ஞான சங்கரம்
ஞான சங்கர ஈசா நமோநம
வான சங்கம மாயா நமோநம
மோன தங்கக தேகா நமோநம - அரனாக
பாச பந்தமு மானாய் நமோநம
பூச நெஞ்சக ஏகா நமோநம
நேச நல்லற தாரா நமோநம - பரமாக
காய கல்பக காலா நமோநம
வாழ நல்வட லூரா நமோநம
பாட அட்டக நூலா நமோநம - அடிகாண
வாசி தம்பர தூதா நமோநம
ஏக அம்பல ராசா நமோநம
தேக சந்தன வாசா நமோநம - முடிகாண
மாட நித்திய ஜோதீ நமோநம
நாத ருட்பிர காசா நமோநம
ராம லிங்கமே ராமா நமோநம - நலமாக
யோக சுந்தர நாதா நமோநம
சாக அஞ்சிய தாதா நமோநம
தான புண்ணிய நேயா நமோநம - நடமாட
மஹா மந்தர தாசா நமோநம
சூர்ய சந்திர பாகா நமோநம
மாய தந்தர நாசா நமோநம - தயவாக
ஈரக் கண்ணனே வீரா நமோநம
மேக பஞ்சென தாளா நமோநம
போக மஞ்சன லீலா நமோநம - அருளானே.
-திருச்சபை.
தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.