வள்ளற்பிரான்
கேள்வி கனைகளைத் தொடுக்க…
அதற்கு அடிமையின்
பதில்…
அன்பு என்றால்?
அருட்பெருஞ்ஜோதி
ஆசை என்றால்?
மரணமில்லா பெருவாழ்வு
இன்பம் என்றால்?
திருவருட்பா
ஈகை என்றால்?
அன்னதானம்
உண்மை என்றால்?
உங்கள் பேருபதேசம்
ஊமை என்றால்?
இறை அனுபவம்
எதிரி என்றால்?
சாஸ்திர சடங்குகள்
ஏழ்மை என்றால்?
கண்மூடி வழக்கம்
ஐயம் என்றால்?
சமய மத நூல்கள்
ஒருமை என்றால்?
ஒன்றுமில்லாதது
ஓசை என்றால்?
ஆன்ம மொழி
ஒளவியம் என்றால்?
உலகியல்
திருநிலை என்றால்?
ஞானதேகம்
வள்ளற்பிரான்:
மிக அற்புதமாக பதில் அளித்தாய். உனக்கென்ன வரம் வேண்டும் கேள்…
அடிமை: இறைநிலை
அறிந்து அம்மயமாதல்…
வள்ளற்பிரான்:
முடியாது… வேறு ஏதேனும் கேள்…
அடிமை: எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ வரம் கொடுங்கள்…
வள்ளற்பிரான்:
இப்போது நீ கேட்ட இரண்டு வரங்களையும் தந்தோம்…
---தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.