Monday, February 25, 2013

கண்களை நம்பாதே


கண்களால் காணப்படும் இக்காட்சியையே நாம் தவறாக புரிந்துக்கொள்கிறோம். ஆனால் நாம் நமது கண்களால் காணா கடவுளை மட்டும் சிலைகளாகவும், வண்ண கற்பனை படங்களாகவும் பார்ப்பது நியாயமா? அவை உண்மையாக இருக்குமா? சத்தியத்தை போதிப்பது சுத்த சன்மார்க்கம் மட்டுமே, அங்கே தான் கடவுளின் உண்மை நிலையினை தெரிந்துக்கொள்ளலாம். சாதிகளும், சமயங்களும், மதங்களும் மேற்கண்ட படங்களைப் போலவே நம்மை மயங்கவைக்கும். மீண்டும் மீண்டும் பார்த்தாலும், படித்தாலும் அதிலிருந்து உங்களால் உண்மையை காண இயலாது. 

'அண்டாவிற்குள் குண்டான் அடங்கும்; குண்டானுக்குள் அண்டா அடங்காது; எனவே எது எதைவிடப் பெரியது என்பதைப்போல மதச்சண்டைகள் தான் அங்கு காணலாம்.

வழிபாடு என்ற பெயரில் சிலைகளுக்கு ஊற்றும் பாலும், தேனும், பஞ்சாமிர்தமும் உண்மையில் இறைவனை சென்றடைவதில்லை, இனிமேலாகியும் உயிரற்ற கல்லாலும் செம்பாலும் ஆகிய வடிவங்களுக்கு அப்சேகம் என்ற வழிபாடு செய்து வீண்போவதை தவிர்ப்போம்.

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
  தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
  வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
  கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதாது
ஏமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
  எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே (திருவருட்பா)









Sunday, February 24, 2013

சைவ உணவு சாத்தியமா? - 6

சைவ உணவு சாத்தியமா? - 6


ஜாகிர் நாயக்: 

எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

மறுப்புரை:
உயிர்களை கொள்ளாமல் இருப்பது என்பது சாத்தியக்கூறு தான், எவ்வாறெனில் ரம், புல், நெல் முதலான உயிர்களிலிருந்து தோன்றும் விதைகள் உயிரற்ற சடமாதலாலும், அவ்விதைகளை நாமே விதைத்து உயிர் உண்டாக்கக் கூடுமாதலாலும், அத்தாவரங்களை அழிக்காமல் அத்தாவரங்களிலிருந்து உயிர் தோன்றுவதற்கு ஏதுவாக உள்ள சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும், காய்களையும், கனிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், தழைகளையும் மட்டுமே உணவாகக் கொள்ளவேண்டும்.

இவைகளை பறிக்கும்போது தாவரங்களுக்கு வலியுண்டாகாதா? எனக்கேட்டால், உண்டாகாது. எப்படியெனில் நாம் நமது சுக்கிலம், நகம், ரோமம் முதலியனவகைகளை வாங்கும்போது இம்சை உண்டாகாமை போன்று, அவைகளுக்கும் இம்சை உண்டாகாது.

தாவரங்களுக்கு மனமுதலான அந்தக்கரணங்கள் விருத்தியில்லாத படியாலும் அது உயிர் கொலையுமல்ல, துன்பம் உண்டுபண்ணுவதுமல்ல.

தாவரங்களிலிருந்து வரும் விதைகள் சடங்கள் என்பதெப்படி? எனில்,

வித்துக்களில் உயிரிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும். நிலத்தில் விதைத்த பின்பும் சில வித்துக்கள் விளையாமலேயே இருக்கின்றன. எனவே இவைகள் சடம் என்றாகிறது.

ஆனால், இந்த வித்துக்களில் ஆன்மாக்கள் ஏறுவதெப்படி? எனில்,

நிலத்தில் கலந்த வித்திற்கு நீர் விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதிப்படி ஆன்மாக்கள் அணுத்தேகத்தோடு கூடி நிலத்தில் சென்று அந்நிலத்தின் பக்குவ சக்தியோடு கலந்து வித்துகளில் ஏறுகின்றன என்றறியவேண்டும்.

இவ்வாறு வித்துக்கள் முளைத்துவிட்டால் அதனை பிடுங்கக்கூடாது, இனி அது விதை காய், பழம் போன்று சடமல்ல, அதனால் முளைகளைப் பிடுங்கப்படாது.

எனவே சைவ உணவு என்பதின் உண்மை என்னவெனில் மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து, காய், கனி, தழை முதலியவற்றை புசிப்பது மட்டுமே. மாறாக மரத்தையோ, புல்லையோ, நெல்லையோ அழித்தல் கொலைக்குச் சமம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் தாவர உயிர்களைக்கொள்ளாமல் சைவ உணவு உண்பது சாத்தியமே என்பது எனது துனிபு. (நன்றி - திருவருட்பா)


ஜாகிர் நாயக்: 

7. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 ர்நசவண க்கு குறைவான சப்தத்தையும் 20000 ர்நசவண க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

மறுப்புரை:

மேற்கண்ட கருத்தில் எமக்கு வேறுபாடில்லை. நான் முன்னரே கூறியபடி தாவரங்களை அழித்தல் உயிர் கொலைக்குச் சமமானதே.


ஜாகிர் நாயக்: 

8. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.

ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

மறுப்புரை:

மீண்டும் அதே கருத்துதான், தாவரங்களையும் கொல்லக்கூடாது.

ஜாகிர் நாயக்: 

9. கால்நடைகள் பெருகும்:

உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.

மறுப்புரை:

கால்நடைகள் வேகமாக பெருகும் என்பதில் யாதொரு உண்மையுமில்லை. இதைப் பற்றி இறைவன்தான் கவலைப்படவேண்டும். முன்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தொழில் உதவிக்காக கால்நடைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் விவசாயத்திற்கு யாதொருவகையிலும் இந்த கால்நடைகள் பயன்படுவதில்லை. எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது. எனவே தற்போது கால்நடைகளை மனிதர்கள் வளர்ப்பது மாமிசத் தேவைகளுக்கும், பால், தோல் பொருட்களுக்கும் மட்டுமே. இந்த பால், தோல் பொருட்களும் மாமிசமும் வேண்டாம் என்று மனிதர்கள் முடிவெடுத்தால் என்னவாகும், கால்நடைகள் ஓரிடத்தில் இல்லாது நாடோடி இனமாகும், ஆரம்பத்தில் நாட்டில் உள்ள வீதிகளில் கால்நடைகள் கட்டுபாடின்றி திரியும், பிறகு அவைகள் ஒரு மலையடிவாரத்திற்கோ மரங்கள் அடர்ந்த பகுதிக்கோ சென்று குரங்குக் கூட்டங்கள் வாழ்வது போன்று வாழ பழகிக்கொள்ளும். பிறகு இயற்கை அதன் இனப்பெருக்கத்தை பார்த்துக்கொள்ளும். நாம் கவலைப்படவேண்டியதில்லை. நீங்களே சரியாகத்தான் கூறியிருக்கிறீர்கள் 'தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான்'. ஆடு நனைகிறதே என்று ஓனாய் அழுதகதையாக அல்லவா இது உள்ளது. 'ருசிகண்ட பூனை' என்பது போல நாவை அடக்க முடியாவிட்டால் எப்படியாவது போங்கள், ஆனால் அல்லாஹ் / இறைவன் அனுமதித்துவிட்டான் என்று அவன் மேல் பழியை போட்டால் சத்தியமாக அவன் தண்டிப்பதில் கடுமையாக இருப்பான். அல்லாஹ் / இறைவன் நமக்கு அளிக்கும் சோதனை தான் நீங்கள் கூறும் இந்த 'அனுமதி அளித்திருக்கிறான்' என்பது, சிந்தித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

மேலும் தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில். இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.

மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன, இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன, இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் முட்டைகள் வரை இடும், etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.

உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல் பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)

 இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

எனவே கால்நடைகள் நமக்குத் தேவையில்லை எனில், அதன் இனபெருக்கம் பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதில்லை. நமது கவலையெல்லாம் 'அரிதில் கிடைத்த இந்த மனித தேகத்தை நல்ல முறையில் பாதுகாத்து, இந்த உடலோடு கூடிய இறைநிலைநிலையை / சாகாத தேகத்தை எப்படி பெறுவது' 'இத்தேகம் ஒருவேளை அழிந்தால் மறு பிறவியில் என்ன தேகமோ?' என்பதில்தான் இருக்கவேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி             அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை             அருட்பெருஞ்ஜோதி


ஜாகிர் நாயக்: 

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.


மறுப்புரை:

யானும் அதனையே தான் கூறுகிறேன். எது அனுமதிக்கப்பட்டது என்றால் பரிசுத்தமான உணவு மட்டுமே, என்பதனை அறிக.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
மறுப்புரை: தி.ம.இராமலிங்கம்

முற்றும் - சுபம்




சைவ உணவு சாத்தியமா? - 5

சைவ உணவு சாத்தியமா? - 5


ஜாகிர் நாயக்: 

7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
மறுப்புரை:

உண்மை, ஆனால் அந்த பாதிப்பால் நன்மைகளையே பெற்றன இந்து மதம். அது தன்னிடமிருந்த தீயதை விட்டுவிட்டு, மற்ற மத்திலிருந்த நன்மைகளை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு இந்து மதத்திற்கு அல்ல, மற்ற மதத்திற்கே என்று சொல்லலாம்.

ஜாகிர் நாயக்: 

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

மறுப்புரை:
நான் மேலே கூறியவாறு ஜைனமதத்தின் நன்மைகளை (ஒழுக்கங்களை) இந்துமதம் ஏற்றுக்கொண்டதாலும், தன்னுடைய மதத்திலுள்ள புலால் உண்பதனை விட்டதாலும், ஏற்பட்ட பாதிப்பு இந்து மதத்திற்கு அல்லவே! அதனால் இந்த பாதிப்பு அனைத்து மதங்களுக்கும் வந்தால் நல்லதே.

ஜாகிர் நாயக்: 

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
மறுப்புரை:

உண்மை, இதில் உண்மையைத் தவிர வேறேதுமில்லை.

ஜாகிர் நாயக்: 

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.
மறுப்புரை:
உண்மை, இதில் உண்மையைத் தவிர வேறேதுமில்லை.
ஜாகிர் நாயக்: 

ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும்.
மறுப்புரை:
தங்கள் முடிவு வரவேற்கத்தக்கது. 'ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியுமா?' முடியவே முடியாது. 'மனிதன் உயிர்வாழ தேவையான உயிர்கள்' யவை எனப் பார்ப்போம்,
நாம் மூச்சு விடுவதில் எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது, மரணிக்கிறது. முட்டை இல்லா கேக், பன், இட்லி, தோசையில் நொதித்தல் வினை உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்). இவைபோன்று உணவு தயாரிக்கும் போதும், நீர் அருந்தும்போதும் பல பாக்டீரியாக்கள் அழிகின்றன.
நம் தோலில் உள்ள செல்கள் கூட நாம் வளர வளர தம் உயிரை இழக்கின்றன. இவைப்போன்று சில கொலைகளை நாம் நமக்கே தெரியாமல், நம் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது. இவைப்போன்ற உயிர்களின் மரணம் மனித உயிர் வாழ்வதற்கு தே வையான ஒன்றாகும். ஆனால் இந்த மரணத்திற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
மேலும், வீட்டில் வரும் கொசு, மூட்டைப்பூச்சி, பூரான் போன்ற பூச்சி வகைகளை தற்காப்பிற்காகக்கூட கொல்லக்கூடாது. அவை வராமல் இருக்க நமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது வந்தால் கொல்லாமல் அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல் இதுவும் கொலையே. ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும் அது சார்ந்த கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல். இதனையும் தவிர்க்கவே வேண்டும். ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
பட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள் போன்றவை பட்டுப் புழுக்களை கொன்று தயாரிக்கப்படுவதால் இதனையும் தவிர்க்கவேண்டும். ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
முத்தால் ஆன ஆபரணங்களை தவிற்கவேண்டும். சிப்பி என்ற உயிரை கொன்றுதான் இது பெறப்படுகிறது. ஆனால் இதற்கும் புலால் உண்பதற்கும் சம்பந்தம் இல்லை.
(சிறு குறிப்பு): சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.
புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை தென்னம் பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

ஜாகிர் நாயக்: 

முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 
மறுப்புரை:
தாவரங்கள் சைவமும் அல்ல, அசைவமும் அல்ல, ஏனெனில் அவை தமது உணவினை தாமே தயாரிக்கின்றன, ஆகாயத்தில் உள்ள சூரியனையும், பூமியிலுள்ள மண், நீர் ஆதாரத்தை தவிர பூமியிலுள்ள வேறெதனையும் அது சார்ந்து இல்லை, என நினைத்தால் அது தவறு, தாவரங்களிலிலும் மற்ற உயிர்களைத்தின்று வாழக்கூடிய அசைவ தாவரங்களும் உண்டு. நமது தமிழ் சமுதாயத்தில் உதித்த தொல்காப்பியர் (கி.மு.711) 2724 ஆண்டுக்கு முன்னரே தாவரங்களும் ஓர் உயிரே! என்று கூறிவிட்டார்.
‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)

தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல், பூண்டு என்பன அடங்கும்.
இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை,
பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை
என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை ஆகின்றது.
மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு என்று பெயராகிறது.
அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல் ஆகின்றன.
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை.
நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள் ஆகும்.
சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்.
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை என்றாகின்றது.
தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை என்றே சொல்லப்படுகின்றன.
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது. வேறு எந்த மொழியிலும் தாவர இலைகளுக்கு இவ்வாறு பகுத்து பெயர் கூறும் மொழிஅறிவு இல்லை. இவ்வளவு பகுத்து சொன்ன தமிழனால் தாவர உணவும் அசைவம் என்றால் அதனை சைவத்துள் வைப்பானேன்? பார்போம்...
ஜாகிர் நாயக்: 

ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம்.
மறுப்புரை:
ஏறத்தாழ சுமார் 800 வருடங்களுக்கு முன்னரே தொல்காப்பியம் கூறிய உண்மையினை, தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937 கிழக்கு பெங்கால்) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.
டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living"
மறுப்புரை தொடரும் - 5




எப்படியோ தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதனை விஞ்ஞானம் ஒப்புக்கொண்டது.

சைவ உணவு சாத்தியமா? No.4

சைவ உணவு சாத்தியமா? No.4
ஜாகிர் நாயக்: 

மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

மறுப்புரை:

இந்தக்கேள்வியும் நமது ஆதி தோற்றத்தையே நினைவுப்படுத்துகிறது. ஆதி மனிதனின் தோற்றம் பொதுவாக தற்போதுள்ள மனித தோற்றத்தைவிட சற்று உயரமாகவும், பருமனாகவும் இருப்பார்கள். அவனது இரப்பையும் மாமிச உணவை பெற்று செரிக்குமளவிற்கு சற்று விசாலமானது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. இதை எப்படி அறிவது? நீங்கள் ஆதிமனிதன் போல மாமிசத்தை நெருப்பில் சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டு பாரும், அது செரிக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும், முதலில் சாப்பிடமுடியுமா என்பதே கேள்வி? மனிதன் மாமிச பச்சினி என்றால் அதன் சமைக்காமல் சாப்பிடவேண்டும், முடியுமா? ஆனால் சைவ உணவை பச்சையாக சாப்பிடலாம். ஆகவே இறைவன் தற்போது சத்தியமாக மாமிச உணவை செரிக்கும்படியானதொரு உடலமைப்பை நமக்கு கொடுக்கவில்லை என்பதனை அறியவேண்டும்.

ஜாகிர் நாயக்: 

5. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.
மிகச்சரியான கருத்து, வரவேற்கத்தக்கது.
ஜாகிர் நாயக்: 

ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.
மறுப்புரை:

இந்துக்களின் வேதம் என்று நீங்கள் இங்கே குறிப்பிடுவது 'மனு சாஸ்திரம்' ஆகும். இந்த மனுசாஸ்திரத்தை பற்றி 99 சதவிகித இந்துக்களுக்கு ஒன்றும் தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கிருத்துவர்களுக்கு ஒரு வேதம் - அது பைபிள், அதன் ஆசிரியர் இயேசு, இஸ்லாமியர்களுக்கு ஒரு வேதம் - அது குரான், அதன் ஆசிரியர் நபிகள் நாயகம், ஆனால் இந்துக்களுக்கு என்று தனிப்பட்ட வேதம் எதுவுமில்லை, தனிப்பட்ட ஆசிரியரும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் சட்ட புத்தகத்தினை எழுதிய 'மனு'விற்கு மனித தன்மையே அவரிடம் இல்லை என்பதை சுருக்கமாக பார்ப்போம், மனு சாஸ்திரம் மனு என்பவர் எழுதியதால் மனுசாஸ்திரம் என்று அழைக்கப்பட்டாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கார் குறிப்பிடுகின்றார். இந்நூலின் காலம் கி.மு 200 க்கும் கி.பி 200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும்,கி.மு170க்கும் 150 க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்காரும் கருதுகின்றனர். கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ்.சர்மா கருதுகிறார்.

சுயாவாம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று சான நிறையும் வல்லமையும் செல்வமும் வீறும், திறனும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே. நால் வருணத்தரும் மற்றோரும் கடைப்பிடிக்கத் தக்க அவரவர் செயல்கள், கடமைகள் எமக்கு உணர்துவீராக என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் தோற்றம் குறித்தும் கூறிவிட்டு பின் எமது குமாரரான பிருகு முனிவர் முனிவர்களை நோக்கி கூறியசெய்திகளே மனு சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேத பிராமணன் நம்பிக்கை துரோகம் செய்து,மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான்.அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேத வேள்விகள் , பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பிராமணர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி பாதுகாக்கும் மனு தர்மம் உருவாகயுள்ளது.

ஆகவே ஒரு கொடூரமான மிருக மொழியில் உருவான நியாயமற்றதை கற்பித்ததால்தான் இப்போது உலகில் இம்மொழியும் மனு சட்டமும் வழக்கில் இல்லாது ஒழிந்தது. மேலும் இவ்வாறான வேதம் என்ற பசுமாட்டுத்தோலை போர்திய புலியான மற்ற சமஸ்கிருத நூலும் இந்து மதத்திற்கு தலைமையேற்க முடியாமல் போயிற்று.

தற்போது இந்துமதம் அவரவர்கள் வட்டாரத்தில் / சமூகத்தில் / மொழியில் வாழ்ந்த நல்ல பெரியோர்களின் வழிகாட்டுதலில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கோயில்களின் கருவரைக்குள் மட்டும் சில முன்னாள் புலால் உண்டவர்களை சுத்தப்படுத்தி வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் இந்து மக்கள். 

மனுசட்ட கொடூரதில் ஒரு சில...

கணவன் துராசாமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோகனாயிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது(மனு 5;154)

கணவன் சூதாடுகிறவனாகயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாக
இருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதமு நீக்கி வைக்க வேண்டியது.(9;78)

பாலியமாக விருந்தாலும் யவ்வமாக விருந்தாலும் வார்த்திபமாக விருந்தாலும் ஸ்திரீகள் தன்தன் வீடுகளில் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.(மனு;5;147)

பாலியத்தில் தகப்பனின் ஆஞ்ஞையிலும்,யவ்வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும்,கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லாது, ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்க கூடாது.(மனு;5;148)

பெண்கள் விபச்சாரப்பான்மையுடையவர்கள் என்பதாக மிகமிகக் கீழ்தரமாகக் கொச்சைப்படுத்துவதில் மஹா மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்(மனு 2;213)

தாய்,தங்கை,பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாய் உட்காரக் கூடாது(மனு,2;215)

மாதர்களின் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்(மனு9 ;15)

மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்றன(மனு 9;19)

மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்(மனு,9;14)

ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையை உண்டு பண்ணலாம்(மனு 9;52)

பிள்ளையில்லாமல் அந்த குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது.(மனு,9;59)

கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக்கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டியது.(மனு 9;190)

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்;தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதன் உயர்ந்தவன்;தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம் எனவே அவன் முடிவுபடி நடக்க(மனு 11;84)

அரசன் பிராமணர் அறிவுரை கேட்பது நன்று. அது ஆக்கம் தரும்.அவர்களின் முடிவிற்கும் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்(மனு7;37)

வைதீகமாயிருந்தாலும் லவுதீகமாயிருந்தாலும் அக்நியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் தகப்பன் மரியாதையையும் சத்திரன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது(மனு 2;135)

 இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டத்தை இந்து மக்கள் வேதமாக ஏற்கவில்லை என்பதே எனது முடிவு, ஏனெனில் இந்துக்களில் பெரும்பாண்மையோர் இச்சட்டத்திற்கு எதிராக சைவ உணவு பழக்கத்தில் உள்ளனர். 
ஜாகிர் நாயக்: 

இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே.
மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்
மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.
இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.

மறுப்புரை:
இவ்வேதங்களை எழுதிய புலால் உண்பவர்கள் மனம் திருந்தி சைவத்தை தமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு இந்துக்களாக வாழ்வதை நாம் பார்க்கிறோம். எனவே இவ்வாறு எழுதியவர்களை மன்னிப்போம், எழுதியதை மறப்போம். நமது தமிழ் சமுதாயத்தில் இதே காலகட்டத்தில் (மனு சட்டம் இயற்றிய காலம்) தோன்றிய 'திருவள்ளுவர்' முதல் தற்காலத்தவரான 'வள்ளலார்' வரை புலால் உண்பதனை வன்மையாக சாடியுள்ளார்கள். எனவே மதங்கள் என்றைக்கும் மனக்காது, அதில் துர்வாடை வீசிக்கொண்டேதான் இருக்கும். முடிந்தால் மதங்களுக்கு வெளியே வந்து உண்மையான இறை அனுபத்தை அணுபவியுங்கள் அல்லது 'எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள்' என்ற குரானின் கட்டளைபடி, அந்தந்த மதங்களில் கூறியவற்றில் எது நன்மையோ அதனைமட்டும் பின்பற்றுவோம். மதங்கள் என்பது கூறிய கத்தியை போன்றது, அதனை கொலைசெய்யவும் பயன்படுத்தலாம், உயிர்பிழைக்க அறுவைசிகிச்சை செய்யவும் பயன்படுத்தலாம், அது அம்மதங்களை பயன்படுத்தும் மனிதர்களை பொறுத்தது, நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை சிந்திக்கவேண்டும்.

மறுப்புரை தொடரும் - 4




சைவ உணவு சாத்தியமா? No.3

சைவ உணவு சாத்தியமா? No.3

ஜாகிர் நாயக்:
 
மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் ‘கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.
மறுப்புரை:
இவ்வசனத்தில் 'அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்' என்பதில் 'அவற்றிலிருந்து' கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால், நெய், தயிர் போன்றவற்றை புசிக்கவும், சாணம், தோல் (இயற்கை மரணத்திற்கு பின் கிடைக்கும் தோல் என்று கொள்ளலாம்) மற்றும் கால்நடைகளால் கிடைக்கும் உதவிகளை (உழுதல், சுமத்தல், இழுத்தல் போன்ற பயன்கள்) போன்ற பயன்களையும் பெறுவதாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றிலிருந்து என்றுதான் கூறியிருக்கிறதே ஒழிய 'அவற்றை' நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள் என சொல்ல வில்லை. எனவே இவ்வசனத்தைக்கொண்டு அனுமதியளித்துவிட்டதாக கொண்டாடவேண்டாம்.
ஜாகிர் நாயக்: 

அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் ‘நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள். எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

மறுப்புரை:

இதற்கும் மேற்கண்ட விளக்கத்தினையே அளிக்க விரும்புகின்றேன்.

மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் 14வது வசனம் நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்

மேற்கண்ட வசனத்தை நானே எடுத்துக்காட்டவேண்டியுள்ளது. இவ்வசனத்தில் 'மீன் போன்ற' மாமிசம் என்பது மீன் அல்ல, அது வேறு ஏதோ ஒன்றையே குறிப்பதாக உள்ளது (அருள்மறை - மறைக்கப்பட்டுள்ளது), ஏனெனில் எந்தஒரு ஆபரணமும் மீனிலிருந்து வெளிப்படாது.

இங்கு அருள் மறை வெளிப்படும் விதமாக அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் 48வது வசனம், 'மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.'

இவ்வசனதில் 'உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.' என்ற வரிகளை கவனித்தால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வழிமுறைகளை நம்மை சோதிப்பதற்க்காக உண்டுபண்ணியது புலனாகிறது. இவ்வழிமுறைகளில் நன்மையானவற்றில் முந்திக்கொள்ள சொல்வதை கவனிக்கவேண்டியுள்ளது. எனவே நாம் நமது சமுதாயத்திற்கு எது மனசாட்சிப் படி நன்மை பயக்குமோ அதனில் நாம் முந்திக்கொள்ளவேண்டும்.

மேலும் நீங்கள் எதில் மாறுபாடு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான், என்று கூறுவதின் மூலம் உண்மையினை தெரிவிக்க முகமது நபிக்கு பின் இவ்வுலகத்தில் நிறைய நபிமார்கள் பிறந்திருப்பார்கள், நாம் தான் அறியவில்லை. ஏனெனில் 'இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன்4:79  4:170, 7:158 , 9:33 , 10:57 , 10:108 , 14:52 , 21:107 , 22:49 , 25:1 , 33:40 , 34:28 , 62:3) என்று நாம் நமக்குள்ளேயே குரான் கூறிவிட்டதாகக் கூறி இறையருளை தடைபடுத்திக்கொண்டோம். 

மேலும் 'மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.' என்றும் கூறிவிட்டோம். ஆனால் அருள்மறை திருகுரானில் அனேக வசனத்தின் தொடக்கத்தில் 'முஃமின்களே! நீங்கள்...' என்றே தொடங்குவதை கவனிக்கும் போது இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிலுள்ளவர்களுக்கு அருளப்பட்ட போதனைகளே அன்றி மனித குலம் முழுவதற்கும் கூறப்பட்டதாக சொல்லமுடியவில்லை. நிற்க

மேலும், குரானில் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஏழாவது வசனம்,  'மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்' என்றும் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் எட்டாவது வசனம், 'இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்' என்றும் கூறுகிறது. நாம் இப்போது இவ்வரிகள் கூறும் உண்மைகளிலிருந்து எவ்வளவு தொலைவு நாகரிகத்தை நோக்கி கடந்துவந்திருக்கிறோம் என்பதனை அறியவேண்டும், அது தவறு என்று நம்மால் கூறமுடியுமா? அல்லது தவறு என்று கூறிவிட்டு மேற்கண்ட வாழ்க்கையினைத்தான் வாழத்தான்முடியுமா?
எனவே நாம் அருள்மறை குரான் அனுமதித்துவிட்டதாக தவறாக் கூறி திருகுரான் பெயரில் கால்நடைகளை உண்வுக்காகவும் இறைவழிபாட்டிற்காகவும் இம்சிக்க வேண்டாம் என்று இதனை படிக்கும் உங்கள் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
ஜாகிர் நாயக்: 

மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
மறுப்புரை:
மேற்கண்ட கூற்றை மறுப்பதற்கு முடியாது. ஆனால் அந்த சத்துகளை நாம் மிருக வதையின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி நமக்குத் தருவது சைவ உணவே. சைவ உணவை உண்ணும் மிருகமான யானையைக்காட்டிலும் மற்ற அசைவ உணவு உண்ணும் மிருகங்கள் பலமுள்ளவை கிடையாது. மேலும் பொதுவாக சைவ உணவை உண்ணும் யானை, குதிரை, மாடு, ஆடு போன்றவைகள் ஒரு சமுதாயமாக வாழும். ஆனால் அசைவ உணவை உண்ணக்கூடிய மிருகங்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே முரன்பாடுகளுடன் தனித்து வாழும், இதிலிருந்து உணவுகள் தோற்றுவிக்கும் குணநலன்களையும் நாம் அறியலாம்.
ஜாகிர் நாயக்:
 
4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.

நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.
மறுப்புரை:


சரியாகச் சொன்னீர்கள், நான் ஏற்கனவே சொன்னது போல மனிதன் இப்பூமிக்கு வந்தநாளின் தொடக்கத்தில் மிருகங்களை வேட்டையாடிதான் உண்டான் என்பதனை முதலிலேயே கூறிவிட்டேன். ஆனால் மனிதனுக்கு இப்போதும் கூறிய பற்கள் உள்ளதாக கூறுவது மிகத்தவறு. நம்மால் ஏதேனும் ஒரு மிருகத்தை கத்தியை பயன்படுத்தாமல் பற்களால் கடித்து அதன் தோலை கிழிக்கமுடியுமா? நீங்கள் கூறும் அந்த கூறான இரண்டு பற்கள் தற்போதும் உள்ளது, எப்படியெனில் அதுவும் மற்ற பற்களை போல சமமாக உள்ளது, அதன் இயல்பு தன்மையை இழந்து காணப்படுகிறது. முன்புள்ள மனிதனுக்கு இந்த இரண்டு பற்களும் மற்ற பற்களை விட பெரிதாக இருக்கும். எனவே இறைவன் தட்டையான பற்களைக்கொண்டே மனிதனை தற்போது படைத்துக்கொண்டிருக்கின்றான் என்பதனை அறிந்து அதற்கேற்றாற்போன்று வாழ்ந்தால் நன்று.


மறுப்புரை தொடரும் - 3




சைவ உணவு சாத்தியமா? No.2

சைவ உணவு சாத்தியமா? No.2
24-02-2013


ஜாகிர் நாயக்: 

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மறுப்புரை:

மனிதனுக்கு உணவு என்று வரும்போது இக்கட்டளை மீறப்பட்டு இரக்கமின்றி பிற சகோதர உயிரிகளை கொன்று சாப்பிடுகிறோம்.

ஜாகிர் நாயக்: 

அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

மறுப்புரை:

மனித பயன்பாட்டுக்காகத்தான் கால்நடைகளையும், தாவரங்களையும் படைத்தான் என்பது ஏற்புடையதல்ல, மாறாக அவைகளின் நிலை அறிந்து நமது அறிவால் அதனை படிப்படியாக நமது ஏவல்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டோம் என்பதே உண்மை, இதற்காக நமது மனித இனம் பல இலட்ச ஆண்டுகள் இப்பூமியில் போராடவேண்டியிருந்தது.

நாம் இப்பூமியில் முதன்முதலில் பிறவியெடுக்கையில் நமக்கு பேசத்தெரியாது, ஒரு மொழியும்கிடையாது, மிருகங்களுக்கும் நமக்கும் வேறுபாடே கிடையாது. இப்பூமியில் உணவிற்காக அணைவரும் (விலங்குகளுடன் சேர்ந்து மனிதர்களும்) வேட்டையாடிதான் உண்டோம்.இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது, நமக்கு முன்னரே இப்பூமியில் வாழ்ந்துக்கொண்டிருந்த நமக்கும் மூத்த இனங்களான  விலங்குகளில் கூட சைவ விலங்கினங்கள் இருந்தார்கள், ஆனால் நாம் அணைவரும் பிறவியால் அசைவர்களே. அப்படியொரு காட்டுத் தர்பார் நடத்திக்கொண்டிருந்தோம், பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் மேம்பட்டு நாம் காட்டை விட்டு ஆற்றங்கரையினிலே வசிக்கும் போது நமது நாகரிக உணவிற்காக விவசாயம் செய்ய தொடங்கினோம், ஆடைகளை அணியத்தொடங்கினோம், உணவினை சமைக்க நெருப்பின் உபயோகம் கண்டோம், சக்கரம் கண்டுபிடித்தோம், பேசும் மொழி அறிந்தோம், அதற்கு ஒரு குறியீடு (எழுத்து) கண்டோம்... இவ்வாறு மெல்ல மெல்ல நாகரிகமடைந்தோம்.

எதிர்பாராவிதமாக நமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே தியரி தான். அது தான் தக்கன பிழைத்தல். எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன. இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு சக்தி (உணவு) தேவைப்பட்டது. அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும்.

இதற்கு பல உதாரணங்கள் நாம் தற்போது காணும் விலங்குகளிடம் உண்டு. கவனித்து பார்த்தால் தாவர உண்ணிகளுக்கு கண்கள் முகத்தின் இரு பக்கமும் பக்க வாட்டில் இருக்கும் ஆனால் மாமிச உண்ணிகளுக்கு கண் நேரே பார்த்தபடி தான் இருக்கும். தாவர உண்ணிகள் மாமிச உண்ணிகளிடமிருந்து இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள சுற்றி இருக்கும் கண் உதவுகிறது, ஆனால் மாமிச உண்ணிகளுக்கு அவற்றின் இலக்கு தான் குறி. அதனாலேயே அவற்றின் கண்கள் முன்னோக்கி இருக்கிறது.

நமக்கு கண்கள் முன்னோக்கி இருப்பதன் மூலம் நாம் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்தக் கண்களைத்தவிர மற்ற மனித கூறுகளெல்லாம் படிபடியாக சைவ உணவிற்கு ஏற்றவாறு மாறிவிட்டது. உதாரணமாக நமக்கு பின்புறம் இருந்த வால் மறைந்துவிட்டது, கூறிய பற்கள் மறைந்துவிட்டன, நீண்ட கை, கால் விரல்கள், மிருக பலத்துடன் கூடிய உடம்பு... இவைகளை கூறலாம். இதற்கு காரணம் நாம் தற்போது காட்டில் வாழவில்லை, ஆனால் சில மிருகங்கள் மட்டும் மனித நாட்டில் வாழ்கின்றன.

நாம் வாழும் பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன, இதில் மனிதனின் பயணம் தொடங்கியது 2,50,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ஆண்டுக்கு முன்பிருந்துதான், இடையில் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டு முழுவதும் அழிந்துவிட்ட இனமான டைனோசர் வாழ்ந்தது வெறும் 65,00,000 அறுபத்தைந்து இலட்சம் ஆண்டுக்கு முன்னர்தான். தாவரங்கள், விலங்குகள் எல்லாம் இப்பூமியில் கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியவைகள். அதனால் மனித இனம் தோன்றியதிற்கு பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே தாவரங்களும், விலங்குகளும் தோன்றிவிட்டபடியால், தற்பொழுது இப்பூமியில் முளைத்த மனிதனுக்காகத்தான் இவைகள் படைக்கப்பட்டன என்பது மனிததனின் ஆணவத்தையே வெளிப்படுத்துகின்றது. 

ஜாகிர் நாயக்: 

அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.

மறுப்புரை:

மிக்க சரியான கருத்து. அல்லாஹ் படைத்தவைகளை, மனிதன் தன்னுடைய வசதிக்கா  ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடைகளாகவும் பார்க்கிறான்.  ஆனால் அது அப்படியல்ல, நாம் பிற உயிர்களைக்கூட பொருளாக (பொருள் என்றால் உயிரற்றது) பார்த்துக்கொண்டிருப்பது நமது சுயநலத்தினையே காட்டுக்கிறது. தங்கள் சொற்படி இவ்வுயிர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதென்றால் அதனை பாதுகாக்கத்தான் நமக்கு உரிமையுள்ளது. அவ்வுயிரான பொருளை அழிக்க நமக்கு ஏது உரிமை? நம்மால் எப்பொருளை / உயிரை உருவாக்கமுடியுமோ அந்தப் பொருளை / உயிரை மட்டுமே நம்மால் அழிக்க உரிமையுள்ளது என்பதனை அறியவேண்டும்.

ஜாகிர் நாயக்:
 
சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.
மறுப்புரை:
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. எனக்குத் தெரிந்த ஒருசில முஸ்லிம் அன்பர்கள் சைவ உணவுபழக்கத்தோடு தங்கள் உன்னதமான மார்க்கத்தில் தொடர்கின்றார்கள். முஸ்லிம்கள் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் கூட இவர்கள் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்து பலியிடும் குர்பானி என்ற சடங்கினை செய்வதில்லை. ஏனெனில் அவ்வாறு பலியிடுவது இறைவனை சென்றடையாது என்ற உண்மையை இவர்களுக்கு குரான் கூறியிருக்கிறது. பார்க்க வசனம் (22:37). விழாவின் மகிழ்ச்சி பிறஉயிர்களின் துன்பதில்தான் உள்ளது என்பதனை மறுத்து இப்ராஹீம் நபியைப்போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதனை உணர்த்தும் வகையில் இக்கடமையையே (குர்பானி) தியாகமாக்கியுள்ள முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
ஜாகிர் நாயக்:
 
இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

1. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம், ‘முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.
என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

மறுப்புரை:
அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குரான் அனுமதியளிக்கிறது, என்ற வரியினில் அருள்மறை என்ற அடைமொழியையும் நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். உண்மையில் குரானில் மேற்கண்ட வசனத்தைப் போல சில வசனங்களில் அருள் மறைந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அல்லது 'அருள்' என்பதற்கு தமிழில் அன்பு, கருணை, இரக்கம், சாந்தம், அமைதி, ஆன்மநேயம், மனிதநேயம், மன்னித்தல் போன்ற பொருளைக் கொடுக்கிறது. அரபு மொழியில் இதன் பொருள் வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தெரிந்தவர்கள் அறிவிக்கலாம் அல்லது அருள்மறையை ஓதியவர் ஒருவர் (அல்லாஹ்) - கேட்டவர் ஒருவர் (முகமது நபி) - எழுதியவர் ஒருவராக இருப்பதால், இதில் எழுதியவர் அசைவ உணவு பழக்கத்தில் இருந்தமையால் அவர் சில வசனங்களில் அவரது கருத்தை ஏற்றி கூறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். 
1. இதன் முழு வசனம் இவ்வாறு உள்ளது, முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
மேற்கண்ட வசனத்தில்  (உணவிற்காக) என்று இவ்வார்த்தை குரானிலும் அடைப்புகுறியிட்டு கூறப்பட்டுள்ளதா? என்பதனை தெரிந்தவர்கள் கூறலாம்.
5:1    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
இஹ்ராம் என்பது, ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்த இஹ்ராம் அணிந்திருக்கும்போது மட்டும் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுவது ஓரிடத்தில் சரி யென்றும் மற்றொரு இடத்தில் தவறு என்றும் கூறுவது எவ்வகையில் நியாயம். அப்படியே வேட்டையாடுவது என்பது அக்காலத்தில் (6-ம் நூற்றாண்டு) ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகினும் அதனை இந்த நாகரிக காலத்திலும் அருள்மறை குரான் சொல்லிவிட்டது என்பதற்காக தொடரத்தான் வேண்டுமா?

மறுப்புரை தொடரும் - 2





சைவ உணவு சாத்தியமா? -No.1

சைவ உணவு சாத்தியமா? - No.1

24-02-2013
வணக்கம், நான் எனது முகநூலில் (Face Book) படிக்கும் பொழுது ஒரு அன்பர் புலால் உண்பதை நியாயப்படுத்தி தமது கருத்தை பதிந்துள்ளதைக் கண்டேன். அக்கருத்துரைக்கு அப்பொழுதே சில வாக்கியங்களில் மறுப்புத் தெரிவித்தேன் (கீழே உள்ளவாறு).
மற்ற உயிர்களை துடிதுடிக்க அறுத்து அதன் பிணங்களை திண்ணுபவன் மனிதனே அல்ல. என்னைப் பொறுத்தவரை அந்த இறைவனே வந்து புலால் உண்பது தவறல்ல / பாவமல்ல, என்று சொன்னாலும் அதனை நான் வண்மையாக கண்டிப்பேன்.

நாம் நமது கைவிரல் நகங்களை வெட்டும் போது தவறுதலாக சதையில் சிறிது வெட்டுக்காயம் ஏற்பட்டால், அதற்கே எப்படி துடிக்கிறோம், ஒரு சொட்டு இரத்தம் போனாலே நமது இதயம் வேதனையடைகிறது. அது போன்ற வலிதான் மற்ற எந்த உயிர்களுக்கும் ஏற்படும் என்பதை மேற்கண்ட அனுமானத்தால் உணரலாம், அதுவும் உயிர் போகின்றது என்பதனை ஒருவாறு உணரும் கால்நடைகள் அலறும் சத்தம் இருக்கின்றதே... அந்த சத்தம் ஒன்றே போதும்... நாம் தான் இவ்வுலகத்திலேயே மிகக் கொடியவர்கள் என்று உணர்வதற்கு.
அதே இறைவன், மனிதனை விட பலசாலியாக ஒர் உயிரினத்தை படைத்து, அவனுக்கு மனிதனை வெட்டி அறுத்து சாப்பிட்டால் தவறில்லை, உங்களுக்காகத்தான் மனிதர்களை படைத்துள்ளேன்... என்று உபதேசித்து அவ்வாறே படைத்தும் விட்டான் என வைத்துக்கொள்வோம்... நமது கதி அப்போதுதான் புரியும்... அந்த கடவுள் எவ்வளவு மோசமானவன் என்று...

தாவற உணவை பற்றி நான் பிற்பாடு விளக்குகிறேன்.

பிறகு அவரின் கருத்து முழுவதிற்கும் தற்போது எனது விளக்கமாக மறுப்புரையை தந்துள்ளேன். இதில் எனது மன நிலையினை அப்படியே வெளிப்படுத்தியுள்ளேன். எம்மதத்தையும் இதில் நான் அவமதிக்கவில்லை, அதே நேரத்தில் ஆதரித்தும் பேசவில்லை. அப்படி நீங்கள் ஏதேனும் கருதினால் மன்னிக்கவும்.

திரு.ஜாகிர் நாயக் அவர்களின் கருத்துக்கள்

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்;

கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே! ஏன்?


பதில்:
சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.

இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.


1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.


2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம், ‘முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.
என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் ‘கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.
எனவும்
அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் ‘நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.


3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.

உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.


4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.

நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.


5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

5. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.
இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே.
மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்
மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.
இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.

7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.
ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும்.
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 
ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம்.
எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
7. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 ர்நசவண க்கு குறைவான சப்தத்தையும் 20000 ர்நசவண க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

8. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.

ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

9. கால்நடைகள் பெருகும்:

உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.


மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
இதற்கான மறுப்புரையை இனி பார்ப்போம், தொடரும் - 1







இதற்கான மறுப்புரையை இனி பார்ப்போம், தொடரும் - 1