Wednesday, August 21, 2013

திருவண்ணாமலையில் வள்ளலார்



திருவண்ணாமலையில் வள்ளலார்

அன்பர்களே!

சென்ற இந்திய சுதந்திரத்தினம் அன்று (15-08-2013) யாம் கடலூரில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள 'அருள்திரு பாபு சாது' அவர்களைக் தரிசிக்க சென்றிருந்தோம். அவரது தரிசனம் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது 'இறையருள்' எங்களுக்கு கொடுத்த 'அருள்பாலிப்பாக' கருதுகிறோம். எங்களைக் கண்டவுடன் சிரித்த முகத்துடன் அன்பான வரவேற்பு அளித்து எங்களை அமரச்செய்து உபசரித்தார். பிறகு சிறிது நேரம் ஞான உரையாடல்களும் நிகழ்த்தினார்.

எமது இச்சைப்படி 'அருள்திரு பாபு சாது' அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். முடிவில் சாது ஐயா அவர்கள் வழங்கிய அன்னதான அமுதை அருந்திவிட்டு விடைபெற்றோம்.

'அருள்திரு பாபு சாது' அவர்கள் திருவண்ணாமலை மலை சுற்று பாதையில் வள்ளலாரின் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' ஒன்றை நிறுவி வள்ளலாரின் கொள்கையினை பரப்பிவருகின்றார். இச்சங்க கட்டிடத்தில் தியான மண்டபம், சாதுக்கள் தங்கும் இடங்கள், மூலிகை பயிரிடும் இடங்கள், அன்னதான கட்டடம், பொதுமக்கள் தங்கும் இடம் போன்றவைகள் உள்ளன. மேலும் இங்கு பல தன்னார்வ தொண்டர்கள் தாங்களாகவே முன்வந்து அங்கேயே தங்கி பல சேவைகளை புரிந்துவருவது வியப்பாக உள்ளது. குறிப்பாக திரு. காந்திராஜன் அவர்களையும் நாங்கள் சந்தித்து பேசியதை மறக்கமுடியாது. இவர்கள் வெளிநாட்டில் உள்ள சன்மார்க்க சங்கங்களுக்குச் சென்று தமது சன்மார்க்கப் பணிகளை நிறைவேற்றிவருகிறார். 

மேலும் பொதுமக்கள் படித்து பயனுற, சாது ஐயா அவர்களால் நடத்தப்படுகின்ற வள்ளலாரின் கொள்கை விளக்கும் நூல்கள் விற்பணை நிலையம் ஒன்றையும் மலை சுற்றும் பாதையில் காணமுடிந்தது.










கூடுதலாக சாது ஐயா அவர்கள், வள்ளலாரின் கொள்கை பரப்பும் நோக்கில் ஒரு மாத இதழினையும் நடத்திவருகின்றார். அவ்விதழின் பெயர் 'வள்ளலார் சன்மார்க்க ஞானமுரசு' என்பதாகும். தனி இதழ் ரூபாய் ஐந்து, ஆண்டுசந்தா ரூபாய் அறுபது ஆகும். இதனை படிக்கும் அன்பர்கள், இந்த மாத இதழ் வேண்டுமானால் சந்தா செலுத்தி தங்களது வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ளலாம்.

'அருள்திரு பாபு சாது' அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் மரணமிலா பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிய எங்களது வேண்டுதல்களை வள்ளலாரின் திருப்பாதங்களில் வைக்கிறோம். நன்றி. 

'அருள்திரு பாபு சாது' அவர்களை தொடர்புகொள்ள,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
552 / 6A, வாயுலிங்கம் எதிரில்,
கிரிவலப் பாதை,
கோசாலை கிராமம்,
அடிஅண்ணாமலை அஞ்சல்,
திருவண்ணாமலை - 606 604.
கைப்பேசி எண் - 9443489849, 9942776351.
மின்னஞ்சல் முகவரி - vallalartrust@gmail.com

மலைசுற்றும் பாதையில் வள்ளலார் நெறி பரப்பும் ஒரு நிலையத்தினையும் எங்களால் காணமுடிந்தது. இந்நிலையம் வள்ளலாரின் ஆரம்பகால உருவவழிபாட்டினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. இந்நிலையத்தின் பெயர் 'ஸ்ரீ வள்ளலார் அருட்பணி நிலையம்' என்பதாகும். இங்கே வள்ளலாரின் சிலை, வழிபாட்டில் உள்ளது.








 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.