Thursday, June 20, 2024

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளம் நிறைந்த "கள்ளக்குறிச்சி" என்று சொல்லும் வகையில் ஊர் பெயரும் அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போதுவரை 33 ஆடவர்கள் மரணித்துள்ளனர்.
தனி மனித ஒழுக்கம் அற்ற மானிடர்களின் அன்றாட நிகழ்வானது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பலனும் இன்றி துக்கத்தையே கொடுக்கும்.
தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய, உலகில் வேறெந்த மொழியும் சொல்லாத, அறக் கருத்துகள் அடங்கிய திருக்குறள், திருவருட்பா போதனைகள் அனைத்தும் இங்கே பயனற்று போகின்றன.
இதற்கு அரசு என் செய்யும்? டாஸ்மாக் கடையை திறந்து வைத்திருப்பது அரசின் இழிவான ஒழுக்கச் செயல். அதையும் மீறி குழியில் வீழ்கின்றது சமுதயாம்.
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... நெஞ்சம் பொறுப்பதில்லை...

--TMR



Tuesday, June 18, 2024

உயிர் எவ்வழியே செல்கிறது?

 உயிர் எவ்வழியே செல்கிறது?

1. உயிர் எப்படி உடலுக்குள் எந்த வழியில் சென்றதோ அந்த வழியில் வெளியே போய்விடுமோ.
2. ஆணின் உயிரனுக்கள் (விந்து ) பெண்ணின் கருப்பை பையை அடையும் போது 3 கோடி உயிரனுக்கள் உயிருள்ள அனுக்களாக சுற்றித் திரியும். அந்த உயிர் ஆணின் விந்துக்குள் எப்படி அந்த உயிர் சென்றது
3. 3 கோடி விந்தனுவில் எப்போதோ ஒரு உயிர் மட்டும் கருவாக மாறுகிறது. அப்படியாயின் எத்தனை உயிரை கணவனும் மனைவியும் சேர்ந்து கொல்கிறார்கள். அந்த உயிர்களுக்கு என்ன ஆனது.
மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்தான் முதன் முதலில் விந்தனுவில் உயிரனுக்கள் பூட்சி போல நீத்துவதை கண்டு பிடித்தார். "Lot of animals" இது தான் அவர் சொன்னது. விந்துவில் உயிருள்ள அனுக்கள் இருப்பதாலேயே குழந்தை உருவாகிறது என்பது கலிலியோ க்கு தெரியாது நபிகளுக்கு தெரியாது. அவ்வளவு ஏன் உலகத்தை படைத்து அதில் அனைத்து உயிரினகளையும் படைத்ததாக சொல்லப்படுகிற இயேசுவுக்கே தெரியாது
மருத்துவ விஞ்ஞானித்திற்கே விந்துக்குள் எப்படி உயிர் உள்ள அனு உண்டானது என்று புலப்படவில்லை. விந்து எலும்பு மஜ்ஜை யில் உருவாகுவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அதெல்லாம் சரி உயிர் அனு எப்படி ஆணின் மஜ்ஜை குள் சென்றது.
மரணம் என்பது மீளா துயில். அவ்வளவுதான். உங்கள் உடம்பு எதோ ஒரு காரணத்திற்காக செயல் இழந்துவிட்டது. அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.
கண்டுபிடித்து சரியாக சொல்லுங்களேன்.
உயிரோடுதான் இருக்கிறீர்கள். சட்டென்று சொல்லி விடலாமே...

Sunday, June 16, 2024

AI கடவுள் தோன்றுவார். புதிய மதம் உருவாகும்

 எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் என்னென்ன மாற்றங்கள் வரும்...

=========================


I.T.. துறையில் 15 ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் எட்டு பேர் சேர்ந்து இரண்டு மாதம் பாடுபட்டு எழுதிய புரோகிராம் (அடித்த கோட்) மொத்த வரிகள் பதினைந்தாயிரத்திற்கும் மேல். ஆனால் இன்று ஒரு Function அதை சில நிமிடத்தில் முடித்து விடும்..
அப்பொழுது அந்த எட்டு பேரின் கதி.. அடுத்தடுத்த மாறுதல்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களின் கதி அதோ கதி தான்.
பத்து வருடங்களுக்கு முன் அனைத்து துறைகளிலும் front office, document processing வேலைகள் என்று பல பணியிடங்கள் இருக்கும்.. இன்று இது போன்ற 99% சதவிகித வேலைகளுக்கு மனிதர்களை பணியில் அமர்த்துவது கிடையாது. நம்முடம் தொலைபேசியில் பேசும் அமலாவோ, சாந்தியோ உண்மையிலேயே மனிதர்கள் கிடையாது.
AI துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று நம்பி, பிள்ளைகளை அந்த செயற்கை நுண்ணறிவு இன்ஜினியரிங் பிரிவில் படிக்க வைக்கும் பெற்றோர்களை பார்க்கையில் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் பிள்ளைகளை இன்டெர்வியூ செய்ய போவது ஒரு AI Robot தான்.. ஏற்கனவே அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து நிறுவனங்களும் ஆரம்பித்து விட்டன.
அந்த AI ரோபோட்கள் ஒரு மனிதனின் bio-data-வை பார்த்த நொடியில், கோடிக்கணக்கான தரவுகளை அலசி ஆராய்ந்து அவனை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்டு விடும். நாம் இணையத்தளத்தில் பார்த்த உடனே பிரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் செய்து விடுகிறோமே.. அந்த தகவல்கள் உட்பட..
Sex robots வந்த பிறகு ஆண் பெண் உறவில் சமநிலைமையற்ற தன்மை ஏற்படும். உண்மை தான், மனதிற்கு பிடித்ததை போன்ற உருவ அமைப்புடன் அப்படியே ஒரு பெண்ணை போலவோ, ஆணை போலவோ ரோபோட்கள் கிடைக்கும் போது, எதற்காக ஒருவன் மெனக்கெட்டு திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ள போகிறான்.. Sex robots வாடகைக்கு கிடைக்கும் அல்லது Sex robots வைத்து ஒரு மணி நேரத்திற்கு என ரூம் போட்டு வசூல் செய்வார்கள். Sex robots விபச்சாரம் நடக்கும். சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.
ஓடியாடி சொத்து சேர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. உங்களின் தற்போதைய வாரிசுகளுக்கு எதிர்காலத்தில் வாரிசுகளே இருக்க போவதில்லையென்பது தான் உண்மை.
மருத்துவம், இராணுவம், காவல்துறை சட்ட ஒழுங்கு, தகவல் தொழில்நுட்பம், என்று அனைத்து துறைகளிலும் இந்த AI ஆதிக்கம் இன்னும் பத்து ஆண்டுகளில் முழுமையாக வந்து விடும். இதில் கொடுமை என்னவென்றால் விவசாயம் மற்றும் மீன் பிடி தொழில்களிலும் ஏற்கனவே ரோபோட்கள் வந்து விட்டன.
ஆனால் இந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்க பெருமளவில் மனித சக்தி தேவைப்படும் என்கிறீர்களா?..
இங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.. சுயமாக சிந்தித்து புரோகிராம் மற்றும் உடலுழைப்பு சார்ந்த வேலைகளை செய்யும் ஒரு ரோபோட் இருபது பேர் பத்து நாட்கள் செய்யும் வேலையை ஒரு நாளில் செய்யும். .அதுவும் நேர்த்தியாக.. மனைவிக்கு பிரசவம், பெற்றோருக்கு மருத்துவ சிகிச்சை, திருமணம் என்று பல காரணங்களை சொல்லி லீவ் எடுக்காது.. அதனால் மனிதர்களுக்கு எந்த வேலையும் இருக்காது.
வேண்டுமென்றால் இந்த காலகட்ட பெற்றோர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம்.. பிள்ளைகளின் விருப்பம் போல அவர்களை படிக்க விடலாம்.. ஏதோ அவர்களுக்காவது ஒருவித திருப்தி ஏற்படும்.
மனித இனம் தன்னுடைய வாழ்வாதார உரிமைக்காக AI ரோபோட்களை எதிர்த்து போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை. நம்மை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்தவர்கள் முன்பு நாம் மண்டியிட்டே ஆக வேண்டும்.. நம் செல்போன் மூலமாக நம்மை பற்றிய அனைத்து உண்மைகளையும் AI ரோபோட்கள் சுலபமாக தெரிந்து கொண்டு விடும்.. ஆகவே நாம் தோற்பது உறுதி..
AI கடவுள் தோன்றுவார். புதிய மதம் உருவாகும். பல அற்புதங்கள் நிகழும்...
நமக்கான ஆப்'பை, தொழில் போட்டி மற்றும் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாமே உருவாக்கி, அதன் கூர்மையான பகுதியில் வலியுடன் உட்கார ஆரம்பித்து வெகு நாட்களாகி விட்டன.
***பி.கு: மனிதனை போலவே உருவ அமைப்புடன், மனிதனை விட நூறு மடங்கு சக்தியும் புத்திக் கூர்மையும் கொண்ட ரோபோட்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இவைகள் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு பிறகு உள்ளூர் வேலைகளுக்கு பயன்படுத்த இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகாது.***

TMR


-

Saturday, June 15, 2024

சன்மார்க்கத்தில் இருந்தால் துர்மரணம் ஏற்படாது

”சன்மார்க்கத்தில் இருந்தால் துர்மரணம் ஏற்படாது”

ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்க சகோதரி 

அவர்களின் வாக்குமூலத்தின் காணொளி...

(அருள் ஜோதி காணொளி தளத்திற்கு நன்றி.)




 


Wednesday, June 5, 2024

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு.



அருட்பெருஞ்ஜோதி
05-06-2024 - எங்கள் தந்தை ”காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் ”பிரபந்தத்திரட்டு பதிப்பாசிரியர்” - சன்மார்க்க முனைவர். அ.திருநாவுக்கரசு” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு - மயிலாடுதுறையில் அவரது இளைய மகன் முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களால் செய்யப்பட்டது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.