Saturday, March 21, 2015

திருக்குறள் - சன்மார்க்க உரை

திருக்குறள் - சன்மார்க்க உரை


அன்பர்களுக்கு வந்தனம்!

உலக மொழிகளில் மிக அதிகமாக மொழிபெயர்த்து உலாவிக்கொண்டிருக்கும் சில நூல்களில் நமது செம்மொழி தமிழ்தந்த திருக்குறளும் ஒன்று. பல்வேறு அறிஞர்களால் இத்திருக்குறளுக்கு உரையும் எழுதப்பட்டுள்ளது, எழுதப்பட்டு வருகின்றது, எழுதயிருக்கின்றார்கள். உலக நூல்களில் திருக்குறளுக்கு மட்டுமே இன்னும் சரியான உரையினை இதுவரை யாராலும் எழுதப்படவில்லை. அப்படிப்பட்ட ஞான நூல் திருக்குறள்.

முதன் முதலில் வள்ளலார் அவர்களே தமது மாணவர்களுக்கு திருக்குறளை பாடமாக நடத்தினார். ஏனெனில், இந்து வேதங்கள் மற்றும் வேறு எந்த மத வேதங்களிலும் சாகாக்கல்வி சொல்லப்படவில்லை என்பதனை அறிந்து வருத்தமுற்றபோது அவருக்கு இறையருளால் சுட்டிக்காட்டப்பட்ட நூல் இத்திருக்குறளே. திருக்குறளில் மட்டுமே சாகாக்கல்வி சொல்லப்பட்டிருப்பதை எண்ணி வியப்புற்றார். எனவே தமிழகத்தில் முதன்முதலில் அத்திருக்குறளை தமது மாணவர்களுக்கு பாடமாக நடத்தி புரட்சி செய்தவர் வள்ளலார்.

வள்ளலாரின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக்கொண்டு வள்ளலார் திருக்குறளை நடத்தினார். வள்ளலார் மூலம் அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் அவ்வப்போது திருக்குறளை கற்று தேர்ந்தார். ச.மு.கந்தசாமிபிள்ளை மூலம் அவரது மாணவர் பிறையாறு சிதம்பரம் சுவாமிகளும், பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் மூலம் அவரது மாணவர் சீனி சட்டையப்பர் ஐயாவும் வழிவழியாக வள்ளலார் உணர்த்திய அத்திருக்குறள் உரையினை உணர்ந்து வந்தனர்.

திரு.சீனி சட்டையப்பர் அவர்கள் தமது குருவின் மூலம் உணர்ந்த மேலான திருக்குறள் உரையினை எழுதிவைக்க முடிவு செய்ததின் மூலம் நமக்கெல்லாம் திருக்குறளுக்கு ஒரு அருமையான சன்மார்க்க உரை கிடைத்திருக்கின்றது. இவ்வுரையைப் படிப்பவர்கள், வள்ளாலார் நேரில் வந்து திருக்குறள் பாடம் நடத்துவதாகவே உணருவார்கள். இந்நூல் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எனவே திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்கள் உதவியுடன் இந்நூல் தற்போது மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை கீழ்காணும் இணைப்பிற்கு சென்று தரவிறக்கம் செய்து படித்து பயனுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWVTFJMHg1TDBjQXc/view?usp=sharing

2 comments:

  1. Dear sir please send me the link once again the link provided by you is not opeining.

    ReplyDelete
    Replies
    1. https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWVTFJMHg1TDBjQXc/view?usp=sharing

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.