இராணுவ நடவடிக்கை தேவையா?
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலேயே உயிரிழந்தது, தன்மானப் பிரச்சனையை இந்திய அரசிற்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
வியாபர முடக்கம், இரு நாட்டு எல்லைகள் முடக்கம், வான் எல்லை முடக்கம், தூதர்கள் வெளியேற்றம், அந்நாட்டு மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது, வீசா முடக்கம், நதி நீர் முடக்கம் போன்ற பொருளாதாரம் அரசியல் சார்ந்த பாதிப்புக்களை அந்நாட்டிற்கு கொடுத்து அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதே மிகச் சிறந்தது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் இந்தியர்களின், இந்திய குடியுரிமையை ரத்து செய்யும் சட்டம் வரவேற்கத்ததக்கது.
சிம்லா ஒப்ந்தம் ரத்து எனச்சொல்லி இந்தியா மீது போர் தொடுத்த பாகிஸ்தானை எதிர் கொள்வோம்.
மாறாக, நமது நாடு இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதாக இதுவரை சரியான செய்திகள் இல்லை. இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது. நமது நட்பு நாடுகள் நம்மை பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உற்சாகப்படுத்துகின்றன. அவர்கள் வலையில் வீழ்வதைவிட, இராணுவ போர் நமது அழகான பூமிக்கு அழகல்ல. போர் தொடுக்க வேண்டுமானால், அரசியல் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து அவர்களை முடக்குவதே ஒரு நாட்டின் நாகரீகமான போர் ஆகும். அப்படிப்பட்ட போரினை நாம் தற்போது செய்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட போரினை உறுதியாக இறுதிவரை செய்தாலே போதும். பாகிஸ்தான் முடங்கிவிடும்.
இராணுவ ரீதியான போர் இந்தியாவின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளும். மாறாக இராணுவ போர் செய்வதின் மூலம் ஆகும் செலவுகளை, காஷ்மீர் பாதுகாப்பிற்காக செலவுச் செய்து மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகளை விரைவில் வரச்செய்வதில்தான் இந்தியாவின் உண்மையான வெற்றி உள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து, குடும்பத்தின் கட்டுக்கோப்புகளையும் இழந்து வாடும் நமது குடும்பத்தார்களுக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வோம்.
--TMR