வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:
டிசம்பர் மாதத்தில் அன்று..
30-12-1860 - தம்மால் வெளிப்பட்ட பாடல்களை,
இன்னும் இரண்டு மாதத்தில் அச்சேற்றம் செய்ய கொண்டுவருகிறேன். தாங்கள் ஒரு வேளை போசனம்
செய்வதை விடுக்க வேண்டுமென, இரத்தின முதலியாருக்கு வள்ளற்பெருமான் கடிதம் எழுதினார்.
?-12-1867
- ஆடூர் சபாபதி சிவாச்சார் முதன் முதலில் வள்ளற்பெருமானை
சிதம்பரத்தில் சந்தித்தார்.
13-12-1867
- வடலூர் தருமச்சாலையில் ஒரு துணியை திரைபோல் கட்டி, சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்தின்
அத்தனை நிகழ்ச்சிகளையும், அபிசேகங்களையும் இருந்த இடத்திலிருந்தே நேரடி காட்சியாக வள்ளல்
பெருமான் அங்குள்ள அன்பர்களுக்கு அந்தத் திரையில் தோன்றும்படி காட்டுவித்தார்.
18-12-1869 - வள்ளல் பெருமான் மீது கடலூர்
மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் நோக்கம்
அருட்பா மருட்பாவைப் பற்றிய வாத பிரதிவாதங்கள் அல்ல. வள்ளல் பெருமான் தன்னை இழிவாக
பேசியதாகவும் அதற்காக மான நஷ்ட ஈடு தரவேண்டும் என்பதே வழக்கின் முக்கியமான நோக்கமாக
இருந்தது. நாவலர் என்பதற்கு நாவன்மை மற்றும் நாக்கு இல்லாமை என்ற் பொருளை அடிகள் சொல்ல,
நாய் அலர் என்று சொன்னதாக நாவலரிடம் கூறப்பட்டதே இதற்கு காரணம்.
06-12-1884
- வள்ளல் பெருமான் மேட்டுக்குப்பத்தில் வைத்து வழிபட்டு வந்த இரண்டு இரும்பு பெட்டிகளையும்
ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் அவர்கள் வடலூருக்கு எடுத்துச் சென்றார். அந்த இரும்புப்
பெட்டியைத் திறக்க முயன்று, அது திறக்க முடியாமல் போகவே தனது வீட்டில் வைத்துக்கொண்டார்.
மேலும் வள்ளலார் பயன்படுத்திய சில பொருட்கள், உயிர் காக்கும் மருந்தான கற்பம் என்னும்
குருமருந்து, ஞான வெட்டி 1500, திருமந்திரம் 8000, திருவாசகத்தின் ஞானத்தாழிசை போன்ற
நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அனைத்தையும் ஆடூர் சபாபதி தன் சகாக்களுடன் சித்திவளாகம்
சென்று வள்ளலார் பயன்படுத்திய இவையனைத்தையும் தன் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டார்.
02-12-1924
- வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் - சமரச பஜனை - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள்
கார்த்திகை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வள்ளல் அடி மலர்ந்தார். அவரது சொந்த ஊரான
காரணப்பட்டில் சமாதி கொண்டுள்ளார். அனையா தீபமும், வள்ளற்பெருமானின் திருவடியும், ச.மு.க.
அவர்களின் அருளும் இவரின் சமாதி நிலையத்திற்கு வருபவர்களை ஆட்கொள்கிறது. 25-11-2017
அன்று இவரின் 93-ஆம் ஆண்டு குருபூஜை நட்சத்திர கணக்கின்படி காரணப்பட்டில் நடைபெற்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.