Sunday, February 26, 2017

இறை வழிபாடு



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

                                        இறை வழிபாடு

சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கும் நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம் பார்ப்போம்.

ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் 
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்; புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும் அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும் பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?

அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின் வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால், இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்! 
எப்படி?!!

முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும், அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். ;-)

ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.

முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு! பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு! நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை வித்தியாசங்கள்!!

சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இதனை” வியாபாரம் என்று சொல்லாமல் வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!

குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக 
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.  வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல் செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.