Friday, May 3, 2013

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்


அருட்பெருஞ்ஜோதி                        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                        அருட்பெருஞ்ஜோதி

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்             03-05-2013

எமது கேள்வி:

பேரன்புடைய ஐயா அவர்களே! வணக்கம், தாங்கள் அருளிய சுத்த சன்மார்க்கத்தின்படி விபூதி (திருநீறு) வழங்கல், பூசுதல் சரியானதா?

வள்ளலாரின் பதில்:

வணக்கம் அன்பரே! எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சுத்த சன்மார்க்கம் ஆகும். இதற்கென தனி கொள்கைகளை இறைவன் வகுத்தவழி வகுத்துத் தந்துள்ளோம். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சாதி, மத, ஆசாரங்களை ஒழித்துவிட்டு உலகியர் அனைவரும் ஒரு பொது நோக்கத்தை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் எந்த ஒரு சாதனத்தையோ (தியானம், விரதம், ஜபம், யோகா, சமாதி, உபாசித்தல் முதலின) சின்னத்தையோ (விபூதி, நாமம், திலகம், சந்தனம் முதலிய வெளிஅடையாளங்கள்) யாம் அறிவிக்கவில்லை. இவைகளெல்லாம், சுத்த சன்மார்க்கத்திற்கு யாம் எது பெருந்தடைகளாக உள்ளது என்று சொன்னேனோ, அதற்குரியவைகளாகும் என்பதை நான் சொல்லித் தான் உலகியலர்கள் அறிய வேண்டும் என்பதில்லை.

"எல்லா சமயங்களும், எல்லா மதங்களும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொதுநெறியாக விளங்குவது 'சுத்த சன்மார்க்கம்' ஆகும்." (பக்கம் 548)

விபூதி வழங்குதலும், பூசிக்கொள்ளுதலும் சைவச் சமயத்தின் சிறப்புச் சாதனம் மற்றும் அச்சமயத்தின் உயரிய அடையாளச் சின்னமாகும் என்பதில் யாவருக்கும் ஐயமில்லை. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் சின்னம் எங்ஙனம் எமது சுத்த சன்மார்க்கத்தில் இருக்க முடியும் உலகியலரே?

யாம் எமது உரைநடைப் பகுதியில் பல இடங்களில் கூறியுள்ளேன்...

"சுத்த சன்மார்க்கத்திற்கு சமயங்கள் எக்காலத்தும் முக்கியத் தடைகளாகும்" (பக்கம் 56)
"சமய மத ஆசாரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்" (பக்கம் 418)
"சாதனகள் ஒன்றும் வேண்டாம்" (பக்கம் 416)
எனவே உலகியலரே... விபூதி வழங்கல், பூசுதல் சுத்தசன்மார்க்கத்தின்படி கூடவே கூடாது.... கூடாது.......கூடாது....

ஆனால், எமது உருவமிலா உருவப்படத்தில் விபூதிக் கோலத்தில் யாம் இருப்பது போல் வெளியிடுவது உலகியருக்கு அழகா? பிற்காலத்தில் இவ்வாறு முரண் ஏற்படும் என்றும், எமது மார்க்கத்தின் மீது பற்று வைக்காமல் எம்மீது பற்று வைத்துவிடுவார்கள் என ஊகித்ததால் தான் யாம் எமது உருவத்தை அன்றைக்கே மறைத்தோம். ஆனால் எமது உருவத்தை கையால் வரைந்து வெளிபடுத்திவிட்டார்கள். அப்போது யாம் சைவ சமயத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலுடன் இருந்தோம்.



அச்சமயதில் உள்ள உருவ வழிபாடு, அச்சமய சாதனம் மற்றும் மந்திரங்களையும் பாடி துதித்துள்ளேன்.

அதன்பின் அச்சமய மதங்களில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்பதனை உள்ளபடி அறிந்து, அவைகளை எம்மிலிருந்து ஒழித்தோம், எமது முடிபான முடிவாக "சுத்த சன்மார்க்கத்தை" உலகியலோருக்கு வழங்கினோம்.

யார் ஒருவர், எமது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இணைகின்றனரோ அவர்கள் தாம் இதுவரை கடைபிடித்துவந்த போலி ஆசாரங்களை, சாதனங்கள், சின்னங்கள், மதங்கள், சாதிகள், சமயங்கள், புலால் உண்ணுதல், கொலைத்தொழில் செய்தல் போன்ற தடைகளை தகர்த்தவரான வெற்றி வீரனாக திகழ்தல் வேண்டும். அவ்வீரர்களுக்கே எமது மார்க்கம், சாகாக் கல்வியினை இலவசமாக வழங்கும், அவர்களையே சாகா நிலைக்கு உயர்த்தும் என்பதனை அறியவேண்டும்.

"ஆசாரங்களை விட்டு ஒழித்தவர்கள் மட்டுமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேரமுடியும். இது எமது கட்டுப்பாட்டு விதியாகும்". (பக்கம் 411)

"இப்போது  ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது" (பக்கம் 469)
 
"யாம் 1873 ஆம் ஆண்டு எமது சீடர்களிடம் / ன்னை பின்பற்றுபவர்களிடமும் கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.

சுத்த சன்மார்க்க சங்கத்தில் நீங்கள் எல்லாம் சிறந்த / உண்மையான உறுப்பினர்கள் அல்ல. உண்மையான சுத்த சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்கள் வடதிசையில் வெகுதொலைவில் வசிக்கின்றனர். எனது அடிப்படைக் கொள்கையினை நீங்கள் பின்பற்றவில்லை. நீங்கள் உறுதிஎடுத்துக்கொண்டதை அது காட்டுகிறது, உங்களை எம்மால் நம்பவைக்க / திருத்த முடியவில்லை. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து மிகவிரைவில் மக்கள் இங்கு வருவார்கள். நான் நெடுங்காலமாக கூறிவந்த ஆன்மநேய ஒருமைபாட்டினையும், சகோதரத்துவத்தையும் அவர்கள் போதிப்பார்கள். நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நினைத்த அந்த உண்மையினை அவர்கள் கூறுகையில்தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்."
(ள்ளலாரின் சீடர்கள் அனைவரும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாகவே இறுதிவரை இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வள்ளலாரின் உண்மை கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது.)

# விபூதி இரகசியம்:
சிவபக்தர்கள் சிலர், சாணத்தைச் சுட்ட சாம்பலை விபூதி என்று பூசிக்கொண்டு, நாம் இறைவனை வணங்கிவிட்டோம் என்று மனதிருப்தி யடைந்துக்கொள்வார்கள். இது புற வழிபாடு.
உண்மையான விபூதி என்பது 'கோ' என்றால் சப்த ரூபமான அகங்காரமான மனப்பசுவாகும். அதன் சாணம் என்பது காம, குரோதைகளான குணங்களாகும். அதைச் சுடுவது என்பது மனம் பற்றாமல் இருப்பது. ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவினால் நம்முடைய புருவமத்தியாகிய சுழிமுனையாயிருக்கின்ற அக்கினி நேத்திரத்தில் ஊதி, 'ராகத்துவேசாதிகளாகிய துர்விசாரங்களை அதாவது துர்குணங்களை எப்போது அங்கே எரிக்கின்றோமோ அப்போதுதான் நம்முள்ளில் பிரகாசித்து ஞானம் உண்டாகின்றது. ஆதலால் நமக்கு விபூதியின் பயன் கிடைக்க அகவழிபாடு தேவை.

 
மீண்டும் கூறுகிறேன், விபூதி பூசுதல், வழங்குதல் எம்மார்க்க சட்டப்படி குற்றம்... குற்றம்... குற்றமே...

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!








   



12 comments:

  1. வள்ளலார் பெருமகனார் சிவபெருமானை தானே வணங்கினார்,எனக்கு சிறிது காலமாக எது உண்மையான கடவுள் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது,மனம் அலைமோதுகிறது.எனக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கடவுள்? திருவருட்பிரகாச வள்ளலாரின் பேருபதேசத்தை உற்று கவனிக்கவும் ஐயா...

      Delete
  2. சுத்தி வந்து புற வழிபாட்டின் விபூதியின் பயனை அடைய அக வழிபாடு தேவை என்று சொல்லிவிட்டு.. புற வழிபாட்டு விபூதி குற்றம் என்கிறார்..

    முதலில் வள்ளலார் அவர்களின் விபூதி வைத்தியம் இவருக்குத்தான் கொடுக்க வேண்டும் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. விபூதி வைத்தியம் கிடைக்கப்பெற்றால் நற்பேறுதான் ஐயா...

      Delete
  3. வடக்கிலுள்ள தூரத்து உறுப்பினர்கள் என யாரை சொல்கிறார்கள்..கிரிப்டோக்களையா

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவிற்கு வடக்கில் உள்ள தூர தேசங்கள் எனக்கொள்ளலாம்.

      Delete
  4. இது வள்ளலார் சொன்னது போல் தெரியவில்லை...ஏதோ ஒரு கிறிப்டோ கிறித்தவர் வாழைபழத்தில் ஊசியை ஏற்றுவது போல் இருக்கிறது. அமெரிக்கா ரஷ்யா வில் இருந்து வந்து நமக்கு நல்லதை சொல்வார்கள் என்று வள்ளலார் கூறியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது...அமெரிக்க ரஷ்யா கலாச்சாரம் புலால் உண்ணுதலை தவறு என்று சொல்லவேயில்லை...ஆனால் வள்ளலார் புலால் உண்ணுதலை எதிர்த்தவர்.....பொய் கூறினாலும் அளவாக கூறுங்கள் மிஸ்டர் மிஷினரி....நீறில்லா நெற்றி பாழ்

    ReplyDelete
    Replies
    1. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மக்களில் பலர் வீகன் என்கின்ற மேம்பட்ட தாவர உணவாளர்களாக மாறிவருகின்றார்கள். வீகன் என்றால் விலங்கிலிருந்து பெறப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்களை தமது உணவில் சேர்க்காத முற்றிலும் தாவர உணவாளர்கள் ஆவர். இங்கே நமது சைவ சமயத்தில் இந்து மதத்தில் முற்றிலும் தாவர உணவாளர்கள் எத்தனை பேர்? திருநீறு என்பது மனித உடம்பை எரித்தால் வந்த சாம்பல் அல்லது ஓர் விலங்கின் கழிவிலிருந்து வருகின்ற சாம்பலாகும். விலங்கின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தலே கருணை வழியாகும்.

      Delete
    2. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இதை தீர்த்து வைக்கவும் "சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்."
      வள்ளற்பெருமான் நித்திய கரும விதியில் கூறுகிறார் , விபூதியை பிரசாதமாக கூட வழங்கியுள்ளார் இந்த ஐயத்தை மட்டும் நீக்குங்கள்

      Delete
    3. வள்ளலார் சைவ சமயத்திலிருந்து சமயாதீத நிலைக்கு முன்னேற்றம் அடைந்ததை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

      Delete
  5. Now a days slowly they're turning towards vegans not vegetarians

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.