வடலூர்
சந்து பொந்தெல்லாம் அரசு
சாராயக் கடைகள் நடுவில்
சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
அடிவாங்கும்
சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே
வடலூர் வந்தால் நரகமாமே.
சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்
சமைத்து வறியோர்கள்
என்றும்
இன்பமாய் உண்டு மகிழவும்
ஐக்கிய சன்மார்க்கச்
சபை
நின்று நிர்வாகம் பார்க்கும்
நாள் தருமச் சாலையில்
என்று வருமோ சன்மார்க்கம்
புலை கொலை தவிர்த்தோர்
புரியும் நிர்வாகம் வடலூரில்
தலை எடுத்து உலகிலே
தருமம் ஓங்க சாகாக்
கலை பயிற்றுவித்து சன்மார்க்க
கலை ஞர்கள் நிறைந்து
அலை அலையென வருவிக்க
உறும் நன்நாள் இந்நாளே.
புரியும் நிர்வாகம் வடலூரில்
தலை எடுத்து உலகிலே
தருமம் ஓங்க சாகாக்
கலை பயிற்றுவித்து சன்மார்க்க
கலை ஞர்கள் நிறைந்து
அலை அலையென வருவிக்க
உறும் நன்நாள் இந்நாளே.
தனித்த சன்மார்க்க அரசு
தழைக்கும் உலக மெங்கும்
பனிவிலகி தெளிந்த காட்சியாய்
பரமனே ஆளும் ஆட்சி
கனிந்தது புறஇனத்தா ரெல்லாம்
கலங்கி நடுநடுங்கி ஓட
இனி வடலூரை ஆள்வது
ஐக்கிய சன்மார்க்க சபையே.
தழைக்கும் உலக மெங்கும்
பனிவிலகி தெளிந்த காட்சியாய்
பரமனே ஆளும் ஆட்சி
கனிந்தது புறஇனத்தா ரெல்லாம்
கலங்கி நடுநடுங்கி ஓட
இனி வடலூரை ஆள்வது
ஐக்கிய சன்மார்க்க சபையே.
கயிரைக் கண்டு பாம்பாய்
கதிகலங்கி நின்ற
காலஞ்சென்று
துயிலெழுந்து பார்க்க இன்று
தயா ஒளியால் உண்மை
பயின்று வடலூர் அருளாட்சியை
பற்றியே உரித்தாகுக
எல்லா
உயிர்களுக்கும் எனது புத்தாண்டு
ஆங்கில நல் வாழ்த்துகளையே.
-TMR





No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.