தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளற்பெருமானின் மெய்த்தொண்டர் - நாராயண ரெட்டியார் - கட்டமுத்துப்பாளையம் (பண்ருட்டி) அவர்களின் 91-ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்.
நாள்: 31-01-2026 சனிக்கிழமை.
தொடர்புக்கு; 9003824014
பொங்கல் வாழ்த்துகள்
வள்ளலார் பேருந்து நிலையம்
12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.
சில முரண்பாடுகள்
ஞான சபையில் புலால் உண்பவர்கள்
செல்வதால் தவறில்லை, ஏனெனில் நான் புலால் தவிர்க்கும் முன் ஞான சபைக்குள் சென்றதால்தான்
சன்மார்க்கத்திற்கு வந்தேன். ஞான சபையில் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல்
வேண்டும் என வள்ளலார் சொல்லவில்லை, என சிலர் கூறுகின்றனர்.
வள்ளலாரின் வடலூரை புனித நகரமாக
ஆக்காவிடினும் பரவாயில்லை, அவர் உருவாக்கிய
ஞான சபையில் 20 நபர்கள் அமரக்கூடிய அந்த மிகச்சிறிய இடத்தையாவது புனிதமாக இருக்க விடுங்கள்.
அடுத்து,
புலால் உண்ணும் பார்வதிபுற மக்களிடம்
வள்ளலார் ஏன் நிலத்தை தானமாகப் பெற்றார்? என சிலர் கேட்கின்றனர்?
வடலூர் பெருவெளியினை வேட்டவலம்
ஜமீன்தாரர் அவர்களே வள்ளலாருக்கு தானமாக கொடுத்தார். வள்ளலார் அந்நிலத்தை தானமாக பெறுவதற்கு
முன் அந்த ஜமீன்தாரரை தனது கொள்கைக்கு ஆட்படுத்திய பிறகு அவரை புலால் மறுக்கச் செய்தப்
பிறகே வடலூர் நிலத்தை அவரிடமிருந்து தானமாகப் பெற்றார்.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் சில
சட்ட வரையறைகளுக்காக அந்நிலத்தை பட்டா செய்ய ஜமீன் ஏற்பாடு செய்த சில பார்வதிபுற மக்கள்
அந்நிலங்களுக்காக கையொப்பம் மட்டுமே இட்டனர். ஆனால் அந்நிலத்திற்கும் கையொப்பம் இட்ட
பார்வதிபுற மக்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.
அடுத்து,
ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவதற்கு
வடலூர் தருமச்சாலையை பயன்படுத்துவது சரிதானா?
நான் இவ்வாறு தருமச்சாலையில் மாலை
போட்டுக்கொண்டதால்தான் இன்றைக்கு நான் சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றேன். இன்று
நான் முழுதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதால், மாலை அணிந்து சபரி மலைக்குச் செல்வதில்லை.
எனவே தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள்
வந்து மாலை போட்டுக்கொள்வது தவறல்ல. வள்ளலார் தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை
போடக்கூடாது என எங்கும் சொல்லவில்லை, என ஒரு சன்மார்க்கி கூறுவார்.
இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன
சொல்ல?
ஐயப்ப மாலை போடுவதற்கு அனுமதி அளித்த
இந்து நலத் துறை வன்மையான கண்டனத்திற்கு உரியது.
நன்றி.
https://www.facebook.com/reel/1982273392720324
பௌத்தக் கொடி நாள்
மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு
இருபது வயதுள்ள இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று, ‘சிரங்கு” என்று கூற, “சில நாள் பொறுத்துக் குணமாகும்” என்றனர். அப்படியே சிரங்கில்லாத உடம்பு முழுவதும் பெருஞ்சிரங்காகியது. பின்பு வருந்த, மேட்டுக்குப்பக் கேணியில் மூழ்க குணமாகியது.
--பிரபந்தத்திரட்டு - பக்கம் 124 (அ.திருநாவுக்கரசு பதிப்பு)
சன்மார்க்க குரவர் நால்வர்
வணக்கம்,
நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.
1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்
இந்த சன்மார்க்க குரவர் நால்வர்களின் அருள் வரலாற்றை ஓதி நாமும் உய்வு பெறுவோமாக!
இன்னூல் திரு. சீனி. சட்டையப்பர் அவர்களின் துணைவியாரும், சன்மார்க்க பெருமாட்டியும் ஆன திருமதி மணிமேகலை அம்மாள் அவர்களின் நினைவாக வெளி வந்தமை குறிப்பிட தக்கது.
நன்றி!
Thanks : Dr. RamaPandurangan. Ex. Edu.Dpt. Dir (Madurai)
கீழ் காணும் இணைப்பினைச் சுட்டி மின்னூல் பெறுக்.
https://www.vallalarspace.org/Download/V000041461F
(or)
https://drive.google.com/file/d/1P1PqA8EgrD2wTHc03HymZSiA9EiTZCAD/view?usp=sharing
https://drive.google.com/file/d/1mrhPh7VDLBH1wpjdvLPpGMmPdOq5AmGm/view?usp=sharing