சைவ உணவு சாத்தியமா? - 6
ஜாகிர் நாயக்:
எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது
என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
மறுப்புரை:
உயிர்களை
கொள்ளாமல் இருப்பது என்பது சாத்தியக்கூறு தான், எவ்வாறெனில் மரம், புல், நெல் முதலான உயிர்களிலிருந்து தோன்றும் விதைகள் உயிரற்ற
சடமாதலாலும், அவ்விதைகளை நாமே விதைத்து உயிர் உண்டாக்கக் கூடுமாதலாலும், அத்தாவரங்களை
அழிக்காமல் அத்தாவரங்களிலிருந்து உயிர் தோன்றுவதற்கு ஏதுவாக உள்ள சடங்களாகத் தோன்றிய
வித்துக்களையும், காய்களையும், கனிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், தழைகளையும்
மட்டுமே உணவாகக் கொள்ளவேண்டும்.
இவைகளை
பறிக்கும்போது தாவரங்களுக்கு வலியுண்டாகாதா? எனக்கேட்டால், உண்டாகாது. எப்படியெனில்
நாம் நமது சுக்கிலம், நகம், ரோமம் முதலியனவகைகளை வாங்கும்போது இம்சை உண்டாகாமை போன்று,
அவைகளுக்கும் இம்சை உண்டாகாது.
தாவரங்களுக்கு
மனமுதலான அந்தக்கரணங்கள் விருத்தியில்லாத படியாலும் அது உயிர் கொலையுமல்ல, துன்பம்
உண்டுபண்ணுவதுமல்ல.
தாவரங்களிலிருந்து
வரும் விதைகள் சடங்கள் என்பதெப்படி? எனில்,
வித்துக்களில்
உயிரிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும். நிலத்தில் விதைத்த பின்பும்
சில வித்துக்கள் விளையாமலேயே இருக்கின்றன. எனவே இவைகள் சடம் என்றாகிறது.
ஆனால்,
இந்த வித்துக்களில் ஆன்மாக்கள் ஏறுவதெப்படி? எனில்,
நிலத்தில்
கலந்த வித்திற்கு நீர் விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதிப்படி ஆன்மாக்கள்
அணுத்தேகத்தோடு கூடி நிலத்தில் சென்று அந்நிலத்தின் பக்குவ சக்தியோடு கலந்து வித்துகளில்
ஏறுகின்றன என்றறியவேண்டும்.
இவ்வாறு
வித்துக்கள் முளைத்துவிட்டால் அதனை பிடுங்கக்கூடாது, இனி அது விதை காய், பழம் போன்று
சடமல்ல, அதனால் முளைகளைப் பிடுங்கப்படாது.
எனவே
சைவ உணவு என்பதின் உண்மை என்னவெனில் மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து, காய்,
கனி, தழை முதலியவற்றை புசிப்பது மட்டுமே. மாறாக மரத்தையோ, புல்லையோ, நெல்லையோ அழித்தல்
கொலைக்குச் சமம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
மேற்கண்ட
விளக்கத்தின் மூலம் தாவர உயிர்களைக்கொள்ளாமல் சைவ உணவு உண்பது சாத்தியமே என்பது எனது
துனிபு. (நன்றி - திருவருட்பா)
ஜாகிர் நாயக்:
7. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 ர்நசவண க்கு குறைவான சப்தத்தையும் 20000 ர்நசவண க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.
மறுப்புரை:
மேற்கண்ட
கருத்தில் எமக்கு வேறுபாடில்லை. நான் முன்னரே கூறியபடி தாவரங்களை அழித்தல் உயிர் கொலைக்குச்
சமமானதே.
ஜாகிர் நாயக்:
8. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.
ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.
மறுப்புரை:
மீண்டும் அதே கருத்துதான், தாவரங்களையும் கொல்லக்கூடாது.
ஜாகிர் நாயக்:
ஜாகிர் நாயக்:
9. கால்நடைகள் பெருகும்:
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.
மறுப்புரை:
கால்நடைகள் வேகமாக பெருகும் என்பதில் யாதொரு உண்மையுமில்லை.
இதைப் பற்றி இறைவன்தான் கவலைப்படவேண்டும். முன்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தொழில்
உதவிக்காக கால்நடைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் விவசாயத்திற்கு யாதொருவகையிலும்
இந்த கால்நடைகள் பயன்படுவதில்லை. எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது. எனவே தற்போது கால்நடைகளை
மனிதர்கள் வளர்ப்பது மாமிசத் தேவைகளுக்கும், பால், தோல் பொருட்களுக்கும் மட்டுமே. இந்த
பால், தோல் பொருட்களும் மாமிசமும் வேண்டாம் என்று மனிதர்கள் முடிவெடுத்தால் என்னவாகும்,
கால்நடைகள் ஓரிடத்தில் இல்லாது நாடோடி இனமாகும், ஆரம்பத்தில் நாட்டில் உள்ள வீதிகளில்
கால்நடைகள் கட்டுபாடின்றி திரியும், பிறகு அவைகள் ஒரு மலையடிவாரத்திற்கோ மரங்கள் அடர்ந்த
பகுதிக்கோ சென்று குரங்குக் கூட்டங்கள் வாழ்வது போன்று வாழ பழகிக்கொள்ளும். பிறகு இயற்கை
அதன் இனப்பெருக்கத்தை பார்த்துக்கொள்ளும். நாம் கவலைப்படவேண்டியதில்லை. நீங்களே சரியாகத்தான்
கூறியிருக்கிறீர்கள் 'தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க
வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான்'. ஆடு நனைகிறதே என்று ஓனாய் அழுதகதையாக
அல்லவா இது உள்ளது. 'ருசிகண்ட பூனை' என்பது போல நாவை அடக்க முடியாவிட்டால் எப்படியாவது
போங்கள், ஆனால் அல்லாஹ் / இறைவன் அனுமதித்துவிட்டான் என்று அவன் மேல் பழியை போட்டால்
சத்தியமாக அவன் தண்டிப்பதில் கடுமையாக இருப்பான். அல்லாஹ் / இறைவன் நமக்கு அளிக்கும்
சோதனை தான் நீங்கள் கூறும் இந்த 'அனுமதி அளித்திருக்கிறான்' என்பது, சிந்தித்து ஜாக்கிரதையாக
இருங்கள்.
மேலும் தாவரங்கள்,
விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில்.
இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி
பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு
ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே
வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று
பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில்
அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை
உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.
மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன,
இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே
நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்
அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம்.
அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம்
ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன,
இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன,
அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு
விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை
மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும்,
அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் முட்டைகள் வரை இடும்,
etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த
மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை
அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.
உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு
அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை
கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக
Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல்
பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால்
என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.
தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த
காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை
சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ
முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை
வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால்
நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை
வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)
இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை
நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க
கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன்
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
எனவே கால்நடைகள் நமக்குத் தேவையில்லை எனில், அதன் இனபெருக்கம் பற்றி மனிதன்
கவலைப்பட வேண்டியதில்லை. நமது கவலையெல்லாம் 'அரிதில் கிடைத்த இந்த மனித தேகத்தை நல்ல
முறையில் பாதுகாத்து, இந்த உடலோடு கூடிய இறைநிலைநிலையை / சாகாத தேகத்தை எப்படி பெறுவது'
'இத்தேகம் ஒருவேளை அழிந்தால் மறு பிறவியில் என்ன தேகமோ?' என்பதில்தான் இருக்கவேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
ஜாகிர் நாயக்:
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168
வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.’
‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.’
மறுப்புரை:
யானும் அதனையே தான் கூறுகிறேன். எது அனுமதிக்கப்பட்டது
என்றால் பரிசுத்தமான உணவு மட்டுமே, என்பதனை அறிக.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
மறுப்புரை: தி.ம.இராமலிங்கம்
முற்றும் - சுபம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.