Tuesday, June 18, 2013

இடம் தருவாய்


அருட்பெருஞ்ஜோதி                               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                               அருட்பெருஞ்ஜோதி


இடம் தருவாய்



பாடுபடும் எந்தன் இதயதுள்ளல் ஓசையால்
பாடுகின்றேன் உந்தன் பொற்பாத அழகை
காடுகொண்ட மரங்களில் தேடுகின்றேன் எனக்கொரு
கூடுகட்ட உனதுகிளையொன்றில் இடமொன்று தருவாயோ         (1)  

கண்ணிரண்டால் காணக் கிடைக்காத என்னவனை
கண்ஒன்றால் காண துடிக்கின்றேன் என்ஐயாவே
மண்ணுலகில் பிறக்கவைத்தாய் என்னை உன்மணி
மண்டபத்தில் இறக்காமலிருக்க இடமொன்று தருவாயோ           (2)

வானமும் பூமியும் வாழ்த்தும் என்தமிழ்
வானனே உன்னைப் புகழஎன் வாய்அலறுதே
தானமும் தருமமும் ஈனும் வள்ளலேஉனது
தேனமுதகலசத்தில் ஈஎனஇருக்க இடமொன்று தருவாயோ         (3)

திருக்கதவம் தாழிட்டு மறைந்தோனே எனது
ஒருக்கதவம் திறக்க மன்றாடுகின்றேன் என்னய்யாவே
இருளன்றி ஒன்றும் பார்க்கிலேன் இதுதருனமுன்னோடு
அருளாட்டமாட சித்திவளாகத்திலே இடமொன்று தருவாயோ       (4)

முத்தேகம் பெற்ற சாகஅருளனே இறைநிலை
மத்தியிலே கொஞ்சி விளையாடும் பிள்ளையனே
சித்தெல்லாம் ஆளுகின்ற ஐயாவே என்னை
செத்தவனென்றே உலகம்பழியாத இடமொன்று தருவாயோ        (5)

எட்டுமிரண்டும் சூரியச்சந்திரக் கலையில் முயன்றும்
எட்டாத நிலையில் விளங்கும் நம்மவனை
வாட்டுகின்ற உலகமாயையில் திருஅருட்பாவை உணர்ந்தும்
விட்டேனேஐயோ என்றினிவருந்தாத இடமொன்று தருவாயோ      (6)

எங்கிருந்த என்னை எம்தந்தையின் கண்அமர்த்தி
அங்கிருந்த என்னை எம்தாயின் கண்பொருத்தி
தங்கியிருந்த என்னை இம்மண்ணில் கொணர்ந்ததேனோ
தங்கமயமாய்எங்கி ருந்தேனோஅங்கிருக்க இடமொன்று தருவாயோ  (7)

களித்தானை சிற்சபையும் பொற்சபையும் இருகண்களாயழுது
குளித்தானை நல்வெள்ளாடை யணிந்து அருள்ஜோதி
அளித்தானை ஞானசபையானை அருட்பெருஞ் ஜோதியானை
ஒளித்தஉடலானை மறவாதிருக்க இடமொன்று தருவாயோ         (8)

அன்று ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன்
என்றுச் சொல்லிச்சென்றது தான்எங்கே என்னய்யாவே
நன்றியுடன் இருக்கின்றோம் நீஅருள்கொண்டு வரும்
நன்நாளில் நாங்களிருக்க இடமொன்று தருவாயோ               (9)

எந்தன் மூச்சும் பேச்சும் எல்லாம்
எந்தை நினது திருவடிக்கே சமர்ப்பனம்
சந்தை உலகியல் விந்தை எல்லாம்விட்டேன்
சந்தேகமின்றி முத்தேகத்தில் இடமொன்று தருவாயோ             (10)



  











 



 



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.