Tuesday, April 30, 2013

கல்பட்டு ஐயா இராமலிங்கம்


அருட்பெருஞ்ஜோதி                         அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

                                 கல்பட்டு ஐயா இராமலிங்கம்                                        30-04-2013
                                            (முதல் பாகம்)

ஆன்மநேயமுள்ள ஆன்மாக்களே... வணக்கம்...

நாம் இப்போது நமது அருள்குருவான வள்ளலாரின் சீடர் 'கல்பட்டு ஐயா' வைப்பற்றி காண்போம்...

நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பலர், ஆட்பட்ட அடியவர்கள் பலர், மாணவர்கள் பலர்.

அவர்களுள் கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின சபாபதிப் பிள்ளை, காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை, கருங்குழி புருடோத்தமன் ரெட்டியார் போன்றவர்கள் முதன்மையானவர்கள் எனலாம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமைக்கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா'  இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமைக்கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது. மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவரையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

கல்பட்டு

விழுப்புரம் வட்டத்தில் உள்ள 'கல்பட்டு' என்னும் ஊரில் பிறந்தவர்தான் கல்பட்டு ஐயா. இவரின் இயற் பெயர் 'இராமலிங்கம்'. இவரின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி, உறவினர் பற்றிய எவ்விதச் செய்தியும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆயினும் சிறுபொழுதிலேயே தெய்வ நெறியினை எய்திடும் நாட்டம் இவருக்கு இயல்பாகவே இருந்தது. அதற்குரிய சாதனமாக நல்யோக நெறியினைப் பின்பற்றினார். அம்முறையிலேயே சிறந்து மேம்படவும் முற்பட்டார்.

தமிழகச் சுற்றுப்பயணம்

அதன் காரணமாகத் தமிழகம் முழுதும் பயணம் செய்தார். தனது நிலையைச் சிறப்படையச் செய்யும் பெரியோரை நாடினார். எத்தனையோ பெருமக்களை, தவசியர்களை சந்தித்தார். யாரும் கல்பட்டு ஐயாவின் அனுபவத்தினும் தலை சிறந்துக நிற்கக் கண்டிலர். தனக்கு நெறியூட்டும் குருமார்களைக் கண்டிலர். இந்நிலையில் தம்மிடம் உள்ள அனுபவமே போதும் என்று மீண்டும் கல்பட்டிற்கே திரும்பினார்.

திருநறுங்குன்றம்

விழுப்புரம் - விருத்தாசலம் இருப்புப்பாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் திருநறுங்குன்றம் என்னும் ஊரில் ஒருகாலத்தில் சமணர்கள் நிறைந்திருந்தனர். அவ்வூரில் உள்ள அப்பாண்டநாதர் கோவில் பழமை வாய்ந்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. தற்போது அவ்வூர் திருநறுங்கொண்டை அல்லது திண்ரங்கோட்டை என வழங்கி வருகிறது. 

தனது தவநெறி வாழ்விற்குப் பொருத்தமான இடம் திருநறுங்குன்றம் என்று கல்பட்டு ஐயா அறிந்தார். ஆதலின் அவ்வூர் சென்றார். அங்குள்ள குன்றுகளுல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அங்கே குடில் அமைத்துத் தவயோகநெறியினைத் தாம் பயின்ற அளவில் பழகி நின்றார். என்றேனும் ஒரு நாள் மேல்நிலைப் பெறுவோம் என்ற உணர்வில், குன்றாமல் அந்நிலையில் நின்றிட்டார். அத்தகு நிலையில் குன்றிலிருந்து ஊருக்குள் சென்று உச்சிப்போதில் மட்டுமே கையேற்று உண்டு நின்றிட்டார்.

யோகக் காட்சி

வழிகாட்டும் நல்லாசிரியர் தமக்கு வாய்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. கல்பட்டு ஐயாவின் நல்லதோர் ஏக்கத்திற்கு விளக்கம் கிடைத்தது. அவரது யோகக் காட்சியில், குறிப்பிட்ட ஒருதிங்களில், குறிப்பிட்ட கிழமையில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நாழிகையில் ஓர் ஞானாசிரியர் வந்து, வலுவில் ஆட்கொள்வார் என்ற குறிப்புப் புலனாயிற்று. கிடைக்கப் பெற்ற அந்த திருவருட்குறிப்பினால் மாறாத நம்பிக்கைக் கோண்டார். அத்தெய்வத் திருநாளை அன்பர் பலர்க்கும் சொல்லி, ஆரவத்துடன் எதிர்பார்த்திருந்தார்.

இச்செய்தியினை, "திருநறுங்குன்றத்தில் கல்பட்டு ஐயா என்னும் யோகியார். தமக்கு ஓர் ஞானாசிரியர், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, வலிய வந்து ஆட்கொள்வார் என்று தாம் உணர்ந்தபடி, பலருக்கும் உரைத்து, பலரும் சூழ அவரால் குறிப்பிட்ட அதே நேரத்தில் நமது வள்ளற்பெருமான் வருகையை மாறாத் நம்பிக்கையுடனும் பேரன்புடனும் எதிர்பார்த்திருந்தார்" என்று 'இராமலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்' எழுதிய பிறையாறு உயர்தவ 'சிதம்பரம் சுவாமிகள்' அவர்களும் அச்சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஞான ஆசிரியர் ஆட்கொள்ளல்

இறைவன் அருளால் நம்பெருமானுக்குக் கல்பட்டு அடியவரின் வேட்கை புலனாயிற்று, அவரின் அருள் தவிப்பு விளங்கியது.

மாறாத அன்பும் மங்காத நம்பிக்கையும் பூண்டு நிற்கும் அடியவரின் திருவூர் நோக்கி, மாட்டு வண்டியில் புறப்பட்டுவிட்டார் நம்பெருமானார். வடற்பெரு வெளியின் வேந்தரைச் சுமந்துக் கொண்டு தன் நடையில் சென்றது அது. திருக்கோயிலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வண்டியை அனுப்பிவிட்டு, வள்ளற்பெருமான் தாம் மட்டும் திருநறுங்குன்றத்திற்கு நடந்துச் சென்றார்கள்.

நம் பெருமானாரின் பொன் மலரடிகள் அவ்வூரிலும் பதிவாயின. கன்று இருந்த இடம் நாடிக் காராம் பசு செல்வது போல், மன்றிலே நடமிட்டுக் களிக்கும் திருவடிகள், நறுங்குன்றத்து மலைமேலும் நடைபயின்றன.

கருணாமூர்த்தியின் பேரருட் கண்மலர்கள், கல்பட்டாரின் குடிலில் மீது தோய்ந்திடலாயின. இரக்கத்தின் திருவுருவின் வரவினை எதிர்பார்த்து, எழுச்சியுடன் கூடியிருந்தனர் பலர். குறித்த காலத்தில், குடிலில் அடிவைத்துப் புகுந்திட்டார் அருட்பிரகாசர். கருங்கல் மனத்தினையும் கசிந்து உருக்கும் வடிவினையும், பேரின்ப நிலையினை வளர்க்கின்ற கண்களையும் ஒளி எனவும் வெளி எனவும் விளங்கும் திருவடி மலர்களையும் கண்டுவிட்டார் கல்பட்டு அடிகள்.

உள்ளம் துடிக்க, உயிர் துடிக்க, உணர்ச்சி வெள்ளம் உடல் முழுவதும் பரவி, மயிர்க்கால் சிலிர்க்க, உணர்ந்தபடி வந்து அருளிய திருவுருவங்கண்டு, அடியற்ற மரம்போல் வீழ்ந்தார், கண்ணீர் மலர்களால் திருவடிகளை அர்ச்சித்தார், மகிழ்ச்சிப் பெருக்கால் விம்மினார், அருட்சக்தியின் திருக்கரம் பற்றிய வள்ளலின் தெய்வத் திருக்கைகள் கல்பட்டு அடியவரைப் பற்றித் தூக்கிடலாயின.

மறையமுதம் பொழிகின்ற பெருமானின் மலர்வாய் இன்பத்தேன் துளிகளை வழங்கியருளியது. இரண்டு இராமலிங்கங்களும் களிப்புக்கு ஆளாகினர். கல்பட்டு அடியவரும் மற்றும் உள்ள அன்பர்களும், பெருமானின் திருவருளால் பெரும் பூரிப்பும், பேரெழுச்சியும், பேருணர்ச்சியும் உற்று நின்றிட்டார்கள்.

"பண்ணிய பூசை பலித்தது, பலித்தது, பரவினேன், பணிந்தேன், பதமலர் சூடினேன், எண்ணியபடியே என்னை ஆட்கொண்டு செல்லுங்கள் என் இன்னுயிர் நாயகரே, என விரும்பி வேண்டி வணங்கினார், கல்பட்டு அடிகள்.

சற்குருமணியின் சந்நிதானம் அடைவோம், உயர் தொண்டு செய்து துயர் துடைப்போம், கிடைத்தற்கரிய அறிவுச்சுடரைப் பெற்று விட்டோம் என்று பூரித்து மனக் களிப்புற்றார் அவர். நம்பெருமானோ, "உத்தரவு தருவோம், அப்போது வந்தடையலாம்" என்று மெய்மொழியினை அருளினார்கள்.

மெய்ஞான தேசிகனின் கட்டளைக்கு எதிர்ப்பும் உண்டோ? முடிதாழ்ந்து, அடிபணிந்து, அதனை முடிமீது கொண்டிட்டார் அவ்வடியவர். இச்செய்தியினை வள்ளற் பெருமானுக்குத் தொண்டு பூண்டு, அவர்களையே வழிபடு கடவுளாகக் கொண்டு, வாழ்நாளெல்லாம் திருவருட்பா இசையமுதில் தோய்ந்து, பிறரையும் தோய்வித்துச் சிறந்த சீடராக திகழ்ந்த, வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை' என்பவர் தாம் எழுதிய 'பிரபந்தத் திரட்டு' என்னும் நூலில் கீழ்கண்டவாறு பாடியிருக்கிறார்...

அருயோகம் செய்கல்பட்டார் சங்கற் பம்போல்
திருநறுங்குன் றத்தவர்க்குத் தீக்கைசெய்த சற்குருவே

திடஞானம் பெற்றுய்யத் தீக்கைசெய்த பின்னர்
வடலூரில் வந்திருக்க வாய்மலர்ந்த சற்குருவே!
                     (சற்குரு புலம்பல் கண்ணி 52 & 53)

இராகம் - அட்டாணா                 தாளம் - சாப்பு
                 பல்லவி
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையாஸ்ரீராமலிங்கையா கதி
கருணை செய்ய எமக்கிங்கு ஆரையா?
               அநுபல்லவி
மதிதரு வடற்சபை ஸ்தாபக
மகிதலம் புகழ்பெறு வியாபக கதி
                 சரணம்
செல்வர்கள் சூழும் திண்ரங் கோட்டை மலையிற்
   சேர்ந்திருந்து  அஞ்ஞானம் ஏக
   சிறந்தகற்பட் டிராமலிங்கப் பிள்ளை
   சிவயோகம் பன்னா ளாகச்
செய்திருந்துந் தன்னைத் தலைவனை விளங்கும்
   செய்யகுரு வலிந்தே வந்து கிளக்கும்
   சிந்தைமேற் கொண்டிருக்கப் பலர் மதிக்கும்
   திறம் அறிந்தோமைத் தக்கவர் விதிக்கும்     கதி
                    (இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை 117)

காரணப்பட்டாரின் பாடல்களிலிருந்து நம்பெருமான் கல்பட்டாரை ஆட்கொண்டச் செய்தியினை அறிய முடிகிறது.

இதே செய்தியினை உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்ட 'பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும்' கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றார்...

இலகும் கல்பட்டு ஐயா என்று
   இசைக்கும் யோகி குருபரனார்
வலிய அணைந்து ஆட்கொண்டு அருள
   வருதல் வேண்டும் எனும்விருப்பம்
நிலவி நறுங்குன்றப் பதியில் இருந்தார்!
   நிமலன் அதனை அறிந்தே
அலகில் அருளால் அடைந்து அவர்க்கும்
   தீட்சை அளித்து
         (இராமலிங்க சுவாமிகளின் சரிதம்)

மேலும் நம்பெருமானார் 02-08-1866 ஆம் ஆண்டு கடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் இருக்கையில், ஒரு கடிதத்தை 'திருநறுங்குன்றம் மகாராஜராஜஸ்ரீ நயினார் இராமசாமி நயினார்' அவர்களுக்கு எழுதுகையில், இராமலிங்க மூர்த்திகளையும் (கல்பட்டு அடிகள்) சண்முகப் பிள்ளை அவர்களையும் உடனே இவ்விடம் அனுப்பி வைக்க வேண்டுமாய் எழுதியிருக்கிறார்.

(வடலூரிலிருந்து இவ்விருவரும் 25 நாட்களுக்கு முன்னர் மேற்குறித்த இராமசாமி நாயினாரை காண சென்றும் இன்னும் திரும்பாததைக் கண்டு வள்ளலார் எழுதிய கடிதம் இது) 

இக்கடிதத்திலிருந்து நமக்குத் தெரிய்வருவது, 1866 ம் ஆண்டுக்கு முன்னரே நம்பெருமானார் கல்பட்டு ஐயாவை ஆட்கொண்டுவிட்டார்கள் என்பதே ஆகும். கல்பட்டு ஐயாவை ஆட்கொண்ட ஆண்டு எது என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை.

உத்தரவு வந்தது

நம்பெருமானார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தொடங்கிய பொழுது (தருமச்சாலை தோற்றுவிக்கும் முன்பு) கல்பட்டு அடிகளுக்கு வள்ளற்பெருமானின் உத்தரவு வந்தது !

காலம் கனிவதற்கு காத்துக் கிடந்த அன்பர்க்கு உவகை ஏற்பட்டது. ஞானப் பயிர் வளர்க்கும் நோக்கத்தோடு ஞானச் சேவடிக்கு ஈனமின்றி பணிசெய்திடும் திடத்தோடு புறப்பட்டார் கல்பட்டார்.

ஞானாசிரியரைக் காணல்

கருங்குழியினை வந்தடைந்தார். பெருங்கருணை மலரடிகளைத் தொழுதிட்டார், அழுதார், மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளத்தைக் குளிப்பாட்டினார், கண்ணீர் வெள்ளமோ உடலைக் குளிப்பாட்டியது. அவரின் உணர்ச்சி பெருக்கினைக் உணர்ந்த நம்பெருமான்
அரவணைத்து ஆட்படுத்த வேண்டும்தானே? ஆனால் கல்பட்டாருக்கு பின்னும் ஓர் உத்தரவு பிறந்தது!

"ஆறு மாத காலம் பூர்வ ஞான சிதம்பரமாகிய தில்லையம்பதியிலிருந்து, பின் நம்மை வந்தடையுங்காணும்" என்று கட்டளை இட்டார்கள் பெருமான். திருக்குறிப்பின் நோக்கம் திருத்தொண்டர்க்குப் புலனாயிற்று. மாமறைகளும் சூடரும் பாதமுடிகளைச் சூடிக்கொண்டு பயணமானார் கல்பட்டார்.

தில்லை வாழ்க்கை

சிதம்பரம் - திருமூலர் சிவயோகத்தில் திளைக்கின்ற இடம், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆனந்த நடங்கண்டது, நந்தனார் ஒளிப்பிழம்பில் ஒன்றியது, மாணிக்கவாசகர் சுத்த வெளியில் கலந்தது, சீர்காழி முத்துத்தாண்டவர் ஆடுகின்ற சேவடியை அடைந்தது.

எனவே ஒப்பற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் பூர்வ ஞான சிதம்பரத்தின் பெற்றிகள் விளங்குவதினால், அங்கிருந்து பயின்று மேம்பட வேண்டும் என்றே வள்ளற்பெருமான் தம் அடியவரை அனுப்பி வைத்தார்கள். பெருமான் அருளிய வண்ணம் ஆறுமாதங்கள் தில்லைக் கூத்தனுக்கு அடிமை பூண்டார் கல்பட்டார். அதன் பின்னர் மீண்டிட்டார் வடல் வெளிக்கு! 

1867 ஆம் ஆண்டு, கோடைக்காலம், கடும் வெப்பம் உயிர்குலத்தைக் கலக்கி நின்றது. நீர் எங்கே என்று தேடி நிலை குலைய வைத்தது. நிழல் எங்கே என்று ஓட வைத்தது. சூரியனின் கதிர்கள் சூடேறி நிற்கும் மண்ணில் கால் வைத்து நடப்பதற்கே மக்கள் அஞ்சும் உச்சி வேளையில் ஓர் தவ வடிவம் நடந்துக்கொண்டிருந்தது.

அண்டம் எல்லாம் தலைவணங்கும் வடலூரைக்காண அடங்காத ஆவல்! வான்நாடர் கூடி நின்று வாழ்த்தும் வடல்வெளியைக் காண தணியாத ஆர்வம்! உண்மையைத் தெரிந்துக்கொள்ளச் சித்தர்கள் திரண்டு நிற்கும் உத்தரஞான சிதம்பரமாம் வடலூரை வணங்கும் குறையாத ஊக்கம்! மக்கள்குலம் பசி அடங்கவும், வள்ளலின் வாயுரை கேட்கவும் வந்துவந்து போகும் வடலூரைக் கண்டிட வேண்டும் என்னும் உயரிய நோக்கம்! கருத்தினில் களிப்பு பொங்க, வயிற்றினுள் பெரும்பசி பொங்க, வள்ளற் பெருமான் மலரடிகளை வணங்கும் வேட்கை கொண்டு, வடல்வெளி நோக்கி வந்துகொண்டிருந்தது அத்தவ வடிவம்.

கல்பட்டு அடியார் விரைந்து சென்று பெருமானின் திருமுன்பு விழுந்த தடித்த தடியது போல் விழுந்திட்டார்!

கண்டுவிட்ட மகிழ்ச்சி கண்ணீர், உணர்ச்சிப் பெருக்கில் உடல் புல்லரிப்பு, தாய்முகம் கண்டு தேம்பும் இளங்குழந்தையின் ஏக்கம், கடைத்தேறும் காலம் வருமா? என்ற வினாவுக்கு விடை கண்ட மனநிறைவு, இத்தனையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கும் நிலையில் அருட்சூரியனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அவ்வடியவர் கிடந்தார்.

வெளியில் ஆட்சி செய்யும் வெங்கதிரின் கொடுமைகளை எல்லாம் அந்த ஒளிக் கதிரவன் மாற்றிவிட்ட அருமை கண்டு ஆற்றாமை கொண்டு வீழ்ந்து கிடக்கும் அடியவரை அரவணைத்து ஆறுதல்மொழி வழங்கினார் நம்பெருமானார்.

போதாதாங்காணும்?

வந்தடைந்த கல்பட்டு அடியவரின் உள்ளத்துப் பசியையும் வாட்டும் வயிற்றுப் பசியையும் ஒருங்கே உணர்ந்திட்டார்கள் பெருமான். கூழைக் கரைத்து வைத்திருக்கும்படி முன்னரே திருவாய் மலர்ந்திருந்தார்கள். குறிப்புணர்ந்த அன்பர்கள் கூழினை கொண்டு வந்தனர்.

நம்பெருமானின் திருக்கைகள் கூழினை ஏந்தி வார்க்கத் தொடங்கின. இருகை ஏந்திக் குடிக்கத் தொடங்கினார் கல்பட்டு அடிகள். நமக்கு கூழ்தானா உணவு என்று அவர் எண்ணவில்லை. பெருமான் வழங்குவது பேரமுதமாகுமன்றோ? ஊற்ற ஊற்றக் குடித்துக்கொண்டே இருந்தார். வயிறு நிறைந்து விட்டது. இளைபறக் கிடைத்தக் கூழ் போதும்., போதும் என்று சொல்லத் துணிவு எழவில்லை. சற்குருநாதரிடம் சாதாரண அடியவன் எப்படி போதும் என்று சொல்லவது என நினைத்தார். அதனால் மேலும் குடித்துக் கொண்டிருந்தார். அதனை உணரலானார் நம்பெருமானார்.

"போதாதாங்காணும்?" என வினவி கூழ் ஊற்றுவதை நிறுத்திக்கொண்டார்கள். இசைவு கிடைத்த பின்பே கல்பட்டாரும் குடிப்பதை நிறுத்தினார். பசி ஓடியது! தத்துவங்கள் தழைத்தன! அகத்திலும் முகத்திலும் மலர்ச்சி ஏற்பட்டது. ஆன்ம விளக்கமும், கடவுள் விளக்கமும் அதிகரித்தன. ஏழையர் பசி போக்கும் அவ்வுண்மை வழிபாட்டிற்கு ஆட்பட்டார் கல்பட்டார். 

சிலுகிழைக்காதீர்கள்!

அப்போது பெருமானின் ஆணைப்படிச் சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிணற்றிற்கருகில் இருந்த குடிலில் புகுந்திட்டார் கல்பட்டார். ஒருமையுடன் வள்ளலின் திருவடி மலர்களைத் தியானித்து, யோகத்தில் அமர்ந்திட்டார். "எண்ணிய வண்ணம் இரு" என்ற இடத்தில் இருந்தது மனம். அவ்வாறு இருந்தது ஒருசில மணிகளும் அல்ல, ஒரு வாரகாலத்திற்கு அப்படி ஒருமுகப்பட்டு ஒன்றி நின்றார். அவரது நிலை பலருக்கும் வியப்பளித்தது, அவ்விடத்தில் சூழ்ந்து நிற்கத் தொடங்கினார்கள். கல்பட்டாரின் ஒருமைக்கு ஏதேனும் இடையூறு நேரலாம் என்று உணர்ந்த நம்பெருமானார், "சிலுகிழைக்காதீங்காணும், எழுந்து வருவார் பொறுத்திருங்கள்" என்று தொல்லை கொடுக்காதிருக்கும்படிக் கட்டளையிட்டார்கள். எம்பெருமானாரால் ஆட்கொள்ளப்பெற்ற கல்பட்டார் தன்னை மறந்து பரவச நிலை எய்தினார்.

ஓலைக்குடில் யோகம்

அதற்குப் பின்னர் பரவசநிலை மாறிப் பன்முறை பணிந்து நம்பெருமானைப் போற்றி நின்றார். யோகநிலை மாறாது விளங்கத் தனியிடம் தந்தருளினார்கள் வள்ளல். அங்கே ஒளிவளர் உணர்வில் யோகநிலை நித்திரை செய்தது அவ்வோகக் குழந்தை. அக்குடில் இப்போதும் சாலைக் கிணற்றின் தென்புறம் திகழ்கின்றது.

சாலை, பிணி தீர்க்கும் மருந்தகம், பசிப்பிணி ஒரு புறம், அறியாமைப் பிணி மற்றொருபுறம், வருவார் வகையறிந்து மருந்தளித்தார்கள் வள்ளற்பெருமான். பசிப்பிணிக்கு ஆவண செய்த பின் அறிவுப் பசியையும் கவனித்தார்கள். அன்பர்கள் தரம் அறிந்து சொற்பொழிவு செய்தார்கள். கல்பட்டாருக்கு வேண்டிய பகுதிகள் வருங்கால் வள்ளலே அவ்வடியவரை திருச்சமூகத்திற்கு அழைப்பித்தருளுவார்கள், உரைப்பன உரைத்தருளுவார்கள், மெய்யமுதம் ஊட்டுவார்கள், மேன்மைக்கு வழிகாட்டுவார்கள். பெருமான் கழலினை நினைந்து ஒளிவளர் ஞான தீபத்தினின்று உருவாகும் உணர்வினைப் பருகிபருகிப் பரவசம் அடைந்திட்டார்!

உம்மைச் சொல்லவில்லைங்காணும்!

ஒரு சமயம் சாலையில் வள்ளல் கருத்து மாமழை பொழிந்துக்கொண்டிருந்தார்கள். மழைபெய்தாலும் உழுது வைக்காத நிலத்தில் ஈரங்காக்காது. அதைப்போல பக்குவம் அற்றவர்களுக்குச் சொல்வதெல்லாம் வீண் என்று கருதினார் போலும்! சொற்பொழிவிற்கு இடையில், "இதுகாறும் அறிவுறுத்தியும் நூற்றில் ஒருவரெனும், ஆயிரத்தில் ஒருவரேனும் தேறவில்லையே!" என்று வருந்தி உரைத்திட்டார்கள்.

அதிகேட்டுக் கூட்டத்தார் அனைவரும் இடித்த புளி போலும் எழுச்சி இன்றி இருந்திட்டார்கள். ஐயாவின் உரை ஒளி பக்குவப் பட்டுள்ள கல்பட்டாரின் நெஞ்சக் கண்ணைத் தாக்கியது, கூசி நடுங்கினார், உடல் படபடத்தது, சோபம் மீதூற சோர்ந்து வீழ்ந்திட்டார், ஆற்றொணாத் துயர்க் கடலில் அழுந்திட்டார்!

அது கண்டேனும் யாரும் தம்மை அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் வீழ்ந்தார் என்று எண்ணவே அவர்களால் முடியவில்லை. எவ்வுணர்வும் அற்றவர்களாகவே இருந்தார்கள்!

அடியவரின் மனநிலை அறிந்தவர்கள் நம்பெருமான். எனவே அயர்ந்து விழுந்தவரை விரைவாக எடுத்து ஆசுவாசப் படுதினார்கள். அயர்வினை நீக்கினார்கள். உணர்ச்சியும் விழிப்பும் பெறச்செய்தார்கள்! தன் நிலைக்கு வந்ததும், "உம்மைச் சொல்லவில்லைங்காணும்" என்று ஆறுதல் மொழி பகர்ந்தருளினார்கள்.

தலைமை சார்ந்த சாதகன் ஒருவன் தான் தேறவில்லை என்று உணர்ந்தால் அப்படித்தான் அவனுக்குச் சோபம் உண்டாகும். அத்தோடு ஆருயிரினை விட்டு விடக்கூடத் தயங்கமாட்டான். அத்தகைய தீவிரதரம் உத்தமப் பக்குவம் வாய்க்கப் பெற்றவராகக் கல்பட்டு அடியவர் மேம்பட்டு விளங்கினார்!

தொண்டு செய்வது உண்டுங்காணும்!

மாறாமல் ஒளிரும் யோகத்தில் அயராது திளைத்திட்டார் கல்பட்டார். அதன் காரணமாகத் தாளாத வெப்பத்திற்கு ஒருமுறை அடியவர் ஆளாயினார். உடல் முழுதும் சிரங்கு கண்டதாகவும், நீர் பெருகி அது ஆற நீண்ட நாட்கள் ஆயிற்று எனவும் கேள்வி.

அத்தகு நேரத்தில் நாளும் உணவு எடுத்துச் சென்று கல்பட்டு ஐயாவிற்குத் தர கட்டளையிட்டார்கள் பெருமான். இடையில் ஒருமுறை வள்ளல் வெளியூருக்கு எழுந்தருளினார்கள். சாலை அன்பரை அழைத்து மறதியின்றிக் கல்பட்டுக்கு உணவு வழங்கும்படித் திருவாய் மலர்ந்திருந்தார்கள்.

சாலை அன்பர்கள் மேலை அன்பர்கள் ஆகிவிட்டனர் போலும், அவரை மறந்து விட்டனர். எனவே கல்பட்டு ஐயாவிற்கு உணவும் செல்லவில்லை, உண்கிறீர்களா? என்று கேட்கவும் இல்லை. இப்படியே சில நாட்கள் இருண்டுஉருண்டன.

வெளியூரிலிருந்து நம்பெருமானார் வடல்வெளிக்குத் திரும்பினர். வந்தவுடன் 'கல்பட்டுக்கு உணவு போயிற்றா?' என்று வினவினார்கள். எல்லோரும் கல்லாய்ச் சமைந்துவிட்டனர், என்னவென்று சொல்வர், வாய்திறந்து ஒருவார்த்தையும் சொல்லாமல் நின்றனர். "பிச்! (பைத்தியம்) உணவு கொண்டு வாருங்காணும்!" என்று ஏவலிட்டருளி தாமே உணவுக் கிண்ணத்துடன் கல்பட்டாரிடம் புறப்பட்டருளினார்கள்.

வள்ளற்பெருமான் எழுந்தருள்வதைக் கண்டுவிட்ட கல்பட்டார், பதைபதைத்தார்! உணர்ச்சி மயமானார்! 'அடியேனை அழைத்திட்டால் ஆங்கு வரமாட்டேனா? எதற்காக இவ்வண்ணம் எழுந்தருளியதோ? மன்றில் ஒளிரும் சேவடிகள் அன்றுவந்து மலையேறி ஆண்டதுதான் போதாதோ? இன்றும் இப்படியும் மண்ணுறுத்த எழுந்தருள எண்ணியதோ? என்ன செய்வேன்? என்ன செய்வேன்? என்வினை இப்படியும் ஆயிற்றோ?' என்று ஆற்றாமை கொண்டு அவதிப்பட்டார்!

அஃதுணர்ந்த நம்பெருமான், "அடியார்களுக்குச் சிவஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். கல்பட்டு அடிகளின் கையில் தாமரை இலையை வைத்தருளினார்கள். சோற்றினை உருட்டி உருட்டி வைத்தருளினார்கள். அச்சமும் நாணமும் அயர்ச்சியும் சோர்வும் அப்படியே கெளவ்விக் கொள்ள, வாங்கி வாங்கி உண்டு புடைத்து நின்றார் கல்பட்டார்.

வள்ளற்பெருமானிடம் கொண்ட தொடர்பு யாரோ சிலருக்குத் தான் கிட்டப் பெற்றிருக்கின்றது. அவர்கள் அத்துணை பேரும் கொடுத்துவைத்தவர்கள். அதிலும் பெருமானின் திருக்கரங்களால் அமுதுண்ட பெருமை கல்பட்டார் ஒருவருக்கே வாய்க்கப் பெற்றது. எனினும் கல்பட்டாரின் சரிதம் படிக்கும் நாமும் ஏதோ ஒருவகையில் சென்ற பிறப்பில் வள்ளலாரிடம் தொடர்பில் இருந்திருப்போம் என்பதனை உணரவேண்டும்.

ஏழைகளுக்கு இரங்குங்காணும்?

சாலைக்கு வருவோர் பலராவர். அவர்களுள் வசதி வாய்ந்தவரும் உண்டு, வசதி அற்றவரும் உண்டு. அவர்களுக்கு எப்படி உதவுவது? அதுபற்றி தெரிவிக்க, ஒருநாள் கல்பட்டு ஐயாவையும் தலை மாணாக்கரையும் வள்ளல் அழைப்பித்தருளினார்கள்.

"ஒன்று உரைப்பேன். ஊன்றிச் செய்யுங்காணும்" என்று உரைத்திட முற்பட்டார்கள். "எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர் முகத்தை இங்குள்ளவர் பலரும் எண்ணிப்பார்ப்பதில்லை. வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு வேண்டியது கிடைத்துவிடும். ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசிநீக்க, கூழினைக் கண்ணும் கருத்துமாக வார்த்து வாருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள். அதுமுதற்கொண்டு தலை மாணவரும் கல்பட்டு ஐயாவும் போட்டிப் போட்டுக்கொண்டு நான் நீ எனக் கூழை வார்த்து ஏழையர் வயிற்றுள் பற்றியெரியும் நெருப்பைத் தணித்து வந்தார்கள்.

அத்தகைய உத்தமப் பணியைச் செய்ய நம்பெருமான் யாருக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்? உண்மை அன்பு உண்மை இரக்கம், உண்மை நம்பிக்கையுடைய உண்மைத் தொண்டர்கட்கு அன்றோ!

மகத்துகள்

பெருமானை அண்டி அருள்நெறி பழகும் அன்பர்கள் பலருள் தலை நின்றவர் கல்பட்டு ஐயா, உண்மைச் சாதனத்தில் தோய்ந்து உண்மை அடியவராய் விளங்கியவர் கல்பட்டு ஐயா. சுத்த சன்மார்க்கச் சங்கத்துச் சாதுக்களின் வரிசையில் முன்நின்றவர் கல்பட்டு ஐயா. அவரைச் சுத்த சன்மார்க்கச் சங்கத்து மகத்து அதாவது மகாத்மா என்று அக்காலத்திலேயே அழைத்தனர்.

ஒருகால் நம்பெருமான் தொழுவூர் வேலாயுதனார் பாடல்களை ஆய்ந்து 'உபயகலாநிதிப் பெருபுலவர்' என்னும் உயரிய பட்டத்தினை வழங்கி மகிழ்வித்தார்கள். அப்படித் தலைமாணாக்கரின் பாடல்களைப் பார்வையிட்ட போது, அது சுத்த சன்மார்க்கச் சங்கத்து சாதுக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அப்பட்டமளிப்பு விழாவிற்குக் கல்பட்டாரும் நம் பெருமானாரால் அழைக்கப்பட்டார். இச்செய்தியினை, தொழுவூராரின் திருமகனார் திருநாகேசுவரர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்...

"ஒரு காலத்தில் இந்நூலாசிரியர் (தொழுவூரார்) பக்தியினால், பொறித்து வைத்திருக்கும் பாக்களை தர்மலிங்க பிள்ளை, வெங்கடேச ஐயர், அடூர் குருக்கள் என்னும் சபாபதி சிவாச்சாரியார் முதலியோர் மூலமாகக் கேள்வியுற்று சுவாமிகள் அவைகளை வரவழைத்து அவ்விடம் கூடியிருந்த சுத்த சன்மார்க்க சங்கத்தினராகிய ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள், கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் முதலிய மகத்துகள் முன்னிலையில் தானும் உடனிருந்து அவைகளின் சொற்சுவை, பொருட்சுவை, முதலியவைகளைஆராய்ந்து வியந்து, "நமது முதலியாரப்பா மதுர வாக்கிது, வித்துவான் பாட்டிது," என்று இடையிடையே அருமை பாராட்டி, "மலர்வாய் மலர்ந்த மணிவார்த்தையிது" என்று தமது திருக்கரம் கொண்டே வரைந்தும் "உபயகலாநிதிப் பெரும்புலவர்" என்னும் பட்டமளித்துப் பொறித்து வைத்துங் களித்தார்."
                   (மார்க்கண்டேய புராணம், தொழுவூர் வேலாயுதனார் வரலாறு)
மேற்குறித்த வரலாற்றுச் செய்தியின் மூலம் கல்பட்டு ஐயா சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்ட மகத்துகளுள் ஒருவர் என்பது தெரிகின்றது.

கிடக்க விரும்புதுங்காணும்!

நம்பெருமானும், கல்பட்டாரும் ஒருகால் மாட்டு வண்டியில் பயணம் செய்தார்கள், இடையில் பெருமான் கல்பட்டாரை நோக்கி, "கிடக்க விரும்புதுங்காணும்" என்று படுத்திட விரும்பினார்கள்! உடனே கல்பட்டு ஐயா நம்பெருமானின் திருமுடியினைத் தம் தொடைமீது வைத்துத் தாங்கிக்கொண்டார். அவ்வாறு கல்பட்டாரின் தொடையில் நம்பெருமானார் விரும்பியே படுத்திட்டார்கள்!

கல்பட்டாரின் தொடையில் வள்ளல் தம் திருமுடியினை வைத்துப் படுத்திடும் புண்ணியம் எந்த அடியவர்க்கு இதுவரை கிட்டியது? நம்பெருமான் சாதாரணமானவர்கள் அல்லவே! எல்லாம் வல்ல இறைவனின் அடியினை தம் சிரசில் தாங்கியவர்கள், இறையடியை அறிந்தவர்கள், இறைநடுவை அறிந்தவர்கள், இறைமுடியை அறிந்தவர்கள் அன்றோ!
அம்மட்டோ? எல்லாம் வல்ல இறைவனின் அடிநடுமுடி கடந்து, அப்பாலும் அப்பாலும் கண்டிட்டவர்கள்! அத்துடன் அது அதுவாக நிறைந்து ஆண்டவனாக விளங்கி நிற்பவர்கள். அப்பெருமானின் அற்புதத் திருமுடியைத் தாங்கும் பெரும்பேற்றினைக் கல்பட்டார் தொடைகள் பெற்றன. ஒப்பற்ற அப்பேற்றினை பெறுதற்கு எத்தனை கோடி தவந்தான் கல்பட்டாரின் தொடைகள் செய்தனவோ? யாரே பெறுவார் அப்பேறு?

உலகமெலாம் இப்படி இருக்கிறதேங்காணும்!

அருட்பிரகாச ஆண்டவரையும், பெரும்பேறு பெற்ற அடியவரையும் தாங்கிக் கொண்டு, வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போழுது வியப்புக்குரிய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது!

நமது பெருமானின் திருமலர்க் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்ஙனம் பெருகிய கண்ணீர் கல்பட்டாரின் தொடையை நனைத்தது பின்னும் கண்ணீர் வழிந்து வண்டிப் பலகையையும் ஈரப்படுத்தியது. மேலும், வண்டிப் பாரையுங் கடந்து கீழே வழிந்துக் கொண்டிருந்தது. அப்படிச் சிறிது நேரம் மட்டும் நிகழவில்லை, சிலமணி நேரம் தொடர்ந்து நிகழ்ந்திட்டது!

அதனைக் கண்டார் கல்பட்டார், எதுவும் எண்ணவில்லை. மனம் அடங்கிய நிலையுற்று ஒருமையில் நிறைந்தார். அப்படி பெருமான் விழி, நீர் வடிப்பதும், கல்பட்டார் மனம் அடங்கி ஒருமையில் இருப்பதும், தொடர்ந்துக் கொண்டிருந்தது. நெடுநேரம் கடந்தும், பெருமான் கண்ணீர் பெருக்குவது நின்றபாடில்லை. மனம் விரிந்து, கண்ணீர் பற்றி சிந்திக்குமானால், பெருமான் கண்ணீர் பெருகும் நிலை கலையுமே என்று கருதியவராய் கல்பட்டு ஐயா, மேலும் ஒருமுகப்பட்டு உள்முகத்தில் நின்றார். பெருமானின் நிலையோ மாறிடவில்லை. தொடர்ந்திருந்தது பார்த்து அயர்ந்த அடியவரின் ஒருமை கலைந்தது. நெஞ்சம் நினைக்கத் தொடங்கி விட்டது.

மூவாசையையும் வென்றவர்கள் நம்பெருமான், இறைஞானப் பெருஞ் செல்வத்தை நிகரற்றுப் பெற்றவர்கள் அவர்கள். அத்தகைய பெருமானுக்கு உற்றகுறை என்னையோ? என்னையோ? எதனால் இப்படி அழுது கொண்டிருக்கிறார்கள்? என்று நினைத்தார் கல்பட்டார்!

அவர் நினைவைப் பெருமான் உணர்ந்திட்டார்கள். உடனே எழுந்து கண்ணீரைத் துடைத்தவாறு, "பிச்! அதற்கு இல்லைங்காணும். இந்த உலகமெலாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத் தாங்காணும்!" என்று உரைத்தருளினார்கள்.

கல்பட்டாரின் விரிந்த நினைவு பெருமானாரின் நிலையை மாற்றிவிட்டது. அருள்நெறியைக் காதலித்து, உலகமெலாம் துன்பம் அற்று ஒன்றாதல் என்று வருமோ? என்பதனால் அல்லவா இப்படி அழுது அழுது ஆராமை அடைந்தார்கள்! உலகமெலாம் பேரின்ப நிலையிற் கலந்து அன்பால் ஒன்றுவது என்றோ? இந்தக் கவலை எத்தனை எத்தனை பேருக்கு இருக்கும்? என்று எண்ணி எண்ணித் துயரில் அழுந்தினார் கல்பட்டு ஐயா, அந்தோ! உயிர்களின் துன்பமெலாம் ஓடி இன்பமெலாம் பாடியாடும் நாள் எந்நாளோ? என அயர்ந்திட்டார் கல்பட்டார்.

நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்!

வேதாந்த சித்தாந்த சமரசம் புகட்டும் நூல் ஒழிவிலொடுக்கம். அதனை இயற்றியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளலார். அந்நூலுக்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தவர்கள் நம்பெருமானார் ஆவர். ஒருநாள் ஆடூர் சபாபதியார் அந்நூலை ஓதிக் கொண்டிருந்தார். அப்பக்கமாக வள்ளற்பெருமான் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பதைக் கண்டு நின்றார்கள்...
           
"என்ன புத்தகம்?" என்று வினவினார்கள்.

சட்டென்று எழுந்து பணிந்து நின்று, "ஒழிவிலொடுக்கம் சுவாமி!" என்றார் சபாபதியார்.
"இப்புத்தகத்தை நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்" என்று சொல்லிக்கொண்டே சென்றார்கள் வள்ளல்.

சபாபதியார் நெஞ்சம் ஆட்டங் கண்டது. இதைப் பதிப்பித்தவர்களே இப்படிச் சொல்லுகிறார்களே! காரணம் எதுவாக இருக்கும்? என்று தலையைப் பிய்த்துக்கொண்டார். எண்ணிஎண்ணிப் பார்த்தார், ஏதும் புரியவில்லை.

பெருமானின் உள்ளக்கிடக்கையை விளக்கவல்லாரைப் பற்றி நினைத்ததும், கல்பட்டு ஐயா நினைவு வந்தது. உடனே ஓடினார். கல்பட்டின் முன் நின்றார். அவரிடம் வள்ளல் கருத்தினைச் சொன்னார்.

அவர் "நீர் அப்புத்தகத்தை தொடவே அருகரல்லர்!" என்று உண்மையை விளக்கினார். இது பற்றி இசைவாணர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை பாடிய பாட்டு ஒன்று பின்வருமாறு உணர்த்துகிறது...

தாமச் சிடுவித்த நூலை ஆடூர்சிவா
  சாரியார் அன்பொடு படிக்கத்
தரியாது எதிர்வந்து அங்கியிற் சுடுமென்று
  சாற்றிய தால்மனம் துடிக்கத்
தக்கணங் கல்பட்டுச் சிவயோ கியரைச்
  சார்ந்து புகலஅம் மொழிக்கு மெய்யுரை
தக்கவர் நீரலர் என்று புகன்றிடும்
  தன்மை யறிந்த எம்போதம் அகன்றிடும்.
         (இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - சரணம் 183)

உரையமுதம் உண்ணும் கல்பட்டார்

வள்ளல் கேட்பவர் மனங்கொள்ளும்படிப் பல உரை விரிப்பவர்கள். ஒருகால் வடகலை வைணவர்க்காக வேதாந்த தேசிகரின் 'மூன்றில் ஒரு மூன்று' என்னும் குறளுக்கு நான்கு உரைகள் உரைத்தருளினார்கள். மற்றொருகால் திரிசிரபுரம் மகாவித்வான் பெருமான் திருமுன்பு பணிந்து இங்கித மாலை பாட்டொன்றுக்கு உரையருள வேண்டினார். வள்ளல் முதல் பாட்டுக்கே உலகியல் தொடர்புள்ள பல உரைகளை நான்கு மணிநேரம் விளக்கினார்கள், அது அவருக்கு புரிந்தது. மேலும் அனுபவ உரையாகிய பேரின்ப உரையினை சொல்லத் தொடங்கினார்கள். அது புரியாமல் மீனாட்சி சுந்தரனார் திகைத்தார், தொழுவூராரும் கைவிட்டார் என திருவாய் மலர்ந்து பெருமான் விரிவுரையை நிறுத்திக் கொண்டார்கள்.

கேட்பவர் பக்குவம் அறிந்து சொல்லும் பாங்கு வியப்புக்குரியது. சமயத்தில் பற்றுள்ளவர்களுக்குச் சைவம், வைணவம் முதலிய சமய சார்பான விளக்கம், மதத்தில் பற்றுள்ளவர்களுக்கு வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதச் சார்பான விளக்கங்களையும், அல்லாதவர்களுக்கு உலகியல் சார்பான விளக்கம், கற்ற புலவர்களுக்கு இலக்கண இலக்கிய பற்றிய விளக்கம், தொழுவூராருக்கு உயர்வுடைய விளக்கம், கல்பட்டாருக்கு அனுபவ விளக்கம் என்று இப்படி தனது கருத்துமணிகளை நம்பெருமான் தந்தருள்வார்கள்.

குருவித் தலையில் பனங்காய் வைக்க அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவ்வாறு முடிந்த முடிவான தெள்ளமுத கருத்துகளை அருந்தி அருந்தி எத்தனை தடவைதான் இன்புற்றனரோ கல்பட்டு அடிகள்!

கல்பட்டு ஐயாவின் ஆர்வம்!

சன்மார்க்க சங்கத்தினர் நன்னெறிகளை உலகினர்க்கு உணர்த்திட விழைந்தனர். அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களையும் உலக மக்கள் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்திட உதவ முனைந்தனர். அங்ஙனம் அறிவதற்கும் அனுபவித்தற்கும் விவேகம் விருத்தியாதல் வேண்டும்.

அதனை அடைவதற்குத் தக்க நன்முயற்சியைத் தரக்கூடிய பத்திரிகை ஒன்றை 1867 க்குப் பின் வழங்குவிக்க இச்சை கொண்டனர், அதற்குச் "சன்மார்க்க விவேக விருத்தி" எனப் பெயரிட்டனர். அது சிறப்புற நடையிட அன்பர்கள் பலர் நன்கொடைகள் அளிக்க விரும்பினர். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு உதவிட முன்வந்தனர்.

மாதந்தோறும் தாங்கள் தருவதை ஏடு ஒன்றினில் குறித்துக் கையொப்பம் இட்டனர். கல்பட்டு அடிகளும் அவ்வேட்டில் கையெழுத்திட்டு 2 அணா பொருள் உதவி செய்ய ஒப்புதல் அளித்தனர். நம்பெருமானார் 1 ரூபாய் அளித்தார், மற்றுமுள்ளவர்களும் அளித்துள்ளனர்.

ஆதலின் உலகமெலாம் சன்மார்க்கம் தழைத்து ஓங்குவதில் கல்பட்டு ஐயாவிற்கு இருந்த ஆர்வத்தினை அறிந்திடலாம். அதில் அவருக்கு இருந்த ஈடுபாடு பெரிது.

                         (இரண்டாம் பாகம் தொடரும்) 





                             






   









 



Monday, April 29, 2013

காதலின் சிறப்பு



                                                காதலின் சிறப்பு                                         29-04-2013

                                      (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
                                                     அருட்பெருஞ்ஜோதி


எந்தை நெஞ்சம் எல்லாமுடைய எங்கும் விரியும் பிரபஞ்சம்
விந்தை உலகில் அவள்மேனி வளங்களிலே என்ன பஞ்சம்
மந்தை மனிதனாய் நெஞ்சமறந்து மஞ்சத்திலடைந்தேன்அவளிடம் தஞ்சம்
கந்தை எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லப்பார்க்க விழைந்தேனே     (1)

நீயும் நானும் அமர்ந்திருந்த நிலவுமிலா தனிமையான இடத்தில்
சாயுங் காலத்தில் தேனும்பாலும் சேர்ந்தவள் கனிமையான பார்வையும்
பாயும் சந்திரனின் ஒளியும் பேசும் தென்றலின் குளிர்ச்சியும்
காயும் எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லப்பேச விழைந்தேனே             (2)

மலர்ந்த முகமும் சிவந்த மேனியும் கவர்ச்சிக் கண்களும்  
உலர்ந்தக் கூந்தலும் மெலிந்த உருவமும் இல்லா இடையும் 
அலர்ந்த தாமரையும் உயர்முளை அரங்கமும் தாழ் பாதங்களையும்
கலந்த எந்தன் மனதிற்கு கேளாமல் மெல்லத்தொட விழைந்தேனே            (3)

மலையான பொதிகையும் பசும் மரக்கொடிகளும் வீழும் அருவியும்
அலையான கடலும் பறவையாம் அன்னமும் இனிதே பார்த்தும்
விலையான வைரமும் உனக்காக வாங்கி கைகோற்று நடந்தும்
வலையான எந்தன் மனமது வாடாமல் மெல்லக்கூட விழைந்தேனே       (4)

மென்று முழுங்க முடியாமல் மாயமாய் முடிந்தது நம்மால்
அன்று மெல்லச்செய்ய நினைத்தவை எதுவும் முடியாது போனது
என்று வருவாய் நீஎன இருக்கையில் தந்தாய் தரிசனம்
இன்று இருவரும் அருகில் இல்லைபார்வை படும் தூரம்தான்           (5)

நிலவும் பூமியுமாய் தொடாமல் நில்லாமல் சுற்றுவதே அன்புச்சுற்றம்
செலவும் வரவுமாய் விடாமல் சேர்ந்து வாங்குவதே அன்புக்கடன்
காலமும் காதலுமாய் என்றும் காமுற்று மயங்குவதே அன்புச்சுகம்
பலவும் தொட்டுவிட முயன்றால் பாவம் கடவுளும் கல்லாவான்         (6)

தொடாமல் இணையும் வித்தை தெரிந்தோம் வள்ளல் அவன்
போடாமல் போட்டத் தாழ்ப்பாளைப் பிளந்தோம் திருவறையில் உடல்
கூடாமல் நாமிருவரும் உள்ளமுருகி களித்துருத் தெரியாமல் போவோம்
வாடாமல் என்றும் இருப்போம் வள்ளலிருக்க வாட்டமும் ஏனோ        (7)

உரைத்தக் கலைக் கற்பனையான ஊத்தை மதங்கலல்ல நம்காதல்
விரைத்த்க் கல்லைக்கழுவி அபிஷேகம் வார்க்கும் பக்தியல்ல நம்காதல்
கரைத்தக் களிமண்ணில் பிடித்தக் கல்பிள்ளையார் வழிபாடல்ல நம்காதல்
மரைத்தத் திரைகளேழும் விலகியாயிர மாசூரியபிரகாச ஒளியே நம்காதல்       (8)

தினம் ஐந்துமுறை அல்லாஓதி தளர்ந்தவுயிர் அல்லாப்பிணத்தைத் தின்று
தானம் எனப்பிண்டத்தைக் கொடுக்கும் துன்மார்க்கம் அல்ல நம்காதல்
மனம் போனப் போக்கில் மயக்கும் ஆராதனைகள் நடத்தி
ஈனம் மின்றிஏமாற்றும் வித்தர்கள் ஆளும் சிலுவைமார்க்கமல்ல நம்காதல்       (9)

நானும் நீயும்அமர்ந்திருந்த அந்த நலினமான புனிதஇடம் இப்போதும்
வானும் காற்றும்போல நாமில்லாதபோதும் வண்ணமயமான அழகைப் பார்த்தாயா
மானும் மயிலுமாய் ஓடியாடியல்லா மண்னுயிர்களும் இன்புற்றிருக்க நினைந்து
தேனும் பாலுமாய்க்கூடி சத்தாய் தேகம்சாதலின்றி சுத்தசன்மார்க்க காதலில்வாழ்வோம்     (10)


அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி

















திருவடிப் புகழ்ச்சி


                                         திருவடிப் புகழ்ச்சி                                   29-04-2013

உயிர்களுக்கெல்லாம் உறவானவர்களே, வணக்கம்!

இவ்வுலகில் வாழும் நாம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, தங்களுடைய காரியங்களை வெற்றிகரமாக முடித்துக்கொள்கிறோம் என்பது உண்மை. புகழ்ச்சிக்கு அடிமையாகாத மனிதர்கள் இல்லை எனலாம். உண்மையில் புகழுபவனுக்கு அப்புகழை ஏற்பவன் அடிமையாகிவிடுவான். அதனால் தான் புகழுபவனின் காரியங்கள் வெற்றியடைகின்றன. புலவர்கள் மன்னர்களை புகழ்ந்துப் பாடியதும், அமைச்சர்கள் யாவரும் முதலமைச்சரை புகழ்வதும், முதலமைச்சர்கள் பிரதம அமைச்சரை புகழ்வதும் எதற்காக என்றால் காரிய சித்தியடைவதற்காகவே ஆகும். திருவள்ளுவரைக்கூட இந்த புகழ் விட்டு வைக்கவில்லை. அவர் இயற்றிய குறளை படியுங்கள்...    

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இக்குறளுக்கு இதுவரை யாரும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும் இதுவரை புரியவில்லை, 

எழுதின் புரிதலோடு எழுதுக அஃதிலார்
எழுதலின் எழுதாமை நன்று.

இந்தக் குறளை பொறுத்தமட்டில், இதுதான் திருவள்ளுவருக்கு என்னுடைய புகழுரையாகும். இறைவனும் இந்தப் புகழுக்கு அடிமையானவனே என்றால் அது பொய்யன்று. திருவள்ளுவர் இங்கே இதற்காக ஒரு சரியானக் குறளை கொடுத்திருக்கிறார்...

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

உயிர்கட்கு இருவினைத் தொடர்பு உண்டென்றும், அது நீங்குதற்கு அவன் திருவடியைப் புகழ்வதாகிய வினையே வேண்டுவது என்றும் திருவள்ளுவர் உரைக்கின்றார். மேலும் இதற்குச் சாட்சியாக பல்லாயிரங்கணக்கான தமிழ் இலக்கிய / ஆன்மீக நூல்களை கூறலாம். அந்த வகையில் நமது வள்ளலார் தம் இறைவனை புகழ்ந்துப் பாடியதே இந்த திருவடிப் புகழ்ச்சியாகும்.


வள்ளலார் இயற்றிய திருவடி புகழ்ச்சியின் சிறப்புகள்:-

# இத் திருவடிப் புகழ்ச்சியில் வள்ளலார் மொத்தம் 114 இடங்களில் 'பதம்' என்கிற இறை பதத்தை உபயோகப் படுத்தியுள்ளார். இறுதியில் முடிக்கும் போது 'அழிவில் நின்று உதவுகின்ற பதமே' என்று முடித்துள்ளது சிறப்பாக அமைகிறது.

#  இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128). 

# இப்பாடல் 'கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்னும் இலக்கண வகையைச் சார்ந்தது. 'கழிநெடிலடி' என்பது ஐந்து சீர்களுக்கும் மிக வருவது. 'விருத்தம்' என்பது நான்கு அடிகளாக மட்டுமே அமைவது. 

# பரசிவம், தரமிகும், மரபுறு, இரவுறும் என்பன அடிதோறும் முதல் சீர்களாக வந்து எதுகை தொடையாக இருப்பதைக் கவனிக்கவும்.

# வரி ஒன்றுக்கு 6 சீர்கள் என 32 வரிகளில் (ஒரு அடியில்) 192 சீர்களை இது கொண்டுள்ளது. 

# அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களில் 50 க்கும் அதிகமான் சீர்களை உடையவை உள்ளன. ஆனால் 192 சீர்களைக் கொண்ட ஒரு தமிழ்ப் பாடல் உண்டு என்றால் அது தமிழ் இலக்கிய உலகில் வள்ளலார் இயற்றிய இந்த 'திருவடிப் புகழ்சி' ஒன்றே ஆகும். 

திருவடி புகழ்ச்சி

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்
பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்
பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம் (32) 1st Adi
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம் (64) 2nd Adi
மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம் 
மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந்தருளும்பதம்
வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம் (96) 3ed Adi
இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்     
எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே (128)4th Adi
************************************************************************

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்




Sunday, April 28, 2013

அருட்பெருஞ்ஜோதி அகவல்


'அருட்பெருஞ்ஜோதி அகவல்'     28-04-2013

நண்பர்களே, நாம் இப்போது வள்ளலார் இயற்றிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பற்றிக் காண்போம்...

மயிலின் ஓசையை 'அகவல்' என்பார்கள். ஆண் மயில் தன் இணையைக் கூட முற்படும்போது ஏற்படுத்தும் ஓர் இனிய ஓசையினையே நாம் 'அகவல்' என்கிறோம். அது போல, ஓர் அருளாளர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் போது தன்னுடைய அருள் ஆனந்தக் களிப்பினை / நிலையினை தமிழ் பாடல் வழியாக வெளிப்படுத்துவதற்கு 'அகவல்' என்று பெயர் வைத்தனர். இதனைப் பின்பற்றி நமது வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இணைந்த அனுபவத்தினை 'அகவல்' மொழியாக / பாடலாக இயற்றிக் களிப்புற்றார்.

இலக்கியத்தில் 'அகவல்' என்பது:- 

ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம்,

'ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு மூன்றடியே' என்பது தொல்காப்பியம்.

'அருட்பெருஞ்ஜோதி அகவல்' சிறப்புகள்:-

# 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' என்பது 1596 அடிகளைக் கோண்ட ஒரே பாடல் ஆகும். இதனை வள்ளலார் ஒரே இரவில் எழுதியாக கூறுவர். தொல்காப்பியம் கூறுவது போன்று ஆயிரம் அடியால் வந்த ஆசிரியப்பா இதற்கு முன்னர் தமிழ் இலக்கியத்தில் எதுவும் இல்லை. சங்க இலக்கியத்தில் அடியால் மிகுந்து வந்த பாட்டு 'மதுரைக் காஞ்சி' மட்டுமே. இது 782 அடிகளைக் கொண்டது. சங்க காலம் முதல் வள்ளலார் காலம் வரை இதனினும் மிகுந்து வந்த பாட்டு இல்லை.

தமிழ் இலக்கியத்தில் ஆயிரம் அடிகளையும் மிகுந்து வந்த பாட்டு வள்ளலார் அருளிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' மட்டுமே என்பது வியப்பளிப்பதாய் உள்ளது.

# அ....க ..த .. போன்ற எழுத்துக்களை குறில் எழுத்து என்பார்கள்.

ஆ ....கா ....தா போன்ற எழுத்துக்களை நெடில் எழுத்து என்பார்கள்.

அகவலில் முதல் வரி தொடங்கி 874 வரிகள் வரை சற்று கூர்ந்து பாருங்கள்.

முதல் வரி குறில் எழுத்தில் ஆரம்பித்தால் அடுத்த வரி அ என்ற எழுத்தில் மட்டுமே தொடங்குகிறது.

முதல் வரி நெடில் எழுத்தில் ஆரம்பித்தால் அடுத்த வரி ஆ என்ற எழுத்தில் மட்டுமே தொடங்குகின்றது.

இரண்டாவது வரி இந்த இரண்டு எழுத்துக்களில் மட்டுமே தொடங்க எவ்வளவு வார்த்தைகள் ? வள்ளலாரின் பேர் அறிவிற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

# வள்ளலார் அவர்கள் இத் திருஅகவலை, தாம் 'இறைத்திருவாய் சாகாநிலை அடைந்த' மேட்டுக்குப்பம் 'சித்திவளாகத் திருமாளிகையில்' ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் நாள் வியாழக்கிழமை (18-04-1872) நன்நாளில் எழுதி அருளினார்கள்.

# வள்ளலார் தமது தெய்வத் திருக்கரத்தினால் எழுதிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' மூலம் ஒரு காகித நோட்டுப் புத்தகமாக உள்ளது. இது தற்போது 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில்' (வடலூர்) நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுப் புத்தகம் மொத்தம் 58 பக்கங்களைக் கொண்டது.

# இத்திரு அகவல், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் துவங்கி அருட்பெருஞ்ஜோத்ஹி மகாமந்திரத்தில் முடித்திருப்பது சிறப்பு.

# இத்திரு அகவல், உயிர் எழுத்து பன்னிரண்டும், ஆய்த எழுத்து ஒன்றுமாய் அடித் துவக்கத்தில் பொருத்தி துவக்கத்திலேயே சகாக்கல்விக்குண்டான உயிரினை அளித்திருப்பது மிகவும் சிறப்பு.

# இத்திரு அகவலில் - ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீஇயல், காற்றியல், வெளியியல், அகம் புறம், ஐம்பூதக் கலப்புகள், வெளிவகை, அண்டப் பகுதிகள், கடல்வகை, எண்வகை, வித்தும் விளைவும், ஒற்றுமை வேற்றுமை, அகப்பூ, நால்வகைத் தோற்றம், ஆண் பெண் இயல், காத்தருள், அடக்கும் அருள், திரை விளக்கம், அருளில் தெருட்டல், தனிப்பொருள், மெய்ப் பொருள், பராபர இயல், பதவியல், சிவரகசியம், திருவருள் வல்லபம், சிவபதி, அருட்குரு, உயிர்த் தாய், உயிர்த் தந்தை, உயிர்த் துணை, உயிர் நட்பு, உயிர் உறவு, இயற்கை உண்மை (சத்து), இயற்கை விளக்கம் (சித்து), இயற்கை இன்பம் (ஆனந்தம்), அருள் அமுதம், மணி, மந்திரம், மருந்து, மாற்றறியாப் பொன், உலவாநிதி, ஜோதிமலை, இயற்கை பொருண்மை, தனி அன்பு, நிறைமதி, கருணை மழை, செஞ்சுடர், அருட்கனல், பரஞ்சுடர் ஆகிய 52 வகையான இறையாண்மைகளை - முழுவதும் மகாமந்திரத்தின் வாயிலாக நமது வள்ளலார் பாடியிருப்பது மிகச் சிறப்புவாய்ந்தது ஆகும்.

# மேற்கண்ட சிறப்புகளைவிட நாம் ஒவ்வொருவரும் இத்திரு அகவலை உணர்ந்து படித்து இறைதன்மையில் கலப்பதுதான் வான்சிறப்பு.    

அருட்பெருஞ்ஜோதி அகவல்


அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி(1)
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் (3)
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல் (5)
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் (7)
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் (9)
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் (11)
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும் (13)
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென் (15)
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே (17)
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள் (19)
ஐயமும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை (21)
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே (23)
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர் (25)
அவ்வியல வழுத்து மருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் (27)
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும் (29)
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு (31)
அத்து வதச்சபை யருட்பெருஞ் ஜோதி
தூயக லாந்த சுகந்தரு வெளியெனும் (33)
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் (35)
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் (37)
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் (39)
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் (41)
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் (43)
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் (45)
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும் (47)
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் (49)
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் (51)
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளியெனும் (53)
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஏக மனேக மெனப்பகர் வெளியெனும் (55)
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் (57)
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க் கியனிலை யாயது (59)
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய் (61)
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள் (63)
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும் (65)
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள் (67)
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம் (69)
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை (71)
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் (73)
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய் (75)
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய (77)
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம் (79)
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் (81)
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம் (83)
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
வாரமு மழியா வரமுந் தருந்திரு (85)
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் (87)
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினு மழிவுறா (89)
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய (91)
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி (93)
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி (95)
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞான சிதம்பர மெனுமோர் (97)
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள் (99)
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
வாடுத னீக்கிய மணிமன் றிடையே (101)
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே (103)
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர் (105)
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய (107)
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங் (109)
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா (111)
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென் (113)
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமுங் காணா (115)
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர் (117)
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த (119)
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே (121)
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் (123)
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண் டிறவா வரமளித் (125)
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
ஓதியோ தாம லுறவெனக் களித்த (127)
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
படியடி வான்முடி பற்றினுந் தோற்றா (129)
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும் (131)
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும் (133)
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும் (135)
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல் (137)
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
வல்லதா யெல்லா மாகியெல் லாமும் (139)
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோ ர் (141)
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின் (143)
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத் (145)
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும் (147)
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும் (149)
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய் (151)
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் (153)
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் (155)
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய (157)
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
நானந்த மில்லா நலம்பெற வெனக்கே (159)
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை (161)
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது (163)
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென (165)
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி (167)
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும் (169)
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம் (171)
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் (173)
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியி னுபயமும் பரமும் (175)
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
மந்தண மிதுவென மறுவிலா மதியால் (177)
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய (179)
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
செடியறுத் தேதிட தேகமும் போகமும் (181)
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை (183)
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயதென் (185)
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை (187)
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் (189)
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக் (191)
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக் (193)
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் (195)
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் (197)
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென (199)
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் (201)
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் (203)
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே (205)
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
சத்திய மாஞ்சிவ சத்த்஢யை யீந்தெனக் (207)
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
சாவா நிலையிது தந்தன முனக்கே (209)
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென (211)
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல் (213)
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் (215)
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் (217)
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா (219)
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் (221)
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் (223)
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
எண்டர முடியா திலங்கிய பற்பல (225)
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை (227)
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
வாழிநீ டூழி வாழியென் றோங்குபே (229)
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை (231)
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று (233)
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின் (235)
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு (237)
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் (239)
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
கருமசித் திகளின் கலைபல கோடியும் (241)
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகள்வகை யுறுபல கோடியும் (243)
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும் (245)
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை (247)
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம் (249)
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் (251)
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் (253)
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியினிய லேக மனேகம் (255)
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென (257)
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை யினியுறு படியெலாம் (259)
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
படிமுடி கடந்தனை பாரிது பாரென (261)
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த (263)
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி (265)
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே (267)
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென் (269)
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே (271)
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே (273)
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே (275)
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே (277)
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென (279)
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம் (281)
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் (283)
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம் (285)
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் (287)
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே (289)
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென (291)
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த (293)
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் (295)
ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை (297)
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
நவையிலா வுளத்தி னாடிய நாடிய (299)
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் (301)
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் றனையும் (303)
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் (305)
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் (307)
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே (309)
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் (311)
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா (313)
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே (315)
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
உருவமு மருவமு முபயமு மாகிய (317)
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி (319)
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள (321)
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய (323)
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை (325)
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள் (327)
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே (329)
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே (331)
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட (333)
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே (335)
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் (337)
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் (339)
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் (341)
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் (343)
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலினு ளனலா யனனடு வனலாய் (345)
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலுறு மனலா யனனிலை யனலாய் (347)
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய் (349)
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய் (351)
அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய் (353)
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் (355)
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி (357)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி (359)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி (361)
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி (363)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி (365)
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை (367)
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை (369)
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம் (371)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை (373)
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல் (375)
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன் (377)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை (379)
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண் (381)
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள் (383)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் (385)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள் (387)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும் (389)
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் (391)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா (393)
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே (395)
றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல (397)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல (399)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும் (401)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும் (403)
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல (405)
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல் (407)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை (409)
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல (411)
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல (413)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன (415)
லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல் (417)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல (419)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை (421)
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல (423)
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல (425)
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல (427)
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும் (429)
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல் (431)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழியல் பலவா (433)
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம் (435)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யொளியே திகழுற வமைத்ததில் (437)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யருநிலை திருநிலை கருநிலை (439)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல (441)
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை (443)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல (445)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும் (447)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் (449)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல (451)
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் (453)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம் (455)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல் (457)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததிற் பலவும் (459)
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல் (461)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல் (463)
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி லூறியல் காட்டுறு பலபல (465)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில (467)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல (469)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம் (471)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல (473)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில (475)
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன (477)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல (479)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும் (481)
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுணரியல் கருதிய லாதிய (483)
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம் (485)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித் (487)
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம் (489)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் (491)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல் (493)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம் (495)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும் (497)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை (499)
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே (501)
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள் (503)
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல (505)
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல (507)
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல் (509)
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும் (511)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல் (513)
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை (515)
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல் (517)
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை (519)
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
கருதக நடுவொடு கடையணைந் தகமுதல் (521)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை (523)
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல் (525)
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை (527)
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு வதனா லகப்புற நடுவை (529)
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுவா லணிபுற நடுவை (531)
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடு வதனாற் புறப்புற நடுவை (533)
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புகலரு மகண்ட பூரண நடுவால் (535)
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற (537)
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும் (539)
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம் (541)
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம் (543)
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் (545)
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் (547)
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும் (549)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும் (551)
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத (553)
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி (555)
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில் (557)
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த (559)
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி (561)
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரவெளி யதனைப் பரம்பர வெளியில் (563)
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில் (565)
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் (567)
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் (569)
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில் (571)
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை (573)
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி (575)
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை (577)
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள் (579)
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர் (581)
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை (583)
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை (585)
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை (587)
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை (589)
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை (591)
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை (593)
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை (595)
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை (597)
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை (599)
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும் (601)
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை (603)
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை (605)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை (607)
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில (609)
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
களவில கடல்வகை கங்கில கரையில (611)
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற (613)
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும் (615)
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர் (617)
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர் (619)
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம் (621)
அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி
பத்திடை யாயிரம் பகரதிற் கோடி (623)
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம் (625)
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கோடியி லனந்த கோடிபல் கோடி (627)
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திய லொன்றா விளைவியல் பலவா (629)
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க (631)
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப கரிப்பும் (633)
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும் (635)
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும் (637)
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும் (639)
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
முளையதின் முளையும் முளையினுண் முளையும் (641)
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் (643)
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும் (645)
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும் (647)
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய (649)
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உறவினி லுறவும் உறவினிற் பகையும் (651)
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினி லுறவும் (653)
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாதியு முழுதும் பதிசெயு மந்தமும் (655)
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும் (657)
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி னுருவும் உருவினுள் ளுருவும் (659)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அருவினுள் ளருவும் மருவதி லருவும் (661)
அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர் (663)
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி லருவும் மருவதி லுருவும் (665)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வண்ணமு வடிவு மயங்கிய வகைபல (667)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும் (669)
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும் (671)
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும் (673)
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும் (675)
அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
அடியினுள் ளடியும் மடியிடை யடியும் (677)
அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும் (679)
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
முடியினுண் முடியும் முடியினின் முடியும் (681)
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை (683)
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட (685)
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட (687)
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற (689)
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில் (691)
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன (693)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல (695)
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுத லைவகை யறுவகை (697)
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற (699)
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல (701)
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும் (703)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும் (705)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும் (707)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும் (709)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும் (711)
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணியன் மனமு மாணிய லறிவும் (713)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல் (715)
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உனற்கரு முயிருள வுடலுள வுலகுள (717)
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும் (719)
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில் (721)
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை (723)
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை (725)
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும் (727)
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை (729)
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை (731)
அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை (733)
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உயிருறு முடலையு முடலுறு முயிரையும் (735)
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை (737)
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியா லெச்சக வுயிரையும் (739)
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர் (741)
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித் (743)
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும் (745)
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர் (747)
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித் (749)
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அகப்புற வமுதளித் தைவரா திகளை (751)
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தருமக வமுதாற் சத்திசத் தர்களை (753)
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும் (755)
ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை (757)
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை (759)
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம் (761)
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும் (763)
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை (765)
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை (767)
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் (769)
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் (771)
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன (773)
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை (775)
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின் (777)
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின் (779)
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின (781)
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டத் துரிசையு மகிலத் துரிசையும் (783)
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் (785)
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும் (787)
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும் (789)
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை (791)
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம் (793)
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமு மற்றவு மாங்காங் (795)
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும் (797)
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை (799)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில் (801)
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும் (803)
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில் (805)
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில் (807)
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும் (809)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை (811)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் (813)
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால் (815)
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை (817)
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை (819)
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை (821)
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை (823)
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை (825)
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் (827)
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் (829)
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே (831)
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி (833)
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை (835)
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே (837)
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை (839)
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை (841)
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே (843)
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே (845)
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் (847)
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் (849)
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் (851)
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை (853)
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை (855)
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும் (857)
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை (859)
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை (861)
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை (863)
ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில் (865)
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல் (867)
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட (869)
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட (871)
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே (873)
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது (875)
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல (877)
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில (879)
ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி (881)
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் (883)
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே யின்புரு வாகி (885)
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே (887)
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததி னடுவே (889)
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே
திரையோ தசநிலை சிவவெளி நடுவே (891)
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற் (893)
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே (895)
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய் (897)
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய் (899)
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே
அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப் (901)
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா (903)
உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
அருவினு ளருவா யருவரு வருவாய் (905)
உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய் (907)
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா (909)
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே
ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு (911)
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும் (913)
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும் (915)
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க (917)
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க (919)
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே (921)
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே (923)
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே (925)
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே (927)
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே (929)
பரம்பரா பரமே பதம்பரா பரமே
சத்திய பதமே சத்துவ பதமே (931)
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே (933)
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே (935)
அம்பரம் பதமே யருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே (937)
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே (939)
சிவந்தரு பதமே சிவசிவ பதமே
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே (941)
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும் (943)
பரமமே பரம பதந்தருஞ் சிவமே
அவனோ டவளா யதுவா யலவாய் (945)
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ் (947)
செம்பொரு ளாகிய சிவமே சிவமே
ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு (949)
திருநிலை மேவிய சிவமே சிவமே
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு (951)
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச் (953)
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச் (955)
செல்வமு மளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த் (957)
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ் (959)
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன (961)
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச் (963)
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட் (965)
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவரு ணெறியெனப் (967)
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக (969)
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல (971)
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே (973)
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம் (975)
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவு மசைந்திடா ததனால் (977)
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அருளுறி னெல்லா மாகுமீ துண்மை (979)
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் (981)
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் (983)
தெருளிது வெனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் (985)
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் (987)
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே (989)
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய் (991)
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும் (993)
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை (995)
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி (997)
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முரு (999)
அருளே நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்மடி யருளே நம்முடி (1001)
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம் (1003)
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம் (1005)
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில் (1007)
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி (1009)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நங்குல மருளே நம்மினம் (1011)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர் (1013)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை (1015)
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை (1017)
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள் (1019)
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத் (1021)
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச் (1023)
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென் (1025)
கைவரப் புரிந்த கதிசிவ பதியே
துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த (1027)
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை (1029)
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி (1031)
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ (1033)
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை (1035)
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது (1037)
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத் (1039)
திரமுற வருளிய திருவருட் குருவே
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின் (1041)
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங் (1043)
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம் (1045)
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே (1047)
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே (1049)
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே (1051)
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும் (1053)
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே (1055)
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே (1057)
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே (1059)
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே (1061)
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள் (1063)
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் (1065)
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும் (1067)
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம் (1069)
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
சீருற வருளாந் தேசுற வழியாப் (1071)
பேருற வென்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப் (1073)
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான் (1075)
ஈன்றமு தளித்த வினியநற் றாயே
பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால் (1077)
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை (1079)
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே
அருளமு தேமுத லைவகை யமுதமும் (1081)
தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
இயலமு தேமுத லெழுவகை யமுதமும் (1083)
உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
நண்புறு மெண்வகை நவவகை யமுதமும் (1085)
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள வமுத வகையெலா மெனக்கே (1087)
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே (1089)
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக் (1091)
கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே (1093)
சத்தியை யளித்த தயவுடைத் தாயே
சத்திநி பாதந் தனையளித் தெனைமேல் (1095)
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய் (1097)
சித்தியை யளித்த தெய்வநற் றாயே
தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே (1099)
என்னைமே லேற்றிய வினியநற் றாயே
வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே (1101)
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங் (1103)
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந் (1105)
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம் (1107)
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத் (1109)
தரியா தணைத்த தயவுடைத் தாயே
சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங் (1111)
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும் (1113)
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப (1115)
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
எல்லா நன்மையு மென்றனக் களித்த (1117)
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய (1119)
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே (1121)
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த (1123)
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி (1125)
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே (1127)
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா வருளர சாட்சியிற் (1129)
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப் (1131)
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
தங்கோ லளவது தந்தருட் ஜோதிச் (1133)
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில் (1135)
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில் (1137)
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில் (1139)
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே
தன்வச மாகிய தத்துவ மனைத்தையும் (1141)
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை (1143)
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும் (1145)
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
தன்னிய லென்னியல் தன்செய லென்செயல் (1147)
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை (1149)
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென் (1151)
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே (1153)
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை (1155)
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும் (1157)
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த (1159)
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம் (1161)
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய (1163)
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச் (1165)
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட் (1167)
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறையிது வழியிது துணிவிது நீசெயும் (1169)
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை (1171)
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே (1173)
யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா (1175)
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென் (1177)
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே (1179)
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே (1181)
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண் (1183)
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த (1185)
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
குணங்குறி முதலிய குறித்திடா தெனையே (1187)
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் (1189)
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே
சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும் (1191)
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக் (1193)
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா (1195)
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும் (1197)
எனக்குற வாகிய என்னுயி ருறவே
துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா (1199)
தென்னுற வாகிய வென்னுயி ருறவே
என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய் (1201)
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும் (1203)
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும் (1205)
இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும் (1207)
ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே (1209)
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே
துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென (1211)
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
அன்றத னப்பா லதன்பரத் ததுதான் (1213)
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய் (1215)
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் (1217)
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் (1219)
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் (1221)
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் (1223)
ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய் (1225)
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
அறிவவை பலவா யறிவன பலவாய் (1227)
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய் (1229)
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் (1231)
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் (1233)
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
அண்ட சராசர மனைத்தையும் பிறவையும் (1235)
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட (1237)
எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய் (1239)
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே
இதுவது வென்னா வியலுடை யதுவாய் (1241)
எதிரற நிறைந்த வென்றனி யின்பே
ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல் (1243)
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
அறிவுக் கறிவினி லதுவது வதுவாய் (1245)
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை (1247)
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும் (1249)
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் (1251)
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும் (1253)
எல்லா வின்புமா மென்றனி யின்பே
கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின் (1255)
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி (1257)
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா (1259)
வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் (1261)
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
உள்ளதா யென்று முள்ளதா யென்னுள் (1263)
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
எல்லா மினிப்ப வியலுறு சுவையளித் (1265)
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
சாகா வரமுந் தனித்தபே ரறிவும் (1267)
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரு மனந்த சித்தியு மின்பமும் (1269)
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி (1271)
ஆரண முடியுட னாகம முடியுங்
கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு (1273)
நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
சத்திய வமுதே தனித்திரு வமுதே (1275)
நித்திய வமுதே நிறைசிவ வமுதே
சச்சிதா னந்தத் தனிமுத லமுதே (1277)
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
ஆனந்த வமுதே யருளொளி யமுதே (1279)
தானந்த மில்லாத் தத்துவ வமுதே
நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே (1281)
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே (1283)
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
அகம்புற மகப்புற மாகிய புறப்புறம் (1285)
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
பனிமுத னீக்கிய பரம்பர வமுதே (1287)
தனிமுத லாய சிதம்பர வமுதே
உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே (1289)
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள (1291)
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள (1293)
பண்டமுங் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற (1295)
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
விண்பத மனைத்து மேற்பத முழுவதுங் (1297)
கண்பெற நடத்துங் ககனமா மணியே
பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ் (1299)
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக் (1301)
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும் (1303)
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந் (1305)
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா (1307)
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
நவமணி முதலிய நலமெலாந் தருமொரு (1309)
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து (1311)
நான்பெற வளித்த நாதமந் திரமே
கற்பம் பலபல கழியினு மழியாப் (1313)
பொற்புற வளித்த புனிதமந் திரமே
அகரமு முகரமு மழியாச் சிகரமும் (1315)
வகரமு மாகிய வாய்மைமந் திரமே
ஐந்தென வெட்டென வாறென நான்கென (1317)
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
வேதமு மாகம விரிவுக ளனைத்தும் (1319)
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு (1321)
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந் (1323)
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ் (1325)
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு (1327)
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் (1329)
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் (1333)
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும் (1335)
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த் (1337)
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய் (1339)
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய் (1341)
ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச் (1343)
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே (1345)
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும் (1347)
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய் (1349)
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா (1351)
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக் (1353)
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
எண்ணிய தோறு மியற்றுக வென்றனை (1355)
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப் (1357)
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப் (1359)
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே
விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப் (1361)
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
நால்வகை நெறியினு நாட்டுக வெனவே (1363)
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
எழுவகை நெறியினு மியற்றுக வெனவே (1365)
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப் (1367)
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
ஊழிதோ று஖ழி யுலப்புறா தோங்கி (1369)
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே
இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் (1371)
குதவினு முலவா தோங்குநன் னிதியே
இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற் (1373)
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை (1375)
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே (1377)
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே (1379)
நிற்குண நிதியே சிற்குண நிதியே
பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே (1381)
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கு மரகத மலையே (1383)
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே (1385)
துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர் (1387)
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய (1389)
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே (1391)
உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே
என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள (1393)
நன்றுற விளங்கிய நந்தனக் காவே
சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர் (1395)
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே (1397)
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே (1399)
இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே (1401)
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே (1403)
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே (1405)
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே (1407)
கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே (1409)
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே (1411)
ஏலவே நாவுக் கினியகற் கண்டே
உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே (1413)
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
நவையிலா தெனக்கு நண்ணிய நறவே (1415)
சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே (1417)
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி (1419)
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும் (1421)
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
யாழுறு மிசையே யினியவின் னிசையே (1423)
ஏழுறு மிசையே யியலரு ளிசையே
திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே (1425)
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே (1427)
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே (1429)
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே
நம்புறு மாகம நவிற்றிய பாட்டே (1431)
எம்பல மாகிய வம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே (1433)
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே (1435)
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
என்பெருந் தவமே என்றவப் பலனே (1437)
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே )
என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே (1439)
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
என்பெரு நலமே யென்பெருங் குலமே (1441)
என்பெரு வலமே யென்பெரும் புலமே
என்பெரு வரமே யென்பெருந் தரமே (1443)
என்பெரு நெறியே யென்பெரு நிலையே
என்பெருங் குணமே என்பெருங் கருத்தே (1445)
என்பெருந் தயவே யென்பெருங் கதியே
என்பெரும் பதியே யென்னுயி ரியலே (1447)
என்பெரு நிறைவே யென்றனி யறிவே
தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் (1449)
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட
என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட (1451)
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் (1453)
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் (1455)
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட (1457)
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் (1459)
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் (1461)
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் (1463)
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட (1465)
இனம்பெறு சித்த மியைந்து களித்திட
அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் (1467)
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் (1469)
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் (1471)
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விடய முளவெலா மறைந்திட (1473)
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட (1475)
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
பொன்னடி கண்டருட் புத்தமு துணவே (1477)
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் (1479)
என்னைவே தித்த என்றனி யன்பே
என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து (1481)
என்னுளே விரிந்த என்னுடை யன்பே
என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து (1483)
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே (1485)
என்னுளே நிறைந்த என்றனி யன்பே
துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை (1487)
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா (1489)
என்னுளங் கலந்த என்றனி யன்பே
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி (1491)
என்வசங் கடந்த என்னுடை யன்பே
தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே (1493)
என்னுளே பொங்கிய என்றனி யன்பே
அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர் (1495)
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல் (1497)
லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
மயலற வழியா வாழ்வுமேன் மேலும் (1499)
இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட (1501)
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட (1503)
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட (1505)
ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
ஆகம முடிமே லருளொளி விளங்கிட (1507)
வேகம தறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி (1509)
காரியம் விளக்குமோர் காரண விளக்கே
தண்ணிய வமுதே தந்தென துளத்தே (1511)
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய்தர வமுத முதவியென் னுளத்தே (1513)
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத (1515)
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று (1517)
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட (1519)
வயங்கிய கருணை மழைபொழி மழையே
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப (1521)
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி (1523)
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே (1525)
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல் (1527)
வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
வெம்மல விரவது விடிதரு ணந்தனிற் (1529)
செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே (1531)
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ (1533)
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே (1535)
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த (1537)
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட (1539)
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை (1541)
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
வேதமு மாகம விரிவும் பரம்பர (1543)
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள் (1545)
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு (1547)
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு (1549)
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி (1551)
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையி னடம்புரி (1553)
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே (1555)
ஸ்அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே (1557)
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர் (1559)
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே (1561)
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
உலகியல் சிறிது முளம்பிடி யாவகை (1563)
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா (1565)
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச் (1567)
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால் (1569)
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ் (1571)
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை (1573)
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர் (1575)
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட (1577)
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1579)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் (1581)
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1583)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே (1585)
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1587)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம் (1589)
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக (1591)
உத்தம னாகுக வோங்குக வென்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1593)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி (1595)
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி


ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்