Wednesday, November 1, 2017

மழைபொழி மழையே



மழைபொழி மழையே
++++++++++++++++


அன்புள்ளோர் கண்ணிரண்டில்
பொங்கிடும் மழையே…

புன்பட்டோர் கண்ணிரண்டில்
வழிந்திடும் மழையே…

இன்புற்றோர் கண்ணிரண்டில்
எழுந்திடும் மழையே…

கருமேகங் களித்திட
பொழிந்திடும் மழையே…

வறுமையுள் குடிசையில்
ஒழிகிடும் மழையே…

அரசாளும் அமைச்சரை
மிரட்டிடும் மழையே…

தன்னிடம் கொண்டாரை
வெளியேற்றும் மழையே…

அரசியல் பிழைப்போரை
அழவைக்கும் மழையே…

தெருவோர வறியோரை
துரத்திடும் மழையே…

விபத்தினை உருவாக்கும்
கல்மன மழையே…

பயிரெல்லாம் தழைத்திட
அமிழ்தாகும் மழையே…

மண்ணெல்லாம் குளிர்ந்திட
அருள்தரும் மழையே…

இறைவனின் கருணையால்
இறங்கிவரும் மழையே…

உயிரெல்லாம் மகிழ்ந்திட
மழைபொழி மழையே…
---TMR---

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.