சுத்த சன்மார்க்கம்
சன்மார்க்கம் இரண்டு வகைப்படும், வள்ளலாருக்குப்
பிறகு அது மூன்றுவகையாக உள்ளது.
1. சமய சன்மார்க்கம்
2. மத சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம் (இது வள்ளலார் உருவாக்கியது)
வள்ளலலாருக்கு முன்புவரை சுத்த சன்மார்க்கம் என்ற
மார்க்கம் இல்லை. இந்த சுத்த சன்மார்க்கம் என்ற தனி மார்க்கத்தை இறைவன் அறிவிக்க
அதை அப்படியே இறைவன் முன்னிலையிலேயே அரங்கேற்றுகிறார் வள்ளலார்.
“தன் முன் அரங் கேற்றெனவே தான் உரைத்தான்…” (1251)
மேற்படி சுத்த சன்மார்க்கத்தையும் அம்மார்க்கக்
கடவுளையும் வெளிஉலகத்தாருக்கு 12ம் தேதி ஏப்ரல் மாதம் 1871ம் ஆண்டு, அவர் தனது
அறிவிப்பில் கீழ்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார்கள்.
“சுத்த சன்மார்க்கம் ஒன்றேஎல்லா உலகத்தும் வழங்கும்
இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்றபெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு
அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய
பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய்,
சுத்தசன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்….”

வள்ளலாரின் வடிவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிய்மா?
இதோ அவரே தமது தேகத்தின் இயல்பை கீழ்கண்டவாறு வெளிப்ப்டுத்துகிறார்…
எதனாலும்
தடுக்கப்படாத வடிவம்
ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே. (788)
எதனாலும்
அழியாத வடிவம்
காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. (1733)
வள்ளலாரின் தேகம் ஒரு தனிநிலை வடிவம் என்பது இப்போது
புரிகிறதா, இவ்வடிவத்தை நாமும் சுத்த சன்மார்க்கத்தின் மூலம் பெறலாம்.
அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்
அது கடவுள் சம்மதம்…'இது இருபத்து ஒன்பது வருஷத்திற்கு மேல்' என்ற செயல் கொழிக்கும் வாசகம் பற்றி தங்கள் கருத்தை பதித்தால் மிக்க நலம்
ReplyDelete- சாலை கண்ணன்
ஐயா, தாங்கள் கூறவருவது என்ன என்று எனக்கு சரியாக புரியவில்லை. தெளிவுபட கூறவும். நன்றி.
ReplyDelete