடி மணியோசையே.
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqS2Mydko5Qk1PNjA/view?usp=sharing
30-01-2015
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.