அமரன்
உலகம் இதுவென
காரண மாயையை
விலகும் வகைசெய காரிய பாடலை
இதயம் நிறைவுற பாடிய போதக -
வடலூரா
உதயக் கலைதனை ஈரற பூரண
இடநல் நடுவினை கூடுற கூவிய
நடுவில் பரவிய ஜோதியை மேவிய – நடமாட
நிதமும் உயிரினை தீதற நாடிய
விதமும் பசியற ஓடிய வாடிய
முகமும் கலையற சாடிய மேதகு – தயவானை
சடலம் உயிரெழ காலனை வீழென
உடலில் ஒளியெழ பூரண நீடென
நிலனில் நிலையென யாருள யாரில -
மொழிவாயே
கடலின் அலையென ஓடியு மாடியு
மணலின் அளவென சூடிய தேகமு
மனதின் மயமென மாறியு மீதுள – ஐயகோவே
மனதில் சிவபதி பாடவு
மாடவு
மலரின் சிவகதி கூடவு மீளவு
முலகில் சிவசிவ தேகமு மானனை – மகிழேனே
அகவல் படிபடி ஜோதிய மாமலை
அருளைப் பிடிபிடி ஞானச பாபதி
நடுவில் அடிமுடி காணசி வாசிவ – எனதானே
மரணம் அடியனை மேவிய போதுனை
சரணம் எனஉனை நாடிய வாறெனை
அமரன் இவனென ஊரறி வாயுறை – பெருமானே.
-தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.