புரியாத விதிகள் - 1
01-04-2013
அன்பர்களே வணக்கம்!
நாம் என்னதான் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து நமது அன்றாட செயல்களை தொடங்கினாலும், அச்செயல்கள் நாம் எதிர்பார்த்தப் படி முடிகிறதா? முடியும் என்றால் முடியாது, முடியாது என்றால் முடிந்துவிடும்! இப்படி நாம் எதிர்பாராதது தான் நமது வாழ்க்கையில் தினமும் சிறிய / பெரிய பிரச்சனையாகி விடுகிறது. இது தான் விதி - புரியாத விதி. இதனை மதியாலும் வெல்லமுடியாத இறைவன் விரித்த சதி என்று சொல்லலாம். இப்படிப் பட்ட புரியாத விதிகளில் சிலவற்றை இங்கே காணலாம், உங்களால் முடிந்தால் மதியால் இதனை வெல்ல முடிகிறதா என்று சோதித்து பாருங்களேன்...
1. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்,
நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்!
2. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே
நடக்கும்!
3. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது
என்று கணித்தோமானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில்
ஐந்தாவது தவறு வரும்!
4. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள்
என்று அர்த்தம்!
5. புன்னகை புரியுங்கள், நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும்!
6. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்கும்!
7. உடைபடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதும் நேர் விகிதத்திலேயே இருக்கும்!
8. எந்த ஒரு விஷயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால்
முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்!
9. எந்த ஒரு விஷயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை!
10. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சனைக்கு வழிகாட்டி!
11. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ
அவ்வளவு தூரம் அது முக்கியதுவம் வாய்ந்தது!
12. வெண்ணெய் தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்தப் பக்கம் தரையில் விழும்
என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொறுத்தது!
13. கீழே விழும் ஒரு பொருள் எந்த இடத்தில் விழுந்தால் அதிக நட்டத்தை கொடுக்குமோ
அந்த இடத்தில் தான் அது விழும்!
14. எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடனேயே கிடைத்துவிடும்.
15. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள்
வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். (அது உங்கள் மனைவியின் கண்ணில்
தான் முதலில் படும்!)
16. நீங்கள் ஒரு வரிசையில் நின்றுக் கொண்டிருந்தால் அடுத்த வரிசை தான் வேகமாக
நகர ஆரம்பிக்கும்!
17. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும் போது (மட்டும்) அழகாக
வேலை செய்யும்!
18. எல்லோரிடமும் பணக்காரனாவதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் அது பயன் மட்டும்
தராது!
19. முட்டாள்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளாதீர்கள், பார்ப்பவர்களுக்கு யார்
முட்டாள் என்று விக்தியாசம் தெரியாமல் போய்விடும்!
20. நீங்கள் யாரை கவுக்க வேண்டும் என்று நினைத்து விளையாடிக் காட்டுகிறீர்களோ
அப்போது தான் தப்பாக விளையாடுவீர்கள்!
21. நீங்கள் எவ்வளவு தாமதமாகச் செல்கிறீர்களோ அவ்வளவே தான் நெரிசலும் இருக்கும்!
22. தபால் பெட்டி எப்போது சாலையின்
மறுபுறத்தில் தான் இருக்கும்!
23. நீங்கள் பட்டங்களை வேண்டுமானால் வாங்கலாம், மூளையை வாங்கமுடியாது!
24. குழப்பங்கள் நேர்த்தியாக இருப்பதனால், அவை எப்போதும் வெற்றியடைகின்றன!
25. நீங்கள் புது செருப்பு அணியும்போது தான் எல்லோரும் அதை மிதித்து அழுக்காக்குவார்கள்!
26. நீங்கள் எந்த விதியினை முழுமையாக படித்து முடிக்கிறீர்களோ உடனே அது மாற்றப்பட்டிருக்கும்!
27. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிபதற்கான வழி
தென்படும்!
28. காற்று எப்போதுமே உங்கள் விக்குக்கு எதிராகவே வீசும்!
29. ஒரு கண்ணாடி ஜன்னலில் அழுக்கு இருப்பதாக துடைத்தால் அது ஜன்னலில் மறுபுறத்தில்
தான் இருக்கும்!
30. எந்த ஒரு சிறிய பிரச்சனைக்கு பின்னாலும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது
என்று அர்த்தம்!
31. உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்யவேண்டிய வேலை
உங்களுக்கு வந்து சேரும்!
32. அதிகாரம் என்பது எடுத்துக்கொள்ளப்படுவது, கொடுக்கப்படுவதே இல்லை!
33. உண்மை உங்கள் பக்கம் இருந்தால் யாருமே அதை நம்புவதில்லை!
34. உங்கள் செயலில் 50% சரியாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்றால் 75% தவறாகவே
செய்வீர்கள்!
35. நீங்கள் ஒரு விஷயம் தவறாக நடக்கவேண்டுமென்று எதிர்பார்த்தும் அது சரியாக
நடந்தது என்றால், அது தவறாக் நடந்திருக்குமேயானால் உங்களுக்கு இலாபத்தை ஈட்டி தந்திருக்கும்!
36. யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது!
37. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக
நேரம் எடுத்துக்கொள்வார்!
38. கவலை படாதீர்கள், எந்த ஒரு பிரச்சனைக்கும் அதைவிட ஒரு பெரிய பிரச்சனை
தான் தீர்வாக அமையும்!
39. ஒரு மேதாவி என்பவர் யாரென்றால், யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப்
பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் 'ஒன்றுமில்லை'
என்பது வரை.
40. எந்த ஒரு வேலையும் மதிப்பீட்டுக்குள்ளும், நேரத்திற்குள்ளும் முடிக்கப்பட்டதே
இல்லை!
41. ஒரு நிர்வாகத்தின் மூட நம்பிக்கையே, அப்படி ஒரு நிர்வாகம் இருப்பதாக
அனைவரும் கருதுவது தான்!
42. ஒரு விஷயத்தில் மேதாவியைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால் யார் அந்த
வேலைக்கு அதிக பணம் செலவும், நேரமும் ஆகக்கூடும் என்று கணிக்கிறாரோ அவரையே தேர்ந்தெடுங்கள்!
43. எந்த ஒரு எளிய விதியும் கஷ்டமான வார்த்தைகளாளேயே விளக்கப்பட்டிருக்கும்!
44. தண்டவாளத்தை மட்டும் பார்த்து ரயில் எந்தப்புறம் சென்றது என்று சொல்லமுடியாது!
45. நீங்கள் சரியாக குழம்பவில்லை என்றால் உங்களுக்கு அனைத்து தகவல்களும்
சரியாக வந்து சேரவில்லை என்று அர்த்தம்!
46. நீங்கள், தவறு நடந்துக்கொண்டு இருக்கும் போதுதான் அந்த விஷயம் சரியாக
நடந்துக் கொண்டுஇருப்பதாக உணருவீர்கள்!
47. உங்களை விட்டால் இந்த இடத்திற்கு தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம்
நினைக்கும் அளவிற்கு நடந்துக்கொள்ளாதீர்கள். நடந்துக் கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு
உத்தியோக உயர்வு அளிக்க இயலும்!
48. நீங்கள் நல்லவராக இருந்தால் அவ்வளவு வேலையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப்படும்.
ரொம்ப நல்லவராக இருந்தால் வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான்!
49. அனைத்து முக்கியமான வேலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உங்களுக்கு வந்து சேரும்.
அவை யாவும் திங்கள் கிழமை காலைக்குள் முடிக்கபட வேண்டியிருக்கும்!
50. முதலாளி எப்போது சிடு சிடு என்று இருக்கிறாரோ அது தான் சம்பள உயர்வு
பற்றி பேச சரியான நேரமாகும்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.