Wednesday, November 3, 2021

தீப ஒளி திருநாள்

                                                             தீப ஒளி திருநாள்

அருட்பெருஞ்ஜோதி                                        அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                                                                       அருட்பெருஞ்ஜோதி

                                                எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

காரணப்பட்டு .மு.. அருள் நிலையம் உங்களுக்கெல்லாம் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது.

வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இந்து மதத்தவர்கள் மட்டுமின்றி சீக்கியர்கள்> சமணர்கள்கூட இந்த தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இந்து மதத்தில் தீபாவளி:

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது.

சீக்கியர்களின் தீபாவளி:

1577-ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

 சமணர்களின் தீபாவளி:

மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து தீபாவளையை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

 சுத்த சன்மாக்கிகளின் தீபாவளி:

சுத்த சன்மார்க்கிகள் தீபாவளியை கொண்டாடலாமா? என்று கேட்டால் கொண்டாடக்கூடாது என்றே சொல்ல வேண்டும். சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைகளில் அகிம்சை இடம்பெற்றிருக்கும். அவர்களின் திருவிழாக்களில் தாவர உணவுகளை மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்து மக்கள் கொண்டாடும்  தீபாவளி என்பது பெரும்பாலும் வாயில்லா ஜீவன்களைகொன்று> அதாவது ஆடு> மாடு> கோழி> முட்டை> மீன் இப்படி பல உயிர்களை வதம் செய்து அவற்றின் பிணங்களை சமைத்து மகிழ்ச்சியாக உண்பார்கள். பிற உயிர்களுக்கு துன்பம் கொடுத்த நரகாசுரனை வதம் செய்து> அதனால் பிற உயிர்கள் இன்பம் அடைந்ததை தீபாவளியாகக் கொண்டாடும் இந்துக்கள்> அந்நாளில் தாங்கள் ஒவ்வொருவரும் பிற உயிர்களை கொலை செய்து> அதனை சமைத்து சாப்பிட்டு நரகாசுரர்களாகவே மாறிவிடுகின்றனர். எனவே நரகாசுரர்கள் எல்லாம் கூடி கொண்டாடுவது இந்து மத தீபாவளி எனக் கூறலாம்.

எனவே தீபாவளி அன்று> இப்படிப்பட்ட நரகாசுரர்களால் தங்களது இன்னுயிர்களை மிகுந்த வேதனையுடன் இழந்து துடிக்க இருக்கும் ஆடுகள்> மாடுகள்> கோழிகள்> முட்டைகள்> மீன்கள் மற்றும் பல உயிரணங்களுக்காக சுத்த சன்மார்க்கிகள் தீபாவளியை துக்க தினமாகத்தான் கருத வேண்டும்.

எனினும் சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் போன்று வாழ்க்கையில் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இந்த தீபாவளியை சுத்த சன்மாக்கிகள்கொண்டாட வேண்டுமானால்> கொண்டாடலாம். சுத்த சன்மார்க்கிகளுக்கு தீபம் என்கின்ற ஒளிதான் கடவுள். எனவே தீப ஒளி நாளை நாம் கொண்டாடலாம். அதுவும் எப்படி? என்றால்>

1873-ஆம் ஆண்டு இந்த நவம்பர் மாதத்தில்தான் வள்ளலார் அவர்கள்> சித்தி வளாகத்தில் அனையா தீபம் ஏற்றி அங்கே ஜோதி வழிபாட்டிற்கு வழிகோலினார். எனவே சித்தி வளாகத்தில் தீபம் ஏற்றிய அந்த மாதத்தை கொண்டாடும் விதத்தில் சுத்த சன்மார்க்கள் தீப ஒளி நாளை கொண்டாடலாம்.

மற்றபடி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்> புத்தாடை அணிவதை தவிர்க்க வேண்டும். எண்ணை தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். மதங்களில் உள்ள அனைத்து சடங்குகளையும் தவிர்க்க வேண்டும். தீபம் முன்னிலையில் அனைவரும் கூடி அகவல் மற்றும் திருவருட்பா ஓதி> இயன்ற அளவிற்கு அன்னதானம் அளித்து> எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இறைவனிடம் தியானம் செய்து தீபாவளியை கொண்டாடலாம்.

நன்றி.

தி.ம.இராமலிங்கம்.

 

   

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.