Wednesday, February 28, 2024

எள் அளவு பொய்!

 அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

எள் அளவு பொய்

தற்சமயம் சன்மார்க்க உலகில் பேசப்பட்டுவரும் பழமொழி - “எள்ளு போட்டால் எள்ளு விழாது” என்பதாகும். 

வடலூர் பெருவெளியில் அன்பர்கள் குளம் வெட்டும் பொழுது, “எள்ளு போட்டால் எள்ளு விழாது” அந்த அளவிற்கு இங்கு எதிர்காலத்தில் கூட்டம் வரும், எனவே நீங்கள் இங்கு குளம் வெட்டக்கூடாது - எனச்சொல்லி வள்ளலார் தடுத்ததாக ஒரு செவி வழிச் செய்தியினை ஊரனடிகள் தமது நூலில் எழுதியுள்ளார். அது எந்த அளவிற்கு உண்மை???

தருமச்சாலை அழைப்பு !

தருமச்சாலைத் தொடக்க விழா அழைப்பு ! 25--4--1867 ,ஆம் ஆண்டு !

ஆன்மநேய சித்தமுடைய தயவுடைய அனைவருக்கும் வந்தனம் .

சிதம்பர தலத்திற்குச் சுமார் இரு காத வழிநடை எல்லையில் கடலூரைச் சார்ந்த வடலூர் என்றும், பார்வதிபுரம் என்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுறத்தில்,சென்னை நகரில் இருந்து கும்பகோணத்திற்கு போகின்ற பெரியபாட்டைசுமார் நூறு-மயிலில் மஞ்சகுப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை சுமார் ஐம்பதாவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம்.குருவாரம் உதய காலம்,ருஷப  லக்கினத்தில்

சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டங்களுக்கு அஸ்திவாரங்களும் ,கிணறு,கேணி,முதலிய நீர் நிலை எடுப்புகளும் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன் மேய்ந்த மண் கட்டடச் சாலையில்,ஒருசார் ஆகார தரும விருத்தியும் தொடக்கம் செய்யும்படி நிச்சயித்து இருக்கின்றது.

ஆதலில் அந்த தினத்தில் தாங்கள் தங்கள் மனைவியர், புத்திரர்,துணைவர்,தந்தையர்,தாயார்,உறவினர் ,சினேகிதர், முதலியவர் களோடும்,வந்திருந்து நடத்து விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மேற்காணும் தருமச்சாலை அழைப்பிதழில் வள்ளலார் தருமச்சாலை அமைக்கும் பொழுதே கிணறு, கேணி (குளம்) போன்ற நீர் நிலைகளையும் அமைக்க வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதை நாம் அழைப்பிதழில் காண்கின்றோம். 

எனவே ஊரனடிகள் எழுதிய வள்ளலாரின் செவி வழிச் செய்தி பொய் என்று சன்மார்க்க அன்பர்கள் அறிய வேண்டும்.

வள்ளலார் சொல்லும் உண்மையை விட, பல பேர் சொல்லும் பொய்யே ஏற்கப்படுகின்றது.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com 



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.