Saturday, September 12, 2026

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:


அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம்

இன்றைய உலகில் ஈரான் அமெரிக்கா போர் நடைபெறுவதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் இவ்வுலக நாடுகளில் பெட்ரோல் டீசல், எரிவாயு கிடைக்காமல் மக்களால் வசதியாக வாழ முடியவில்லை. நீங்கள் பல கோடி செலவழித்து சொகுசு கார் வாங்கினாலும், அந்தக்காரில் செல்வதற்கு மிகச் சாதாரணமான பெட்ரோல் தேவை. பெட்ரோல் இல்லாமல், உங்களது சொகுசு கார் ஒரு செண்டிமீட்டர்கூட நகராது.

பெட்ரோல் இல்லாது, நீங்கள் வாங்கிக் குவிக்கும் அனைத்து வாகனங்களும் வெறும் அலங்கார பொம்மைகளாகவே இருக்கும்.

இங்கு நமது வாழ்க்கையினை செம்மையாக வழிநடத்த ஜீவகாருண்யம் முக்கியமாக வேண்டும். ஜீவகாருண்யம் என்பது காரில் பயன்படும் பெட்ரோலைப் போன்றது. அப்படிப்பட்ட ஜீவகாருண்யம் இல்லாமல், இந்த உலகில் வாழும் மக்கள் யாவரும் வெறும் அழகு பொம்மைகளாகவே வலம் வருகின்றனர்.

ஜீவகாருண்யம் இல்லாமல், சரியை, கிரியை, யோகம், ஞானம் பெற்றவர்களும், கடவுள் அருளுக்கு சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள்.

புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளை தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் செய்தல், விரதம் இருத்தல், யாகம் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற சமுசாரிகளும், விரதிகளும், பக்தர்களும், ரிஷிகளும்,

உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும்,

அளவு கடந்த சித்தி இன்பங்களைப் பெற்ற சித்தர்களும், எது நிலையற்றது, எது நிலையானது என்று அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஞானிகளும்,

ஜீவகாருண்யம் செய்யாமல், எவ்வளவு பெரிய ஆன்மீக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் யாவரும் மோட்சம் என்னும் மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறி, அவ்வீட்டிற்கு அருகில் காத்திருந்து, அவ்வீட்டிற்குள் புக முடியாமல், மீண்டும் இவ்வுலகிற்கே திரும்புவார்கள்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டில் திறவுகோள். இந்த திறவுகோல் இருந்தால்தான், மோட்ச வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று இன்பத்தை அடைவார்கள் என்பதை உண்மையாக அறிய வேண்டும்.

எனவே, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளில் சிக்குண்டு மாள்வதை விடுத்து, ஜீவகாருண்யம்  என்னும் கடவுள் வழிபாட்டால் நாம் பெறுவதுதான் இன்ப வாழ்வாகும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஜீவகாருண்யத்தை பின்பற்றாத மக்களுக்கு அறிவு விளங்கவில்லை என்று நாசூக்காக சொல்கிறார் வள்ளலார்.

நாமும் இந்நேரத்தில் உலக மக்களுக்கு எல்லாம், திருவிளங்க சிவயோக சித்தி எல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க சிவா அனுபவம் விளங்க, பூரண அறிவு விளங்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம்.

 ஆக, நாம் அனைவரும் தயவுடன் இருப்போம் மக்களேநன்றி

 அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

--T.M.RAMALINGAM - CUDDALORE * +91 9445545475



Friday, September 11, 2026

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை


இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நலம், உங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? 

முதன் முதலில் தமிழில் உரைநடையை கொண்டுவந்தவர் வள்ளலார்தான். வள்ளலாருக்கு முன்பு செய்யுள் வடிவில்தான் தமிழ் வளர்ந்து வந்தது. தமிழில் உரைநடை வடிவை வள்ளலார் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அதற்கு தானே பதிலையும் உரைநடை வடிவில் முதலில் கொடுத்தவர் வள்ளலார்தான். 

வள்ளலார், தான் எழுதிய “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலில் உரைநடையை கையாண்டிருப்பார். இந்த உரைநடையை கேள்வி, பதில் என்னும் நடையில் மிக அருமையாக வடிவமைத்திருப்பார். 

தமிழில் முதன் முதலில் உரைநடையை எழுதி, அதனை தமிழக மக்களுக்குக் கொடுத்த சிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலாரை போற்றும் வண்ணம், நாமெல்லாம் எழுந்து கரவொலி எழுப்பலாமே மக்களே.

. இன்று நாம், காடுகளில் வசிக்கும் புலி, சிங்கம், இவைகளின் உணவு முறைகள் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி ”ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் உரைநடை நூலின் வழியே பார்ப்போம் வாருங்கள்

மாமிச ஆகாரம் புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு கடவுளால் அனுமதிக்கப்பட்ட நியதி ஆகாரம் அல்லவா? என்றால், இல்லை. மாமிச உணவு, காடுகளில் வாழும் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கும் கடவுளால் அனுமதிக்கப்பட்ட உணவு அல்ல என்கிறார் வள்ளலார். 

காட்டு மிருகங்கள் எல்லாம், தங்களது பரம்பரை வழக்கத்தால் அவைகள் தொடர்ந்து மாமிசங்களை உண்கின்றன. இம்மிருகங்களை சைவ ஆகாரத்திற்கு பழக்கப்படுத்த யாரும் இல்லை. ஒரு வேளை, ஒரு புலிக்குட்டியை பிடித்து வந்து, அதற்கு பிறந்தது முதல் சுத்த சைவ உணவையே கொடுத்து நாம் பழக்கப்படுத்தினால், அது சுத்த ஆகாரத்தையே உண்டு வாழுவதைப் பார்க்கலாம். 

”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்ற பழமொழியை பொய்யாக்க முடியும். ஆனால், அதனை அவ்வாறு பழக்க மனிதர்களால் முடியாமல் போய்விடுகிறது. ஆதலால் அவைகள் தங்கள் வழக்கத்தால் அசுத்த ஆகாரங்களையே உண்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக, நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை, அவைகள் வேறு இடத்திற்குச் சென்று அசுத்த உணவை உண்ண விடாமல், அவைகளுக்கு சுத்த உணவான சைவ உணவைக் கொடுத்து வளர்த்தால், அவைகள் இறுதிவரை அசுத்த உணவை தொடாது வாழ்வதை பார்க்கலாம்.

ஆகவே, ஒரு ஜீவனை இம்சைப் படுத்திக் கொன்று, அதனை வேறு ஒரு ஜீவனுக்கு பசியாற்றுவித்தல் கடவுள் அருளுக்கு சம்மதம் அல்ல. அது ஜீவகாருண்யமும் அல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும். 

இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் சிவப்புக் கலரில்தான் இரத்தத்தை கொடுத்துள்ளான். இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையை கொடுத்து, பந்தம், பாசம். சிற்றின்பம் போன்றவைகளை சமமாகவே கொடுத்துள்ளான். உங்கள் கைவிரலில் ஏதேனும் காயம் பட்டுவிட்டால், நீங்கள் எவ்வாறு வலியால் துடிக்கிறீர்களோ? அதே துடிப்பை, அதே வலியை எல்லா உயிர்களுக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான். 

எனவே மக்களே, நாம், எல்லா உயிர்களிடத்தும் தயவாய் இருப்போம்.

நன்றி மக்களே. வேறொரு காணொலியில் சந்திப்போம். 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி;

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 




Tuesday, September 8, 2026

முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...

 முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...


ஹலோ மக்களே, எப்படி இருக்கிறீர்கள்… 

இன்று நாம் பார்க்கப்போவது, முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள், இந்த ஜென்மத்தில் நம்மை வந்து தாக்குமா? என்பது பற்றி வள்ளலார் என்ன சொல்கிறார், என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
அதற்கு முன்னர், உங்கள் வீட்டில் வள்ளலார் அருளிய ”திருவருட்பா” ஆறு திருமுறைகள் நூல் உள்ளதா? வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு, ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றிய “பிரபந்தத்திரட்டு” நூல் உள்ளதா? இவை இரண்டும் சுத்த சன்மார்க்க நூல்கள் ஆகும்.  

இந்த இரண்டு நூல்களும் இல்லை என்றால் உடனே வாங்கி உங்கள் வீட்டில் பத்திரப்படுத்துங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த நூல்களை எடுத்து படியுங்கள். படிக்கும்பொழுது உங்கள் ஊன் கலந்து, உயிர் கலந்து படிக்க வேண்டும். அப்போது உங்களது துன்மார்க்கங்கள் உங்களை விட்டு ஓடுவதை பார்ப்பீர்கள்.

இந்த இரண்டு நூல்களையும் இறைவன் இந்த உலகிற்கு கொடுத்தமைக்காக, அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பொருட்டு, நாம் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கர ஓசை எழுப்பலாமே. (மக்கள் எழுந்து நின்று கர ஓசை எழுப்புகின்றனர்)

ஒரு குடியானான், தனது அதீத ஆசையை தீர்ப்பதற்காக, வேறு ஒரு நபரிடம் கடன் பெற்று, அந்தப் பணத்தை செலவழித்து விடுகிறான். ஆனால் அவனால் கடனை முழுதாக திருப்பிச் செலுத்த இயலவில்லை. கடன் கொடுத்த நபர், அவன் வீட்டுக்கு அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்கிறான்.

கடன் தொல்லை தாங்காமல், ஒரு கட்டத்தில், கடன் பெற்றவன், தனது குடியிருப்பை வேறு ஒரு ஊருக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான். என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டினையும் எப்படியோ கண்டுபிடித்து, அங்கேயும் வந்து கடன் கொடுத்தவன் வந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டான். கடன் கொடுத்தவன் சும்மா விடுவானா?

ஒரு குடியானவள், தனது கணவன் சொல் பேச்சை கேட்காமல், பலரைக் கூட்டி தன் வீட்டில் விபச்சாரம் செய்கிறாள். இதனை தடுக்க நினைத்த கணவன், தனது வீட்டை அந்த ஏரியாவிலிருந்து மாற்றி நெடுந்தொலைவில் உள்ள வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்தான்.

என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டிலும் துன்மார்க்கர்கள் தேடி வந்து, அவன் மனைவியுடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். 

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லவா மக்களே…

நமது மக்கள் ஆட்சியில், ஒருவன் ,தான் ஆட்சி செய்தபோது செய்த பாவச்செயல்களுக்கு, அவன் ஆட்சிக்குப் பிறகு, மக்களின் தீர்ப்பால் வேறு ஒருவர் ஆட்சி அமையும்போது, முந்தைய ஆட்சியாளனுக்கு அவன் செய்த பாவச் செயல்களுக்கு  அவனுக்கு தண்டனை கிடைக்கிறது அல்லவா?   

இவ்வாறு, நீங்கள் முன்பிருந்த வீட்டில் செய்த வினைகள், நீங்கள் வேறு ஒரு வீட்டை மாற்றிய பிறகும், தற்போது உள்ள வீட்டிலும் தொடர்ந்து வருவது போல, ஒருவன் ஆட்சி செய்யும்போது, அவன் செய்த பாவங்களுக்கான  தண்டனை, அவனுக்கு வேறு ஒருவரின் ஆட்சியில் கிடைப்பது போல, 

ஜீவகாருண்யம் இன்றி, நீங்கள் முன் பிறவியில் விரும்பி செய்த பாவச் செயல்கள், உங்களின் இந்தப் பிறவியிலும் தொடரும் என்பதை அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார். பாவச் செயல்கள் மட்டுமல்ல, புண்ணியச் செயல்களும் அவ்வாறே தொடரும் மக்களே.

எனவே, உங்களை தொடர வேண்டியது பாவமா? புண்ணியமா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். (மக்களின் கர ஓசை எழுகிறது) 

நன்றி மக்களே…. நாம் தயவோடு இருப்போம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க, வாழ்க.




Monday, September 7, 2026

முற்பிறவி உண்டா?

முற்பிறவி உண்டா?


 வணக்கம் மக்களே…. 

நாம் இன்று பார்க்கப்போவது இவ்வுலக ஜீவிகளுக்கு முன் பிறவி இருந்ததா? மற்றும் அடுத்தப் பிறவி உண்டா? என்பது பற்றிதான். 

பொதுவாக அனைத்து மதங்களிலும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 

நாம் இதைப்பற்றி வள்ளலார் என்ன கூறியிருக்கிறார் என்று இந்த நாளில் பார்ப்போம்.

மக்களே, உங்கள் அருகில் வள்ளலார் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம், வள்ளலார் இதோ இங்கே நம்மிடையேதான் இருக்கிறார். அவரை வரவேற்கும் பொருட்டு, உற்சாகமாக ஒரு முறை எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள் மக்களே.

அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புகிறார்கள்.

நன்றி மக்களே.

ஒருவன், தான் குடியிருக்க, புதியதாக ஒரு வீட்டைப் பார்த்து வாடகை கொடுத்து குடியிருக்கிறான். அவன், இந்த புதிய வீட்டிற்கு வரும் முன்பே ஏதோ ஒரு வீட்டில் குடியிருந்திருக்க வேண்டும் அல்லவா?, முன்பு இருந்த வீட்டை விட்டுவிட்டுத்தானே, அவன் புதியதாக தற்போது குடியிருக்கும் இந்த வீட்டிற்கு வந்திருக்க முடியும். ஏதோ ஒரு காரணத்தினால் அவன் பழைய வீட்டை விட்டு, புதிய வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அது போல், அவன் தற்போது இருக்கும் வீடும் பழுதடைந்துவிட்டால், அவன் தனது எதிர் கால வாழ்க்கைக்காக, வேறு ஒரு புதிய வீடு தேடி குடியேறுவான் அல்லவா?  

அதுபோல், நமது ஆன்மாவானது, ஆகாரம் என்னும் வாடகை கொடுத்து, இந்த மனித தேகத்தில் ஜீவிக்கிறது. இந்த ஜீவன் இதற்கு முன்பும் ஏதோ ஒரு தேகத்தில் ஜீவித்திருக்க வேண்டும். அந்த முன் தேகத்திற்கு பழுது ஏற்பட்டதால், அந்த ஆன்மாவானது தற்போதுள்ள இந்த மனித தேகத்திற்கு ஆகாரக் கூலி கொடுத்து வசித்துவருகிறது. 

தற்போதுள்ள தேகத்திற்கும் பழுது நேரிடும் பொழுது, அந்த ஆன்மாவானது எதிர்காலத்தில் வேறு ஒரு தேகம் எடுப்பது நிச்சயம். ஏனெனில் தேகம் இல்லாமல் ஆன்மாவனது ஜீவித்திருக்க முடியாது.

எனவே, நமக்கெல்லாம் முன் பிறவிகள் இருந்திருக்கின்றன, அடுத்த பிறவிகளும் நிச்சயம் உண்டு, என அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும். அதாவது, நாம் நமது பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையினை ஞாபகம் வைத்துக்கொள்வதுபோல, ஏன், நமக்கு முற்பிறவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஞாபகம் வருவதில்லை, என்பதுதான் அந்தக் கேள்வி.

இதற்கும் வள்ளலார் பதில் கூறுகிறார். நாம் எவ்வாறு நமது குழந்தைப் பருவ செயல்களை கால ஓட்டத்தில் நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லையோ, அது போல், நாம் நமது முற்பிறவியின் செயல்களையும் கால ஓட்டத்தில் மறந்துவிடுகிறோம்.  

யார் ஒருவர் இந்தப் பிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெற்று தனது தேகத்தை ஞான தேகமாக, நித்திய தேகமாக மாற்றுகிறோரோ, அவருக்கே அடுத்தப் பிறவி என்பது கிடையாது. நித்திய தேகத்திற்கு குடிக்கூலி கிடையாது, அதாவது ஆகாரம் கொடுக்க வேண்டாம். அது அவருக்கு என்றும் பழுதே ஏற்படாத, சொந்த வீடாகிவிடுகிறது. அவர் எதிர்காலதில் வாழ, அடுத்த வீடு தேடி செல்ல வேண்டியதில்லை.

எனவே மக்களே, நீங்கள் குடியிருக்கும் இந்த தேகம் என்னும் வீட்டினை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், நித்திய தேகமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிற ஜீவன்களை துன்புறுத்தி, அவர்கள் வாழும் தேக வீட்டினை இடித்து பாழ் செய்யாமலிருந்தால்தான், உங்களுக்கு நித்திய வீடு கிடைக்கும் என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். Mind It. 

நாம் தயவுடன் இருப்போம். நன்றி மக்களே…

அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





Friday, September 4, 2026

உங்கள் அடுத்தப் பிறவி என்ன?

உங்கள் அடுத்தப் பிறவி என்ன? 


”என் அன்பு மக்களே, வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்.

இன்று நம் மக்களிடையே புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன. புல் ஒழுக்கங்கள் என்றால், சட்டத்திற்கு பயந்து ஏதோ ஒருவகையில் நியாயவானாக இருப்பது, தங்களது மதங்கள் கூறுவதுதான் உண்மை என தவறானப் பாதையில் வாழ்க்கையை ஓட்டுவது,அல்லது மனம் போன போக்கில் வாழ்வது, இவைகள்தான் புல் ஒழுக்கங்கள் ஆகும்.

இப்படிப்பட்ட புல் ஒழுக்கங்களைத் தாண்டி மனிதனானவன், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்காமையால்தான் இவ்வுலகில் புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன.

மனிதனானவன் புல் ஒழுக்கங்களையே கடைபிடிப்பதனால், அவனுக்கு என்ன நிகழும் என்று கேட்கிறீர்களா?

அவனுக்கு அடுத்த பிறவியானது துன் மார்க்கப் பிறவியே ஏற்படும், என்கிறார் வள்ளலார்.” அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தார் அவ்வையார்.

மனிதப் பிறவி அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது என்பார் வள்ளலார். 

இப்பிறவி தப்பின் எப்பிறவியோ? நம்மில் அனைவரும் அடுத்தப் பிறவி நமக்கு மனிதப் பிறவிதான் கிடைக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் பொய்யில்தான் சென்று முடியும்.

இந்த உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். நம்மில் குடும்பக் கட்டுப்பாடு என்ற செயற்கை கட்டுப்பாடு இல்லை என வைத்துக்கொண்டாலும், இன்று, சுமார் 2000 கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால், ஒரு சில எறும்பு புற்றுகளில் இருக்கும் எறும்புகளின் எண்ணிக்கை மட்டுமே இந்த 2000 கோடியினையையும் தாண்டிவிடும்.

இன்னும் மற்ற மற்ற உயிரனங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடவே முடியாது. அவ்வளவு எண்ணிறைந்த ஆன்மாக்கள் நம் போன்ற மனிதப் பிறவியை எடுக்க முடியாமல் இவ்வுலகில் வாழ்கின்றன.

நமக்கு மனிதப் பிறவி எதற்காக கொடுக்கப்பட்டது? 

நாம் ஒவ்வொருவரும், சர்வ ஜீவ தயவு உடையவர்களாகவும், இறைவனின் சர்வ வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்காகத்தான் நமக்கு இறைவன் இந்த அற்புதமான மனித தேகத்தை கொடுத்தான், என ஒரு குழந்தைக்கு சொல்வது போல், வள்ளலார் நமக்கு சொல்கிறார்.

இதனை மீறி புல் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் கடின சித்தர்கள் முதல் மக்கள் யாவரும், அவர்களது அடுத்தப் பிறவியில், அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப,

சிலர், நரகவாசிகளாகவும்,

சிலர், சமுத்திர வாசிகளாகவும் அதாவது கடலில் வாழும் உயிரினங்களாகவும்,

சிலர், ஆரணிய வாசிகளாவும் அதாவது காடு, மலைகளில் வசிக்கும் ஆதிவாசிகளாகவும்,

சிலர், புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, மான், ஆடு, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும்,

சிலர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜந்துக்களாகவும்,

சிலர், முதளை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,

சிலர், காக்கை, கழுகு முதலிய பறவை சண்டாளங்களாகவும்,

சிலர், எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும்,

பிறப்பெடுக்கின்றனர், என்று வள்ளலார் கூறுவதை நீங்கள் யாவரும் அறிய வேண்டும். எனவே என் அன்பு மக்களே!

வள்ளலார் சொல்கிறார், “ இனி நீங்கள் இது வரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை”

பல்லாயிரங்கோடி ஆன்மாக்களில் ஒரு ஆன்மாதான் மனிதனாக பிறப்பெடுக்கிறது,

எனவே தயவுடன் இருங்கள். நன்றி மக்களே!





Friday, August 14, 2026

எல்லா உயிர்களுக்கும் சுதந்தர தின வாழ்த்துகள்

 

எல்லா உயிர்களுக்கும் சுதந்தர தின வாழ்த்துகள்


மனிதர்களிடமிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்தரம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

- TMR

9445545475



Friday, August 7, 2026

சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?

சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?



என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்                           இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
          பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
          உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
         மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.

என் இயல் போல் பிறர் இயலை எண்ணாதே, என்னைப்போல் பிறரை எண்ணாதே. பிறர் போல் நால் இல்லை. நான் தனித்து இருக்கின்றேன். இதனை நான் இறுமாப்பாய் சொல்லவதாக நினைத்துவிட வேண்டாம். 

எனது அருட்பெருஞ்ஜோதி அல்லாது வேறொருவரிடம் எனக்கு ஒரு சிறிதும் பற்றில்லை.

எனக்கு உற்றவரும், மற்றவரும், எனது பொருளும், எனக்கான என் உயிரும், எனது உடலும், எனது உணர்வும், உயிர் உணர்வால் அடைந்த சுகமும் 

திருச்சிற்றம்பலத்தில் அதாவது என் இறைவன் இருக்கும் இடத்தே நிலைபெற்றுவிட்டது.

எனவே நான், பிறர் போல, பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல, அலியும் அல்ல. இது குறித்து நீ என்று அறியப்போகின்றாயோ?

என, தன் மனதிடம் வள்ளலார், தனது உண்மை நிலையை எடுத்துரைப்பதை பாருங்கள். 

ஆறாம் திருமுறையில் அனுபவ மாலையில் இப்பாடலை பாடியிருக்கின்றார்.

பாலியல் மாயையை கடந்து, நாமெல்லாம் ஆன்மா என்கிற நிலையை அடைய, இந்தப்பாடலை சன்மார்க்கிகள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொள்ள வேண்டும். சாகாதவனே சன்மார்க்கி என்ற நிலையை அடைய வேண்டுமானால், நமது ஆன்மா குடிகொண்ட இந்த உடல், பிற அசுத்த உடலுடன் உறவு கொள்வதை தடுத்து, நிர்மலனாகிய இறை உடலுடன் உறவு கொள்ள வேண்டும். 

இறைவனின் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதே சன்மார்க்கிகளில் இலட்சியமாக இருக்க வேண்டும்.

இதற்கு தடையாக இருப்பது உடல் உறவிற்காக செய்யக்கூடிய திருமணங்கள். இந்த திருமணங்கள் உலகியல் மனிதர்களுக்கு அவசியம் வேண்டும். நாம் இங்கு சன்மார்க்கிகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். யார் ஒருவர் ஒளி தேகத்திற்கு இச்சை கொள்கிறார்களோ? அவர்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். 

மோக மாந்தருக்கு உரைத்திலேன், இது சுகம் உன்னும் யோக மாந்தருக்கு உரைத்தேன் என்பார் வள்ளலார்.

ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையாருக்கு கோசத்தடிப்பு உண்டாகாது, என்பார் வள்ளலார். 

வள்ளலார் திருமணம் செய்தாரே? என்று யாரேனும் உங்களில் கேட்டால், நீங்களும் எதிர் பாலினத்தாரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் உடலுறவில் வள்ளலார் போல் ஈடுபடாமல் இருவரும் இருங்கள். இராமகிருஷ்ணரும் அவ்வாறுதான் இருந்தார். உங்களால் முடிந்தால் அவ்வாறு இருங்கள். 

பிரம்ம குமாரிகள் அமைப்புதான் வள்ளலாரின் ஆன்ம தத்துவத்தை கடைபிடித்துவருகின்றவர்கள். 
இதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும், உரையாடும் போதும் "ஓம் சாந்தி" என்று கூறிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


இதன் பொருள் "நான் ஒரு அமைதியான ஆன்மா" என்பதாகும். 

மனிதர்கள் அனைவரும் உடல் அல்ல, தூய்மையான ஆன்மாக்கள் என்ற உண்மையை உணர்கின்றார்கள்.

ஆன்மாவிற்கு பாலினம் ஏதுமில்லை என்பதை தங்களது நடத்தையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும்போது முதலில், எதிரில் நிற்ப்பவரின் நெற்றிப்பொட்டைப் பார்த்துதான் பேசுவார்கள். 

சிவபெருமானை உச்ச ஆன்மீகத் தந்தையாகக் கருதி ராஜயோகத் தியானம் (Raja Yoga Meditation) பயிற்றுவிக்கின்றார்கள். வள்ளலார் போன்று தூய்மையான வெள்ளாடைதான் (ஆண்களும், பெண்களும்) அணிவார்கள். அசைவ உணவு உட்கொள்வதில்லை.

இந்த அமைப்பினர் யார் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. உடல் உறவு செய்யின், தனது ஆன்மாவானது பரிசுத்த நிலையை இழந்துவிடும் என்ற இரகசியத்தை தெரிந்தவர்கள் இவர்கள். 
சுத்த சன்மார்க்கிகளுக்கும் வள்ளலார் இதனை மறைமுகமாக போதித்துள்ளார். 

இதனால் மட்டும் மரணமில்லா பெருவாழ்வை பிரம்ம குமாரிகள் அடைவார்களா? என்றால் இல்லை. சுத்த சன்மார்க்க ஒழுக்கங்களில் இவர்கள் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றார்கள். சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை விடுத்து மற்ற ஒழுக்கங்களை கடைபிடிக்கின்றார்கள். ஆக, யாரும் முழுமையான அனைத்து ஒழுக்கங்களையும் கடைபிடிப்பது இல்லை.

இப்போது தெரிகின்றதா? ஏன், வள்ளலாருக்குப் பிறகு யாரும் ஒளி உடம்பு பெறவில்லை என்று!


வள்ளலார் சொல்லும் இந்த இரகசியத்தை நாம் சற்று விரிவாகச் சொன்னால், நீ எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கின்றாய்? என்று என் மீது சண்டைக்கு வரும் சன்மார்க்கர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நான் என்ன வென்று சொல்வது? நீங்கள் புதியதாக ஒரு கருத்தை சொல்லாதீர்கள். பைத்தியக்காரன் நீ, இல்லறம் அல்லாது நல்லறம் அல்ல, இப்படியெல்லாம் பதில்கள் வருவதை நினைக்கும் பொழுது, ”கண்ணுக்கு தெரிந்தவரையில் சன்மார்க்கர்களை எங்கும் காணோம்”  என்றே வருத்தப்பட வேண்டியிருக்கின்றது. 

பாலின மாயையை நான் இன்னும் கடக்கவில்லை. ஆனால் முயற்சியில் இருப்பது உண்மை. இதன் உட்பொருளை உணர்ந்திருக்கிறேன். நீங்கள் அதாவது சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்காவிட்டாலும், இவ்வொழுக்கத்தை பரப்புவதில்தான் நியாயம் உண்டு. நம்மால் முடியாவிட்டாலும், எதிர்கால சன்மார்க்கிகள் இவ்வொழுக்கத்திற்கு வருவார்கள். யாரேனும் ஒருவராகிலும் ஒளி உடம்பை பெறுவார்கள். அந்த நோக்கத்திற்காகவது “சன்மார்க்கத்தில் திருமணம் வேண்டாம்” என்பதை பிறருக்கு சொல்லுங்கள்.

நன்றி, வணக்கத்துடன் உங்கள் தி.ம.இராமலிங்கம்.
9445545475




Thursday, August 6, 2026

பிரம்ம குமாரிகள் Brahma Kumaris:

 Brahma Kumaris:

பிரம்ம குமாரிகள் அமைப்புதான் வள்ளலாரின் ஆன்ம தத்துவத்தை கடைபிடித்துவருகின்றார்கள்.
இதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும், உரையாடும் போதும் "ஓம் சாந்தி" (Om Shanti) என்று கூறிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன் பொருள் "நான் ஒரு அமைதியான ஆன்மா" என்பதாகும்.
மனிதர்கள் அனைவரும் உடல் அல்ல, தூய்மையான ஆன்மாக்கள் என்ற உண்மையை உணர்கின்றார்கள்.
ஆன்மாவிற்கு பாலினம் ஏதுமில்லை என்பதை தங்களது நடத்தையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்கள்.
ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும்போது முதலில், எதிரில் நிற்ப்பவரின் நெற்றிப்பொட்டைப் பார்த்துதான் பேசுவார்கள்.
சிவபெருமானை உச்ச ஆன்மீகத் தந்தையாகக் கருதி ராஜயோகத் தியானம் (Raja Yoga Meditation) பயிற்றுவிக்கின்றார்கள். வள்ளலார் போன்று தூய்மையான வெள்ளாடைதான் (ஆண்களும், பெண்களும்) அணிவார்கள். அசைவ உணவு உட்கொள்வதில்லை.
இந்த அமைப்பினர் யார் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. உடல் உறவு செய்யின், தனது ஆன்மாவானது பரிசுத்த நிலையை இழந்துவிடும் என்ற இரகசியத்தை தெரிந்தவர்கள் இவர்கள். சுத்த சன்மார்க்கிகளுக்கும் வள்ளலார் இதனை மறைமுகமாக போதித்துள்ளார்.
--TMR

Wednesday, August 5, 2026

Follow my Network Marketing - TMR Team Channel

 

Follow the ALEXA TMR TEAM channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbDNke14yltS6yvsIB0z






குறைந்த செலவில்,
(0.06 BNB / ரூ.3,900)
👑
அற்புதமான நஷ்டமில்லாத தொழில் வாய்ப்பு
🎯
ஆறு மாதங்களில் ரூ.25 கோடி கிடைக்கும்
👇
தெரிந்துகொள்ள வாங்க !!
🎯
Topic: ALEXA

Today 08.00 - 09.00 PM
(DAILY)

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/89763506782?pwd=6DPnhCM5cRbRUwnwVaxSuKGicM2RK4.1

Only interest people can join our new whatsapp group
https://chat.whatsapp.com/H4vCzLzSOabFFSKqmp68jb?s=sh&p=a&ilr=0

Referral Link: (Copy and past to your Trust Wallet)
https://openalexa.com/en.html?ref=0x6c38d327d021811950f7eee01a5fb8d26a2b1f02

Whatsapp No.: 9445545475


Follow TMR Channel


 





Follow the TMR CHANNEL channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbDW7XI3mFY7siSmq43f

Saturday, July 11, 2026

விண்வெளி முட்டைகள்:

 விண்வெளி முட்டைகள்:

=======================

VALLALAR
TMR



விண்வெளி முட்டைகள்:
==================
நமது சூரிய குடும்பத்தின் எல்லையிலிருந்து எட்டிப் பார்த்தால், சடைசடையாக விண்வெளி முட்டைகள் தெரிவதை இப்போழுது கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட ஒரு முட்டைக்குள் நமது பூமியும் சுற்றுகின்றது. நமது முட்டையின் ஒரு பகுதி கொடைக்கானலில் வெறும் கண்களுக்கே தெரிகின்றது என்பதும் ஆச்சரியம்.
முட்டை (அண்டம்) என்றாலே அது உயிர்தான். ஒவ்வொரு முட்டையிலும் எண்ணற்ற உயிரினங்கள் நம் புவியைப் போன்று வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவை எப்போது நம் கண்களுக்குத் தெரியும்?
”இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.” என்ற வள்ளலார், அண்டங்களிளெல்லாம் உயிர்கள் வாழ்வதாகவும் கூறுகின்றார்.
'அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவறிவோம் ஆங்கே உந்துறும் பல் பிண்டநிலை அறிவோம், சீவன் உற்ற நிலை அறிவோம்...' ( திருவருட்பா-2132)
என, மிகச் சாதாரணமாக பாடுகின்றார். இதன் உண்மையை விஞ்ஞானம் அறிவது என்பது நடவாத காரியம்.
”முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி”
--TMR

Wednesday, July 8, 2026

கால் பந்தாட்டம்

கால் பந்தாட்டம்

தி.ம.இராமலிங்கம்



 "கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்தாட்டத்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு மிக அருகில் இருப்பீர்கள்." 

சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு இந்தியத் துறவி பலம் பொருந்திய உடலுக்காகவும்,சுறுசுறுப்பான வாழ்க்கைக்காகவும் மக்களுக்கு இப்படி உபதேசித்தார்...

மேலும் அவர் கால்பந்து குறித்து கூறும் போது;

"கால்பந்து விளையாடும்போது மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. எங்கே மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாகிறதோ அதுவே தெய்விகம்... ஆன்மிகம்’’ என்பார்....

துறவிகள், பகவானைப் பற்றி பேசியே பார்த்த இந்தியா போன்ற நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி..

பலம் பொருந்திய உடலின் தேவைக்கு, கால்பந்தாட்டத்தினை பரிந்துரைக்கிறார். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அது தேவையானதாய் இருக்கிறது.

இத்தகைய, முற்போக்கான கருத்தினை அன்றைய காலகட்டத்திலேயே பேசிய அந்தத் துறவி தான் சுவாமி விவேகானந்தர்.

உலகமே தற்போது நடந்து கொண்டிருக்கும், பிஃபா கால்பந்தாட்டத்தில் கண்ணுற்றிருக்கின்ற இவ்வேளையில் இதைச் சொன்னால் பொருத்தப் பாடாக இருக்கும்...

இன்றைக்கு நடக்கிற பிஃபா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிற இசுபெயின் (Spain) அணியினை எந்த கோலும் அடிக்கவிடாமல் தடுப்பாட்டம் (Defend) ஆடி, ஆட்டத்தை சமன் செய்து உலகையே தன் பக்கம் ஒரு குட்டித் தீவு திரும்ப வைத்திருக்கிறது. இணையத்தையே கலக்கிய அந்த தீவின் பெயர் கேப் வெர்டே (Cabo Verde).இந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய இசுபெயின்(Spain) அணி ஏழு முறை கோல் அடிக்க முயற்சித்தும், சீனப் பெருஞ்சுவர் போல் நின்று அதனைத் தடுத்தார் ஆட்ட நாயகனான கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் ஓசின்யா.

நமது சென்னையில் இருக்கக்கூடிய ஒரு சட்டமன்றத் தொகுதியின் அளவே,மக்கள் தொகை உடைய நாடு தான் கேப் வெர்டே (Cabo Verde).

ஐந்து லட்சத்திற்கு சற்று அதிகமான மக்கள் தொகை உடைய அந்தத் தீவு, தன்னுடைய முதல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று விளையாண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான நாக் அவுட் ( knockout) சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

நாக் அவுட் சுற்றில், நடப்புச் சாம்பியனும் மேலும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி(Messi) இருக்கக்கூடிய அர்ஜென்டினாவை இன்றைய நாளில் எதிர்கொள்ளப் போகிறது...

மெஸ்ஸிக்காக, விளையாட்டை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், மெஸ்ஸியோடு இந்தக் குட்டித் தீவு மோதுவதை பார்க்கவும் ரசிகர்கள் மத்தியில் ஆவல் பற்றி இருக்கிறது...

விஷயத்துக்கு வருவோம்....ஒரு குட்டித் தீவு,இவ்வளவு சாதனை செய்யும் போது கோடிக்கணக்கான மக்கள் வாழக்கூடிய இந்தியா, இளைஞர் பட்டாளம் நிரம்பிய இந்தியா...

உலகமே பங்கேற்கும் ஒரு பெரிய போட்டியில் தகுதி கூட பெறாமல் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று...

எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு விளங்காத அரசியலை செய்து அன்றாட பரபரப்பிலேயே வாழ்ந்து பழகிய நாம், கிராமத்து பாட்டிகள் சொல்வார்களே...

"வாயப் பாத்துட்டு உட்கார்ந்து இரு"என்று இங்கே கால்பந்தாட்டத்தில் அடுத்தவர்களின் காலைப் பார்த்துக்கொண்டு, உட்கார்ந்து இருக்கிறோம்.

இன்னும் இந்திய மக்கள் சரிவர கால்பந்து விளையாடுவதில்லையா??? அல்லது வழக்கம்போல் இந்திய கால்பந்து விளையாட்டில் தனியாக அரசியல் விளையாடுகிறதா???

ஆராய்ந்து, அறிய வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது.

Anyway!!!!

 குட்டித் தீவுக்கு (கேப் வெர்டே) மனமார்ந்த வாழ்த்துகள்.

 ஓ இந்தியா விழித்தெழு! உன்னுடைய ஆன்மீகத்தால், உலகை வெற்றி கொள்.

-சுவாமி விவேகானந்தர்

ரா. சுரேஷ்


Tuesday, July 7, 2026

இறந்துபோன எனது உடல்கள்

இறந்துபோன எனது உடல்கள்

TMR

 வணக்கம் நண்பர்களே... 

இரண்டு நாட்களுக்கு முன்னர், எனது முகநூல் பக்கத்தில், பல வருடங்களுக்கு முன்னர் நான் பதிவிட்ட எமது புகைப்படங்களில் சிலவற்றை ஒருவர் பார்வையிட்டு அதனை லைக் செய்ததால், அந்தப்படங்களை தற்போது நான் பார்வையிட நேர்ந்தது. 

அது எனது படம்தான். ஆனால் அந்தப்படங்கள் பதினைந்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் அதனை தற்பொழுது பார்க்கையில், அந்த இளமை, அந்த காலம் எல்லாம் எப்படி போயிற்று? என வியக்க வைக்கின்றது. 

அந்த புகைப்படங்கள் எல்லாம், இறந்துபோன எனது உடல்கள், இறந்து போன எனது காலங்கள் என்பதல்லவா உண்மை. 

இறந்துபோன எனது உடலை, இறந்துபோன எனது இளமையை, நானே தற்போதுள்ள உடலால் பார்க்கின்றேன். நமது புகைப்படங்கள் அல்லது நமது வீடியோக்கள் எல்லாம் நமது இறந்துபோன பிணத்தின் வடிவங்கள்தான் என்று நினைக்கையில், இப்போதுள்ள உடலும் இறந்துக்கொண்டே தன்னை புதுப்பித்துக்கொள்வதை உணரமுடிகின்றது. 

வள்ளலார், தனது உடலை புகைப்படத்தில் பதியசெய்யாமைக்கு காரணம் இதுவாகத்தான் இருக்குமோ?. தனது இறந்துபோன உடலை புகைப்படமாகக்கூட தானும், இவ்வுலகமும் பார்த்துவிடக்கூடாது என்ற காரணத்தால், வள்ளலார் தனது உடம்பினை ஒளி உடம்பாக மாற்றினார், அதனால் அவரை புகைப்படமாகக்கூட நம்மால் பார்க்கமுடியாமல் போனது. நன்றி, 

அருட்பெருஞ்ஜோதி.


  


 

 


Friday, July 3, 2026

பூம்புகார் - சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

 சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும்

TMR

பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை.
சீர்காழி - பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு தென்புறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் இன்று சிதைந்து போய் கிடக்கிறது.
சம்பாபதியம்மன் கோயிலையும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அப்படி ஒரு சிறப்பு கொண்ட வரலாற்றுச் சின்னங்கள் தற்போது சிதிலமடைந்து கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் சம்பாபதி அம்மன் பற்றியும் சதுக்க பூதம் பற்றியும் சொல்கிறேன் கேளுங்கள்.
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக பெருமைவாய்ந்த ஒன்று மணிமேகலைகாப்பியம், ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று அப்படின்னு சொல்வாங்க. இக்காப்பியத்தின் முக்கிய நாயகி மணிமேகலை, கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்த மகள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு கண்ணகி மதுரையை எரித்து பின் கேரள எல்லையில் கோயில் கொள்கிறாள்.
மாதவி தன் மகளை ஒரு புத்த துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டுவிடுகிறது.
அத்தீவில் இறங்கியவுடன் மணிமேகலைக்கு தனது முன்பிறப்பு நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் ஏன் அவளை மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று மந்திரங்களையும் கற்றுக்கொடுகிறது. ஓர் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தனுப்புகிறது.
அதிலிருந்து எடுக்க எடுக்க குறையாத உணவை புகார் நகரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கி வருகிறாள். ஆனால் மன்னன் உதயகுமரன், மணிமேகலையை தன்னை மணந்து கொள் என அவளை வற்புறுத்துகிறான்.அவளோ பயந்து கொண்டு இந்த குச்சரகுடிக்கையில் ஒளிந்து கொள்கிறாள்.
மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் புகார் நகர் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் நிலை கொண்டமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர்
இந்த சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் இது தான் என்கிறது மணிமேகலை காப்பியம்.
சம்பாபதி அம்மன் கோயிலை அக்காலத்தில் குச்சரக்குடிகை என அழைப்பார்கள். இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது.
வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா எனும் தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு.
.
சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன இந்த சதுக்க பூதங்கள்.
யாரையெல்லாம் தண்டிக்கும் என இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்.
பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது செய்து பொருள் சேர்க்கும் அமைச்சர்கள், பொய்சாட்சி சொல்பவர் பொதுப்பணத்தை கையாடல் செய்பவர்கள், - இவர்களை எல்லாம் சதுக்க பூதங்கள் கடுமையாக தண்டிக்கும் என்கிறார் இளங்கோவடிகள்.
சரி கோயில் பகுதிக்கு போகலாம் வாங்க..
ஆனால், இப்படியொரு பெருமை வாய்ந்த கோயில் இருப்பதே இங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது சாய்க்காடு சிவன் கோயில். இதன் தென் புறம் செல்லும் தெருவில் சென்று இடதுபுறம் உள்ள
அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த பகுதியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.
ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிகை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு தகர கொட்டகையில் புதிதாய் குடிவைத்திருக்கிறார்கள். பழைய கோயில் சிதைந்து மண்மேடாக உள்ளது அந்த குடிகை வாயிலில் இரண்டு பூதங்களும் உள்ளன.
வடக்கு நோக்கிய இக்குடிகையின் எதிரில் பெரிய உருவில் இரண்டு சதுக்க பூதங்கள் ஆண்பூதம் ஒன்றும் பெண் பூதம் ஒன்றும் சம்பாதியை காவல் காக்கின்றன.
தற்போது அங்குள்ள சம்பாதியை மட்டும் எடுத்து தனி கோயில் கட்டி வைத்துள்ளனர். உடன் விநாயகர் உள்ளார். வாயிலில் பைரவர் உள்ளார். எதிரில் சிம்மமும் பலிபீடமும் உள்ளன.
சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அவளை, சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது. பெயர் மருதவாணன்.
செங்கல் சுதையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சதுக்க பூதங்கள் மற்றும் ஒரு பெரிய குதிரை சிலைகள் 2000 ஆண்டு பழமையானவை எனப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன.
இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன. நம் மக்களின் மூளையில் திணிக்கப்பட்ட இரண்டே வார்த்தை திராவிடம் ஆரியம்.
தமிழ் தமிழ் என பெருமை பேசும் நாம் மூன்றாயிரம் வருடம் பழமை கொண்ட இக்கோயிலை கூட காப்பாற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது.
'சிலப்பதிகாரத்தில் அறம்' எனும் எனது புத்தகத்தில் பூம்புகாரில் இருந்த சதுக்கங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
கடம்பூர் விஜய் முகநூலில் இதுகுறித்து எழுதியிருந்தார்.
திமுகழக ஆட்சியில் புனரமைப்பு தொடங்க வேண்டும் என கேட்டுப் பதிவிட்டேன். பூம்புகாரை புனரமைப்பு செய்து உள்ளனர்.
இந்த வரலாற்று சின்னத்தின் புதுப்பொலிவை தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் முயற்சியெடுத்து செய்யவும்.
மீள்பதிவு.
Rajamoorthy J