காதலின் சிறப்பு 29-04-2013
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அருட்பெருஞ்ஜோதி
எந்தை நெஞ்சம் எல்லாமுடைய எங்கும் விரியும் பிரபஞ்சம்
விந்தை உலகில் அவள்மேனி வளங்களிலே என்ன பஞ்சம்
மந்தை மனிதனாய் நெஞ்சமறந்து மஞ்சத்திலடைந்தேன்அவளிடம் தஞ்சம்
கந்தை எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லப்பார்க்க விழைந்தேனே (1)
நீயும் நானும் அமர்ந்திருந்த நிலவுமிலா தனிமையான இடத்தில்
சாயுங் காலத்தில் தேனும்பாலும் சேர்ந்தவள் கனிமையான பார்வையும்
பாயும் சந்திரனின் ஒளியும் பேசும் தென்றலின் குளிர்ச்சியும்
காயும் எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லப்பேச விழைந்தேனே (2)
மலர்ந்த முகமும் சிவந்த மேனியும் கவர்ச்சிக் கண்களும்
உலர்ந்தக் கூந்தலும் மெலிந்த உருவமும் இல்லா இடையும்
அலர்ந்த தாமரையும் உயர்முளை அரங்கமும் தாழ் பாதங்களையும்
கலந்த எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லத்தொட விழைந்தேனே (3)
மலையான பொதிகையும் பசும் மரக்கொடிகளும் வீழும் அருவியும்
அலையான கடலும் பறவையாம் அன்னமும் இனிதே பார்த்தும்
விலையான வைரமும் உனக்காக வாங்கி கைகோற்று நடந்தும்
வலையான எந்தன் மனமது வாடாமல் மெல்லக்கூட விழைந்தேனே (4)
மென்று முழுங்க முடியாமல் மாயமாய் முடிந்தது நம்மால்
அன்று மெல்லச்செய்ய நினைத்தவை எதுவும் முடியாது போனது
என்று வருவாய் நீஎன இருக்கையில் தந்தாய் தரிசனம்
இன்று இருவரும் அருகில் இல்லைபார்வை படும் தூரம்தான் (5)
நிலவும் பூமியுமாய் தொடாமல் நில்லாமல் சுற்றுவதே அன்புச்சுற்றம்
செலவும் வரவுமாய் விடாமல் சேர்ந்து வாங்குவதே அன்புக்கடன்
காலமும் காதலுமாய் என்றும் காமுற்று மயங்குவதே அன்புச்சுகம்
பலவும் தொட்டுவிட முயன்றால் பாவம் கடவுளும் கல்லாவான் (6)
தொடாமல் இணையும் வித்தை தெரிந்தோம் வள்ளல் அவன்
போடாமல் போட்டத் தாழ்ப்பாளைப் பிளந்தோம் திருவறையில் உடல்
கூடாமல் நாமிருவரும் உள்ளமுருகி களித்துருத் தெரியாமல் போவோம்
வாடாமல் என்றும் இருப்போம் வள்ளலிருக்க வாட்டமும் ஏனோ (7)
உரைத்தக் கலைக் கற்பனையான ஊத்தை மதங்கலல்ல நம்காதல்
விரைத்த்க் கல்லைக்கழுவி அபிஷேகம் வார்க்கும் பக்தியல்ல நம்காதல்
கரைத்தக் களிமண்ணில் பிடித்தக் கல்பிள்ளையார் வழிபாடல்ல நம்காதல்
மரைத்தத் திரைகளேழும் விலகியாயிர மாசூரியபிரகாச ஒளியே நம்காதல் (8)
தினம் ஐந்துமுறை அல்லாஓதி தளர்ந்தவுயிர் அல்லாப்பிணத்தைத் தின்று
தானம் எனப்பிண்டத்தைக் கொடுக்கும் துன்மார்க்கம் அல்ல நம்காதல்
மனம் போனப் போக்கில் மயக்கும் ஆராதனைகள் நடத்தி
ஈனம் மின்றிஏமாற்றும் வித்தர்கள் ஆளும் சிலுவைமார்க்கமல்ல நம்காதல் (9)
நானும் நீயும்அமர்ந்திருந்த அந்த நலினமான புனிதஇடம் இப்போதும்
வானும் காற்றும்போல நாமில்லாதபோதும் வண்ணமயமான அழகைப் பார்த்தாயா
மானும் மயிலுமாய் ஓடியாடியல்லா மண்னுயிர்களும் இன்புற்றிருக்க நினைந்து
தேனும் பாலுமாய்க்கூடி சத்தாய் தேகம்சாதலின்றி சுத்தசன்மார்க்க காதலில்வாழ்வோம் (10)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.