Sunday, November 19, 2017

நவம்பர் மாதத்தில் அன்று…

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.


நவம்பர் மாதத்தில் அன்று…


**-11-1873 – திருவருட்பிரகாசர், சித்திவளாகத்தில் அனையாதீபம் ஏற்றி ஜோதி வழிபாடு ஏற்படுத்தினார். சித்திவளாக திருவறையில் உட்புகுந்த பெருமான் மூன்றுமாத காலம் வெளியில் வரவில்லை.
  
நவம்பர் - 1857 - வள்ளற்பெருமான் சின்மய தீபிகை நூல் பதிப்பித்தார்.

26-11-1866 - "நான் தற்காலம் அவ்விடம் வருவதற்கு சமயமாகத் தோன்றவில்லை. கடவுள் உத்தரவுத் தடையின்றி வேறு தடை யாதொன்றுமில்லை." என இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் வரைந்தார்.

07-11-1862 - "வட மேற்கே ஒரு ஊர்க்கு வேறொரு காரியத்தின் பொருட்டு சுமார் இருபது தினத்திற்குள் பிரயாணம் செல்வது உண்மை. அங்கிருந்து புறப்பட்டு சென்னப்பட்டணம் வருவது நிச்சயம்." என்று வேலுமுதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் வரைந்தார்.

25-11-1872 - "வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல், மூப்பினர் இளமையைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்" என்று சத்திய ஞான சபை விளம்பரத்தை வள்ளற்பெருமான் வெளியிட்டார்.

25-11-1872 - "குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப்போய்விடத்தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது." என்று சன்மார்க்க சங்கத்தார் எப்படி பழக வேண்டும் என்று வள்ளற்பெருமான் கட்டளை யிட்டார்கள்.

19-11-1910 - திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா (திரு.சுப்பையா) அவர்கள் பிறந்தார்.

13-11-1895 - பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் - நாகை மாவட்டம் பிறையாறு என்னும் ஊரில் பிறந்தார். துரைசாமி தந்தை, அமிர்தம்மாள் தாய்.


13-11-1903 - தாம் திருக்காப்பிட்டுக் கொண்டு 25-ஆண்டுகள் கழித்து கல்பட்டு ஐயாவின் அடக்கத்திற்காக வள்ளல் பெருமானே தருமச்சாலைக்கு வந்ததை பார்த்த சபாபதி சிவாச்சாரியார்க்கு அப்போதுதான் வள்ளல் பெருமானின் உண்மை புரிந்தது. தன் அற்ப விசுவாசத்தால் செய்த அடாத செயல்களை நினைத்து வருந்தி படுக்கையாகி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.