எல்லா பிணிகளும் நீங்க ஓதவேண்டிய திருவருட்பா
5- ஆம் திருமுறை - உறுதி உணர்த்தல்
033. உறுதி உணர்த்தல்
uṟuti uṇarttal
- 1. மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே. - 2. அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே. - 3. என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.