அடிக்கு அடியனாக
எழுதிரைக
ளுமிலகவ ரம்தந்த வள்ளளுனை
அழுதழுது
வினைவிலகி சம்பந்த நல்லுறவு
மனமிலகி
அடிபணிவே னென்னின்ப நித்தியவ ருள்முழுது மாக
மரணமில
பிறவியில சத்சங்க சித்திபெற
தருமமிக
கருணையுற சங்கத்து பற்றுவர
சமரசப
ஜனைதனைதி னம்நல்க முத்திவர சத்தியனெ னாக
நரைதிரைமு
துமைகளும டம்இன்றி பொத்திடவு
மறைமதமு
மலமெனத டம்இன்றி செத்திடவு
முடியறசிவ
வழிமேவிய பஞ்ஞொத்த சிற்பரனை சத்தகனை நாட
திருநிறைய அருளுகபொ ருள்இன்ப
முற்றிடுக
வெளிவெளிக டகடதய வில்நின்று
கற்றிடுக
ஒளிபெருகி அகமிளகி சிற்றம்ப
லம்நிறைய அத்துவித மாக
உலகநிலை அணுவளவு மிச்சிக்க
அச்சமுற
எனைமலை யளவுஎன தித்திக்க முத்தேகமு
மருளிஒளி யுடலெனது சொந்தம்எ
னத்திலக மிட்டஉனை ஊட
புலைகொலையு மறுதலிய நற்சிந்தை
சித்திபெற
உரையுமொலி பலிதமென என்தந்தை
வள்ளலென
தினமுமெனை அருளகட வுள்தன்னை
கண்டிடவு டன்உறைய தாக
எனதுநிலை செழுமையுற எண்ணங்க ளெல்லாமற
கனகமலை உடலுமென எண்ணற்ற மாற்றுடைய
சபைஅமைய அபயமென வந்துன்ன டித்தழுவி சித்தனென
தாக
புருவநடு நடனமிட எட்டும்இ ரண்டுமென
அமுதநதி நழுவிவிழ என்னிட்ட தெய்வமெழ
இருமைஅற ஒருமைவர தஞ்சம்எ னத்துனத டிக்கடிய
னாக
--தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.