Sunday, May 26, 2013

உலக நலத் தொண்டர் "வேதாத்திரி"

அன்பானர்களே! உலக நலத் தொண்டர் "வேதாத்திரி" தனக்கு வள்ளலார் எவ்வகையில் காரியப்பட்டார் என்பதனை அவரே தனது நூலில் குறிப்படுவதை இங்கே அப்படியே தருகின்றேன்.

அருள்ஜோதி இராமலிங்க வள்ளலார் அருள்பாலிப்பு

"
எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெரு தின்னையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு. ஒருநாள் பெளர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும் நிலவு நல்ல ஒளி தின்னையில் கால்பாகம் இருக்கிறது. நான் கண் திறந்து விழித்து பார்த்தேன். என் வல பக்கத்தில் இரண்டு அடித் தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளை துணியால் மூடிய நிலையில் அமர்ந்திருந்தார்.

எனக்கு ஒரே படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன். "நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கபோகிறேனப்பா, இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே". என்று கூறிய வார்த்தைகளை தெளிவாகக் கேட்டேன், உடனே காட்சி மறைந்து விட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என் மனைவியை எழுப்பி கூறி மகிழலாம் என்றால், பிறரிடம் அப்போதே கூறக்கூடாது என்ற அருள் ஆணை, என்ன செய்வேன். இதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.


அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கவிதை, கட்டுரைகள் அனைத்தும் தத்துவ மயம். இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் எனது எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.

என்கவிதைகளை, கருத்துகளை வியந்து போற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை விளக்கி இந்த சிறப்புகள் அனைத்தும் அருள் ஜோதி வள்ளலார் உடையதே எனக் கூறி மகிழ்வேன்.

 அந்த மகான் பல சந்தர்ப்பங்களில் என்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாக பல முறை கண்டிருக்கிறேன்."

மேற்கண்டவாறு தமது வாழ்க்கை வரலாற்று நூலில் வள்ளலாரின் அருள் பாலிப்பு பற்றி
"
வேதாத்திரி" அவர்கள் குறிப்பிடுகின்றார்.

அவரது அனுபவத்தில் நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் "வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் எனது எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார்" என்பது தவறான எண்ணமாகும்.

அதாவது வள்ளலார் தாம் நினைத்த செயல்களை நமது "வேதாத்திரி" ஐயா மூலம் நிறைவேற்றியிருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டும். மாறாக வள்ளலார் ஏதோ தமது சொந்த உடலை விட்டுவிட்டதால் தற்போது "வேதாத்திரி" ஐயாவின் உடலை பயன்படுத்திக் கொண்டதாக எண்ணவேண்டியிருக்கிறது.

இது முற்றிலும் தவறானது. வள்ளலார் தமது சொந்த உடலை விட்டு என்றும் பிரியாமல் சாகா வரம் பெற்றவர். அவர் சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் பெற்று எல்லோர் உடம்பிலும் உள்ளார். "வேதாத்திரி" ஐயாவிடம் பத்தாண்டு இருந்தார் என்றால், அது "வேதாத்திரி" ஐயாவின் செயல்களை குறிப்பிட்டக் காலம் வரை வள்ளலார் தன்வசப்படுத்திக்கொண்டார் என்று தான் பொருள்.

வாழ்க "வேதாத்திரி" ஐயாவின் புகழ்.

4 comments:

  1. அருள்ஜோதி இராமலிங்க வள்ளலார் அருள்பாலிப்பு

    vallal peruman arul atchi virivu............. ithai ellarum nal vegu thurathil illai

    ReplyDelete
  2. மெளலி சந்த்ரு ஐயா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் கூறியபடி வள்ளல் பெருமானின் அரசாட்சி வெகுசீக்கிரத்தில் வந்தெய்தும். அந்த அரசாட்சியில் நாம் ஒரு நல்ல அமைச்சராக இருக்க, நாம் அனைவரும் நம்மை இப்போதிலிருந்தே தயார் படுத்திக்கொள்ளவேண்டும். நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.