93-ஆம் ஆண்டு குருபூசை
அன்பர்களுக்கு வந்தனம்!
இன்று (25-11-2017) வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி
ஐயாவின் 93-ஆம் ஆண்டு குருபூசை காரணப்பட்டு அருள் நிலையத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காரணப்பட்டு கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து
வசதி உள்ளது. இக்கிராமத்திற்கு அயலார்கள் வருவது அவ்வளவு எளிதல்ல. இருந்தபோதிலும் அருட்பெருஞ்ஜோதியின்
பெருங்கருணையாலே இன்றைய குருபுசைக்கு சுமார் 250 அன்பர்கள் (அயலூரை சேர்ந்தவர்கள் மட்டும்)
இச்சிறிய கிராமத்திற்கு வந்து குருபூசையில் கலந்துக்கொண்டு பேரருளை (அவர்களுக்கே தெரியாமல்
– உணராமல்) பெற்று சென்றுள்ளனர்.
அதுபோல் பல ஊடகங்கள் மூலம் கேள்வியால் அறிந்துக்கொண்டு உலகெங்கிலும்
உள்ள சன்மார்க்க அன்பர்களும் தங்களது சிந்தனைகளை ஒரு நிமிடமேனும் காரணப்பட்டு அருள்
நிலையத்தை பற்றி நினைத்திருக்கக்கூடும். அவர்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருள்
இன்று கிடைத்திருக்கும்.
ச.மு.க. ஐயாவின் குருபூசை சிறப்பாக நடைபெற உதவிய வள்ளற்பெருமானுக்கும்,
காரணப்பட்டு கிராம மக்களுக்கும், ச.மு.க. ஐயாவின் வழித்தோன்றல்களுக்கும், சன்மார்க்க
அன்பர்களுக்கும் அருள் நிலையம் தமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது. எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி