அப்பா நான் வேண்டுதல்
அப்பா
நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம்
அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும்
எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை
நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத
மேல்நிலை மேல் சுத்த சிவ
மார்க்கம்
திகழ்ந்தோங்க
அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும்
நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா
நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.