காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும்
மின்னிதழில் செப்டம்பர் – 2017 ஆம் மாதம் வெளியானவை;
சித்தர்கள்
பார்வை
சுயநலத்துடன்
கூடிய உலகப்பற்று, நிலையற்ற செல்வத்தின் மீதான பேராசை, பொய்யான புகழ் போதை ஆகியவற்றில்
இருந்து விடுபடாத வரையில் மனம் அடங்காது. அப்படியான மனத்தினால் எதுவும் கைகூடாது என்கின்றனர்
சித்தர்கள்.
·
இலட்சியம்
விட்டால் யோகம் போச்சு
·
குண்டலினி
விட்டால் அஷ்டசித்தி போச்சு
·
மனம்
விட்டால் ஞானம் போச்சு
·
வாசி
விட்டால் தேகம் போச்சு
மானிடர் தாம்
உயர்வதற்கும், தாழ்வதற்கும் அவரவர் மனமே காரணம் என்று சொல்கின்றார்கள் சித்தர்கள்.
இத்தனை வல்லமை வாய்ந்த மனதினை எவ்வாறு அடக்க வேண்டும் என்ற பக்குவத்தையும் நமக்கு உணர்த்தி
சென்றுள்ளனர்.
இதையே திருமூலரும்,
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைத்தென்
விரித்த
பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தவமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.
என்று
பாடுகின்றார். நான் பெரியவன், நான் உரைப்பதே சரி என்று எண்ணி நிறைய பேசுவதினால் என்ன
பயன்? இந்த மாதிரியான பேச்சுக்கள் எத்தனை காலத்திற்கு? கால ஓட்டத்தில் இவ்வாறான பேச்சுக்கள்
என்றும் நிலைப்பதில்லை. அத்துடன் கானல் நீர் போல் தோன்றி மறையும் உலகை நினைத்திருப்பதில்
என்ன பயன்? மாயைகளை உள்ளம் பெருக்கிற் அம்மாயையும் பெருகும். மாயைகளை உள்ளம் சுருக்கின்
அதுவும் சுருங்கும். எனவே உள்ளம் எனும் மனமே சக்தி வாய்ந்தது.
பரவலாக உலகெங்கும்
விரிந்து காணப்படும் பொருட்கள் எதுவும் நிலையானது அல்ல என்ற உண்மையை ஆராய்ந்து அறிபவர்களுக்கு
மட்டுமே இந்த உண்மை என்ற நிலை புரியும். இந்நிலை புரியாதவரே வாய்வார்த்தை பெரிதென்று
எண்ணியிருப்பர் என்று சொல்கின்றார் திருமூலர்.
ஆக மனச் சுத்தம்
ஆகாதவரை யாராலும் தேகத்தை வெல்ல முடியாது. அதுவரை தேகம் அழிந்து மரணம் அடைந்தே தீரும்.
– நன்றி-தோழி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.