வாட்ஸ்ஆப் வள்ளலார்
(தி.ம.இராமலிங்கம்)
-----சிறு கதை-----
அவனது அறையில் பெரும்பாலும் இருட்டு சூழ்ந்துக்கொண்டது. ஓரிடத்தில் மட்டும் சிறிய விளக்கும் ஒளிவீசிக்கொண்டிருந்தது. மூன்றாம் பிறை இருளில் இவ்வுலம் பார்ப்பதற்கு எப்படி கவர்ச்சியாக
இருக்குமோ அப்படி இருந்தது அவனது அறை. கொசுக்கள் அவனது காதில் வந்து தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியே குளிர்ச்சியானக் காற்று உட்புகுந்தாலும், அதனை சூடாக்கி அவனது முகத்தில் துப்பியது மேலே சுற்றிக்கொண்டிருந்த
மின்விசிறி. இருட்டு வானிலும் பூமியின்
சுற்றுப்பயணம் நிற்காது செல்வதைப்போல, தூக்கத்திலும் அவனது கண்விழி உருண்டுக்கொண்டிருந்தது.
"எங்கும் புகழ் தங்கமே.......... எங்கள் இராம லிங்கமே..........." சமரச பஜனை நடந்துக்கொண்டிருந்தது.
"அடேய் ராமா.... நிறுத்தடா உனது பஜனையை."
"அபிஷ்ட்டு......... அபிஷ்ட்டு.......... ஏன்டா பஜனை பண்ணும்போது சிவன் பூஜையில் கரடி மாதிரி உள்ள வந்து... ச்சே.... ச்சே.... சரி சொல்லுடா சாமி.... என்ன வேணும் உனக்கு?"
"என்ன ஓய்... தெரியாத மாதிரி கேட்கிற... இப்ப உலகம் ஃபுல்லா இதான் பேச்சு... தெரியாதோ நோக்கு...."
"டேய் சாமி... எதுவுமே சொல்லாம... தெரியாதோ நோக்குன்னு கேட்டா.... என்ன அர்த்தம்? விஷயத்தை சோல்லு வே."
"அது ஒன்னுமில்ல வே.... உன்னோட குரு.... அதான் வள்ளலார் இப்ப சித்தி வளாகத்திலதான் இருக்காரு தெரியுமோ....."
"அட இத சொல்லவா வந்த.... அவரு எப்பவுமே அங்கத்தான்டா இருப்பாரு...."
"அட அது இல்ல ஓய்... இப்ப அடிக்கடி சித்திவளாகக் கதவு தன்னால திறக்கு....தா... தன்னால மூடு..தா.... உள்ள சத்தமெல்லாம் கேட்குதாம்பா.... இதாம்பா மேட்டர்..."
"ஆ..... அப்படியா.... யார் காதுல பூ சுத்தர...... சாமின்னு பேர் வைச்சாலே இப்படித்தான்.."
"என்ன...... என்ன....... சொன்ன?......"
"ஒன்னுமில்லடா..... அப்புறம் சொல்லு...."
"என்னா கதையா சொல்லுறேன்... உண்மையதாண்டா சொல்றேன் ராமா... ராமா..., வள்ளலார் அறையில இப்ப லயிட்டுகூட எரியுதாம்பா......"
"ஏன்டா அம்பிகளா... இவன் என்ன சொல்லுறான்னு புரியலையே! உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா... சொல்லுங்கோ...."
ராமனை சூழ்ந்துள்ள சமரச பஜனை கூட்டம் முழுவதும் ஒன்றும் புரியாமல்
சாமியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.
"அட... சாமி.... அந்த அறைக்கு எப்படிப்பா கரண்ட் கனைக்சன் வந்தது?"
"ஒரு நாள் சென்னையிலிருந்து
வெங்கட் ஐயான்னு ஒருவர் வள்ளலார பார்க்க சித்தி வளாகம் வந்திருக்காரு...."
"ஊ அப்புறம் சொல்லு..."
"வள்ளலாரும் அவரைப் பார்த்து.... நா எவ்வளவு காலம்தான் தனியா இந்த ரூம்ல எதுவுமில்லாம இருப்பது? ஒரே இருட்டாவும், புழுக்கமாகவும் இருப்பதா சொல்லியிருக்காரு...."
"அட.... சொல்லவே இல்ல.... சொல்லு.... சொல்லு..... சொல்லு..... "
"அப்படியே எனக்கு ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் கனைக்சனும், டேப்லெட்டும் வேண்டும் சொல்லியிருக்காரு....."
"யாரு..... வள்ளலாரு...... அந்த வெங்கட் ஐயாக்கிட்ட கேட்டிருக்காரு......... ம்..... அப்புறம் என்னாச்சுப்பா....."
"அப்புறம் என்னாச்சு..... வெங்கட் ஐயா உடனே வள்ளலார் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டாரு... பக்கத்துல நெய்வேலிக்கு போய், அங்கிருந்து டொன்டிஃபோர் ஹவர்ஸ் நான் ஸ்டாப் கரண்ட் கனைக்சன்
வாங்கி கொடுத்துட்டாரு. கூடவே ஒரு ஏசியும் அந்த ரூம்ல போட்டுட்டாருன்னா பார்த்துக்கோய......"
"ஆமா..... சாமி.... கரண்ட் பில் யார் கட்டுறது?"
"வள்ளலாருக்காக, கவர்மென்ட்ல கரண்ட ஃபிரியா கொடுத்துட்டாங்கடா ராமா..."
"அப்ப..... இப்ப வள்ளலார் கூலா இருப்பாருன்னு சொல்லு!... கொடுத்து வச்சவர்டா அவரு....."
"அமாம்... பின்ன.... இப்பெல்லாம் வள்ளலாரு எனிடைம் வாட்ஸ்ஆப்ல இருக்காராம் ஓய்...."
"அப்படியா... அம்பி.... அவருடைய வாட்ஸ்ஆப் நம்பர கொஞ்சம் சொல்லு வே....."
"அது வெங்கட் ஐயாவுக்குக்கூட
தெரியாது வே. ஆனா எனக்குத் தெரியும்
வே... நோட் பன்னிக்க.... +91 9445545475...... இந்த நம்பர்ல அவர எனிடைம்
மீட்பண்ணலாம். யார் கிட்டேயும் சொல்லாத
வே..... எல்லோருக்கும் தெரிஞ்சிட்டா
வள்ளலார் கோச்சுக்குவார், அப்புறம் அடிக்கடி நம்பர மாத்திக்குவாரு.... அப்புறம் நமக்கு டேஞ்சரா பூடும்...."
"சரி... சரி.... சாமி..... அப்படி என்னத்த வாட்ஸ்ஆப்ல
பாப்பாரு வள்ளலாரு....."
"இப்ப சமீபத்துல தமிழ்நாட்டுல
ஒரு போலீசுகாரன் தன்னோட வேலை செய்யற பெண்போலீசோட ஜொள்ளு விட்டானல்ல..."
"ஆமா.... அதையும் கேட்டுட்றா மனுசன்...."
"ஆமாண்டா.... கேட்டுட்டு சிரிச்சிட்டார்னா பார்த்துக்கோ......"
"இந்த கேவலத்தை கேட்டா கோபம்தான்டா
வரும்.... வள்ளலார் ஏண்டா சிரிச்சாரு...."
"அது வந்து..... அது வந்து...... துன்பம் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொல்லியிருகாரோன்னோ... அதனாலதான் சிரிச்சிட்டாரு. கரண்ட் இல்லா காலத்துல தண்ணியில விளக்கேத்தி ஜீவகாருண்ய ஒழுக்கம்
எழுதினவரு.... இப்ப நான் ஸ்டாப் கரண்டல
வாட்ஸ்ஆப் ஒழுக்கம்ன்னு ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காரு வே. அதுல உலக மக்கள் நல்ல காரியத்திற்காகவும், ஜீவகாருண்ய பணிக்காகவும் எப்படி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது
என எழுதிக்கிட்டே இருகாருன்னு கேள்வி...."
"வள்ளலாரு சுத்த சன்மார்க்கத்துக்கு
எந்த சாதனமும் வேண்டாம்னு அவசரப்பட்டு சொல்லிட்டாரு போல... இப்ப கம்ப்யூட்டர், இன்டர்நெட் கனைக்சன், டேப்லெட் ஆகிய சாதனங்கள் இல்லன்னா சன்மார்க்கமே இல்ல போல... இப்பன்னா இந்த மூனு சாதனமும் சுத்த சன்மார்க்கத்துக்கு மூன்று
படி போல மாறிவிட்டதுன்னு நினைக்கின்றேன்டா அம்பி...."
"ஆமான்டா தம்பி ராமா.... இப்பெல்லாம் நெட்லதாண்டா சன்மார்க்கம் பரவி வருது... அது நல்லது தாண்டா.... அதுல தப்பொன்னு இல்ல வே. வள்ளலார் அடிக்கடி பார்க்கும் இணையத்தளம் எதுன்னு தெரியுமோ
நோக்கு?..."
"அடே பாதகா.... அதையும் சொல்லி தொலையும் வே...."
"...."டபல்யூ டபல்யூ டபல்யூ
டாட் வள்ளலார் ஆப்ஸ்பேஸ் டாட் காம்"தான் அவர் என்னேரமும் பார்த்துக்கொண்டே இருப்பாரு.... அப்புறம் "டபல்யூ டபல்யூ டபல்யூ டாட் வள்ளலார் டாட் பிளாக்ஸ்பாட் டாட் இன்" என்ற வலைப்பூ பக்கத்தையும் அடிக்கடி பார்த்துவருவதாக அறிவேண்டா
அம்பி..."
"சாமி சொன்னா அது சரியாத்தான்
இருக்கும்..."
"ம்... அப்புறம் கேளு.... வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. இருக்காருல்லோ..... அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்துச்சு.... உடனே காரணப்பட்டுல இருந்து வள்ளலார சந்திக்க சித்திவளாகம்
வந்து தன்னுடைய குரு இப்ப எப்படியெல்லாம் வசதியா இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டு வயித்தெரிச்சலோட
போயிருக்காரு வே..."
"ஐய்யய்யோ.... அவருக்கு எதுக்குய்யா வயித்தெரிச்சல் படனும்?,,,,....."
"தன்னோட குரு அனுபவிக்கும்
அதே வசதியை நான் இருக்கும் இடத்துல நானும் அனுபவிக்கனும்னு, ச.மு.க. அறக்கட்டளை நிறுவனர் திருநாவுக்கரசு ஐயாக்கிட்ட கேட்டிருக்காரு
வே."
"அட்ரா சக்க...... குருவைப்போல சிஷ்யரும் வந்துட்டாருன்னு சொல்லு.... அப்புறம் ச.மு.க. வுக்கும் கம்ப்யூட்டரு, இன்னடர்நெட், டேப்லெட்னா கிடைச்சுதா..."
"ம்.... திருநாவுக்கரசு ஐயாவும் உடனே வாங்கிக்கொடுத்துட்டாரு.... அவரு இருக்கும் இடத்தையும் இடித்திட்டு இப்ப அந்த ஊரு கே.வி.எஸ்.இராமலிங்கம் தலைமையில்
புதிய கட்டடமும் அவருக்கு வசதியா கட்டதொடங்கிட்டாங்கன்னா பார்த்துக்கோ... அவருடைய செல்வாக்க.... இப்பவெல்லாம் ச.மு.க.வும் எப்பவும் பேஷ்புக்கே
கதின்னு இருக்காரு வே."
"...பேஷ்...... பேஷ்...... இந்தக்காலத்துல பேஸ்புக்கலதான் சன்மார்க்கம் ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லு...."
"ஆமாம்.... பேஸ்புக் இல்லன்னா சன்மார்க்கம் இல்ல வோய்... "டபல்யூ டபல்யூ டபல்யூ டாட் பேஸ்புக் / இராமலிங்கம்வெப்" என்ற முகவரிக்கு போனன்னா அங்கு ச.மு.க. அவர்கள பார்க்கலாம் வே."
"அப்படியா...... ச.மு.க. சட்ட போட்டுக்கிட்டு இருக்காரா? நெஞ்சை காட்டிக்கிட்டு இருக்காரா வோய்?"
"ஆமா.... இப்ப அதுதான் நமக்கு முக்கியமடா ராமா. முக்காடு போடாத வள்ளலாரையும், சட்ட போட்ட ச.மு.க. வையும் பார்க்கவே முடியாதுடா அபிஷ்டு".
"அப்புறம் ஒரு நியூஸ் வே..... வடலூர் இராமலிங்கமும் கடலூர் இராமலிங்கமும் சித்திவளாகத்துல
சந்திக்கப் போறாங்களாம் வே."
"என்ன ஓய்... உளருகின்றீர்.... இரண்டு இராமலிங்கமா?!..."
"ஒருநாள் வள்ளலார் வாட்ஸ்ஆப்ல "இராமலிங்க அகவல்" அப்படீன்னு தன்னுடைய பெயரில இருக்கிற அகவல படிச்சிருக்காரு. அது தான் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவலைக் காட்டிலும் 2010 வரிகளைக் கொண்ட மிக நீண்ட பாடலாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, அதை எழுதிய கடலூர் இராமலிங்கத்தை சந்திக்க வேண்டி வாட்ஸ்ஆப்பிலே
அழைப்பு கொடுத்துட்டாரு வே."
"நாமெல்லாம் எப்பவே வாட்ஸ்ஆப் வள்ளலாரை
பார்ப்பது.... எப்பவே சந்திப்பது?..."
"இப்படி கேட்பன்னு தெரிஞ்சித்தான், நான் வள்ளலார் வாட்ஸ்ஆப்ல இருக்கும்போது அவரை படம்பிடிச்சு
வந்திருக்க வே... இதோ அந்தப் படத்தை வேனுன்னா
பாரு... சந்திப்பதை பற்றி பிறகு
யோசிப்போம் ஓய்....
"டேப்லெட் எடுத்துக்கிட்டு
சித்தி வளாகம் போவோம்.... வாட்ஸ்ஆப் வள்ளலாரை சந்திப்போம்.... அட நீங்களும் வாங்க சித்தி வளாகத்துக்கு...."
பூமியின் இருள் பயணம் இனிதே முடிந்து சூரியனின் வீச்சு அதன்மேல்
விழத் துவங்கியது. அதுவரை உருண்டுக்கொண்டே தூங்கின சாமியின் கண்களும் வெளிச்சம் பட்டு விழிக்கத்
துவங்கின. அப்போது அவன் உண்மையிலே
வாய் விட்டு கத்தினான், "அட ராமா.... நான் கண்டதெல்லாம் கனவா!!!........ இப்பவே கண்ண கட்டுதே.... உஷ்ஷ்ஷ்.... தாங்கலப் பா....."
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVmxTeW9OdTYzMEE/view?usp=sharing
(முற்றும்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.