Thursday, November 23, 2017

பயந்தேன்

பயந்தேன்


பாடை செய்வாரைக் கண்டபோதெல்லாம் பயந்தேன்
          பறையோசை செவியுற கேட்டபோதெல்லாம் பயந்தேன்
ஆடை யுடுத்தி அலங்கரிக்கும் போதெல்லாம் பயந்தேன்
          அயர்ந்து இரவில் தூங்கும்போதெல்லாம் பயந்தேன்
தாடை வலிக்க உண்ணும்போதெல்லாம் பயந்தேன்
          தொல்லை உயிர்கள் பிறக்கும்போதெல்லாம் பயந்தேன்
மேடை மீதேறிபிறர் பேசும்போதெல்லாம் பயந்தேன்
          மெய்ச்சிலிர்க்க இன்பம் கொண்டபோதெல்லாம் பயந்தேனே.


கல்சிலை கடவுளை கண்டபோதெல்ல்லாம் பயந்தேன்
          கருவறை அர்ச்சனை கேட்டபோதெல்லாம் பயந்தேன்
நல்லன செய்வதாய் நடித்தாரைக்கண்டு பயந்தேன்
          நாட்டிலே எளியோர்கள் நலிவதைக்கண்டு பயந்தேன்
வல்வினை ஆட்டமே வாழ்க்கைஎன்றிட பயந்தேன்
          வட்டிமேல் வட்டி வாங்குவாரைக்கண்டு பயந்தேன்
எல்லா மவன்செய லெனசொல்வாரைக்கண்டு பயந்தேன்
இல்லாதவர் கேட்டுமவர்க்கு இல்லைஎன்றிட பயந்தேனே.

உலகிலே ஜோதிடம் உரைப்பாரைக்கண்டு பயந்தேன்
          உழன்று மருளும்ஜல்லிக் கட்டுக்காளைகாண பயந்தேன்
நலமில்லா பண்டிகைதின நாள்வர பயந்தேன்
          நாய்கள்சூழும் இறைச்சிக் கடையை விரும்பும்
மலமொத்த மனிதர் மாண்பினைக்கண்டு பயந்தேன்
          மண்ணிலே சேவல் சண்டைகாக வழக்காடும்
குலமரபு பேசுவாரின் குணம்கண்டு பயந்தேன்

          குற்றமெலாம் கூட்டிடும் திருவிழாக்காண பயந்தேனே.  

            

                                                                --திருச்சபை.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.