அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
காம சித்தி - 2
ஒரு காலத்தில் மாயபுரி எனும் கிராமத்தில் புரி அட்டக பூஷண கோவில் நிஷ்டாபரராக இருந்த சதானந்த பிரம்மம் எனும் பிரம்ம நிஷ்டர் ஒருவர்
இல்லறத்தின் உயர்வை அறிந்தவராகவும் சிறுவயதிலே துறவற ஆசிரமத்தை ஏற்படுத்தி சற்குரு அருளால் மகா வாக்கிய உபதேசம் பெற்று பிரம்ம நிஷ்டபராய் தவம் செய்து
உடனே சதானந்த பிரம்ம நிஷ்டர் திருவள்ளுவர் வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் வள்ளுவர் தான் எழுதிய குறள் பற்றி அவரது மனைவி வாசுகி தேவியாருடன் பேசிக்கொண்டுந்தார். பிரம்மநிஷ்டரோ வள்ளுவர் வீட்டில் நடக்கும் பேச்சுக்கள்
ஆத்மா ஞானசம்மந்த மானதாக இருக்கும் என்று மதித்து அந்த வீட்டு வாசப்படியில் நின்று நடக்கின்ற விசயத்தை உற்றுக் கவனித்தார். அந்த நேரத்தில் வாசுகி தேவிக்கு வள்ளுவர்
"பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்"
- திருக்குறள்
என்ற திருக்குறட்பாசுரம் சொல்லி அதற்கு வியகியானமாகக் குளிர்ந்த மொழி பழகும் பத்மினி சாதி பெண்களின் ஈறுகளில் இன்றும் சுரக்கும் நீர், பாலும் தேனும் கலந்தாற்போல சுவையுள்ளதாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டுருந்தார்.
இதைக்கேட்ட பிரம்மநிஷ்டர் ஆச்சரியமுற்றார். பெரியவரான திருவள்ளுவர் வார்த்தை பொய்யாகாது
உண்மையாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே போகும் போது
காட்டில் விறகு வெட்டி அசந்து மெய்மறந்து தூங்கும் ஒரு வேடுவ பெண்ணை பார்த்து திருவள்ளுவர் சொன்னதை சோதித்து பார்க்க அவள் வாயில் இருபாலொழுகும் எச்சிலை சுவைத்தார். அது புகையிலை நாற்றமாக இருக்கவே சீ....!சீ.....! என்று துப்பினார்.
வெற்றிலைப்பாக்கு புகையிலை சேர்த்து மென்று ஒழுகும் ஆபாசத்துக்கா தேனும் பாலும் கலந்த ருசி என்று வள்ளுவர் வர்ணித்தாரென்று மனம் வருந்தி திரும்பி நேராக வள்ளுவர் வீட்டுக்கு வந்து "வள்ளுவரே நீங்கள் இயற்றிய குறள் அனுபவத்துக்கு ஒவ்வாததும் சுத்த பொய் நிரம்பியதென்றும் கூறினார்"
இதை கேட்ட வள்ளுவர் திடிக்கிட்டு வெளியே ஓடிவந்து பிரம்ம நிஷ்டரை விதிப்படி வணங்கி வீட்டுக்குள் அழைத்து சென்று உபசரிப்பு முடிந்த பின் "சாமி குற்றம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள்.... அடியேன் இயற்றிய அநுபவ உண்மையைத் மெய்பிக்கும் வரை ஐயன் இங்கே இருக்க வேண்டும்" என்று வேண்டினார்.
பிறகு அந்த பிரம்ம நிஷ்டரை தமது சீடர் ஏலேலசிங்க செட்டியார் அபிமானித்திருக்கும் காமரூபிணி எனும் தேவதாசி வீட்டுக்கு சென்று, திருக்குறள் காமத்துப்பாலின் பெருமையை சுவாமிகளுக்கு மெய்ப்பித்து அடியேன் இயற்றிய நூலுக்கு அங்கீகாரம் தருவது உங்கள் கடமை என்று கேட்டுக்கொண்டார்.
அவ்வாறே அந்த தாசியானவள் திருவள்ளுவர் கோரிக்கையை ஏற்றுகொண்டு பிரம்ம நிஷ்டாரை சந்தித்து வணங்கி அவர் பிரம்ம தேஜஸ் ஜொலிக்கும் திருமுகத்தை உற்று நோக்கினாள். அப்போது அவள் மனதில் ஒரு வகை ஆச்சரியம்.
"இந்த பெரியவர் யாராக இருக்கலாம்...?
இவர் பால்ய சந்நியாசி, பிரம்ம நிஷ்டர், ஆத்ம தேஜஸ் இவர் முகத்தில் ஜோலிகிறது ஆயிரம் கோடி சூரியனைபோல் விளங்கும் இவரது திருமுக அழகுக்கு ஈடு சொல்ல யார் உள்ளார்கள்...?" என்று மனதுக்குள்ளே நினைத்து அவரின் அமுதவாக்கினை
கவனித்தாள்.
திருவள்ளுவர் விருப்பத்துக்கிணங்க, அந்த பெரியவரை உயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்த்தி சுகந்த வாசனைக்கொண்டு அவளே பன்னீரால் குளிக்க வைத்து உடல் மாசு கழுவும் விபூதியை உடலெங்கும் பூசினாள், களப கஸ்தூரி கலவைச் சந்தனத்தில் நெற்றியில் திலகமிட்டாள், அறுசுவை உணவுளை ஊட்டினாள்.
அந்த பெரியவரை மெல்ல மெல்ல அந்தபுறத்தில் இருக்கும் தனது பள்ளியறைக்கு அழைத்து சென்று அங்குள்ள அம்சதுளிகா எனும் மஞ்சனத்தின் மீது அமரசெய்து இனிய கீதங்களை பாடி அந்த பிரம்ம நிஷ்டரின் மனதை குதுகுளிக்க செய்து சரச சல்லாப வார்த்தைகளால் அவர் மனதை வசப்படுத்தினாள். மேலும், பல வகை லீலாவினோதங்கள் செய்தாள்.
ஆத்ம நிஷ்டாநு பரராகிய பிரம்ம நிஷ்டர் மாய விலாசத்தில் மயங்கினார். காமரூபிணி என்னும் அந்த தேவதாசியின் சிங்கார லீலா வினோதங்களைக்கண்டு அவளிடம் வயப்பட்டு, பல விதமாய் அவளைப் புகழ்ந்தார்.
"வெய்ய மதன் விடுஞ்சரங்கள் வேதனையை
விளைந்தன வால
பிரிந்தினிச் சிறிதுந் தரிக்கலேன் பிரிவை
பேசினு நெய்விடுந் தீப்போ
லெரிந்துளங் கருகிமயங்கல் கண்டில்லையோ
வெங்கணும் கண்ணுடை யெந்தாய்
புரிந்த சிற்பொது விற் றிருநடம் புரியும்
புண்ணியா வென்னுயிர்த் துணைவா
கரைந்திடா துறுதற்கிது தகுதருணங்
கலந்தருள் கலந்தரு லெனையே"
- திருவருட்பா
இவ்வாறு பிரம்ம நிஷ்டர் ஆத்ம சுகம் போல் சிற்றின்ப சுகத்தை வினோதமாய் அனுபவிக்கவும், தாசியானவள் பிரம்ம நிஷ்டரின் போக சுகத்தை மிக உல்லாசமாய் அனுபவித்து,
"காத்திருந்தாலும் கலிதீருமே கண்ணாட்டியுன் முகம்
பாத்திருந்தாலும் பசியாருமோ இடபாகமதில்
வீற்றிருந்தாலும் வினைதீருமோ
மெல்லிநல்லருளைச்
சேர்த்தணைத்தாலும் சிவபோக ஞானம் சித்திக்குமோ"
தாசி காமரூபிணியும் பிரம்ம நிஷ்டரும் மன்மத சுகாநந்த லீலா வினோதங்களை மாறி மாறி அனுபவித்து வரும் காலங்களில் பிரம்ம நிஷ்டர் தாசியின் அதரங்களை சுவைக்க அது தேவாமித்தம் போல் இருப்பதைக்கண்டு அதிசயித்து
வள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறள் காமத்துப்பாலில் கூறியது அனுபவ உண்மையே என்பதை கண்டு
உடனே மஞ்சனத்து மேலிருந்து கீழே இறங்கி நேராக திருவள்ளுவர் வசிக்கும் குடிசைக்கு ஓடிவந்தார்.
"வள்ளுவா! நீ செய்த சாஸ்திரம் மெய்! மெய்!! மெய்யே!!!
ஆனால் மனமானது விஷயாந்தகாரத்தில் மூழ்கும் போது தான்" என்றார்.
இது கர்ண பரம்பரையாய் வெளி வந்தது. அதனால் மெய்யாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால், இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மனோலையமே உண்மையான மன்மத விகாரத்திற்கு காரணமாகிறது.
மனமென்பது அந்த கரணத்தில் வாயுவின் (காற்றின்) அம்சம் கூடிய விருத்தி அதனால், வாயுவைபோல அலையும் தன்மையது. சங்கற்பவிகற்கள் பல விருத்தியுடையது இதற்கு அதிதேவதை சந்திரன் என்றும்,
ஸ்தானம் கண்டமென்று சொல்லப்பட்டுள்ளது.
"மனமேவ மனுஷ்யானாம் காரணம்
பந்த மோக்ஷதஹா:"
என்று ஸ்மிருத்தி வாக்கியம் கூறுவதால்
மனிதர்களுக்கு கர்மபந்ததை உண்டாக்குவதும் மனம் தான், மோட்சம் எனும் ராஜியத்தை அளிப்பதும் மனம் தான்.
"பொன்போல விலங்கு மனஞ் சஞ்சலத்தால் குரங்காம்
புத்தி விசாரித்தரியும்
பொலிவதனா லரவாந்
தன்போல விலையெனலா லகங்கார மதமாம்
தனை நிகராஞ் சித்தமொரு
தன்மையினா னாயாம்
மின்போ லுஞ் சலனமன மசையம னிறுத்தி
விசாரிக்கும் புத்தியினை
மெய்ப்பொருட் பால் விடுத்து
வன்போடு வருமாகங்காரத் தினையுங் கடித்தால்
வைத்த விடத்திருந்து
சித்த மகத்துவம் தருமே
- உபநிடதம்
இத்தகைய சலிக்கும் குணமுள்ள மனதை குரங்கென்றும், பாம்பென்றும், நாயென்றும் அதன் செயலை கண்டு பிரம்ம நிஷ்டர் கூறுகின்றார்.
"மணமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சின மாள் வித்து ஓரிடத்தே சேர்த்துப் புனமேய
தண்டுழா யன்டையத்தான தான்காணு மஃதன்றே
வண்டுழாம் சீரார்க்கு மாண்பு"
- நம்மாழ்வார்.
"மனனெனு மோர் குரங்கு" என்று வடலூர் இராமலிங்க சுவாமிகள் கூறுகின்றார்.
இந்த மனமானது பேயினால் பிடிக்கப்பட்டால்
அதன் கோலா கலத்தைச் சொல்லத்தான் கூடுமோ...?
எழுததான் முடியுமோ....?
பூர்வ வாசனையாகின்ற கள்ளும் குடித்து, அகங்காரமாகிற தேளும் கொட்டி, ஆசா பாசமென்ற பேயியும் பிடித்தால் அத்தகைய மனதின் சுபாவத்தை ஒவ்வொருவரும் ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் போதும் அவர்களே புரிந்துகொள்வார்கள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிவிடலாம், பூமியில் உள்ள மணல்களை எண்ணிவிடலாம். நீரை ஸ்தம்பனம் செய்யலாம், காற்றை ஸ்தம்பனம் செய்யலாம். இதெல்லாம் ஒரு பெரிய காரியமே இல்லை.
நகர் நாய் போல அங்குமிங்கும் ஓடி அலையும் மனதை அடக்குதல் என்பது தான் கஷ்டதிலும் கஷ்டம்.
மனதை ஜெயித்தவன் எவனோ அவனே மாயையை ஜெயித்தவனாகிறான். அவனுக்கு தான் மோட்ச சாம் ராஜ்ஜியத்தின் கதவுகள் திறக்கப்பட்டுருக்கின்றன.
ஆகையால் மன்மதன் - ரதி என்று சொல்வதெல்லாம் மனதின் சேஷ்டையாகும். மாயையை காணுவது கூடாதது போல் மன்மதனும் ஒருவர் கண்ணுக்கு தோன்றாதவனாய் உருவிலியென பெயர் பெற்றிருக்கிறான்.
மனிதர்கள் மனதின் சேஷ்டைகளில் லயப்பட்டு தான்றோன்றிகளாய் தன்னிஷ்டம் போலவே அலைந்து கெட்டுப்போவார்கள் என்று
பண்டையக்கால ரிஷிகள்,
பிரம்மசரியம் - கிருகஸ்தம் - வனபிரஸ்தம் - சன்னியாசம் என நான்கு ஆஸ்ரமங்களையும் அவற்றை அனுஷ்டிக்க விதி நிஷேதகளையும் அனுகிரகித்துள்ளார்கள்.
பிரம்மசரிய ஆஸ்ரமத்தைக் கிரமமாக அனுஷ்த்தோர் காம இச்சை உண்டானால், கிருகஸ்த தர்மத்தை அனுஷ்டித்து திருமணம் செய்த தன் மனைவியோடு புத்திரோத்பத்தியை உத்தேசித்துக் கலவி செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய,
இரவும் பகலும் சதா சர்வ காலமும் விந்துவை காம வெறிகொண்டு பெண் சம்பவர்க்கத்திலும் முஸ்டி மைதுனங்களிலும் செலவு செய்யும் படி எந்த சாஸ்திரமும் கூறவில்லை....
விந்து ஜெயம் அப்படியென்றால் என்னவென்று பார்க்கலாம்.
பல துளி இரத்தம் சுண்டியது ஒரு துளி வித்துவாகிறது. அத்தகைய விந்துவை ஜெயிக்கிறவன் யோகம் அறிந்த ஒருவனே.... எவன் விந்துவை ஜெயிக்கின்றனோ அவன் மிருதயு (எமன்) வை ஜெயிக்கின்றான்.
விந்து விட்டால் (செத்து) நொந்து விட்டான் என்பார்கள். இந்த முறையை பற்றி ஹடயோகப் பிரதீபிகையில் யோக சாதன அத்தியாயத்தில் "வஜ்ரொலி" என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டுருகின்றது. இதை இல்லரவாசிகளாக கணவன் மனைவியோடு வாழுகின்றவர்கள் பின்தொடர்ந்தால் அவர்கள் உடல் வஜ்ரம் போல் இருப்பதோடு நீண்ட ஆயுளையும் பெற்று வாழ்வார்கள்.
புருஷ வஜ்ரோலி:-
வஜ்ரோலியின் முதல் அங்கமாகிய பிரக்கியை கூறுவதை கவனியுங்கள்.
ஈபம் (Lead) இரப்பர் குழாய் முதலியவற்றால் செய்யப்பட்ட ஒரு குழாய் செய்து அதை லிங்கத்துவாரதில் ஆண் குறி வாயு சஞ்சரிக்கும் பொருட்டு அடிக்கடி நெருப்பூது குழல்போல் மெல்ல பூதகாசம் செய்தல் அதாவது ஊதுதல்.
ஒருவன் சிறுநீர் கழிக்கும் போது அதை வாய்வு' னால் பலமாக மேலே இழுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், யோகப்பியாசம் செய்து வைத்த குருவின் முன்னிலையில் அவர் அபிப்ராயத்தை அனுசரித்து
மேலே இழுதல் வேண்டும். இவ்வாறு ஆறு மாதம் தினம் செய்தால் மகத்தான சித்தியைத் தரும் விந்து ஜெயம் உண்டாகும். விந்து ஜெயம் கொண்டவன் நூறு பெண்களோடு உறவுக்கொண்டாலும் விந்து வெளியேறாது. இதை மூலிகை முறையிலும் செய்யலாம். எதுவாக இருந்தாலும் குருவின் ஆலோசனைப்படி செய்வது சிறந்தது.
வஜ்ரோலி அப்பியாசமுள்ள பெண்ணின் சுரோணிதம் அற்பநிலையில் இருந்தாலும், அது வெளியாகி நாசமாவதில்லை அதனால் அந்த பெண்ணின் உடல் வஜ்ரம் போலிருக்கும். அவளது சுரோணிதமும் விந்து தன்மையடைக்கிறது. அதாவது மூலாதாரத்திலிருந்து எழும்பிய நாதம் இருதயத்தில் விந்து தன்மையடைகிறது. விந்துவோடு ஐக்கியமாகிறது.
ஆணின் பீஜத்திலிருந்து வெளியாவது சுக்கிலம் என்றும், பெண்ணின் யோனியிலிருந்து வெளியாவது சுரோணிதமென்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டும் ஒன்று சேரும்போது ஜீவ சிருஷ்டி உண்டாகிறது. அதாவது ஒரு உயிர் படைக்கப்படுகிறது. ஆணின் சுக்கிலம் சந்திர மயம், பெண்ணின் சுரோணிதம் சூரிய மயம் இந்த இரண்டின் சேர்க்கையால் பரம பதம் உண்டாக்கிறது. விந்துவானது சொர்க்கம் - மோட்ஷம் - தருமா தர்மங்கள் ஆகியவற்றை தரும். இதன் மத்தியில் இந்திராதி சகல தேவர்களும் சூட்சமாக வசிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
விந்துவும் சுரோணிதமும் வஜ்ரோலி அப்பியாசத்தால் ஒன்று பட்டு உடலில் தங்கி சகல சித்திகளையும் தருகின்றன
எந்த பெண் தனது யோனியை சுருக்கி சுரோணிதத்தை மேல் இழுத்து அதை உடலிலே தங்கவைக்கின்றளோ
அவள் திரிகா லக்யானியாவாள்
அவள் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லமை பெற்றுருப்பாள்.
இந்த வஜ்ரோலி அப்பியாசம் செய்யும் யோகிகள் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ரூபலாவண்யம், சரீர பலம், மனோரத பூர்த்தி முதலாகிய சகல சித்திகளையும் அடைந்தவர்கள் என்பது உண்மை.
இகத்துக்குரிய சகல போக போக்கியாதிகளைக் கொடுத்து மறுமையில் மோட்ச சாம்ராஜியத்தையும் கொடுக்கும் இந்த அபியாசத்திற்கு சிற்றின்பமே (இல்லற சுகம்) பேரின்பத்துக்கு வழியென்று சாஸ்திரங்கள் கூறுகின்ற
"மாதரிடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலினால் விடார் யோகங் கலந்தவர்
மாதர் உயிராசை கைக் கொண்டேவாடுவர்
காதலர் போற்றங்ஙன் காதலாஞ் சாற்றிலே"
- திருமந்திரம்.
ஆண்/பெண் இருபாலரும் ரதி மன்மதன் ஒரு தத்துவ விசாரணை செய்யும் போது
இது மனதில் ஏற்படும் சேஷ்டை என்று தான் வெளிப்படுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்த அப்பியாசித்தால் மன்மதனின் ஆடம்பரங்கள் எல்லாம் ஒருவழியாக அடங்கி சமன் படும்.
"சிற்றின்ப வேறியிற் படிந்துதோய்ந்து
கிடைக்கும்எவ்வினமும்பேரின்பம் அடையகூடும்"
- திருத்தக்க தேவர்.
வசீகர மார்க்கம்:-
"அங்கணை யருத்து விட்ட
அடலினை யாற்றாதீசன்
தனிய யோக நீங்கி தன்னுடல்
பாதியாக வெங்கடும் காமத்தீயால்
உடல் வெடித்திடப் போர்செய்த
திங்கள் வெண்குடை
யிற்றான்சேவடி சென்னி வைப்பான்"
- சிவபெருமான் உமதேவையாருக்கு உபதேசித்தது சிவஸ்வரோதயத்திலுள்ள சுருக்கம்....
அக்னி சாட்சியாக திருமணம் செய்துகொண்ட பெண்கள் ஆண்களோடு ஒற்றுமையாக இல்லாத காலத்தில் அந்த மனைவியை தன்வயப்படுத்துவதற்கு பல வகையான தந்திர மந்திர சிகிச்சைகள், கிரக தோஷ பரிகாரங்கள், மூலிகை மருந்து பிரயோகங்கள் செய்யலாம்.
சில சாஸ்திர முறையாக அனுபவத்தில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக திருமணமானவர்கள் அவரின் மனைவிக்கு மட்டும் உபதேசிக்க வேண்டும். பிற பெண்களிடத்தில் இதை செய்யக்கூடாது. மீறினால், பாவ தோஷங்களுக்கு ஆளாகி பல்வேறு நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
- திருக்குறள்.
திருவள்ளுவரின் இந்த வாக்கியப்படி
மனிதர்கள் எல்லோரிடத்திலும் அன்புடையவராய் இனிய வாசனங்களால் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது முறை.
உடல் பொருள் ஆவி என மூன்றையும் புருஷனுக்கே தத்தம் செய்து ஓருயிர் ஈருடலாகிய மனைவியிடத்தில் ஏத்தகைய அன்பும் விசுவாசமும் வைத்திருக்கவேண்டும் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால், கால சக்ர மாறுதலாலும், கிரக தோஷங்களினாலும் ஒரு உத்தம புருஷனுக்கு ஒரு உத்தம மனைவி வாய்க்காமல் இருப்பது பிராத்த கருமத்தின் பயனே ஆகும். அதனாலே அத்தகைய மனைவியோடு கடும் வார்த்தைகள் பேசி அவள் மனதை புண்படுத்துவது அறிவாளிகளுக்கு அழகில்லை.
கவனியுங்கள்,
சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறுகின்றார்.
"ஹே பெண்ணே கவனமாக கேள்"
ஒரு புருஷன் தன் துணைவியாருக்கு சந்திர கலையில் சுவாசம் ஓடும் போது தன்னுடைய சூரிய கலை சுவாசத்தினால் அந்த சந்திரக்கலை சுவாசத்தை ஆகர்ஷணம் செய்து தன்னுடைய ஜீவ சுவாசத்தோடு சேர்த்து வந்தால் அந்த புருஷனும் மனைவியும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனமாறுதலின்றி ஒற்றுமையாய் பாலும் நீரும் போல் கலந்து குடும்ப வாழ்க்கை சுகங்களை அனுபவித்து வாழ்வார்கள்.
அடுத்ததாக,
ஒரு புருஷன் தன் ஜீவ சுவாசத்தினால் மனைவியுடைய ஜீவ சுவாசத்தை உள்வாங்கி மனைவியின் ஜீவ சுவாசத்தில் கொடுத்து ஒன்று சேர்த்தால் அந்த பெண் ஜென்ம பரியந்த பிரியமுள்ளவாளாய் இருப்பாள்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இரவு நேர கடைசி சாமத்தில் மனைவி அயர்ந்து தூங்கும் போது அவளின் சுழிமுனை நாடியை அவள் கணவன் உட்கொண்டல், அந்த மனைவியானவள் அவள் கணவன் உயிர் உள்ளவரை அவனைவிட்டு பிரியாமலிருப்பாள்.
"இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலாலன்றி மகிழாதே"
- ஔவையார்.
"அஞ்சி லோதிய ராடமைத்தோளியர்
வஞ்சமற்று மருவுதல் செய்திட
வெஞ்சி மேன்றி யிளையவர் யாவரும்
பஞ்சபணன் பதத்தை வணங்குவோம்"
ஆண்/பெண் இருவரும் மதன சாஸ்திரத்தின் படி ஆலிங்கனம் செய்யும் போதாவது, அல்லது ஆனந்தமாய் இருக்கும் போதாவது எந்த புருஷன் தன்னுடைய சூரிய சுவாசத்தினால்
மனைவியின் சந்திர சுவாசத்தை இழுத்து உட்கொள்கிறானோ அவன் மன்மதனைப்போல் தன் மனைவிக்கு மோகக்காரணாகிறான்.
சிவத்தினால் சக்தியையும், சக்தியினால் சிவத்தையும் எந்த புருஷன் ஒன்றுப்பட சேர்க்கின்றானோ அவன் அந்த லக்ஷணத்திலே நூறு பெண்களை மோகிக்க செய்வான்.
(சிவம் - சூரியன், சக்தி - சந்திரன்)
பெண்ணுடைய சூரிய சுவாசத்தில் ஆனுடைய சந்திர சுவாசத்தை கொடுக்கவேண்டுமெனில் 3,5,7,9 ஆகிய எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்.
பெண்ணுடைய சந்திர சுவாசத்தில் புருஷனுடைய சூரிய சுவாசத்தை கொடுக்க வேண்டுமெனில் 2,4,6 ஆகிய எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் வசீகரித்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
சூரியனையோ சந்திரனையோ ஆண்/பெண் ஆகர்ஷணம் செய்து ஒரு தாமரை பூவை அவர்கள் உதடுகளால் ஒத்தடம் கொடுத்து பின் அந்த பூவை முகத்தில் ஒத்திக்கொண்டு உடனே சுவாசத்தை அந்த பூவில் செலுத்த வேண்டும். இவ்வாறு மனைவி நித்திரை செய்யும் வரை புருஷன் செய்ய வேண்டும். பிறகு அவள் எழுந்தவுடன்
அவன் நேத்திரம், கழுத்து ஆகியவற்றை ஸ்தம்பனம் செய்ய வேண்டும். இவ்வாறு கணவன் மனைவி சுவாசத்தோடு கலந்தால் மனைவி கணவனோடு இன்புற்று வாழ்வாள்.
பெண்ணானவள் புணர்ச்சியில் நெய்யும் பாலும் கலந்த சம்பா அரிசியை சமைத்து நல்லெண்ணெய் உளுந்து கலந்த உணவை உண்டுவிட்டு முதலில் இடது காலை வைத்து அந்த புரத்தில் நுழைந்து புருஷனின் இடது பக்கமாக சென்று அமரவேண்டும். ஆண் என்பவன் நெய்யும் பாலும் கலந்த சம்பா அரிசியை சமைத்த அன்னத்தை உண்டுவிட்டு அந்தபுரம் செல்லும் முன்பு வலது காலை வைத்து அமரவேண்டும்.
ஆண் பெண் புணர்ச்சியில் இருக்கும் போது கீழ் கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
"அஹிரஸி ஆயுரஸி சர்வதஃ பிரதிஷ்டாஸி
தா தா த்வாம் ததாது, விதாதா
த்வாம் ததாது ப்ரஹ்மவர்ச்
சஸா பவேதி, ப்ரஹ்மா ப்ரு
ஹஸ்பதிர் விஷ்ணுஸ் சேமஸ்
ஹூர்யஸ்த தாச்விநொவ் பகோத
மித்ராவருனெள வீரம்ததாது
மே சுதம்"
- அஷ்டாங்க ஹ்ருதயம்.
இந்த பாடலின் விளக்கம், ஆண் பெண் இருவரும் புணர்ச்சி காலத்தில் பரிசுத்த மனதோடு சரீராரோக்கியம், ஆயுள் விருத்தி, சந்தான விருத்தி முதலிய உண்டாக வேண்டுமென்றும், பிரம்ம விஷ்ணு சூரியன் சோமன் வருணன் போன்றவர்களின் அனுகிரகமும்,
அவர்களை போன்ற பலமும் உண்டாக வேண்டுவது.
கணவன் மனைவி புணர்ச்சி செய்த பின்னர் குளித்து முடித்து சுகான வாசனை திராவியங்களை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். குளிர்ந்த காற்றில் உலாவ வேண்டும், இனிப்பான சிற்றுண்டிகளை சுவைத்து குளிர்ந்த நீர் பசும்பால், நீராகாரம் போன்றவற்றை சாப்பிட்டு சுத்தமான காற்று வீசும் இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.
இவ்வாறு இல்லற வாழ்க்கை நடத்துவோருக்கு போகத்தில் நஷ்டமடைந்த விந்து மீண்டும் விருத்தியாகும் என்கிறது.
To be continue.... Part - 3
Thanks to Face Book Sittharkalin Kural
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.