உனது தாய் மொழி என்ன? அதற்கு என்ன ஆதாரம்?
++++++++++++++++++++ ++++++++++++++++++
தமிழ்நாடு அரசு 2020-ஆம் ஆண்டு முதல், மாணவர்களின் கல்விச் சான்றிதழில் மாணவரின் ஜாதி என்ன? என்பதனை பதிவதில்லை. அதற்கு மாறாக வருவாய்த் துறையில் வழங்கும் ஜாதி சான்றிதழை பார்க்கவும் என்று குறிப்பிடுகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு ஏன் தமிழர்களுக்கு இதுநாள்வரை தாய் மொழிச் சான்றிதழை கொடுக்க மறுக்கின்றது. இனியாவது, தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மாற்று சான்றிதழை வழங்கும் போது, அம்மாணவரின் தாய் மொழி என்ன? என்பதனை பதிந்து கொடுக்க வேண்டும். தமிழ் என்றால் தமிழ் எனவும், தெலுங்கு என்றால் தெலுங்கு எனவும், கன்னடம் என்றால் கன்னடம் என்றும் மலையாளம் என்றால் மலையாளம் என்றும் ஹிந்தி என்றால் ஹிந்தி எனவும் பதிய வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். இனியாவது மற்ற மாநில மக்கள் போன்று தமிழர்கள் விழித்திருக்க வேண்டும். நன்றி.
--TMR

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.