ஒளிதேகக் காட்சி
வள்ளலாரின் மெய்வடிவம் எப்படிப்பட்டது என்பதனை நாம்
முன்பு பார்த்தோம். வள்ளலாரின் மெய்யை (ஓளி தேகத்தை) நம் கண்களால்
பார்க்கமுடியுமா?
வள்ளலார் இவ்வுலகில் வெளிப்படையாக வாழ்ந்த காலதில்,
அவரை புகைப்படம் எடுத்தபோது அவரது நிழற்படம் விழவில்லை, பிறகு அவருக்கே தெரியாமல்
பல முறை புகைப்படம் எடுத்துப்பார்தபோதும் அவரது நிழற்படம் விழவில்லை, வெறும்
வெள்ளாடை மட்டுமே புகைப்படத்தில் தெரிந்தது, அவரது மேனி மறைந்துவிட்டது.
இப்புகைப்படத்தை இப்போதும் கடலூர் O.T.
யில் திரு அப்பாசாமி செட்டியார்
வீட்டில் உள்ளதை பார்க்கலாம். வள்ளலார் காலத்தில் மேற்குவங்கத்தில் வாழ்ந்த
இராமகிருட்டின பரமஹம்சரின் புகைப்படம் உள்ளது, ஆனால் வள்ளலாருக்குக் கிடையாது.
இப்போது உள்ள வள்ளலார் படமெல்லாம் தோராயனமாக கைகளால் வரையப்பட்டதே.
வள்ளலாரை என்னால், எனது அனுபவத்தால் இது வரை பார்க்க
இயலவில்லை. இப்போது வாழுகின்ற சில அன்பர்கள் பார்த்தாகக் கூறுகிறார்கள், உண்மையா?
பொய்யா? என எனக்குத்தெரியாது. ஆனால் பார்க்கமுடியும், எப்படி? நான் முயற்சி
செய்கிறேன், நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
வள்ளலார் தமது ஒளிதேகத்தை 30-01-1874 (தை மாதம் –
பூசம் அன்று இரவு 12.00 மணிக்கு) அன்று மறைத்துக்கொள்ளும் முன்பு, “நான் இரண்டரை
கடிகையில் மீண்டும் தோன்றுவோம்” என்று கூறி தம்மை மறைத்துக்கொண்டார்கள்.
ஒரு கடிகை என்பது 60 வருடங்களைக்கொண்டது என்று சிலர்
பொருளுரைக்கிறார்கள். ( தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ) அவ்வாறெனில் இரண்டரைக் கடிகை
என்பது மொத்தம் 150 வருடங்களாகும், ஆக அவர் வாக்குப் படி 2024 ம் வருடம் அவர்
தம்மை வெளிப்படுத்துவார்.
நம்மில் பெரும்பாண்மையோர் வரும் 2024-ம் ஆண்டு
வள்ளலாரை பார்க்கும் அதிசயம் நிகழும் என்று நம்பியிருப்போம்.
“அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!”
“எண்ணுந் தொறும் எண்ணுந் தோறும்
என்னுள்
இனிக்குதே
இறைவ
நின்னைப் பாட நாவில்
அமுதஞ்
சனிக்குதே
கண்ணுங் கருத்து நின்பா லன்றிப்
பிறர்பாற்
செல்லுமோ
கண்டே னுன்னை இனிமே லென்னை
மாயை
வெல்லுமோ”
அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.