Saturday, February 22, 2025

பொருள் என்னும் ஞானம்

 பொருள் என்னும் ஞானம்


சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நம்மவர்களுக்கும், மற்றும் உள்ள உலகியர்  யாவருக்கும் வந்தனம்.

அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால் இவ்வுலகியலில் பொருள் / செல்வம் சார்ந்த ஒரு திட்டத்தினை நான் இங்கு எடுத்துரைக்கின்றேன். உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றைச் சொல் “வள்ளலார்” என்பதை அறியுங்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டாக, திருவருட்பா என்னும் புனித நூலில் புதைந்து கிடக்கும் வார்த்தைகளை படித்த பெரும்பாலானோருக்கு, தங்கள் வாழ்வில் செல்வம் ஈட்டுவதென்பது திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது.

”இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்” எனக் கூறும் திருவருட்பா, எதனைப் பொருளாகப் பார்க்கின்றது?

“கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக” எனக் கூறுகின்றது.

கருணை என்பது ஆன்மாவின் இயற்கை குணம். சிவம் என்பது சச்சிதானந்தம். சுருக்கமாகக்கூறின் ஆன்மாவும் பரமான்மாவும் மெய்ப்பொருளாக விளங்குவதாக திருவருட்பா கூறுகின்றது. ஆனால் இவ்விரண்டினையும் நாம் எவ்வாறு காட்சியாகப் பார்ப்பது?

கருணையுள்ள ஆன்மாக்களை, சுத்த சன்மார்க்கிகளாக நாம் இவ்வுலகில் காட்சியாகக் காணலாம். சச்சிதானத்தை நாம் வடலூர் ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதியாகக் காட்சியாகக் காணலாம். ஆனால் இவை இரண்டினையும் காண ”உடம்பு’ என்னும் பொருளும் ”இடம் / பூமி” என்னும் பொருளும் தேவை. அதாவது உண்மையைக் காண பொய் தேவைப்படுகின்றது. அந்தப் பொய்தான் இந்த உலகியல் செல்வம். இந்தப் பொய்தான் மெய்ப்பொருளான கருணையையும் சிவத்தையும் நமக்குக் காட்டுகின்றது. செல்வம்தான் உங்கள் கருணையை வெளிப்படுத்தும். செல்வம்தான் வடலூரில் ஞானசபையினைக் கட்டியது, அனையா அடுப்பினையும், அனையா ஜோதியினையும் நமக்குக் கொடுக்கின்றது.

இவ்வாறு, கருணையையும், சிவத்தையும் காட்சியாக் காட்டும் செல்வம் என்னும் பொய்யை நாம் அனைவரும் முக்கியமாக சுத்த சன்மார்க்கிகளும் அக இனத்தார்களும் பெறுவது முக்கியம். செல்வம் அழியும் பொருள்தானே! நிலையாமை தத்துவத்தைக் கொண்டதுதானே! என கூறும் பழமை வாதங்கள் அறியாமை. “ஆற்றல் அழியாமை” கோட்பாட்டின்படி, செல்வம் என்னும் பொய்யும் என்றும் அழியாது. இந்தப் பொய்யினை மெய்யாக்குவதுதான் சுத்த சன்மார்க்கம். பொய்யுடம்பினை மெய்யாக்குவதும், பொய்ச்செல்வத்தை சிவச் செல்வமாக்குவதும் சுத்த சன்மார்க்கமாகும்.

எனவே, திருவருட்பாவில் வரும் ’பொருள்” என்பதின் புதிரை நீங்கள் விடுவிக்கும் பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண் முன்னே விரியும் என்பதனை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அறிந்து வைத்துள்ளனர். வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் வள்ளலார். ’இச்சையற்று நுகர்தல்” என்னும் சூத்திரத்தின் மூலம் நாம் இந்த செல்வம் என்னும் பொய்யுடன் விளையாட வேண்டும். இச்சையுடன் நுகர்ந்தால் இச்செல்வம் பல பிரச்சனைகளுக்கும் நம்மை தள்ளிவிடும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசை அற்றவர்களுக்கே எல்லாம் செயல் கூடும். 

பொருள் சேர்க்கும் இந்த ஞானத்தை நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் எவ்வாறு மேற்கொள்வது? நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த ஞானம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகின்றது.

எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றும் எனக்கு இருக்கும் பணமே போதும் என்றும் சொல்பவர்கள், கருணையையும் சிவத்தையும் உண்மையில் மறுக்கின்றார்கள். அல்லது தங்களது இயலாமையால் அவ்வாறு சொல்வார்கள். பணம் குறித்து நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உரையாடியிருக்கின்றோம்? எந்த அளவிற்கு ஆழமாக அலசியிருக்கின்றோம்? எனப்பார்த்தால், வியப்பே மிஞ்சும். காரணம், நாம் பணத்தைப் பற்றி பொதுவெளியில் பேசுவதேயில்லை.  பணம் என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற கருத்தை உடைத்தெரியுங்கள். 

இலஞ்சம், ஊழல், வட்டி, அரசின் அதிகப்படியான வரிகள் போன்று மக்களை சுரண்டி வரும் பணத்தைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. ஒரு சிறந்த சுழற்சி திட்டத்தின் மூலம் மக்களின் பணம் பெருக்கப்பட்டு, அவை மக்களுக்கே சென்றடையும் திட்டத்தினால் நாம் பல தலைமுறைகளுக்கும் பயனடையலாம். இச்சமூகத்தில் பல சுத்த சன்மார்க்கச் செயல்களை செய்து காட்டலாம். 

திருவருட்பா சொல்லும் ’பொருள்” என்னும் புதிர் உங்களுக்கு விளங்கினால் மட்டும் இத்திட்டத்தில் சேர வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன். மேலும் கடலூர் டூரீஸ்டர் மூலம் நீங்கள் யாவரும் இவ்வுலகினை சுற்றிப்பார்க்கும் அதிசயமும் நிகழ இருக்கின்றது. இத்திட்டத்தினைக் காண கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்கவும். 

https://youtu.be/ACXnXfN6Wys?si=T8U31y5DOLJrSrAu


Join our Whatsapp Group

https://chat.whatsapp.com/GAsKBUm9Inj4d15dRXP9xr


இறைவன் உங்களின் செல்வத்தை அதிகமாக்கினால்,

நீங்கள் உங்களின் தர்மத்தை அதிகமாக்குங்கள்.

வருங்காலம் வருமை இல்லா காலம்.


பொருள் என்னும் ஞானத்தைப் பற்றின உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

--T.M.RAMALINGAM

9445545475

Monday, February 10, 2025

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அடுத்த வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் வள்ளலார் பக்தர்கள் மட்டுமே வசித்து வருகின்றார்கள், புலால் உண்ணாமல், தாவர உணவை மட்டுமே புசித்து அக இனத்தார்களாக வாழ்கின்றார்கள் என்று அறியும் பொழுது அகத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது.

நான் கடந்த 24 மணி நேரத்த்தில் புதுச்சேரி, சென்னை என சில உறவினர்கள் வீடுகள், பழகுநர்களின் வீடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. இவ்வில்லங்களில் எது புலால் உண்ணாத புனிதமான வீடு எனத் தெரியவில்லை. எங்கேயும் தண்ணீர் அருந்தவும் தயக்கம். அந்த அளவிற்கு எனது உறவினர்கள் இயற்கையாக பரம்பரையாக வந்த புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றார்கள். சிலரது இல்லத்தில் குடியும் சேர்ந்து விடுகின்றது. பாவ காரியங்களை மகிழ்ந்தும், மகிழ்ச்சிக்காகவும் செய்கின்றார்கள்.
தனித்திரு என்ற தனிமையே சிறந்ததாகத் தோன்றுகின்றது. இதற்கு ஒரு சிந்தனையை செயல்படுத்தலாம், எவ்வாறு நாம் சாப்பிடும் உணவு விடுதிகளில் சைவம் எனவும் அசைவம் எனவும் அறிவித்து மக்களை அழைக்கின்றார்களோ அவ்வாறு சைவம் மட்டும் உண்ணும் புனித இல்லங்கங்களின் வரவேற்பரையில் அல்லது வெளிப்புரங்களில் “புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்” என விளம்பரம் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமாகும் எனக் கருதுகின்றேன். சன்மார்க்க இல்லங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வாசகம் தாங்கிய ஸ்ட்டிக்கர் செய்து அதனை வடலூரிலும் சன்மார்க்க சங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு விற்பனைக்கு அல்லது இலவசமாக அளிக்கலாம். இவ்விளம்பரம் இல்லாத பாவ இல்லங்களில் நீர் அருந்ததுதலும் தவிர்க்க வேண்டும்.
”ஊன்சுவை உண்டு உடல் வளர்ப்பது பாவம்” என்பது வள்ளாரின் பார்வை மட்டுமல்ல, திருவள்ளுவர் முதற் கொண்டு அனைத்து புனிதர்களின் பார்வையாகும் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் வாழும் புனிதர்களுக்கு நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR

தைப்பூச ஜோதி தரிசன விழா - 154

தைப்பூச ஜோதி தரிசன விழா



வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 154 வது தைப்பூச ஜோதி தரிசன விழா 11-02-2025-ம் தேதி நடைபெறுகிறது.
ஜோதி தரிசனம் காண்பதற்காக தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடுகள்,பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்
இதன் காரணமாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 11-02-2025 ம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்று சென்னை, கடலூர் ,திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர ஊரில் செல்லும் பேருந்துகள் ,கார்,வேன், 11ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வடலூர் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் இடது புறமாக திரும்பி ராசாக்குப்பம், கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும்.
விருதாச்சலத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச் கேட், கொள்ளுக்காரன் குட்டை ,சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூர் செல்ல வேண்டும். பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் கொள்ளு காரன்குட்டை, சத்திரம்,மீனாட்சி பேட்டை, குறிஞ்சிப்பாடி, ராசாக்குப்பம் வழியாக வந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். இதேபோல் கும்பகோணத்திலிருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் சேத்தியாத்தோப்பு,கருங்குழி கைக்காட்டி,ராசாக்குப்பம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிபேட்டை, சத்திரம், கொள்ளுக்காரன் குட்டை வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடலூர் -பண்ருட்டி செல்லும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
வடலூர் காவல்துறை சார்பில் தற்காலிக கார், வேன் மற்றும் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் இருந்து வடலூர் வள்ளலார் தைப்பூசம் காண வரும் சன்மார்க்க அன்பர்கள் ஆண்டிக் குப்பம் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியில் இருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் அதே சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரி எதிரில் உள்ள இடத்திலும், விருத்தாசலம் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆர்ச் வழியாக வீணங்கேணி பகுதியில் உள்ளஇடத்திலும் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்.
மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் இருக்கும் இடங்களில் இருந்து வள்ளலார் ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க அன்பர்களுக்கு தற்காலிக பேருந்துகள், மினிபேருந்துகள் இயக்கப்படும்.




Tuesday, January 28, 2025

கைவிடேன் உனையே

அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

கைவிடேன் உனையே
(திரு ருதூர் ராமலிங்க பிள்ளை)


தூங்காமல் தூங்கும் தூக்கம் அறியேன்
            திருவருட் பாக்காட்டும் திசை அறியேன்
ஓங்கி உத்தமனாகும் ஓட்டம் அறியேன்
            ஒன்றினில் ஒன்றிய ஒருவனை அறியேன்
ஏங்கிய ஏக்கமெலாம் ஏனென்று அறியேன்
            என்பெயரும் உயிரும் நீஎன்று அறியேன்
காங்குவாய் ஆகாயக் காட்சியை அறியேன்
            கருத்தில்லேன் எனினும் கைவிடேன் உனையே. (26012025)



 
நிலைத்து உடல் நிற்குமென நாளும்
            நன் மார்க்கம் நடக்க அறியேன்
மலைசுற்றி வந்தும் மாநதிகள் நீராடியும்
            முக்கூட்டில் மனம் மறைய அறியேன்
சிலை வழிபாட்டில் சிவனைத் தொழுது
            சவம் ஆவதே சைவமென அறியேன்
கலை உறைத்த கற்பனையால் மதி
            கலங்கினே னாயினும் கைவிடேன் உனையே. (27012025)



 
சாத்திரச் சடங்குகள் சாதி சமயங்கள்
            சொல்லும் சூத்திரங்களின் சூது அறியேன்
பூத்திருக்கும் பூக்களால் பூஜை செய்தும்
            பூஎழில் மாறாமல் பார்த்து அறியேன்
கூத்தாடி கூத்தாடி கூடு உடைந்தாலும்
            கூற்றை எதிர்க்கும் காற்றை அறியேன்
காத்திருக்க இலவங் காய் பழுக்கறியேன்
            காரிருளுள் சென்றாலும் கைவிடேன் உனையே. (27012025)



 
பேயென அலைந்தேன் பாரினில் பிறர்புகழ
            பொய்யாய் நடித்தேன் பேரருள் அறியேன்
நாயென மலத்தையே நாடி உண்டேன்
            நாதன் உள்ளிருப்பதை நொடியும் அறியேன்
தாயெனத் தலைவன் தாங்கும் திறத்தையும்
            தான்நானாகும் அறத்தையும் தழைக்க அறியேன்
காயெனக் கசந்தேன் காமத்தில் விழுந்தேன்
            காயமே வீழினும் கைவிடேன் உனையே. (27012025)



 
மண்ணில் மங்கையர் மணம் புரியுமொரு
            மாந்தராய் இல்லாதெனை மீட்டத்திறத்தை அறியேன்
எண்ணத்தில் நிறைத்து என்னுயிர் வளர்த்தும்
            எங்குமாய் விளங்கும் என்னுறவை அறியேன்
உண்மை உரைக்கவே ஊமைஎனை பேசும்
            உயிராய் உருவாக்கிய உன்னருளை அறியேன்
கண்ணில் நீர்ப்பெருகி குருவைப் பாடிக்
            களிக்க இயலேனெனினும் கைவிடேன் உனையே (27012025)





இன்றிருக் கின்றேன் என்றிறப் பேனென்று
            ஏதும் அறியேன் என்றும் இறவாவரம்
அன்பர்க்கே கொடுப்பாய் என்றிருக்க எனது
            ஐம்பது அகவையிலும் என்மீது ஐயமோ
உன்னை அறியேன் உன்செயலை அறியேன்
            உண்மை அறியேன் உயிரை அறியேன்
கன்றாகினும் மடியறியாது கலங்கிப் பசியால்
            குலைந்தே னாயினும் கைவிடேன் உனையே. (31012025)

கல்வி அறியேன் கலைகள் அறியேன்
            கற்றது எதிலும் கடவுளை அறியேன்
வல்லான் தனைஏற்கும் வந்தன மறியேன்
            வன்மனக் குரங்கின் வீரியம் அறியேன்
நல்லான் எனநடிக்கும் நாடகமும் அறியேன்
            நன்றியெனச் சொல்ல நாயகனை அறியேன்
கல்லென இருந்தேன் கருநிலை கடவேன்
            குருடன் என்றாயினும் கைவிடேன் உனையே. (11022025)


திருக்கோயில் அறியேன் திருக்கதவம் அறியேன்
            தனித்திருக்க அறியேன் தன்நிலை அறியேன்
பெருமந்திரம் அறியேன் பெரும்புகழ் அறியேன்
            பெருவாழ்வு அறியேன் பெண்ணின்பம் ஒன்றே
சருமத்தில் காணும் சழக்கை விட்டறியேன்
            சபலத்தால் அலைந்தேனெனினும் சாமி உந்தன்
கருணை நிறைந்ததென் கடவுள் பிறந்துவிட்டார்
            கடலூர்வட லூராகியதினி கைவிடேன் உனையே. (17022025)


 
 
-TMR