Sunday, March 31, 2024

காம சித்தி - 3

                                     அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

காம சித்தி - 3


"செய்ய மலர் மெத்தையின் மேல்
வையம் புகழ் மதனும்
தேவி ரதியாளு மேவு சயன மதில்
சேர்ந்து முகத்தோடு முகமார்ந்து
கண்ணோடு கண்ணை
சிந்தை மகிழ்ந்து வைத்து
கந்த மலர் புணைந்து
தேசமெல்லாம் புகழும்
வாசம்பல அணிந்து
தேக்குபரி மளமாம் பாக்கு
மதன்கை யிலிட்டு
தெருளாக வெற்றிலையைச்
சுருளாக வே மடித்து
சேயிழையாள் மணக்கும்
வாயினாலே கடித்துக்
கொடுத்தாள் சில சுருளைத்
தொடுத்தாள் மதனலீலை
சித்தங் களி கூந்தார்
மெத்தப்புளக மிட்டார்
செஞ்சிலைக்கு வஞ்சி கொஞ்சி
ஹிதமாய் மையல் மிஞ்சி
தேசிகவேள் மடி மேலே
சுகமாவே படுத்தாள்
செங்கையினாலே எடுத்து
இங்கிதமாய் அனைத்து செவ்வை
பிடித்து கொவ்வை இதழ்கடித்து
தீனமுதங் கொடுத்து மீன
மிலங்குந் துவிஜன்
சிற்றிடையாள் சேலை தன்னை
முற்றுகையால் அவிழ்த்தார்
சேமரதி காமனிடை சோமன்
றனை உரிந்தாள்
திடமா யிருவர்களும் துடை
மேல் துடைபோட
சேல் விழியாள் காமியத்தைக்
கால் வழியாய் ஓடவிட்டாள்
திங்கட்குடையேனும் ஆலிங்கனங்கள்
ஐந்து விதம்
செய்தோர் சுவைத்து எய்தோர்
நெருடி
தின்கைம் மூலத்தைஉண்டு உள்களவு
மாங்கானியைத்
தித்தீப்பாய்ச் சுவைத்து அந்திப்
படவிழியின்
தேக்கித் திசைமுகச் சோமன்
நாக்கின்பமாக வைத்து
தேங்கிடாது சுகம் ஓங்கி
யிடாது நாகம
செல்வாதித் தலையில் புலவலாம யழுத்திச்
சீலம ருந்தியிலே ஏலமாகச் சிரித்தென்
கமு கொப்பாங் கழுத்தை
தன் கரத்தா லணைத்துச்
சேர்த்துக் குணங்குறிகள் பார்த்துத்
தனத்த வதில்
தீதில முதநிற்குமிடம் கோதில்
பதி நயந்து நிலைக்க
தரித்தே யிறக்குமிடம் பரிந்
தேய் சேருமிடம்
தீங்கின்விடை தானப்பாங்கலவ
வென் றுப்பிட்டிச்
செவ்வுள்ளந்தான் வருஷக்கவ்வி
விரல் சுவைத்து
தேன்கூட்டிலே குளவிதான்
கூர்ந்து போவதுபோல்
சொல்லகிதம் பத்தில் விரல்மெல்லந்
விரசுழற்கரித்
தெள்ளமுத மெய் முழுதும்
வெள்ளமதன் பாய்ந்து
கலவித்தாக வூடிக்கட்புனல்
குளக்கு நல்லார்
புலவிதீர் செவ்விநோக்கிப்
புணர் போகந்துய்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்
படு தரும் தானங்
கலைஞர் கைபெய்துங் காலங்
கழிப்பவ ரெண்ணிலாதார்."
- திருவிளையாடல் புராணம்.
பிரணய கலகத்துக்குப் பின்னே புணர்ச்சி இன்பந் துயத்தல் என்பது முன்னுள்ள காதலை அதிகம்
மிகுதிப்படுத்தி வைப்பத்தறுக்குரிய ஓர் உபயமேயாகும்.
"கண்ணுதலியோ கிருப்பக்காம
னின்றிட வேட்கக்கை
விண்ணுறு தேவராதி மெலிந்தமை
யோரார் மால்தான்
எண்ணிவேண் மதனயேவ
எரி விழித் திமவான் பெற்ற
பெண்ணினை புணர்ந்துயிர்க்குப்
பேரின்ப மளித்த தோரார்"
- சிவஞான சித்தியார்.
ஆண்கள் பெண்களின் மோக வலையில் சிக்குவதேன்.....?
"மலரினில் நீலவானின்
மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்
அலகிலா அறிவுகண்ணால்
அனைத்தையும் நுகருமாதே."
- சி.சு.பாரதியார்.
ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதாநந்த சுயம் பிரம்மகாசபராபரவாஸ்து வானது
நாமரூபமற்றது. அதனிடத்தில் அக்கினியிற்சூடுபோல அபின்னா சக்தியென்ற ஒரு சக்தி உண்டாகி, நாம ரூபமுள்ள உலகம் தோன்றுகிறது, அந்த உலக தோற்றத்தின் விருப்பம் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று தொழிலை நடத்துவதற்கு பிரம்மன், விஷ்ணு, ருந்திரன் (சிவன்) என்றும் அவர்களுக்கு
"பெண்பாலுகந்தினேற் பேதா யிருநிலத்தோர்
விண்பாலியோ ரெய்தீவீடுகாண் சழலோ"
- திருவாசகம்.
"சத்தி தன்வடிவே தென்னிற்
றடையிலா ஞானமாகும்"
- சிவஞான சித்தியார்.
"வார்கொண்ட வனமுலையாள்உமை பங்கன்கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்"
- திருத்தொண்டத்தொகை.
" அம்மையாப்பரே யுலகுக்கு
அம்மை யப்பறென்றறிக"
- திருக்களிற்றிறுப் பாடியார்.
" போகமா யிருந்துயிரக்குப்
போகத்தை புரிதலோரார்"
- சிவ ஞானசித்தியார்.
"அவனசைந்திடி லொருவணு வசைந்திடும்
அவனாசை யாவிடிலணு வசைந்திடாது
சிவன் சக்தி யோடுறிற் செகம் விரிந்திடும்
சிவன் தனித்திட்டில் விரி சேகமொடுங்குமால்"
- முதுமொழி.
இப்படி முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என மூன்று சக்தியை படைக்கப்பட்டுள்ளது. சக்தியும் சிவமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து நிற்கும் தன்மைக்கொண்டதல்ல, இவை பூவும் வாசமும் போலவே அநாதி. அதாவது உயர்வு தாழ்வு இல்லாமல் ஒத்த உலகத்தில் உள்ள உயிர்களை இயக்குகின்றன.
"அருளது சக்தியாகும் அரன்
றனக்கருளை யின்றித்
தெருள் சிவமில்லை அந்தசிவ
மின்றிச் சக்தியில்லை"
- சிவ ஞானசித்தியார்.
"சக்தியாய்ச் சிவமாகித் தனிப்பா
முக்தியான முதற்ப்பொருள்"
- திருவிளையாடற் புராணம்.
" சிவமெனும் பொருளுமாதி சக்தியொடு
சேரினெத் தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடினியங்குதற்கு
மரிதரிதெனா மறை யியம்பும்"
- சௌந்தரியலஹரி.
"கண்ணுதலி யோகிருப்ப காம
னின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவராதி மெலிந்தமை
யோரார் மால்தான்
எண்ணிவேன் மதனயேவ வெரிவிழித்
திமவான் பெற்ற
பெண்ணினை புணர்ந்துயிர்க்குப்
பேரின்ப மளித்த தோரார்"
- சிவ ஞானசித்தியார்.
"ஆதரித்த முதிர்கோல் தோய்த்த
வவயவமைக் குந்தன்மை
யாதெனத் திகைக்கு மல்லான்
மதனற்கு மெழுத வொண்ணா"
- பெரிய புராணம்.
"நல்ல சிவ யோகரையும்
போகியரக யாக்கவல்ல
நஞ்சக் கண்ணின்
வல்லமையை சொல்லு முலைவஞ்சியரின்
மிஞ்சுபடு வலையிற்சிக்கி' என்பதற்கிணங்க
போகியா யிரு துயிர்க்குப்
போகத்தை அளித்த வோரார்
யோகியாகி யோகமுக்தி யுதவுவது மோரார்"
- சிவ ஞானசித்தியார்.
இந்த பேரண்டம், ஆண் பெண் என அமைந்திருப்பதை போல உலக படைப்பிலடாங்கிய ஏழு வகை பிறவி, 84 லட்சம் ஜீவராசிகளும் ஆண் பெண் வடிவமாக படைக்கப்பட்டுள்ளன.
உடல் கூற்று சாஸ்திரத்தின் படி ஜீவராசிகளின் சரீரத்தில் இடது பக்கத்தில் தண்மை (சொந்த) நாடியும், வலது பக்கத்தில் வெம்மை (எதிர் பாலின) நாடியும் ஓடுகின்றன. யோக சாஸ்திரங்களில் தண்மையை சந்திரகலையென்றும், வம்மையை சூரியக்கலையென்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இருநாடியும் சமமாக செயல்படும் போது அந்த ஜீவராசிகளுக்கு துன்பம் என்பதே இல்லை.
"அச்சமு நாணுமடனு முந்துறத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வெண்ப"
- தொல் காப்பியம்.
"ஈறிலாதவ ளோருத்தியே யைந்தொழிலியற்ற
வேறு வேறு பேர் பெற்றன"
"மாறு மதியும் ஆதித்தனும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபயமும்
பாறுபடா இன்பம் பார்மிசை பொங்குமே"
- திருமந்திரம்.
அண்ட பிண்டங்கள் யாவும் ஆண் பெண் வடிவாகிருதலை நிரூபிக்கும் கடவுளாக ஒரு பாதி ஆணும் மறு பாதி பெண்ணுமாகிய அர்த்தநாரீஸ்வர மூர்த்தி அவதரித்து நிற்கின்றார். இதை தொடர்ந்தே நம் முன்னோர்கள் ஆதிக்கடவுளை "அம்மை அப்பன்" என்று கூறினார்கள்.
"புன்னகையால் கைகள்புரள்
வதனால் நாணத்தால்
மன்னு மச்சத்தால்முகந்தால் வாட்
கண்ணால் - இன்மொழியால்
போலிவெறுப்பொயிலால் பூவையர்கள் ஆடவரை
மாலியற்றிப் பிணிப்பார் மற்று"
"அரைக்கண் கடைக்கண் அரும்பர்வை பைய
உரைக்குமொழி நணமுற்று - நிறைகின்ற
புன்னகை ஒய்யாரம் பொருந்து நடைமாதற்குப்
பொன்னகை போலுள்ள பொருள்"
"கருவிழியை மேலேற்றிக் காட்டுவாள் ஓர் சார்
உருவுளைந்து வீழ்த்தடுவாள் ஓர்சார் - திருமடந்தை
ஒக்குமிவள் நாணால் ஒரு சாரார் தலைவளைப்பால்
மிக்க ஒயில் ஒரு சார் விளக்குவாள் - தக்கமுகச்
செந்தாமரையைத் ஒரு சார் கண்
அந்தாமரை நீளமா மென்று - சந்தேகம்
கொள்ளத்திருபுவாள் கோலம் இது வென்று
விள்ளப் புகுவதெல்லாம் வீண்"
"மதிமண்டல முகமும் வாரிச்சேர் கண்ணும்
மதிபொன்போல் மேனி வனப்பும் - சுதிவண்டை
வெல்லும் அளகமும் வேழ நிகர் மார்பகமும்
ஒல்லும் இனிய உரைவழக்கும் -நல்ல
செயற்கையுள்ள இந்தச்சேழிழைக்கு நீங்கா
இயற்க்கையாயுள்ள எழில்"
"முகத்திற் சிறுநகைப்பு மெய்கலக வாட்கண
சுகந்திற் சிறந்த தீஞ் சொற்கள் - உகக்குமிடை
அங்கைப்பிடி நடையிங் காமிலற்றில் யாது சிறு
மங்கைக்கீ யாது வனப்பு"
- ஸ்ரீ பர்த்ருஹரி சிங்கார சதகம்.
அதாவது, பெண்கள் சிலர் புன்சிரிப்பாலும், கைகளை புரட்டுவந்தாலும், கூச்சத்தாலும், பயத்தாலும், முக நயத்தாலும், வாள் போன்ற கடைக்கண் பார்வையாலும் கொஞ்சும் வார்த்தையாலும், பொய்யான வார்த்தையாலும், சொகுசான தோரணையாலும் ஆண்களை மயக்கி தன்வசப்படுத்துவார்கள்.
மேலும், கடைக்கண்ணால், அரைக்கண் பார்வையால், இனிய காம கசிவும் வார்த்தைகளால், நாணத்தோடு கூடிய புன்னகையால், அழகான தலுக்கு மினுக்களான நடையால் ஆண்கள் பெண்களிடம் மயங்குவார்கள்.
இதைத் தவிர பெண்கள் அவளது கரு விழியை மேலேற்றி காட்டுவாள், அவள் உடல் துவண்டு கீழே விழுவதைப்போல் பாசாங்கு காட்டுவாள்; வெட்கத்தில் தலைக்குனிவாள்; மிக ஒயிலாக தன் சொகுசை காட்டுவாள்; அவளின் செந்தாமரை முகத்தைக் காட்டுவாள், அவளின் கண்களை அது நீலமலரோ என சந்தேகிக்கும் படித் திருப்புவாள்
இதெல்லாம் பெண்களின் இயல்பான கோலம் என்கிறது மேலே உள்ள பாடல்.
மேலும் பெண்களுக்கு இயற்கையாயுள்ள அலங்காரங்கள்
நிலவுபோன்ற முகம், தாமரை மலர்களைப் போன்ற கண்கள், தங்கம் போன்ற உடல், தேனெடுக்க வரும் வண்டை வெல்லும் அழகிய கருங்கூந்தல், யானை மத்தகம் போன்ற மார்புகள், இனிய மதுரமான மொழிகள்,
புன்னகை பூத்த முகம், கலகவிழிகள், காதுக்கினிய மொழிகள், பெண் யானை போன்ற ஒய்யார நடை, இதெல்லாம் இளம் பெண்களுக்கு அழகை தரும்.
இதுமட்டுமா.......?
கால் கொலுசு சில்சில்லெனா கதை படிக்க, கை வளையல்கள் சலசலக்க, மார்பில் கிடைக்கும் மணிமாலைகள் மௌனம் பேச, நெற்றியில் குங்கும சாந்து கும்முன்னு மண;மணக்க, அன்ன நடை நடந்து செல்லும் பெண்களைப் பார்த்தால் முற்றும் துறந்த ஞானிகளும் அவள் பின்னே சென்று ஒரு அடிமை வேலைகாரன் போலவே பணிவிடை செய்வான் என்பதில் சந்தேகமில்லை,
(இதெல்லாம் கண்ணால் பார்க்க கூடாது என்றுதான் காடு மலை னு சுத்தினார்கள் அன்றே யோகிகளும், சித்தர்களும்)
சரி இந்த அழகுடைய பெண்களை மெல்லியவள் என்றும், பேதைகள் என்றும், பெண் தெய்வங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த உத்தம குலப்பெண்களை அவரவர் சமய சடங்கின் படி திருமணம் செய்து குடும்ப தர்மத்தை கடைபித்து அந்த பெண்ணோடு சிற்றின்ப சுகம் அனுபவித்து, குழந்தை பெற்று சரியை கிரியை யாதிகள் கருமங்கள் மூலமாக
ஆத்மசாந்தியடைய வேண்டும் என்பது தான் வேதாகமத்தின் கட்டளை.
"பெண்கள் உடம் பென்னும் பெருங்
காட்டில் மார் பென்னும்
கண்ண கன்றமேடு கலந்
திருக்ரும் - உண்ணிலவி
மன்மதனாங் கள்வன் மகிழ்ந்
திருக்கிறான் மனமே!
நின் னைவலிப்பான்
போகேல் நீ "
"மணிமந்த் ரௌஷத்தில் மகறாப் பெண் மோகம்
தனியா மயக்கந்தருமே - பிணிபோலக்
கால் கைகள் சேரா இருகண் சுழலச் சித்ததில்
மால் பெருக்குமில்லை யொரு மாற்று "
காம வெறி கொண்ட ஆண்கள் இந்த உண்மை தெரியாமல்
பெண்களை ஒரு காமம் தனிக்கும் யந்திரமாக நினைத்து, அல்லும் பகலும் அவர்களது மோக வலையில் சிக்கி உழல்வதினால் அவர்கள் அடைய வேண்டிய சுகம் பெரும் தூக்கமாக முடிகின்றது. அவர்கள் இம்மையில் அடையவேண்டிய பல சுகங்களை இழந்து மறுமையிலும் பெரும் துக்கத்தை அடைவார்கள் என்பது நிச்சயம்.
தற்கால நாகரீத்தவர்கள் பெண்களை தெய்வமாக பாவித்து, அவர்களுக்கு சர்வ சுதந்திரங்களைக் கொடுத்து அவர்களின் வேலைக்காரர் போல ஆண்கள் நடந்துக்கொண்டால் அது விபரீத பலனையே கொடுக்கும் என்பதை அனுபவத்தில் அறியலாம்.
"காதல் ஒருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவிலும் கை கொடுத்து
மாதர் அறங்கள் பழமைக்காட்டிலும்
மாட்சி பேறச் செய்து வாழ்வமடி "
- சி. சு. பாரதியார்
"முகத்துக்கண்கள் முறுக்கித் திருத்தியே
அகத்துக்கண்ணை அறுத்துப் பிளந்த பின்
வகுத்த ஜோதி மணிவிளக் கென்னுள்ளே
தொகுத்துப்பார்க்கச்சுகம் பெற்றாய் நெஞ்சமே"
மனிதர்கள் தங்கள் முகத்திலுள்ள இரண்டு கண்களையும், மனக்கண்ணால் பார்த்து இல்லற வாசிகளுக்குரிய உபதேச மந்திரத்தை ஓதி பிராண வாயுவாகிய சுவாசத்தை உள்ளே இழுக்கவும், மேலே வாங்கவும் பழக்கம் செய்து வருவது அவர்கள் கடமையாகும்.
ஆனாலும் இந்த பழக்கம் மனிதர்களுக்கு மிக அழகில்லை ஆனாலும் இந்த அப்பியாசத்தை யோக பழக்கமுள்ள மகாத்மாக்களை தொடர்ந்து முடிந்த வரை பயற்சி செய்து வரவேண்டும். இந்த அப்பியாசம் உடலுக்கு ஆதாரமாக இருப்பதோடு ஆயுளையும் அதிகப்படுத்தும்.
மனிதர்கள் எப்போதும் அரிய பெரிய தவங்கள் செய்து, தன்னையும் தனக்கான ஆதாரத்தலைவனையும் (ஜீவன் எனும் சிவனையும்) அறிந்து உடலை பரிசுத்தமாக்குவதற்கு மலக்கூத்து மக்கா என்று சொல்லப்படா நின்ற நாசி வழியா இருக்கின்றதென்று
யோக சாஸ்திரம் கூறுகின்றது.
இதை யோகாப்பியாசமுள்ள மெய்ஞான நிஷ்டர்களுக்கு அனுபவ உண்மையாக கூறுவார்கள். மலைக்கூத்து மக்கா என்ற பழக்கத்தால் பிராண வாயுவை உள்ளே இழுத்து மூலதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா எனும் ஆறு ஸ்தலங்களிலே முறையாக பாக்கவமாய் நிறுத்தி பின்னர் அதை மேல் எழுப்பி மனதை நிலைக்கச் செய்தலே தவத்துக்கெல்லாம் மேலேனா தவம் என்று சொல்லப்படுகிறது.
இந்த அப்பியாசத்தினால் பிராண வாயுவானது ஆறு ஆதரத்திற்கு மேலே ஏறினால் அந்த சுவாசத்தின் கடூரமான அக்கினி சூடானது தலையிலுயுள்ள மூளை வலுவடைந்து வளர்ச்சி பெரும். ஆனால் இது உடலை வளர்க்க தெரியாத ஏழைகளுக்கும் வயதில் முதிர்ந்தவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதனால், உடல் பலம், மனோதிடம் அறிந்து ஆரம்பத்திலே ஒரு நல்ல தகுதியான குருவிடம் இந்த பயற்சியை கற்று பயணடைய வேண்டும். பெண் போகம் (காமம்) விரும்பும் ஆண்கள் இந்த அப்பியாசத்தை செய்யும் போது
பிராண வாயுவானது நாசி முனை - உண்ணாவின் புரையாகிய இரு காலங்களுக்கு மேல் செல்லாமல் மெதுவாக சமன படுத்த வேண்டும்
இல்லையெனில் உடல் அதிக சூடாக மாறும்.
அக்கினி சுவாலையாக வரும் சுவாச உஷ்ணமானது விந்துவுக்கு இடமாகிய பாத மட்டிற்கு சென்று விந்துவை இளகச் செய்து தலை அளவில் முட்டி,
அங்கிருந்து நாதம் என்ற மணியோடு கலந்து ராஜாவாகிய நாதமும், விந்துவாகிய மந்திரியையும் ஒன்று கூட்டி புரடி வாசலால் வெளியாகி வீணா தாண்டின் (முதுகெலும்பு) துவாரத்தின் வழியாக வந்து முதுகின் கீழேயுள்ள குளத்தில் (பள்ளத்தில்) வந்து சேரும்.
அந்த இடத்தில் வந்த போது அது எண்ணம் என்ற தடையை ல் உடைத்துக்கொண்டு தின்னிக்குத்தியறாய் மூலதாரமென்கிற ஆண்குறி துவரத்தின் வழியாக குத்திதுப்பாயும். அப்படி விந்து வெளியேறும் போது அது உடல் பலத்தையும் ஆயுள் பலத்தையும் குறைய செய்யும்.
இது தான் மாயா விலாச மோக வாரிதியில் ஆழ்திடும் பாழான சிற்றிடை பெண்கள் சிற்றின்பத்தில் ஆழ்ந்த இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஆண்களின் பிறப்பு இறப்புகளாக்கின்றன என்பது சர்வ சாதாரணமாகியுள்ளது.
அவ்வாறு அதிக துன்பத்தையும் கஷ்டத்தையும் துன்பத்தையும் உண்டாக்கிக் கொள்ளாமல் தனக்கு நிகரான சமத்துவ குணமும் அறிவும் கொண்டுள்ள பெண்களோடு ஆண் உறவுக்கொள்ளும் போது அந்த பெண்ணை பல வித மதன லீலைகளால் உச்சாகப்படுத்தி அவளின் சுரோணிதத்தை முதலில் வெளியேற்றிய பின் பிறகு ஆணின் விந்துவை நீதானமாக வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதன காம சாஸ்திரம் கூறும் இரகசியம்.

To be Continue Part - 4
Thanks to Face Book Sitharkalin Kural



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.