Wednesday, June 14, 2017

மே – மாதத்தில் அன்று…

மே – மாதத்தில் அன்று…

31-05-1858 - "பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றந் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும்" என இரத்தின முதலியார் அவர்களுக்கு கடிதம் மூலம் வள்ளற்பெருமான் தெரிவித்தார்.

27-05-1860 - "பரமசிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம்" என இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் எழுதினார்.

07-05-1861 - வரதாசாரிய சுவாமிகளைக் கண்டால், "பாலும் நீரும் போலும் பார்ப்பன சினேகம்" என்று தான் தெரிவித்ததாக தெரிவிக்க வேண்டுமென வள்ளற்பெருமான் இரத்தின முதலியாருக்கு கடிதம் எழுதியனுப்பினார்.

23-05-1862 - "நான் கனவினும் தங்களை மறக்கின்றவனல்ல. மறந்தவனுமல்ல. ஆனால் கால வேற்றுமையாலே நான் மறந்தவனாகத் தங்களுத் தோன்றுகின்றது, அவ்வாறு எண்ண வேண்டாம். இது சத்தியம்." என்று வேலுமுதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் வரைந்தார்.

19-05-1864 - குழந்தை பேறு அடைந்ததை வாழ்த்தி இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் வரைந்து அனுப்பினார்.

23-05-1867 - வள்ளற்பெருமான் அவர்களால் சத்திய தருமச்சாலை தொடக்க விழா கண்டது. சாலை விளம்பரமும், ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரமும் ஒருங்கே வெளிவந்தது.

03-05-1868 -  "பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று, வெள்ளியுரைக்கின்ற உரைகல் ஒன்று, இவைகளையும் இவைகளைக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று, இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்ப வேண்டும்.  சுமார் 5

பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்ப வேண்டும்." என்று இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் எழுதினார். (தங்கம், வெள்ளி போன்றவைகளைத் தாமே உருவாக்கி அதன் தரத்தையும் எடையையும் அளந்து பார்க்க இவைகளை வேண்டி கடிதம் எழுதுகிறார்.)

26-05-1868 - உரைகல், தராசு போன்றவைகள் வந்து சேர்ந்துவிட்டதாக நன்றி தெரிவித்து இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளற்பெருமான் கடிதம் வரைந்தார்.


12-05-1872 - தமது உடல் பொருள் ஆவியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் முற்றிலும் ஒப்படைத்து, கல்பட்டு இராமலிங்கம் அவர்கள் வந்தன விண்ணப்பம் செய்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.