Monday, February 10, 2025

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அடுத்த வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் வள்ளலார் பக்தர்கள் மட்டுமே வசித்து வருகின்றார்கள், புலால் உண்ணாமல், தாவர உணவை மட்டுமே புசித்து அக இனத்தார்களாக வாழ்கின்றார்கள் என்று அறியும் பொழுது அகத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது.

நான் கடந்த 24 மணி நேரத்த்தில் புதுச்சேரி, சென்னை என சில உறவினர்கள் வீடுகள், பழகுநர்களின் வீடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. இவ்வில்லங்களில் எது புலால் உண்ணாத புனிதமான வீடு எனத் தெரியவில்லை. எங்கேயும் தண்ணீர் அருந்தவும் தயக்கம். அந்த அளவிற்கு எனது உறவினர்கள் இயற்கையாக பரம்பரையாக வந்த புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றார்கள். சிலரது இல்லத்தில் குடியும் சேர்ந்து விடுகின்றது. பாவ காரியங்களை மகிழ்ந்தும், மகிழ்ச்சிக்காகவும் செய்கின்றார்கள்.
தனித்திரு என்ற தனிமையே சிறந்ததாகத் தோன்றுகின்றது. இதற்கு ஒரு சிந்தனையை செயல்படுத்தலாம், எவ்வாறு நாம் சாப்பிடும் உணவு விடுதிகளில் சைவம் எனவும் அசைவம் எனவும் அறிவித்து மக்களை அழைக்கின்றார்களோ அவ்வாறு சைவம் மட்டும் உண்ணும் புனித இல்லங்கங்களின் வரவேற்பரையில் அல்லது வெளிப்புரங்களில் “புலால் தடைசெய்யப்பட்ட புனித இல்லம்” என விளம்பரம் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமாகும் எனக் கருதுகின்றேன். சன்மார்க்க இல்லங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வாசகம் தாங்கிய ஸ்ட்டிக்கர் செய்து அதனை வடலூரிலும் சன்மார்க்க சங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு விற்பனைக்கு அல்லது இலவசமாக அளிக்கலாம். இவ்விளம்பரம் இல்லாத பாவ இல்லங்களில் நீர் அருந்ததுதலும் தவிர்க்க வேண்டும்.
”ஊன்சுவை உண்டு உடல் வளர்ப்பது பாவம்” என்பது வள்ளாரின் பார்வை மட்டுமல்ல, திருவள்ளுவர் முதற் கொண்டு அனைத்து புனிதர்களின் பார்வையாகும் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்த வாடிமனைப்பட்டி கிராமத்தில் வாழும் புனிதர்களுக்கு நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
-TMR

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.