Tuesday, August 24, 2021

அடிக்கு அடியனாக

 

அடிக்கு அடியனாக

 

எழுதிரைக ளுமிலகவ ரம்தந்த வள்ளளுனை       

அழுதழுது வினைவிலகி சம்பந்த நல்லுறவு

மனமிலகி அடிபணிவே னென்னின்ப நித்தியவ ருள்முழுது மாக

 

மரணமில பிறவியில சத்சங்க சித்திபெற

தருமமிக கருணையுற சங்கத்து பற்றுவர

சமரசப ஜனைதனைதி னம்நல்க முத்திவர சத்தியனெ னாக

 

நரைதிரைமு துமைகளும டம்இன்றி பொத்திடவு

மறைமதமு மலமெனத டம்இன்றி செத்திடவு

முடியறசிவ வழிமேவிய பஞ்ஞொத்த சிற்பரனை சத்தகனை நாட

 

திருநிறைய அருளுகபொ ருள்இன்ப முற்றிடுக

வெளிவெளிக டகடதய வில்நின்று கற்றிடுக

ஒளிபெருகி அகமிளகி சிற்றம்ப லம்நிறைய அத்துவித மாக

 

உலகநிலை அணுவளவு மிச்சிக்க அச்சமுற

எனைமலை யளவுஎன தித்திக்க முத்தேகமு

மருளிஒளி யுடலெனது சொந்தம்எ னத்திலக மிட்டஉனை ஊட

 

புலைகொலையு மறுதலிய நற்சிந்தை சித்திபெற

உரையுமொலி பலிதமென என்தந்தை வள்ளலென

தினமுமெனை அருளகட வுள்தன்னை கண்டிடவு டன்உறைய தாக

 

எனதுநிலை செழுமையுற எண்ணங்க ளெல்லாமற

 கனகமலை உடலுமென எண்ணற்ற மாற்றுடைய

சபைஅமைய அபயமென வந்துன்ன டித்தழுவி சித்தனென தாக

 

புருவநடு நடனமிட எட்டும்இ ரண்டுமென

அமுதநதி நழுவிவிழ என்னிட்ட தெய்வமெழ

இருமைஅற ஒருமைவர தஞ்சம்எ னத்துனத டிக்கடிய னாக

--தி.ம.இராமலிங்கம்.



Friday, August 20, 2021

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் ஓதவேண்டிய திருவருட்பா

             பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் ஓதவேண்டிய திருவருட்பா

                             5-ஆம் திருமுறை - திருவருள் விலாசப் பத்து


044. திருவருள் விலாசப் பத்து
tiruvaruḷ vilāsap pattu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
    யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
    பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
    பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
    வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
    விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
    தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 2. கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
    கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
    புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
    புத்தமுதே ஆனந்த போக மேஉள்
    எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
    என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
    திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
  • 3. நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
    நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
    என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
    ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
    பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
    போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
    சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 4. கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
    காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
    ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
    உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
    இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
    ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
    செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 5. எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
    என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
    மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
    மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
    இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
    எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
    சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 6. மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
    மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
    கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
    கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
    தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
    சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
    சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 7. கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
    கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
    பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
    புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
    உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
    உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
    சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 8. ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
    நாயகனே வடிவேற்கை நாத னேநான்
    கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
    குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
    சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
    சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
    சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 9. கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
    கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
    சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
    துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
    அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
    ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
    சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 10. பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
    பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
    என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
    ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
    மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
    விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
    சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

உலக மாயையிலிருந்து விடுபட ஓதவேண்டிய திருவருட்பா

                   உலக மாயையிலிருந்து விடுபட ஓதவேண்டிய திருவருட்பா

                                  5-ஆம் திருமுறை - நெஞ்சொடு புலத்தல்


019. நெஞ்சொடு புலத்தல்
neñsoṭu pulattal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
    பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
    மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
    ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
  • 2. வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
    காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
    ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
    மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
  • 3. வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
    சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
    வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
    தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
  • 4. காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
    போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
    பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
    நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
  • 5. தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
    மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
    நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
    தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
  • 6. தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
    பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
    உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
    சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.
  • 7. நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
    கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
    முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
    அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
  • 8. இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
    குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
    நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
    வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
  • 9. நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
    மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
    நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
    உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
  • 10. கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
    தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
    கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
    எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
  • 11. இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
    பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
    மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
    திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.

பாவங்களிலிருந்து விடைபெற்று புனிதமுற ஓதவேண்டிய திருவருட்பா

    பாவங்களிலிருந்து விடைபெற்று புனிதமுற ஓதவேண்டிய திருவருட்பா

                                5-ஆம் திருமுறை - திருவடி சூட விழைதல்


021. திருவடி சூட விழைதல்
tiruvaṭi sūṭa viḻaital

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
    கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
    கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
    வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 2. தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
    ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
    ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
    வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 3. மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
    உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
    பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
    மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 4. ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
    கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
    தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
    மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 5. விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
    சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
    பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
    வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 6. வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
    அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
    குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
    மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 7. தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
    சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
    வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
    மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 8. கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
    நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
    சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
    வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 9. கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
    உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
    அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
    வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
  • 10. பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
    ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
    தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
    வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.

நமது குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய ஓதவேண்டிய திருவருட்பா

 நமது குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய ஓதவேண்டிய திருவருட்பா

5-ஆம் திருமுறை - நெஞ்சவலங் கூறல்

029. நெஞ்சவலங் கூறல்
neñsavalaṅ kūṟal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
    ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
    பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
    அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
    தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
    தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
  • 2. வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
    மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
    பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
    கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
    அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
    அண்ண லேதணி காசலத் தரசே
  • 3. மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
    வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
    பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
    மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
    செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
    செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
  • 4. மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
    மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
    பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
    புண்ணி யாஅருட் போதக நாதா
    துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
    து‘ய னேபசுந் தோகைவா கனனே.
  • 5. துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
    துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
    பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    நட்டம் ஆடிய நாயகன் அளித்த
    நல்ல மாணிக்க நாயக மணியே
    மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
    வள்ள லேமயில் வாகனத் தேவே
  • 6. காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
    கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
    பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    தாயும் தந்தையும் சாமியும் எனது
    சார்பும் ஆகிய தணிகையங் குகனே
    ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
    ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.
  • 7. தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
    தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
    பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
    சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
    ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
    உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
  • 8. கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
    கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
    பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
    வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
    புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
    பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
  • 9. மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
    மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
    பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    பித்த நாயகன் அருள்திருப் பேறே
    பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
    தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
    சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
  • 10. அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
    அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
    பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
    பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
    மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
    மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
    வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
    வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.


அலையும் மனதினை மீட்டெடுக்க நாம் ஓதவேண்டிய திருவருட்பா

         அலையும் மனதினை மீட்டெடுக்க நாம் ஓதவேண்டிய திருவருட்பா

                    5-ஆம் திருமுறை - நாள் அவம்படாமை வேண்டல்


037. நாள் அவம்படாமை வேண்டல்
nāḷ avampaṭāmai vēṇṭal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
    கோதையர் பால்விரைந் தோடிச்
    சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    என்தனி உயிரே என்னுடைப் பொருளே
    என்உளத் திணிதெழும் இன்பே
    மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
    வந்தமர்ந் தருள்செயும் மணியே.
  • 2. மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
    வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
    கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
    கழலடிக் காக்கும்நாள் உளதோ
    குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
    குறிகுணங் கடந்ததோர் நெறியே
    எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
    எந்தையே தணிகைஎம் இறையே.
  • 3. இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
    இலைநெடு வேற்கணார் அளகச்
    சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
    வள்ளலே உள்ளகப் பொருளே
    அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
    அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
  • 4. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
    அலர்முலை அணங்கனார் அல்குல்
    புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
    பாலனே வேலுடை யவனே
    விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
    வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
  • 5. விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
    விம்முறும் இளமுலை மடவார்
    களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
    கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
    அளக்கருங் கருணை வாரியே ஞான
    அமுதமே ஆனந்தப் பெருக்கே
    கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
    கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
  • 6. கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
    கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
    திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
    இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
    விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
    மெய்அடி யவர்உள விருப்பே
    திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
    தெய்வமே அருட்செழுந் தேனே.
  • 7. தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
    திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
    கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
    கழல்வழி நடத்தும்நாள் உளதோ
    மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
    வண்புனத் தடைந்திட்ட மணியே
    வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
    மாமலை அமர்ந்தருள் மருந்தே.
  • 8. மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
    வாணுதல் மங்கையர் இடத்தில்
    பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
    ஆனந்தத் தேறலே அமுதே
    இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
    இனிதமர்ந் தருளிய இன்பே.
  • 9. இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
    ஏந்திழை யவர்புழுக் குழியில்
    துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
    துணையடிக் காக்கும்நாள் உளதோ
    அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
    அரிஅயன் பணிபெரி யவனே
    வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
    மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
  • 10. வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
    வலித்திடும் மங்கையர் தம்பால்
    தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
    தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
    சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
    தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
    ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
    உதவுசீர் அருட்பெருங் குன்றே.

எல்லா பிணிகளும் நீங்க ஓதவேண்டிய திருவருட்பா

                    எல்லா பிணிகளும் நீங்க ஓதவேண்டிய திருவருட்பா

                                      5- ஆம் திருமுறை - உறுதி உணர்த்தல்


033. உறுதி உணர்த்தல்
uṟuti uṇarttal

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
    நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
  • 2. அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
    நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
  • 3. என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
    நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.

காம மயக்கம் நீங்க ஓதவேண்டிய திருவருட்பா

         காம மயக்கம் நீங்க ஓதவேண்டிய திருவருட்பா

      5-ஆம் திருமுறை - புன்மை நினைந் திரங்கல்

    கட்டளைக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
    மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
    கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
    கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
    மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
    வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
    தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
    தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
  • 2. முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
    முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
    குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
    கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
    நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
    நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
    கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
    காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
  • 3. வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
    மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
    நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
    நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
    கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
    கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
    தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
    தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
  • 4. பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
    பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
    கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
    குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
    மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
    வேல னேதணி காசல மேலனே
    தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
    தெய்வ யானை திருமண வாளனே.
  • 5. கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
    கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
    உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
    உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
    புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
    புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
    வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
    வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
  • 6. காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
    காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
    மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
    முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
    பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
    பாது காக்கும் பரம்உனக் கையனே
    தேசம் யாவும் புகழ்தணி காசலச்
    செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
  • 7. ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
    ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
    குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
    கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
    மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
    வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
    சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
    சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
  • 8. கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
    கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
    மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
    மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
    பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
    பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
    விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
    வேல னேஉமை யாள்அருள் பாலனே.
  • 9. படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
    பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
    குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
    கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
    கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
    கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
    ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
    ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
  • 10. கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
    கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
    வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
    மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
    கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
    ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
    பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
    பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.