Friday, October 10, 2025
Sunday, October 5, 2025
இல்லை நூறு பதிகம்
வருவிக்கவுற்ற வள்ளல்
(இல்லை நூறு பதிகம்)
பொருளும் இல்லைநல் பொழுதும் இல்லை
பசித்தோர்க்கு உணவிட பரந்தமனமும் இல்லை
உருகிஉனைப் பாடிடநின் அருளும் இல்லை
உலகில்
சிறந்துவாழநல் ஒழுக்கமும் இல்லை
குருவென உனைத்தொழநல் குணமும் இல்லை
கடவுள்
ஒருவனெனக் கருதும் கருத்துமில்லை
வருவிக்கவுற்ற வள்ளலுனை வணங்கவு மில்லை
வடலூர்
வாழ்வுவாழநல் விதியும் இல்லையே.
பெருஞ்ஜோதி யன்றிவேறு ஆண்டவன் இல்லை
பாரில்
இதை உணராதவன் மனிதனும் இல்லை
பெருவாழ் வளிக்கும்வேறு கடவுளும் இல்லை
திருஅருட்பா
உரைப்பது பொய்யும் இல்லை
பெருங்கருணை யாலிங்கு துன்பமும் இல்லை
பசித்திருப்பார்
இனிஇப் பாரினில் இல்லை
பெருந் தயவால்இனி இறப்பாரும் இல்லை
பேரிரக்கம்
நீங்கினாலென் உயிரும் இல்லையே.
கற்ற நூலனைத்தும் கிஞ்சித்தும் மெய்யில்லை
கலக்கமுறும்
மதங்களில் பொய்யன்றி வேறில்லை
பற்றுக ளனைத்தும் பதிநிலைக் காட்டுதிவல்லை
பழம்பாடல்கள்
எதுவுமுனை பாடியது இல்லை
சிற்றம் பலம்கண்டிட்டால் குற்றம்பல இல்லை
சூதான
சமயங்களில் சிவமென்பது இல்லை
உற்ற தேகத்தை உயிர்என்றும் மறப்பதில்லை
இனிவள்ளல்
இருக்க வாட்டமென்பதும் இல்லையே.
ஆளுக்கொரு வானமும் ஆளுக்கொரு பூமியுமில்லை
ஆளுக்கொரு
உயிர்போல் ஆண்டவன்தான் இல்லை
நாளும் கிழமையும் நல்லோர்க்கு இல்லை
நாயகன்
அருள் நலிந்தோர்க்கு இல்லை
கோளும் வானும் குடிகெடுப்பது இல்லை
காடும்
மலையும் கருணையாளனுக்கு இல்லை
மாளும் மனிதனுக்கு மாண்பு என்பதில்லை
மாண்டப்
பின்பு மோட்சம் என்பதில்லையே.
கடை விரித்துமதை கடைபிடிப்பேன் இல்லை
கற்றறிந்தார்
சொல்சிறிதும் கேட்பதும் இல்லை
சடை வளர்க்கும் சன்னியாசமும் பிடிக்கவில்லை
சாகாக்கல்வி
சற்றும் அறியவும் இல்லை
விடை பெற்றுச்செல்ல வன்மனமும் இல்லை
விதிவழிச்
செல்லநான் விரும்பவும் இல்லை
எடைபோட்ட இறைவன் எனைஏற்றவும் இல்லை
எப்படி
வாழ்வதென எனக்குத் தெரியவில்லையே.
புருவ மத்திஎதுவென புரியவும் இல்லை
பருவ
வயதிலதை பழகவும் இல்லை
உருவ வழிபாட்டை தொடரவும் இல்லை
உண்மை
தெரிந்தும் உணர்ந்தேன் இல்லை
கருவழி புகாமலதை கடக்கவும் இல்லை
காரிருள்
உலகை வெறுக்கவும் இல்லை
ஒருவழி நிற்கும் உயர்ந்தோன் இல்லை
அருள்தர
அழைத்தும் வருவே னில்லையே.
புண்புலால் உண்டு புழுத்தவன் இல்லை
பொன்
பொருளுக்காக பொய்சொன்னவ னில்லை
பெண்ணோடுக் கூடிச்சுகம் கண்டவன் இல்லை
பொன்னான
மேனிக்கெட மது அருந்தியவனில்லை
கண்மூடி வழக்கத்தைக் கொண்டவன் இல்லை
கதிகலங்க
ஓருயிரை கொலை செய்தவனில்லை
பண்பாடில்லாது பிறர் பொருளை திருடியவனில்லை
புகழுக்காக
குற்றம் புரிந்தவன் இல்லையே.
சாதியிலும் மதங்களிலும் சிறைபட்டவ னில்லை
சாத்திரக்
குப்பைகளை சீண்ட்டியவ னில்லை
வீதியில் மாசுபடஎச்சிலை உமிழ்பவ னில்லை
வீணான
சடங்குகளில் வீழ்பவ னில்லை
நாதியற்ற வடமொழியை நான்நம்பியவ னில்லை
நற்றமிழன்றி
தெய்வ மொழிவே றொன்றில்லை
போதிமரத்தடியில் ஞானம் பெறுவ தில்லை
படைத்தவனும்
பேராசை யன்றி இல்லையே.
இறந்தாரை எரிப்பவன் அன்பானவ னில்லை
இறுதிகாரியம்
செய்பவன் அறிவானவ னில்லை
உறவினத்தார் அக இனத்தாரன்றி யாருமில்லை
இனத்தால்
புறமேவியவர்கள் மனிதர்க னில்லை
பிறவிப் பெரும்பயனை போற்றுவார் இல்லை
பற்றற்றான்
பற்றினை பற்றுவார் இல்லை
உறங்காமல் உறங்கும் உளவறிவார் இல்லை
இரக்கமே
உருவாகி இயங்குவார் இல்லையே.
நாடாததை நாடிநான் நடைபயில்பவ னில்லை
நீடுவாழ்வினை
நாடாதுநான் நலிந்தவ னில்லை
கூடாநட்பில் கூடி கூத்தடிப்பன் இல்லை
காடுமலைத்
தேடி கவிழ்ந்தவன் இல்லை
பாடாதபாடல் பாடி புகழ்ந்தவன் இல்லை
பாழும்நரகை
நானினி பார்ப்பவ னில்லை
மூடாஎன்றினி இறைவனெனை அழைப்பா னில்லை
மாள்வதும்
பிறப்பதும் எனக்கினி இல்லையே.
மூலவரை கண்டுவிட்டேனினி மூப்பு எனக்கில்லை
மேலழிஞ்சிப்
பட்டுவாழ்வு எனக்கினி இல்லை
மூலமல நாற்றம்எனக்கினியும் மீள வருவதில்லை
மேளதாள
பூமாலைகளென் மேனிக் கழகில்லை
காலனின்
கணக்கறிந்தேனிறுதிக் கோல மெனக்கில்லை
காமமும்
கோபமுமென் குடிக்கே வருவதில்லை
பாலருந்தும் பாலனாய்யெனை பிறப்பிப்பார் யாருமில்லை
பாரில்
வேலைமுடிந்தன இனிதுன்ப மேதுமில்லையே.
கடவுளின் நிலைஅறிதல் மதங்களில் இல்லை
கருணையே
கடவுள்மயமாத லென அறிவாரில்லை
மடந்தையரின் மோகம் மேன்மை தருவதில்லை
முத்தேக
சித்திகள் எம்மார்க்கத்திலும் இல்லை
விடமான மதங்களில்சுத்த சன்மார்க்க மென்பதில்லை
வடலூரை
நினைக்க விதிஜெய மாவதில்லை
கடலூரில் வாழுமெனக்கு நீச்சல் தெரியலில்லை
கடவுள்
கருணையால் கடலில் மூழ்கினினேல்லையே.
நோய்யன்றி வாழ்தலைவிட நூதனம் இல்லை
நாயினேனாலும்
உலகரை நம்பினே னில்லை
தாய்யென்னும் தயவைத் தள்ளி நடந்தேனில்லை
தந்தைநின்
னருளால் தூங்கினேன் இல்லை
வாய்மையா லுனைபாடு வதைவிட்டால் நானில்லை
வாய்த்த
என்பெயரால் நீயும்நானும் வேறில்லை
பொய்த்த சமயங்களில் சடங்குகளன்றி சத்தில்லை
பொங்கி
மருதூரார்இதனை பகிர்ந்ததில் தவறில்லையே.
இல்லைநூறை படிப்போர்க்கு வறுமை என்றுமில்லை
இல்லைநூறை
கேட்போர்க்கு மரணம் என்றுமில்லை
இல்லைநூறை அறிவார்க்கு மூப்பு என்றுமில்லை
இல்லைநூறை
நினைப்போர்க்கு துக்கம் என்றுமில்லை
இல்லைநூறை உணர்வோர்க்கு பயம் என்றுமில்லை
இல்லைநூறை
சொல்வோர்க்கு நோய் என்றுமில்லை
இல்லைநூறை பாடுவோர்க்கு எதிரிகள் என்றுமில்லை
இல்லைநூறு
இறைவனின் இரக்கமன்றி வேறில்லையே.
Wednesday, September 24, 2025
Tuesday, September 23, 2025
Galaxy - Time
Galaxy - Time
Tuesday, July 29, 2025
ஆன்ம சாந்தி:
ஆன்ம சாந்தி:
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
19-09-2014 ஆம் தேதி காரணப்பட்டார் பதிப்பித்த திருவருட்பாவினை முதல் தங்க முலாம் பூசப்பட்ட திருவருட்பாவாக மறு அச்சு செய்து வெளியிட்டவர் அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள்.
மேலும் காரணப்பட்டிற்கு பல முறை வந்திருந்து வழிபட்டுள்ளார். அவரை பிரிந்து தவிக்கும் அவரது குடும்த்தார்களுக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-TMR
Monday, July 28, 2025
பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு
Wednesday, June 25, 2025
Friday, May 9, 2025
அப்பா நான் வேண்டுதல்
அப்பா நான் வேண்டுதல்
அப்பா
நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம்
அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும்
எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை
நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத
மேல்நிலை மேல் சுத்த சிவ
மார்க்கம்
திகழ்ந்தோங்க
அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும்
நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா
நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே
Tuesday, May 6, 2025
51 வருடம்
51 வருடம்
வள்ளற்பெருமான் தனது காயத்துடன் இவ்வுலகில் வெளிப்பட வாழ்ந்த காலம் 51 வருடம்.
Thursday, April 24, 2025
இராணுவ நடவடிக்கை தேவையா?
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலேயே உயிரிழந்தது, தன்மானப் பிரச்சனையை இந்திய அரசிற்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
Sunday, April 13, 2025
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
Saturday, February 22, 2025
பொருள் என்னும் ஞானம்
பொருள் என்னும் ஞானம்
சுத்த
சன்மார்க்கத்தை பின்பற்றும் நம்மவர்களுக்கும், மற்றும் உள்ள உலகியர் யாவருக்கும் வந்தனம்.
அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால் இவ்வுலகியலில் பொருள் / செல்வம் சார்ந்த ஒரு திட்டத்தினை நான் இங்கு எடுத்துரைக்கின்றேன். உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றைச் சொல் “வள்ளலார்” என்பதை அறியுங்கள்.
கடந்த ஒரு நூற்றாண்டாக, திருவருட்பா என்னும் புனித நூலில் புதைந்து கிடக்கும் வார்த்தைகளை படித்த பெரும்பாலானோருக்கு, தங்கள் வாழ்வில் செல்வம் ஈட்டுவதென்பது திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது.
”இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்” எனக் கூறும் திருவருட்பா, எதனைப் பொருளாகப் பார்க்கின்றது?
“கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக” எனக் கூறுகின்றது.
கருணை என்பது ஆன்மாவின் இயற்கை குணம். சிவம் என்பது சச்சிதானந்தம். சுருக்கமாகக்கூறின் ஆன்மாவும் பரமான்மாவும் மெய்ப்பொருளாக விளங்குவதாக திருவருட்பா கூறுகின்றது. ஆனால் இவ்விரண்டினையும் நாம் எவ்வாறு காட்சியாகப் பார்ப்பது?
கருணையுள்ள ஆன்மாக்களை,
சுத்த சன்மார்க்கிகளாக நாம் இவ்வுலகில் காட்சியாகக் காணலாம். சச்சிதானத்தை நாம்
வடலூர் ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதியாகக் காட்சியாகக் காணலாம். ஆனால் இவை இரண்டினையும்
காண ”உடம்பு’ என்னும் பொருளும் ”இடம் / பூமி” என்னும் பொருளும் தேவை. அதாவது உண்மையைக்
காண பொய் தேவைப்படுகின்றது. அந்தப் பொய்தான் இந்த உலகியல் செல்வம். இந்தப்
பொய்தான் மெய்ப்பொருளான கருணையையும் சிவத்தையும் நமக்குக் காட்டுகின்றது.
செல்வம்தான் உங்கள் கருணையை வெளிப்படுத்தும். செல்வம்தான் வடலூரில் ஞானசபையினைக்
கட்டியது, அனையா அடுப்பினையும், அனையா ஜோதியினையும் நமக்குக் கொடுக்கின்றது.
இவ்வாறு, கருணையையும், சிவத்தையும் காட்சியாக் காட்டும் செல்வம் என்னும் பொய்யை நாம் அனைவரும் முக்கியமாக சுத்த சன்மார்க்கிகளும் அக இனத்தார்களும் பெறுவது முக்கியம். செல்வம் அழியும் பொருள்தானே! நிலையாமை தத்துவத்தைக் கொண்டதுதானே! என கூறும் பழமை வாதங்கள் அறியாமை. “ஆற்றல் அழியாமை” கோட்பாட்டின்படி, செல்வம் என்னும் பொய்யும் என்றும் அழியாது. இந்தப் பொய்யினை மெய்யாக்குவதுதான் சுத்த சன்மார்க்கம். பொய்யுடம்பினை மெய்யாக்குவதும், பொய்ச்செல்வத்தை சிவச் செல்வமாக்குவதும் சுத்த சன்மார்க்கமாகும்.
எனவே, திருவருட்பாவில் வரும் ’பொருள்” என்பதின் புதிரை நீங்கள் விடுவிக்கும் பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண் முன்னே விரியும் என்பதனை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அறிந்து வைத்துள்ளனர். வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் வள்ளலார். ’இச்சையற்று நுகர்தல்” என்னும் சூத்திரத்தின் மூலம் நாம் இந்த செல்வம் என்னும் பொய்யுடன் விளையாட வேண்டும். இச்சையுடன் நுகர்ந்தால் இச்செல்வம் பல பிரச்சனைகளுக்கும் நம்மை தள்ளிவிடும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசை அற்றவர்களுக்கே எல்லாம் செயல் கூடும்.
பொருள் சேர்க்கும் இந்த ஞானத்தை நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் எவ்வாறு மேற்கொள்வது? நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த ஞானம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகின்றது.
எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றும் எனக்கு இருக்கும் பணமே போதும் என்றும் சொல்பவர்கள், கருணையையும் சிவத்தையும் உண்மையில் மறுக்கின்றார்கள். அல்லது தங்களது இயலாமையால் அவ்வாறு சொல்வார்கள். பணம் குறித்து நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உரையாடியிருக்கின்றோம்? எந்த அளவிற்கு ஆழமாக அலசியிருக்கின்றோம்? எனப்பார்த்தால், வியப்பே மிஞ்சும். காரணம், நாம் பணத்தைப் பற்றி பொதுவெளியில் பேசுவதேயில்லை. பணம் என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற கருத்தை உடைத்தெரியுங்கள்.
இலஞ்சம், ஊழல், வட்டி, அரசின் அதிகப்படியான வரிகள் போன்று மக்களை சுரண்டி வரும் பணத்தைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. ஒரு சிறந்த சுழற்சி திட்டத்தின் மூலம் மக்களின் பணம் பெருக்கப்பட்டு, அவை மக்களுக்கே சென்றடையும் திட்டத்தினால் நாம் பல தலைமுறைகளுக்கும் பயனடையலாம். இச்சமூகத்தில் பல சுத்த சன்மார்க்கச் செயல்களை செய்து காட்டலாம்.
திருவருட்பா சொல்லும்
’பொருள்” என்னும் புதிர் உங்களுக்கு விளங்கினால் மட்டும் இத்திட்டத்தில் சேர
வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன். மேலும் கடலூர் டூரீஸ்டர் மூலம் நீங்கள்
யாவரும் இவ்வுலகினை சுற்றிப்பார்க்கும் அதிசயமும் நிகழ இருக்கின்றது. இத்திட்டத்தினைக்
காண கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்கவும்.
https://chat.whatsapp.com/GAsKBUm9Inj4d15dRXP9xr
இறைவன் உங்களின்
செல்வத்தை அதிகமாக்கினால்,
நீங்கள் உங்களின்
தர்மத்தை அதிகமாக்குங்கள்.
வருங்காலம் வருமை
இல்லா காலம்.
--T.M.RAMALINGAM
9445545475




























