Saturday, June 1, 2013

வள்ளலாரின் சுவர்ணதேகம்

வள்ளலாரின் சுவர்ணதேகம்

(If you read by English, please down)

# வள்ளலார் சுவர்ணதேகம் பெற்றது நடைமுறைசாத்தியமா?

# "சத்தியமான உண்மை" என்பதே இதற்கு விடை.

# இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே வள்ளலார் ஒரு அரிதான மனிதர் ஆவார்.

# இவர் வேதாந்தம், சித்தாந்த தத்துவங்களில் தன்னை ஈடுபடுத்தி அதனை முழுமையாக ஆய்வு செய்தவர்.

# இவர் சுவர்ணதேகம் பெற்றதற்கு நிறைய சாட்சியங்களை கூறலாம். "பொன்னுடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டா..."

# மேற்கண்டபாடல் வரி அவர் சுவர்ணதேகம் பெற்றதைக்காட்டுகிறது.

# வள்ளலார் தம்தேகத்தை மறைத்திருப்பது உண்மையில் அறிவியலாகுமா?

# வள்ளலார் மறைந்திருப்பது அறிவியல் உண்மையே ஆகும்.

# இப்படிப்பட்ட மாற்றத்தை வேதியலில் 'சஃப்லிமேஷன்' என்கின்றனர். வள்ளலார் இந்த அறிவியலைத்தான் செயல்படுத்தினார்.

# சஃப்லிமேஷன் என்பது திடப் பொருளிலிருந்து நீர்ம நிலைக்குச் செல்லாமல் வாயு நிலையினை அடைதல்.

# எடுத்துக்காட்டாக கற்பூரத்தை ஒப்பிடலாம். இந்த இயற்கைமுறைப்படி வள்ளலார் அந்நிலையை பெற்றார். (கற்பூரம் என்ற திடப்பொருளை திறந்த வெளியில் வைத்தால் அது நீர்மநிலைக்கு மாறாமல் வாயுநிலைக்கு மாறிவிடும்)

# தயவுசெய்து வாயு நிலை என்பதனை காற்றாக மாறியது என்று நினைத்துவிடவேண்டாம். இந்த இடத்தில் உருதெரியாமல் மறைவது என்பதே பொருள். வள்ளலார் உருதெரியாமலிருக்கும் உடலையே பெற்றார், காற்றாக மாறிவிட்டார் என்று நினையாதீர்.
 
# இயற்கை இந்த முறையை அனுமதிக்கின்றபடியால் நாமும் இந்த நிலையினை இயற்கையிலிருந்து பெறமுடியும். ஆனால் இதற்குண்டான செயல்முறை சற்று கடினமானது. ஆனால், நாம் வள்ளலாரின் சாகாக் கல்வியினைப் படித்து அதன்படி நடந்தால் இது மிகவும் சுலபமான ஒன்றே.

# சுவர்ணதேகம் பெறவும் வாயுநிலையாய் மறையவும் சிலவற்றைக் கடைபிடிக்கவேண்டும்.
  1. உணவுப் பழக்கம்
  2. தனிமனித ஒழுக்கம்
  3. மிகுந்த ஈடுபாட்டுன் உயர்நிலையில் இருப்பது. (பாலுறவு கூடாது)
  4. கருணை மற்றும் இயற்கையான மூலிகைகள் மற்றும் சில வேறுபட்ட      வாழ்க்கைமுறைகள்.

# நமது தலையில் சிறிய வடிவில் மறைமுகமான ஒரு திசு அமைப்பு உள்ளது. அதன் பெயர் பிட்யூடரி திசு. சுவர்ணதேகம் பெற இதுவும் ஒரு வகையில் உதவிசெய்கிறது.

# இந்த பிட்யூடரி திசுதான் அனைத்து திசுக்களுக்கும் தலைமைவகிக்கின்றது. (நாம் படித்த 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தை நினைவுக்கூறலாம்)

# வள்ளலார் இந்த மறைமுகமான பிட்யூடரி திசுவை இயங்கவைத்தப்பின் அதனை "அமுதக் கலசம்" என்று அழைக்கிறார். 

# அதன்பிறகு சுவர்ணதேகம் என்பது சாத்தியமாகும். இந்த மாற்றம் நமது தலைப்பாகத்திலிருந்து துவங்கி முகம் மற்றும் மார்பு என பரவி உடல் முழுதும் ஆக்ரமிக்கும்.



# நாம் அந்த பிட்யூடரி திசுவை இயக்காமல் இருந்தால், அதன்பிறகு இந்த மாற்றம் நின்றுவிடும். இத்திசு இயக்கத்திற்கு நமக்கு உதவுவது அதிகப்படியான உடல் வெப்பம். "அனலில் புலன்கள் வெந்து" மற்றும் "என்னை வேதித்த என்தனி அன்பே" என்ற அருட்பா வரிகளை ஒப்பிடலாம். இதன் பொருளாக வள்ளலார் கூறுவது, நான் இறைவனிடம் காட்டிய அன்பே என்னுடம்பை வேதித்து (வேதியியல் மாற்றம்) சுவர்ணதேகமாக மாற்றியது, என்பதாகும்.

# சுவர்ணதேகம் என்பதும் மறைதல் என்பதும் அறிவியலே என்று புரிந்துக்கொண்டு நம்பிக்கையுடன் இருப்போம்.

# சுவர்ணதேகம் என்பது முதல் படியே. இன்னும் இரண்டு படிகள் உள்ளன. அவை, "பிரணவ தேகம், ஞான தேகம்" என்பதாகும். நாம் சுவர்ணதேகம் பெற்றவுடன் அத்தேகம் தானாகவே மற்ற இரண்டு தேகத்தையும் அடையும். இதற்கும் அருட்பெருஞ்ஜோதி அருள் வேண்டும்.

# எனவே அன்பர்களே! நாம் முதலில் திரு அருட்பெருஞ்ஜோதியிடமிருந்து அருளை பெற முயற்சி செய்வோம். அதன்பிறகு நாம் மரணமிலா பெருவாழ்வில் மகிழலாம். இது அறிவியல் மட்டுமல்ல. இது ஒரு சுத்த சன்மார்க்கம் ஆகும். "அருள் பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும்" மற்றும் "அருள் பெற முயலுக" என்ற அருட்பா வரிகளைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

# இந்த அறிவியல் உண்மைகளை படித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.

         அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
          தனிப்பெருங்கருணை          அருட்பெருஞ்ஜோதி
   

VALLALAR’S GOLDEN BODY

Vallalar got a Golden Body, is it Possible?

The answer is, very confidently YES.

# Vallalar is the very rare personality that our human kind ever had.

# He almost tested the complete Vedantha and Siddhantha Philosopy in Practice.

# There are many proof that exist that Vallalar had a Golden Body “Ponudambu enaku Porindhidum Poruta…”

# The above line says that he had Golden Body.

# Did Vallalar disappearance is really Scientific?

# Vallalr disappearance is the pure scientific truth.

# In Chemistry there exist a concept called ‘sublimation’. Vallalar underwent this process.
  
# Sublimation is the process of moving from a solid state to vapor state without reaching the liquid state.

# The examples are camphor naphthalene and of course Vallalar nature has this quality.
   (as a stone of naphthalene to be change directly gaseous state without becoming liquid when open place)

# Please don’t understood ‘vapor’ means ‘air’, in this subject, it means invisible. Vallalar got invisible body, not to change Air, mind it.

# Since Nature has this quality we can also get that quality from the nature. But the process is Really Difficult. But if we read and follow the Vallalar’s death less education, it is very simple one.

# Some of the means to achieve this Golden Body and Another State (Vapor).
1.   Food Culture
2.   Individual Culture
3.   Very Sincere Chastity
4.   Compassion and of course Herbals and Different Lifestyle.

# In our head part there exist a small penal shape gland called pituitary gland, this is one of responsible factor for Golden Body.

# This Pitutary Gland is called as Master of all Glands. (remembering that we read 12th  Science Subject)

# Vallalar calls this gland as “Amutha Kalasam” (Pot of elixir) when this gland gets activated.

# Then Golden Body is possible. The process of transforming your body starts from your head it flows to your face and it reaches to your chest and other parts of body.

# If we are stop stimulating the gland, then the process also stops. This is facilitated by increasing our body heat more and more. Like an Arutpa lines “analil pulangal venthu” and “enai vethittha enthani anbe”. It means, Vallalar to say, “My divine Mercy had changed my body like Golden body through chemistry.  

.# Hope we all understood the science behind the Golden body and his disappearance.
# This Golden Body is the first step of the three steps. Other two steps are “Peranava Degam, and Gnana Degam” When we got Golden Body it will pickup to another mentioned two bodes automatically, with the help of  Arutperum jothi Arul.

 # So, My Dear, First we can try to get “ARUL” from Mr.Arutperumjothi and then we should enjoy the death less life. It is not only science, it is Sutha Sanmarkkam. Please understand an Arutpa lines “Arul perin thurumbum oor ayinthozil puriyum”, “Arul pera muyaluga”.

# Thank you everybody for reading this Science Fact. See you again.

            ARUTPERUM JOTHI            ARUTPERUM JOTHI
            THANIPPERUM KARUNAI           ARUTPERUM JOTHI








2 comments:

  1. Naanum padithirukiren, avar kaatrodu kalandhu ponar endru puthakathil potirunthathu. Anal medical science yil appadi namba vazhiyileye! Sorry if I hurt your feelings.

    ReplyDelete
  2. செல்வகுமார் ஐயா அவர்களுக்கு வணக்கம், வள்ளலார் காற்றோடு கலக்கவில்லை. தனது ஊன உடம்பை ஞான உடம்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது உருவம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். உருவம் பிடிபடாது. காலத்தையும் கடந்தது அவர் உருவம் இருக்கும் / காலாதீதன் என்பார்கள். மேற்படி 'கற்பூரம்' என்பது ஒரு முழுமையான உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.